ஏப்ரல் 13, 1945 -ல் ரிலீஸ் ஆனது ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்களின் பிரகதி ஸ்டூடியோ தயாரித்த ஸ்ரீவள்ளி
தமிழ்த் திரைப்படம்.
இதில் நாயகன் முருகனாக – வேலன், வேடன், விருத்தன் ஆகிய
3 தோற்றங்களிலும் வந்தவர் – தானே பாடி நடிக்கக்கூடிய
அந்தக் காலத்தில் முன்னணி ஹீரோவாக புகழ்பெற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்.
கதாநாயகியாக, வள்ளி வேடத்தில் வந்தவர் தற்போதைய
நடிகை லட்சுமி அவர்களின் தாய் குமாரி ருக்மிணி.
அந்தப்படம் குறித்த 3 பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கீழே –
16 ஆண்டுகள் கழித்து ஜூலை 1, 1961-ல் அதே ஸ்ரீவள்ளி
தமிழ்ப்படத்தை மீண்டும் தயாரித்து ரிலீஸ் செய்தது இன்னொரு புகழ்பெற்ற
நிறுவனமான நரசு ஸ்டுடியோஸ்…
புராணப்படம் தானே –
கதை -காப்பிரைட் பிரச்சினையே இல்லாமல் எத்தனை தடவை
வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே…!!!
இந்தப்படத்தில், நாயகன் முருகனாக – வேலன், வேடன்,
விருத்தன் ஆகிய 3 தோற்றங்களிலும் வந்தவர் அப்போதைய
புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசன்… கதாநாயகி வள்ளியாக
வந்தவர் பத்மினி. இந்த படத்தின் புகைப்படங்கள் சில கீழே –
இதுவரை விசேஷம் எதுவும் இல்லை;
ஆனால், இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால்,
முதல் வள்ளியில் 16 ஆண்டுகளுக்கு முன் கதாநாயகனாக,
முருகனாக நடித்து –
பின்னர் மார்க்கெட் இழந்து வாய்ப்புக்காக பல ஆண்டுகள்
காத்திருந்த டி.ஆர்.மகாலிங்கம் இதில் துணை-நடிகராக,
நாரதர் வேடத்தில் தோன்றியது தான்.
டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘ஸ்ரீவள்ளி’யில் மிகவும் புகழ் பெற்ற
பாடல், அவரே பாடிய “சாயாத மான்” – கீழே –
பின்னர் வந்த சிவாஜி’யின் ஸ்ரீவள்ளி’யில் –
அதே பாடலை, டி.எம்.எஸ். பாட சிவாஜி நடித்த காட்சி -கீழே –
காலம் செய்த கோலம், கதாநாயகனாக நடித்த
டி.ஆர்.மகாலிங்கத்தை- 16 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்த
அதே படத்தின் மறுபதிப்பில்,
துணை நடிகராக நடிக்க வைத்தது….
ஆனாலும் மகாலிங்கத்திற்கு ஒரு திருப்தி….
அவரது ஸ்ரீவள்ளி சுப்பர்ஹிட் திரைப்படமாக ஓடியது….
ஆனால் சிவாஜி நடித்த ஸ்ரீவள்ளி படமோ, சூப்பர் ஃப்ளாப் ஆனது….!!!
.
________________________________________________________________________________________________