
Observers watch from a rooftop as rescued Israeli hostages arrive at Ben Gurion Airport near Tel Aviv, on their return to Israel after Operation Entebbe, in which Israeli special forces rescued 100 hostages held at Entebbe Airport in Uganda on 3rd July 1976. The hostages had been passengers on Air France Flight 139, which was hijacked by members of the Popular Front for the Liberation of Palestine. (Photo by Keystone/Hulton Archive/Getty Images)
மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…
நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம்.
ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு
சிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம்.
பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் எடுத்துக்காட்டாக கூற முடியாது. பொதுவாகவே
யூதர்கள் மிகுந்த மதிநுட்பம் உடையவர்கள்…
1948, மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ்.இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில் 74% பேர் யூதர்கள். மற்ற 2௦.8% பேர் அரேபியர்கள் ஆவர். எழுத்து வடிவில் எந்தவித அரசியலமைப்பு சட்டமும் இல்லாத ஜனநாயக நாடு இஸ்ரேல்.
இஸ்ரேல் நாடு ஹீப்ருவை தேசிய மொழியாக அறிவித்த போதிலும் ஹீப்ரு மொழி பேச்சு வழக்கில் இல்லை…( நமதுசம்ஸ்கிருதம் போல….!) பேச்சு வழக்கில் ஹீப்ரு மொழியை கொண்டு வர இஸ்ரேல் அரசு முயன்று வருகிறது.
உண்மையில் உலகத்தை மறைமுகமாக ஆட்டி வைக்கும் தந்திரம்
மிக்கவர்கள் இஸ்ரேல் நாட்டினர் என்றே கூறலாம். ஹிட்லரால் யூதர்கள் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும் பல சோதனைகளைகடந்து தனி ஒரு வீறு நடை போடும் நாடு இஸ்ரேல் நாடு தான்.
அமெரிக்கா தான் யூதர்களுக்கு தனது பூர்வீக தேசத்தை மீட்டுக் கொடுத்து உள்ளது. பாலஸ்தீன வீரர்களும் அமெரிக்க உள்ளிட்ட மற்ற நாட்டு வீரர்களை சமாளிப்பதை விட யூதர்களை போரில் சமாளிப்பது மிக கடினம் என்றே எண்ணுகின்றனர்.
இசை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என பல துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை.
உலக வர்த்தகத்தில் 7௦% யூதர்களின் கைவசமே உள்ளது. உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், நாகரீக உடைகள், ஆயுதங்கள், சினிமா துறை என பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
பல சிறப்புகளை தன்னுள் அடக்கிய இஸ்ரேல் நாடு இது வரை 12 நோபல் பரிசு பெற்ற நாடு என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டும். கல்லூரியில் சேர வேண்டும் என்றால் முதலில் 5,௦௦௦ டாலர் முதல் போட்டு, ஒரு நிறுவனத்தை துவக்கி 15 பேருக்கு வேலை கொடுத்து,
அந்த ஐந்தாயிரத்தை, 15,௦௦௦ டாலராக மாற்றினால் தான் கல்லூரியில் இடம் கிடைக்குமாம்.
உலகில் பாதி முக்கிய branded நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான். உலகில் அநேக சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பதும் இஸ்ரேல் நாடு தான். ஆனால் அந்த நாட்டிலேயே குழந்தைகள் இதை பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் கொடுக்கல் வாங்கல் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய சிறப்பும் இஸ்ரேலுக்கு உண்டு.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இந்த நாட்டில் அதிகபட்ச உரிமை உண்டு. பார்வையற்றவர்கள் கூட தடுமாற கூடாது என்பதற்காகவே இந்த நாட்டில் ரூபாய் நோட்டுகள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் கணினி இருக்கிறது. நாட்டில் 24% பேர் பட்டம் பெற்றவர்கள். இதில் 12 % பேர் முதுகலை பெற்றவர்கள்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களில் 55% பேர் பெண்கள் தான். இந்த விசயத்தில் உலகில்
நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல் உள்ளது. விவசாயத்தின் முதுகெலும்பே சொட்டு நீர் பாசனம் தான். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்களால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி கொள்ளும் ஒரே நாடு இஸ்ரேல்தான். இந்த ஒரு சிறிய நாட்டில் 3 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா…?
