திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

vairamuthu

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரை
சந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”
பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,
அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!!

இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராக
இருந்தாலும் செய்யும் வழக்கமான பணி….

இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,
திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்து
இதை பெரிதும் பாராட்டி ஒரு நீண்ட ட்விட்டர் செய்தியை
வெளியிட்டிருக்கிறார்…. கீழே –

vairamuthu twitter

( இந்த பாராட்டுச் செய்தி எவ்வளவு செயற்கையாக இருக்கிறது என்பது அதைப்பார்த்தவுடனேயே தெரியும்…)

முன்பு, கலைஞர் முதல்வராக இருந்தபோது, கலைஞருக்கும், வைரமுத்துவுக்கும் இருந்த தொடர்பு/நெருக்கம்
அனைவரும் அறிந்ததே…

ஆனால் – கலைஞர், முதல்வர் பதவியில் இருந்தபோது, அவர் மூலம் வைரமுத்து அவர்கள் பல காரியங்களை
செய்துகொண்டது பொதுவாக வெளியில் தெரியாத, பலரும்
அறியாத விஷயம்.

இது குறித்து முன்பு இதே தளத்தில் வெளிவந்த இடுகை ஒன்றை
கீழே தந்திருக்கிறேன்… அதைப்பார்த்தால், வைரமுத்து அவர்கள்
கலைஞரிடம் தனக்கு இருந்த தொடர்பை / நட்பை எப்படி
பயன்படுத்திக்கொண்டார் என்பது புரியும்.

கலைஞர் மறைந்த பிறகு, திமுக தலைமையுடன் தனக்கு இருந்த தொடர்பு/நெருக்கம் போய் விட்டதால், தற்போதைய முதல்வர் பதவியேற்றதும், எப்படியாவது அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வைரமுத்து தவியாய்த் தவித்து வருகிறார்….


ஏன் என்று நாம் இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை;
கீழேயுள்ள இடுகையை படித்தாலே விளங்கும்….

அந்த நெருக்கத்தை செயற்கையாக உருவாக்கிக்கொள்ளும் பல முயற்சிகளில் ஒன்றே மேற்கண்ட ட்விட்டர் செய்தி என்பது வை.மு. அவர்களின் தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகளை கவனிப்பவர்களுக்கு புரியவரும்.

ஆனால், தந்தையை பயன்படுத்திக்கொண்டு,

தங்களை வளர்த்துக்கொண்டவர்களை -வளமாக்கிக் கொண்டவர்களை – கூடவே இருந்து கவனித்த தனயனுக்குத் தெரியாதா என்ன ….?

அதனால் தானோ என்னவோ, இவர் தலைகீழாய் நடந்தாலும் –

புதிய முதல்வர் இவர் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதே இல்லை என்பதை பலரும் கவனித்திருக்கலாம்….!!!

முன்பு கலைஞர் முதல்வராக இருந்தபோது வைரமுத்து நடந்து கொண்ட விதம் பற்றி இதே விமரிசனம் தளத்தில், வெளியான இடுகை கீழே –


_____________________________________________________________________________


வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !

கடந்த 2 வருடங்களாக நிறையத் தடவை வைரமுத்து கூறி
விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில்
கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில்
எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும் அதிகாலை
5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில் உரையாடுவது
தவறாது என்று.

கடந்த சில வருடங்களாகவே இது தொடருகிறது
என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். நான் கூட
நினைத்ததுண்டு வயது வித்தியாசம் இருந்தாலும், அதிகாரத்
தொலைவு இருந்தாலும், தமிழ் இவர்களை எவ்வளவு
நெருக்கமாக்கி விட்டது என்று.

மூன்று வாரங்களுக்கு முன்னர் வள்ளுவர் கோட்டத்தில்
கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தினர் கலைஞருக்கு
“தமிழ்த் தலைமகன்” என்று பட்டம் அளித்த விழா நிகழ்ச்சியில்
பேசும்போது கலைஞரே தமது உரையில், கொல்கத்தா
தமிழ்ச் சங்கத்தினர் வைரமுத்துவை கலந்து ஆலோசித்த பின்னரே
இந்த பட்டத்தைத் தீர்மானித்தனர் என்று குறிப்பிட்டார்.

