Drone பார்வையில் துபாய்….
புர்ஜ் துபாய் ஓட்டல், துபாய் சுற்றுலா ….!!!
——————————————————————————-
டரோன் பார்வையில் துபாய் –
7 நட்சத்திர ஓட்டல் – புர்ஜ் கலிஃபா –
சென்னையிலிருந்து துபாய் சென்று வர –
Drone பார்வையில் துபாய்….
புர்ஜ் துபாய் ஓட்டல், துபாய் சுற்றுலா ….!!!
——————————————————————————-
டரோன் பார்வையில் துபாய் –
7 நட்சத்திர ஓட்டல் – புர்ஜ் கலிஃபா –
சென்னையிலிருந்து துபாய் சென்று வர –
93-95ல் அங்கு இருந்தபோது, துபாய் டிரேட் செண்டர்தான் பெரிய கட்டிடம். துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையிலான பகுதி மணற்பாங்கான பாலைவனம், ஹைவேயின் இருபுறமும் பாலைவன மணல். அந்தச் சமயத்தில்தான், பிரைவேட்டாக யார் வேணுமானாலும் டாக்சி சர்வீஸ் நடத்துவதிலிருந்து, அரசே அதற்கு ஒரு கம்பெனி ஆரம்பித்து, திருட்டுத்தனமாக டாக்சி ஓட்டி பிழைப்பவர்களைக் கட்டுப்படுத்தியது. 3 திர்ஹாமுக்கெல்லாம் டாக்சி கிடைத்தது போக, 6-7 திர்ஹாம் என்று குறைந்தபட்ச கட்டணம் என்று ஆகியது, ஆனால் நல்ல புதிய கார்கள். துபாய் சிட்டி செண்டர் இருந்த இடம் வெற்று இடம். கராமா பகுதியில் இப்போது ஏகப்பட்ட அபார்ட்மெண்ட்ஸ் (சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஹோட்டல்கள் என்று கொஞ்சம்கூட இப்போது அங்கு இடம் கிடையாது, நான் சொல்வது பர்ஜுமான் செண்டர் பின்புறம். அங்கு ஒரே ஒரு பெரிய பில்டிங், அதுவும் ஏர்ஹோஸ்டஸ்களுக்கு என்று இருந்தது. இரு நாட்களுக்கு முன்புதான் அப்போது எடுத்த புகைப்படத்தைப் பார்த்தேன். அந்த இடமே பாலைவன மண், சிறு குறு செடிகள் என்று இருந்தது).
பிறகு ஏகப்பட்ட வளர்ச்சி…. பல வருடங்களுக்குப் பிறகு, நான் குடியிருந்த வீட்டைப் பார்க்கச் சென்றபோது, இடத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்தது.
ஆரம்பத்தில் மெட்ரோ இரயில் கொண்டுவந்தபோது, சரியான திட்டமிடுதலாக எனக்குத் தோன்றவில்லை. பிறகு ஸ்டேஷனையும் ஒவ்வொரு Mallஐயும் இணைத்து திட்டம் முழுமை பெற்றபோது எப்படித் திட்டமிட்டிருக்காங்க என்று ஆச்சர்யப்பட்டேன்.
துபாயைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சியை விட்டுவிடுங்கள். அங்கு அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும், தவறுதலாக நம் காரை இடித்துவிட்டாலோ, உடனேயே நிறுத்திவிடுவார்கள். அங்கு சட்டம்தான் எல்லோரையும்விடப் பெரியது. அந்த நிலைமையை இந்தியா எந்தக் காலத்திலும் எட்ட முடியாது. அங்கு இருக்கும் ஒழுங்கு, தவறுகளும் நடக்கும், ஆனால் மாட்டிக்கொண்டால் தப்ப முடியாது. அரசு அலுவலகங்களில் பெண்களுக்குக் கிடைக்கும் மரியாதை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக மிகக் குறைவாக இருப்பது, எல்லோருக்கும் பாதுகாப்பு….. துபாய்க்கு 100 மார்க்குகள் என்றால், இந்தியாவுக்கு 50 கூட கொடுக்கமுடியாது என்பது என் கருத்து. By and large, Gulf countries நிச்சயம் மிக மிக நல்ல நாடுகள், வேலை பார்த்து அங்கேயே வாழ்வதற்கு. (and to return to homeland after service -:) )
புதியவன்,
// துபாயைப் பற்றி எழுத எவ்வளவோ
விஷயங்கள் இருக்கின்றன. //
எழுதுங்களேன்…
நானும் தெரிந்துகொள்ள ஆவலாக
இருக்கிறேன். துபாய் மட்டுமல்ல –
மிடில் ஈஸ்டில் உங்கள் அனுபவம்
எந்த நாடாக இருந்தாலும் எழுதுங்களேன்…
நீண்ட காலம் அங்கே இருந்தவர் என்கிற முறையில்
உங்களிடமிருந்து இந்த விஷயங்களை
தெரிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்