இஸ்ரேல் மக்கள் தொகையில் பரப்பளவில் மட்டுமே சிறியதொரு நாடு ஆனால் ராணுவத்தில் உளவு துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி இஸ்ரேல் தான்.
மொசாட் உருவானது எப்படி…? ….
பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஆட்சி புரிந்துக் கொண்டிருந்த காலத்தில். அங்கே அதிகமாக வாழ்ந்தவர்கள் அரேபியர்கள். யூதர்களின் எண்ணிக்கை மிக குறைவே.
அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் மறைமுகமாக போர் நடந்துக் கொண்டே தான் இருந்துள்ளது.
அரேபியர்கள் தங்கள் நாட்டில் யூதர்கள் வாழ்வதை விரும்பவில்லை. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் அரசு யூதர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. உலகம் முழுவதும் வாழ்ந்த யூதர்கள் ஒரு காலக்கட்டத்தில் இஸ்ரேலை நோக்கி வர துவங்கினர்.
அந்த சமயம் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சியில் இருந்தார்.
ஹிட்லர் நாஜி படையின் மூலம் யூதர்களை லட்சக்கணக்கில் கொன்றார். ஹிட்லரிடமிருந்து யூதர்களை காப்பாற்ற இஸ்ரேல் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யதயாராக இருந்தனர். அவர்கள் மிகப்பெரிய செலவில் கப்பல்களை வாங்கினர். இருந்தாலும், ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் மீட்டு வருவது அந்த சமயத்தில் மிக இக்கட்டான ஒரு சூழலே.
ஒரு புறம் நாஜி படைகள் யூதர்களை தேடி கொண்டிருக்க மறுபுறம் பிரிட்டிஷ் அரசும் யூதர்கள் பெரும் அளவில் வந்து குடியேறுவதை விரும்பவில்லை. இதற்கு பின் உலகில் வாழ்ந்த யூத மக்களைஒன்றிணைந்து கொண்டு வர வைக்க அமைக்கப்பட்ட ஒரு ரகசியகுழு தான் இந்த உளவு அமைப்பு. இந்த உளவு அமைப்பின் பெயர் மொசாட் லிஅலியா பெட். காலமாற்றத்தில் இந்த அமைப்பு மொசாட்டாக வளர்ச்சி அடைந்தது.
இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் அனைத்து தகவல்களும் மொசாட்டின் தலைமையகத்துக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும். ஜேம்ஸ்பாண்ட் படத்தையே மிஞ்சும்
அளவிற்கு செயல்திறன் கொண்டது மொசாட். உலகின் மிகப் பெரிய உளவு அமைப்புகள் சி.ஐ.ஏ. மற்றும் எம்.ஐ.6 க்கு அடுத்த இடத்தில் மொசாட் உள்ளது.
இரண்டாவது உலகப் போர் முற்றுப்பெற்ற மூன்று ஆண்டில் ஐ.நா.வின் ஒப்புதலோடு 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இஸ்ரேலின் மீது அரபு நாடுகள் தாக்குதல் ஏற்படுத்தின. 1949 ஆம் ஆண்டு இந்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜோர்டான் நாடு மேற்குக்கரை என கூறப்படும் ஜோர்டான் நதியின் மேற்குப் பகுதியில் உள்ள பரவலான பகுதியை எடுத்துக் கொண்டது மேலும் மத்திய தரைக்கடலை ஒட்டி இருக்கும் காஜா எனும் பகுதியை எகிப்து எடுத்துக் கொண்டது.
1967-ஆம் ஆண்டு நடந்த போரில் அரபு நாடுகள் தோல்வியை தழுவின. மேற்குக்கரை மற்றும் காஜா – இஸ்ரேலுக்கு சொந்தமானது. இதில் சில பகுதி தான் பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலில் பத்து லட்சம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் அதன் பின் உலகமெங்கும்இருந்த யூதர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். தற்போது ஒன்றரைக் கோடிக்கும் மேல் யூதர்கள் அங்கு உள்ளனர்.
சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் இஸ்ரேலின் உளவுத்துறை
மொசாத்…உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும் முன்னோடி என்றே கூறப்படுகிறது இஸ்ரேலின் மொசாட்.
உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கரமானதாக அனைவராலும் கருதப்படும் உளவு அமைப்பு மொசாட்.
அமெரிக்காவிடம் தான் பயிற்சி பெற்றது மொசாட் ஆனால் இப்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வே ஆச்சரியப்படும் அளவிற்கு மொசாட் உள்ளது. இஸ்ரேலுக்கு வரும் காலத்தில் எதிரி ஆவான் என்று மொசாட் யாரையாவது எண்ணினால் ஆரம்பத்திலேயே அந்த அமைப்பை அழித்து விடும்.
1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சியாளர்கள் 11 பேர் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் அமைதியானது. மொசாட் செய்த அந்த படுகொலைகள் பாலஸ்தீனர்கள் இடையில் பெரும் பயத்தை உண்டாக்கியது…..
இஸ்ரேல் நாட்டில், பாலஸ்தீனர்கள் வாழும்
ஊரைச் சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இது தற்கொலை படை தாக்குதல்களை தடுக்க என்று சொல்வதை விட இந்த தடுப்பு சுவரின் மூலம் 40 லட்சம் பாலஸ்தீனர்களை சிறைவாசிகளாக ஆக்குகிற திட்டம் இது என்பதே உண்மை.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டில் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் மேற்கொண்ட ரகசிய படுகொலை வேட்டையின் பெயர் Operation Wrath of God. இஸ்ரேல் மிகச் சிறிய நாடாகவே இருந்தபோதிலும் அந்த சிறிய நாட்டை பார்த்து பொருளாதாரத்திலும் மக்கள்தொகையிலும் மிகையாக இருக்கும் மேற்குலக நாடுகள் கூட பயப்படுகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் மொசாட்.
இஸ்ரேல் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் கூட எந்த நேரமும் தன்னை அழிக்க காத்துக் கொண்டிருக்கும் அரபு தேசங்கள் மத்தியில் மிகச் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேலிடம் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டியவை
நிறைய இருக்கின்றன….!!!
——————————————————————————————————–
கண்டுபிடிப்புகளுக்கு முழுமுதற் காரணம் தேவைகள்தாம். இஸ்ரேல் நிறைய கண்டுபிடித்ததற்கு (விவசாயம், இராணுவத் தளவாடங்கள், உளவுத்துறை) அதற்கான தேவையும், வேறு வழிகள் இல்லாமையுமே ஆகும்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிக அதிகம். அதற்குக் காரணமும் யூத சார்பு அரசியல் அழுத்தங்கள் (அமெரிக்காவில் அமெரிக்க யூதர்கள், அமெரிக்க அரசியலில் மிகுந்த ஆளுமை கொண்டவர்கள்)
இந்தியாதான், பழுதுபட்ட (அரசியல்) நோக்கங்களுக்காக, உலகில் முதல் முதலாக பாலஸ்தீனத்தை, PLOவை அங்கீகரித்தது. பயங்கரவாதம் முழுமையாக களையப்படவேண்டியது. ஈராக் அத்துமீறல்களுக்குப் பிறகு இதனை அரபு தேசங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தன. ஈராக் அத்துமீறல்களுக்குப் பிறகு பாலஸ்தீனியர்கள் குவைத்தின் எதிரிகளாக அறியப்பட்டனர்.
மாறிவரும் அரசியல் சூழலில், அரபு தேசங்களே இஸ்ரேலை அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டன (முன்பு, இஸ்ரேலுக்குச் சென்றதாக பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் பண்ணியிருந்தால் அரபு தேசங்களில் நுழைவது கடினம். அதற்காக, இஸ்ரேலுக்கு வருபவர்களுக்கு பாஸ்போர்ட்டில் அல்லாது, தனியானதொரு டாக்குமெண்டில் ஸ்டாம்ப் பண்ணுவாங்க). பஹ்ரைனில் யூதர்கள் எலெக்டிரானிக்ஸ் கடைகளை (ஷார்ப் போன்று) வைத்திருந்தார்கள்.