(கலைஞரின் தந்தையின் பெயர் “தமிழ்த்தலை” என்றிருந்தால்
ஒழிய இந்தப் பட்டம் வேறு எந்த விதத்திலும் பொருந்தாது
என்று சோ கூறியதை – வசதியாக மறந்து விடலாம் !)

தனக்கு என்ன கொடுத்துள்ளனர் -என்ன கொடுக்கலாம்
என்பதைச் சரியாகச் சொல்வார் வைரமுத்து என்றும்
சிலேடயாகச் சொன்னார் கலைஞர் !

ஆக கலைஞருக்கு பட்டங்களோ அல்லது வேறு
எதாவதோ தர விரும்புவோர் வைரமுத்துவைத் தொடர்பு
கொள்ளலாம் என்று அவரும் பொது மேடையிலேயே
அங்கீகாரம் கொடுத்து விட்டார் !

தற்போது திமுக ஆதரவு வார இருமுறை இதழான
நக்கீரன் பத்திரிக்கையிலேயே வெளிவந்திருக்கும்
செய்தி ஒன்று கீழே –

vairamuthu - nakkeeran

இப்போது தான் புரிகிறது – கலைஞருக்கும்,வைரமுத்துவுக்கும்
உள்ள தொடர்பு எத்தகையது என்று.

இவர்களது அதிகாலைத் தொலைபேசி அழைப்புகள் எல்லாம்
தமிழ் பற்றியது என்றும் கவிதை பற்றியது என்றும் அவர்களது
நட்பைப் பற்றியது என்றும் இவ்வளவு நாட்களாக அறியாமை
காரணமாக நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போது நக்கீரன் படித்த பிறகு தான் சில விஷயங்கள்
தெரிய வருகின்றன –

பேராசிரியர் அன்பழகனின் மகன் கிரானைட் கம்பெனி நடத்துவதும்,

அவருக்கு(நிதி அமைச்சரின் மகன் !) தமிழ்நாடு அரசாங்கத்திடம்
இருந்து கிரானைட் ஏலம் கிடைத்திருப்பதும்,

வைரமுத்துவின் நண்பர்/உறவினர் கோடீஸ்வரர் பி.ஆர்.
பழனிச்சாமி அவர்களுக்கும் கிரானைட் ஏலம் கிடைத்திருப்பதும்,

இது சம்பந்தமாக வைரமுத்து அன்பழகனிடமே பிரச்சினை
பண்ணி இருப்பதும்,

பின்னர் வைரமுத்து இது விஷயத்தில் நேரடியாகவே கலைஞரிடம்
பேசி இருப்பதும்,

டாமின் சேர்மனை’யே தான் விரும்புவது போல் சொல்ல
வைத்திருப்பதும் –

அடேயப்பா -அவர்களுக்குத்தான் எவ்வளவு பொறுப்புகள் !
எவ்வளவு கவலைகள் !

தமிழ் நாட்டின் கனிம வளங்களை எல்லாம் யார் யாருக்குக்
கொடுப்பது – யார் யார் மூலம் எவ்வளவு எடுப்பது என்பது
பற்றித் தான் எவ்வளவு கவலைகள் !

இவற்றைப் பற்றி எல்லாம் அதிகாலையில் பேசாமல்,
அதிகாரிகளை வைத்துக்கொண்டா பேச முடியும் ?

அப்பப்பா ! எடுக்கவும் கொடுக்கவும் தான்
எவ்வளவு துறைகள் அரசாங்கத்திடம் !

அதிகாரமும் நட்பும் எது எதற்கெல்லாம்
பயன்படுகிறது !!


.

