அதிசுவாரஸ்ய – 1911-ல் நியூயார்க் ….!!!

1911 new york

1911 new york-3

1911-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் எப்படி இருந்தது
என்று காட்டும் அபூர்வமான ஒரு வீடியோ காட்சி…
அதி சுவாரஸ்யம்…

மிக அதிக எண்ணிக்கையில், மனிதர்கள் நடந்தே
பயணிக்கின்றனர்…

எந்தவித போக்குவரத்து கண்ட்ரோலும் இல்லை.
குறுக்கும் நெடுக்குமாக குதிரை வண்டிகளும், டிராம்களும்,
அபூர்வமாக, படு ஸ்லோவாக ஓடும் பழங்காலத்து கார்களும்…….

அடேடே பறக்கும் ரெயிலும் கூட … ஆனால் மின்வயர்கள்
இல்லை; ஆங்காங்கே நிறைய புகைபோக்கிகள்….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அதிசுவாரஸ்ய – 1911-ல் நியூயார்க் ….!!!

  1. atpu555 சொல்கிறார்:

    தொப்பி அணியாத மனிதர்களையே காணவில்லை! குதிரை வண்டியின் குளம்பொலியும் சுவை கூட்டுகிறது!
    இதையும் பாருங்கள் – 1890 களில் – பல்வேறு நாடுகள்!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      atpu555,

      “1890 களில் – பல்வேறு நாடுகள்!”

      நன்றி நண்பரே. கொஞ்சம் இடைவெளி விட்டு,
      நானே இதையும் பதிவதாகத் தான் இருந்தேன்…
      எனக்கு இந்த மாதிரி பழங்கால விவகாரங்களிலும்,
      வரலாற்றிலும் ஆர்வம் கொஞ்சம் அதிகம்….
      தேடித்தேடி பார்த்துகொண்டே / படித்துக்கொண்டே
      இருப்பேன்….

      ” தொப்பி அணியாத மனிதர்களையே காணவில்லை! ”
      உண்மைதான். ஆனால், பலர் அதை கையில்
      பிடித்துக்கொண்டே அலைவது தான் வேடிக்கையாக
      இருக்கிறது… ஒருவேளை நியூயார்க்கில் காற்று அதிகமோ…?

      நம் நாட்டிலும் இந்த மாதிரி பழக்கங்கள் உண்டு.
      கேரளாவில் எல்லாரும் குடையும், கையுமாகவே
      இருப்பார்கள்… வடக்கே, மத்திய பிரதேசம், உ.பிரதேசம்,
      பீஹார் போன்ற மாநிலங்களில் தலைக்கு ஒரு
      துணிக் குல்லாய்….!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. புதியவன் சொல்கிறார்:

    அணில், வளர்ந்த செடிகளில் ஏறி மின்சார உபகரணங்களை பாழ்படுத்தியதால், பராமரிப்புக்கு நிறைய செலவழியும், மின்சாரத் தடை தவிர்க்க முடியாது.

    தேதி குறிப்பிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறோமா? நிறைவேற்றுவோம்..எப்போ என்று எங்களுக்கே தெரியாது.

    மதுவிலக்கு வந்தால் மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும். அதனால்தான் ஆராயாமல் எதையும் செய்ய முடியாது.

    பெட்ரோலுக்கு தமிழக அரசு விதிக்கும் வரியான லிட்டருக்கு 30+ ரூபாய்களைக் குறைத்தால் மத்திய அரசுக்கு வலு சேர்த்துவிடும்.

    இட ஒதுக்கீட்டில் படித்தவர்களும், தமிழக ஆட்சித்துறை அதிகாரிகளுக்கும், நிதியைப் பற்றி எல்லாம் தெரிந்தவர் என்று போட்டி போட்டுக்கொண்டு ஜிங்சக் விளம்பரம் அளிக்கப்பட்ட நிதித்துறைக்கும், திட்டம் போட்டுத்.. (சாரி… எம்ஜி ஆர் படப் பாடலைப்போய் இப்போ நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டேன்). பொருளாதாரப் புளி என தானே பட்டம் கொடுத்துக்கொண்ட திமுக ஜெயரஞ்சன் ஆகிய யாருக்குமே பொருளாதாரம் பற்றித் தெரியாது. தேர்தலுக்கு வட இந்திய பிராமணர் மூளை மட்டும்தான் உபயோகப்பட்டது. அதனால் பொருளாதாரத்துக்கும் வட இந்திய, வெளிநாட்டு பிராமணர்கள் மட்டும்தான் உதவ முடியும் என அவர்களைக் கெஞ்சிக்கொண்டிருக்கைம் தமிழக அரசின் முடிவு பற்றிபத்திரிகைப் புலிகள், தொலைக்காட்சி எலிகள் பயந்து நடுங்கிக்கொண்டு விமர்சனம் செய்யவில்லையா இல்லை எப்போதும்போல திமுக ஊதுகுழஙாகச் செயல்படுகிறார்களா?

    எடப்பாடி அரசாங்கத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு, திமுக ஆட்சியில் இப்போதுள்ளதைவிடக் குறைவு

    இதைப்பற்றியெல்லாம் அல்லக்கை குணசேகரன்கள் பேச, விவாதிக்க தொடை நடுங்குவார்கள். விமர்சனத்திலும் இதைப்பற்றி எதுவும் எழுதலையே. நூறு நாட்களுக்குள் முதல்வரிடம் வந்த எல்லா மனுக்களையும் பைசல் பண்ணிவிடுவார். அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனக் காத்திரிக்கிறீர்களா? இல்லை… ஆரம்பம்தான் இப்படி. நிச்சயம் முதல்வர் ஆறு மாதங்களில் நீட் தேர்வை விலக்கிவிடுவார், கச்சத்தீவை மீட்டுவிடுவார், பெட்ரோல் டீசல் விலையை பத்து ரூபாயாவது குறைத்துவிடுவார், எல்லா குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுவார், முழுமையான மதுவிலக்கு கொண்டுவர முடியாவிட்டாலும் திமுகவினர் நடத்தும் 7 சாராய ஆலைகளை மூடிவிடுவார், முதலில் அவர்களிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிடுவார் என்று நான் முழுமையாக நம்புவதுபோல உங்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டதா?

    தவளை போல வீரம் காண்பித்த திருமா கோவாலசாமி இப்போது எங்கே இருக்கிறார்கள்?

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // விமர்சனத்திலும் இதைப்பற்றி எதுவும் எழுதலையே. //

    இதோ பாருங்கள் புதியவன், எனக்கு ஒவ்வொருத்தர் போல
    ஓரவஞ்சனை எல்லாம் கிடையாது….

    நம்மைப் பொருத்தவரையில் திமுக-வும், பாஜக-வும் நமக்கு
    இரண்டு கண்களைப் போல… ( ரகம், தரம் – வெவ்வேறாக
    இருந்தாலும் கூட இரண்டும் கவனிக்கப்பட வேண்டியவையே…!!!)

    ஒரு கண்ணிற்கு வெண்ணையும்,
    மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்க வேண்டுமென்று
    நீங்கள் நினைக்கிறீர்கள்…. இரண்டு கண்களுக்கும் வஞ்சனையின்றி
    ஒரே மாதிரி கவனிப்பு வேண்டுமென்று நான் நினைக்கிறேன்…

    நீங்கள் பாஜக-வையும், இதே மாதிரி கவனிக்க ஆரம்பித்தால்,
    நான் திமுக -வை கவனிக்கலாம்… எல்லாரும் ஒன்றையே
    எழுதி அஜீரணமாகி விடக்கூடாது பாருங்கள்…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.