யூதர்கள்தான் உலகில் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதெல்லாம் சரியான மதிப்பீடு கிடையாது என்பது என் எண்ணம். முன்பெல்லாம் நம்ம ஊர்ல சொல்லுவாங்க, பிராமணர்கள், மற்ற ஜாதியினரைவிட அறிவில் சிறந்தவர்கள் என்று. எப்படி Train ஆகிறாங்க, எப்படி focused ஆக இருக்காங்க, எவ்வளவு முயற்சிக்கிறாங்க என்பதுதான் ஒருவர் அறிவுடையவராக ஆவதற்கான காரணிகள்னு நான் நினைக்கிறேன். நாமே ஒரு செயலை சாதாரணமான சமயங்களில் செய்வதற்கும், இரண்டு மணி நேரத்தில் solution கண்டுபிடிக்கலைனா பெரும் டேஞ்சர் என்ற நேரங்களில் நம் மூளை வேலை செய்யும் விதத்திற்கும் வித்தியாசத்தை அனுபவித்திருக்கலாம் (நான் பல சமயங்களில் இதனைக் கண்டிருக்கிறேன். எப்படித்தான் அந்த வேகத்தில் செய்துமுடிப்போம் என்றே தெரியாது, எப்படி பிரச்சனையை சால்வ் பண்ணிணோம் என்றும் தெரியாது.). மூளை அனேகமாக அனைவருக்கும் ஒரே மாதிரிதான் (exceptionsஐ விட்டுவிடுவோம்). அதனால், இந்த race intelligent, இவங்க தத்திகள் என்பதற்கு எந்த லாஜிக்கும் கிடையாது.
இது மாதிரித்தான் சொல்லுவாங்க, உலகில் சிறந்த தாய்மார்கள், சீனப் பெண்கள் என்று. இந்தியர்கள் கடைசிவரை தன் குழந்தைகளுக்கு spoon feed பண்ணுவாங்க என்றும் சொல்வாங்க.
புதியவன்,
DNA -வுக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா…?
ஒருவரின் வளர்ச்சிக்கும், திறமைக்கும், அவரது
DNA -வும் ஒரு முக்கிய காரணி அல்லவா….?
(முழுக்க முழுக்க DNA தான் காரணம் என்று
சொல்லவில்லை… அதுவும் ஒரு முக்கிய
காரணம் அல்லவா என்று தான் கேட்கிறேன். )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நிச்சயம் டி.என்.ஏ. ஒரு காரணிதான். ஆனால் அது ஒரு குலத்தில் பெர்முடேஷன் காம்பினேஷனில் வருவது. அதனால்தான் குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பழமொழி உள்ளது. Over a period of time, lot of mixing and matching இருப்பதால் இது ஓரளவு ஒருவனின் குணத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும்.
உதாரணமா, நீங்க fair in your assessment. அதே குணம் உங்கள் பெண், அவங்க குழந்தை, உங்கள் சகோதரர்கள் ஆகியோருக்கும் இருக்கிறதா? I am not fair and to some extend selfishனு assess பண்ணிக்கறேன். ஆனால் என் FIL sideல ரொம்ப fair mentality. இரயிலில் அவங்களோட செல்லும்போது, நான் கட கடவென, எங்கள் பெட்டிகளை சீட்டிற்கு அடியில் வைத்துவிடுவேன் (4-5 இருந்தால், எல்லாவற்றையும்). ஆனா என் FIL அது சரியல்ல என்பார். 3 சீட்டுகள் இருந்தால், கீழே உள்ள இடம் அந்த 3 பேருக்கும் உள்ளது, it is not first come first occupy என்பார். இந்த fair mentality என் பையனிடம் பார்க்கிறேன் (டி.என்.ஏ வில் அவங்களுடைய குணம்). பசங்களை வளர்ப்பதிலும், ஒவ்வொன்றையும் follow செய்வதிலும் குடும்பத்துக்குக் குடும்பம் வித்தியாசம் இருக்கிறது. I hope you would have got, what I am trying to explain.
எதனால முன்பு, பிராமணர்களுக்கு நினைவுசக்தி, கணக்கில் திறமை என்றெல்லாம் உண்டு என்று சொல்வாங்க? The caste is more or less focused and didn’t divert their attention to anything else. அந்த வழக்கம் குறையும்போது திறமையும் குறையும்.
புதியவன்,
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.
இந்த விஷயத்தைப்பொருத்த வரைக்கும்,.
என் கருத்தும் அதே தான்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்