________________________________________________________________________________________

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //வைரமுத்துவுக்கும் இருந்த தொடர்பு/நெருக்கம்// – ஒட்டுண்ணியைப் பற்றிய பதிவு போலிருக்கு. இந்த மாதிரி அரசியல் ப்ரோக்கர்கள்தாம் கருணாநிதியிடம் கோலோச்ச முடிந்திருக்கிறது. ‘தமிழ்’ என்றால் அதற்குத் தகுதியுள்ள எத்தனையோ தமிழறிஞர்கள் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ராய், எத்தனை கிலோ என்று பாடலில் எழுதுபவரையெல்லாம் பெரிய தமிழ் அறிஞர் என்று கருணாநிதி இடம் தந்திருப்பாரா இல்லை வேறு காரணங்கள் இருக்குமா என்று ஆராய்பவர்களுக்குப் புரியும்.

  இப்போ வைரமுத்துவைப் பற்றி 17 பேர் பாலியல் புகார் சொல்லியிருப்பதுதான் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. அதனைத் தாண்டி வரவேண்டும். அப்படியே கருணாநிதி காலம் போல, இப்போதும் முதல்வருக்குத் தான் நெருக்கம் என்று சொல்லி, அதனை உபயோகித்து என்ன என்ன சுருட்டலாம், எந்த எந்த விருதுகளுக்குத் தன்னை பரிந்துரை செய்யவைக்கலாம் என்றெல்லாம் திட்டம் போடவேண்டியதும் வைரமுத்துவுக்கு இருக்கிறது. அதிகாரத்தில் இல்லாத தாசில்தார் நிலைக்குப் போகக்கூடாது என்று இவர் நினைத்திருப்பார்.

  ஏதோ மோடி செய்த புண்ணியம். வைரமுத்து, ‘இதனைச் செய்து பெருமையைத் தேடிக்கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே’ என்று சொல்லவில்லை.

  பாலியல் புகாரில் இவரையும் விசாரித்து உள்ளே தள்ளுங்கள் என்று யாராவது முதல்வர் அவர்களுக்கு ட்வீட் பண்ணினால் நல்லது. ஒருவேளை, புகார்களெல்லாம் இந்துக்கள் மீது இருந்தால்தான் நடவடிக்கை இருக்கும், அதனால் கவலையில்லை என்று வைரமுத்து நினைத்து தைரியமாக இருப்பாரோ?

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   “புகார்களெல்லாம் இந்துக்கள் மீது இருந்தால்தான் நடவடிக்கை இருக்கும்”

   -இதில் என்ன சந்தேகம் … பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைக்கு எடுத்த நடவடிக்கை மாதிரி டைமென்ட் பெல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவங்க என்ன நடுநிலைவாதிகளா அல்லது மத சார்பற்றவர்களா

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வைரமுத்து அவர்களின் செல்ஃபி –

  (அவர் போனார் – இவர் வாழ்த்து தெரிவித்தார் … சரி;
  அதை ஏன் தம்பட்டம் அடிக்க வேண்டும் …..? )

  கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவச் சோதனைக்கு அமெரிக்கா செல்லும் ரஜினி நலம் பெற்று இளமையுற்று நாடு திரும்ப வேண்டுமென்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். ‘மனம் விட்டு உரையாடவும் உறவாடவும் நாம் சிலர்தானே இருக்கிறோம்’ என்பது ரஜினி என்னிடம் அடிக்கடி சொல்வது. அந்தச் சிலருள் ஒருவர் சிறப்போடு வாழ்க” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

  • புதியவன் சொல்கிறார்:

   செத்தாலும் எழுந்து, நீங்கள் மலர் வளையம் வைப்பதில் மகிழ்ச்சி என்று ஒவ்வொருவரிடமும் (இல்லை அப்படிச் சொல்ல மாட்டார். யாரைப் பற்றிக் குறிப்பிட்டால் தனக்கு விளம்பரம் கிடைக்குமோ அவரைப்பற்றி மட்டும் எழுதுவார். அடுத்தவன் புகழ்ல குளிர் காயறது) அவரிடம் சொன்னேன், மிக்க மகிழ்ச்சி என்றார்.. என ட்வீட்டோ காசு கொடுத்து செய்தியோ வரவைத்தால்தான் வய்யிரமுத்துவுக்கு நிம்மதி.

