ஆள்பவர் மனதைத் துளைக்குமா -டாக்டர் ராம்தாஸ் விட்ட “அம்பு” – .?

anna

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள்
மீண்டும் திறக்கப்படுவது பற்றி, பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ்
அவர்கள் கொதிப்புடன் ட்விட்டர் மூலம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்….

சுரீரென்று மனதைத் துளைக்கிற விதத்தில் இருக்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் 11-ல் 7 மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகள், திமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர்.

மதுக்கடைகளை திறப்பது பற்றி அண்ணா என்ன கருத்து
வெளியிட்டிருந்தார் என்பதை தம்பிகள் இதுவரை அறியாமல்
இருந்தாலும், இப்போதாவது டாக்டரின் ட்விட்டரின் மூலம் அறிந்து கொள்ளலாம்….


_________________________________

” மது மூலம் கையில் கிடைக்கும் வருவாய் என்பது-
புழுத்துப்போன தொழுநோயாளியின் கையில் உள்ள
வெண்ணையை வாங்குவதற்குச் சமம்…..”


__________________________________

இதற்கு மேலும், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற திமுக பிரமுகர்கள்
மதுபானத் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கலாமா…?

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் அரசு,
சாராயக்கடைகளை இழுத்து மூடாமல் இருக்கலாமா…?

dr.ramdas twitter


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆள்பவர் மனதைத் துளைக்குமா -டாக்டர் ராம்தாஸ் விட்ட “அம்பு” – .?

  1. Vivek சொல்கிறார்:

    டாக்டர் அன்புமணி அறிக்கை –

    சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என அன்புமணி தெரிவித்துள்ளார்

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/anbumani-retaliated-against-dmk-govt-for-saying-that-petrol-and-diesel-tax-could-not-be-reduced/articlecontent-pf561870-424519.html

  2. புதியவன் சொல்கிறார்:

    தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, ஜூன் 21ம்தேதி 2021 புதன் கிழமையில் வரும் என்று நினைத்ததால், நீட் விலக்கு, மது ஆலைகள் மூடல், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, முதல் கையெழுத்தே எல்லாப் பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் என்று வரிசை கட்டி வாக்குறுதிகள் அளித்தோம். ஆனால் 21ம்தேதி, திங்கட்கிழமையாக இருக்கிறது. அதனால் திமுகவுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதில் திமுகவின் தவறுகள் ஒன்றும் கிடையாது.

    அடுத்து கனிமொழி வந்து, தமிழகத்தில் கொரோனா பற்றி போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், திமுக தேர்தல் அறிவிக்கைகளில் சொன்னவற்றை நிறைவேற காலதாமதமாகிறது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடனேயே அடுத்த தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கும் என்று சொன்னால், ஆஹா ஓஹோ என்று செய்திகள் வாசிக்கவும், திமுகவுக்குத்தான் மக்களிடம் எவ்வளவு அன்பு விவாதம் நடத்தி மகிழவும் நாட்டில் கொத்தடிமைகள் இருக்கும்போது, அன்புமணி பாவம்..அவருடைய நேரத்தை வீணாக்குகிறார் என்றே நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.