ஒரு வருடம் கூட ஆகவில்லையே –
நடந்தது மக்களுக்கு எப்படி மறக்கும்…???
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் –
” ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை ஏன் திறக்கிறாய்…?”
தானே ஆட்சியில் இருக்கும்போது….?
” புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கவில்லையா…?”
என்று எதிர்க் கேள்வி…!!!
அன்று கொரொனா ஊரடங்கின்போது டாஸ்மாக்கை
எதிர்த்து போராட்டம் நடத்திய –
திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள்,
முஸ்லிம் லீக், காங்கிரஸ், யார் குரலையும் இன்று
கேட்கக்காணோமே…?
அத்தனை பேருமா அஞ்ஞாத வாசம் போயினர் ….?
மானம் போகத்தான் செய்யும்….சீட்டுக்கும், நோட்டுக்கும்
கூட்டு வைத்தால், சில சமயங்களில் –
இப்படித்தான் அஞ்ஞாத வாசம் போகத்தான் வேண்டியிருக்கும்
புரிகிறது……
- உம்ம்….அரசியலில் இதெல்லாம் ….. கவுண்டமணியப்பா…!!!
போராடும்போதும், சிரிப்புக்கு ஏதும் பஞ்சமில்லை…!!!
எப்பேற்பட்ட இளிச்சவாய் மக்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார் போலும்…..!!!
.
-____________________________________________________________________________________________________
நம்மோட ரெண்டு தவறு
ஒன்னு அப்போ இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டது.
ரெண்டாவது, அதை இன்னும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கறது .
தப்பை எல்லாம் நம்ப கிட்ட வச்சுக்கிட்டு அவர்களை குற்றம் சொல்வது சரியா?
சீரியசான டாபிக்குல, கோவாலசாமி, துரை, திருமா இவங்களைக் கோர்த்துவிட்டு நகைச்சுவைக் கட்டுரையா ஆக்கிட்டீங்களே. ஆக்கினதுதான் ஆக்கினீங்க, கனிமொழியை மறந்துட்டீங்களே. திமுக ஆட்சிக்கு வந்தால், திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சாராய ஆலைகள் மூடப்படும் என்று சொன்னதையும் சேர்த்திருக்கலாம்.
அவர்கள் மீது ஒரு தவறும் (மேலே குறிப்பிட்டவர்கள்) கிடையாது. ராஜபக்ஷேவை கடுமையாக தமிழகத்தில் பேசிவிட்டு, அவரைச் சந்தித்து காலில் விழுந்து பரிசு பெற்றதை எல்லோரும் அறிவோமே. கோவாலசாமிக்கு கொள்கை, தன்மானம் இருப்பதாக அவரே சொல்லிக்கொள்ள மாட்டாரே.
கம்யூனிஸ்டுகளை விட்டுவிடலாம். அவர்கள் தேர்தல் கூட்டணி வைப்பதற்காக பணபேரம் பேசி திமுகவிடம் கோடிக்கணக்கில் வாங்கிக்கொண்டதை எல்லோரும் அறிவார்களே. அவங்களுக்கு முதுகெலும்பு போய் நிறைய வருடங்கள் ஆகிறதே. திமுகவை எதிர்த்தால் கட்சு வியாபாரம் படுத்துவிடும்.
ஷா நவாஸ்… அவரையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டுவிட்டீர்களே.. தலைவன் எவ்வழி, அவ்வழி ரவிகுமார், ஷா நவாஸ் போன்றவர்கள். கொத்தடிமைகளிடம் சொந்தச் சரக்கு எதிர்பார்க்கலாமா?
நாம் உண்மையிலேயே குறை சொல்லவேண்டியவர்கள் குணசேகரன் போன்ற நீக்கமற நிறைந்திருக்கும் போலி பத்திரிகையாளர்களையும்….பொருளாதாரப் புளி போல பேசிய கைக்கூலிகளையும், கொத்தடிமைத் தொலைக்காட்சிகளையும்தான்.