 3. விவேகன் சொல்கிறார்:

  இதில் ஒரு செய்தியை யாரும் கவனிக்க போலும்.
  அதாவது , மாணவர்கள் அனைவரும் , இந்த வருடம் நீட் தேர்விற்கு தயாராகி கொள்ள வேண்டுமாம்.நீட் தேர்வு ரத்து கிடையாதாம்.அரசாங்கம் பயிற்சி கொடுக்குமாம்.
  இந்த செய்தியை கண்ட பிறகு நான் கூட முதுகெலும்பு இல்லாத, அடிமை அரசு என்று வர்ணிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் பொழுது வெளியிட்ட பழைய செய்திகளை ஏன் மறுபடியும் வெளியிடுகிறார்கள் என்று குழம்பி போய் மறுபடியும் படித்து பார்த்தால் , இது நமது புது அரசு வெளியிட்ட அறிக்கை .
  சரிதான் ……

  • புதியவன் சொல்கிறார்:

   நீட் தேர்வு பற்றிய உங்கள் கருத்து சரியல்ல என்பது என் எண்ணம். நீட் தேர்வு கூடாது என்பவர்கள் அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால் நான் விளக்கத் தயாராக உள்ளேன். நீட் தேர்வு இல்லாமலிருந்தபோது எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்கள், வெளி மாநிலக் கல்லூரியில் எத்தனை பேருக்கு இடம் கிடைத்தது, இப்போது எத்தனைபேர் தேர்வு பெறுகிறார்கள் என்ற செய்தியுடன் வரணும்.

   எடப்பாடி அரசு 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு கொடுத்தது. முதல் நீட் தேர்வில் 47 சத தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், அகில இந்திய சராசரி 53-54 என நினைவு. கடந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி 57-58 சதம், அகில இந்திய சதம் அதேதான். இதனையெல்லாம் எடப்பாடி அரசு விளம்பரப்படுத்தினாலும், மக்கள் மனது மாறியிருக்காது, தொடர் பொய் பிரச்சாரங்களால்.

   அதிமுக அடிமையாக இருந்ததில்லை என்பது என் கருத்து. (ம்ம்தா போல எதற்கெடுத்தாலும் ஏடாகூடமாக இருப்பது வீரம் என்று நினைக்க மாட்டீர்கள்). பத்திரிகை தொலைக்காட்சிகள் தங்கள் இஷ்டம்போல செய்திகள், விவாதங்களைத் திரித்தன. இப்போது அவை இரண்டும் திமுகவுக்கு கொத்தடிமையாகிவிட்டன. குணசேகரன் போன்ற மூன்றாம்தர மனிதர்கள் பத்திரிகை உலகில் இருப்பதுதான் காரணம்.

   மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி, நூறு நாட்களில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு, நீட் தேர்வு முழுமையாக ரத்து, திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும் (இன்னும் மற்ற முக்கிய வாக்குறுதிகளோடு வருகிறேன்) என்பதையெல்லாம் திமுக ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றிய பிறகு நீங்கள் எடப்பாடி அரசு அடிமையாக இருந்தது என்று எழுதும்போது அதை நான் வரவேற்பேன். ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக மா சுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பற்றி பாராட்டி கருத்துத் தெரிவித்ததையும் படித்திருக்க மாட்டீர்கள்.

   • விவேகன் சொல்கிறார்:

    ஐயா,
    நீட் தேர்வு கூடாது என்பது எனது கருத்தல்ல.
    நீட் தேர்வை வைத்துதான் இவர்கள் மிக பெரிய அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.நீட் தேர்வை திமுக ரத்து செய்யும் என்றும் படித்தவர்களும் நம்ப வைக்க பட்டார்கள்.நீட் தேர்வை ரத்து செய்ய இயலாத அதிமுக அரசை அடிமை அரசு, ஆண்மை இல்லாத அரசு என்றும் வர்ணித்தார்கள்.
    ஆனால் இந்த நீட் தேர்வை ரத்து செய்து ஏழை எளிய மாணவர்களும் மருத்துவம் பயில வழி செய்வேன் என வித்தியாசமான, வாய்ப்பேயில்லாத வாக்குறுதியை தேர்தலில் அளித்து விட்டு, இப்பொழுது சமாளிக்கிறார்கள்.
    கேள்விகேட்பார் யாருமில்லை.எல்லா மீடியாக்களும் அமைதி காப்பது முரண்பாடு .
    நமது பொங்கும் நடிகர்களான சூர்யா , சித்தார்த் எங்கே என தேடுகிறேன்.
    பாவம் என்ன செய்வது ஆளுவது யோகி ஆத்யநாத் இல்லையே ..
    இல்லையென்றால் ஹீரோயிசத்தை காண்பித்திருக்கலாம்
    .திட்டமுடியாமல் தவிகிறார்கள் போலும்.

    .

    • புதியவன் சொல்கிறார்:

     //பொங்கும் நடிகர்களான சூர்யா , சித்தார்த்// – பார்த்தீங்களா..உங்க மனசுல இருந்து உண்மை வந்துவிட்டது. பொதுமக்களுக்காகப் போராடும் என்று சொல்லாமல் ‘நடிகர்கள்’ என்று சொல்லிட்டீங்க. வந்தாங்க..நடிச்சாங்க. காசை வாங்கினாங்க. கம்பி நீட்டிட்டாங்க. இனிமேல் பாராளுமன்றத் தேர்தலின் போதுதான் வருவாங்க.

     திமுகவின் அறிக்கையில் (என்னிடம் காப்பி இருக்கு) தமிழக அரசுக்கு 9 லட்சம் கடன் இருக்கு என்று எழுதியிருந்தாங்க. அதிலேயே பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்போம்னு சொல்லியிருந்தாங்க.

     இப்போ, நாங்க 4 லட்சம் கோடி கடன் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் 5 லட்சம் கோடி கடன் இருக்கு, அதனால் பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை என்று சொல்றாங்க. அப்புறம், நாங்க என்ன தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை இத்தனாம் தேதிக்குள் செய்கிறோம் என்றோமா என்ன என்று கேட்கிறார்கள். பெட்டி வாங்கின தொலைக்காட்சிகள்,, திமுகவுக்காகப் போராடிய பத்திரிகைகள் மற்றும் மீடியா ஆடுகள், ஆப்பு வைக்கப்பட்ட குரங்குகள் போல வேடிக்கை பார்ப்பதைவிடுத்து வேறு என்ன செய்யமுடியும்? விவாதத்தில், இஸ்ரேல் ஆப்பிள் விளைவிப்பது நல்லதா, யோகிக்கும் பிரதமருக்கும் பிரச்சனையா?, திங்கள் கிழமைக்கு அடுத்தது செவ்வாய் கிழமை வருவது நல்லதா என்ற டாப்பிக்குகள் ஓடும். இல்லையென்றால், வாங்கினதுக்கு ஏற்றபடி, ஊரடங்கைத் தளர்த்துவது நல்லதில்லையே என்று திமுகவுக்கு ஆதரவாக பட்டிமன்றம் ஓடும்.

     அனிதா செத்தா, புனிதா தற்கொலை என்பதெல்லாம் அகழ்வாராய்ச்சித் துறை சம்பந்தப்பட்டது. அதையும் நீட் தேர்வையும் சம்பந்தப்படுத்த முடியாது. வீரத் திலகம் கோவாலசாமி எங்க இருக்கார், அவர் எந்த நாட்டுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

     • விவேகன் சொல்கிறார்:

      நீங்கள் கோருவது போல், அனிதா,புனிதா தற்கொலை செய்திகள் இனிமேல் மீடியாக்களில் வந்தாத்தானே ?
      இனிமேல் மீடியாக்களில் ஏழை எளிய மக்கள் நீட் தேர்வை ஏற்று கொண்டு விட்டார்கள் என்றே செய்திகள் பரப்பப்படும்.
      அவர்களது மீடியா, நாம் என்ன சொல்ல……
      இந்த வலைத்தளத்தில் திமுகவிற்கு ஆதரவாக முழக்கமிட்டவர்களாவது , நடப்பது என்ன என்பதை பத்தி விளக்கினாலாவது நமக்கு ஆறுதலாக இருக்கும்.
      அவர்களும் ஓடி ஒளிந்து கொள்வது அழகல்ல….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.