” நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச்
சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! ‘
-என்கிற தலைப்பில் விகடன் செய்தித் தளத்தில் -நேற்று ஒரு
கட்டுரை வெளியாகி இருக்கிறது… அதை அப்படியே கீழே
தந்திருக்கிறேன்…
நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்!
சேகர்ரெட்டி தலைமையிலான நால்வர் கூட்டணிக்கு மீண்டும்
மணல் குவாரி அமைப்பதற்கான டெண்டர் ரகசியமாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இதற்காக கோடிகள் கைமாறியிருப்பதாகவும் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் மீது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
கடந்த ஆட்சியில், தமிழக ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட
மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்ததில், பிரபல
தொழிலதிபர் சேகர்ரெட்டி, புதுக்கோட்டையைச் சேர்ந்த
ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம்
ஆகியோர் அடங்கிய கூட்டணிக்குப் பெரும் பங்கு உண்டு. கோடிகளில் கொடிகட்டிப் பறந்தது இந்தக் கூட்டணி.
முறைகேடுகளால், வரலாறு காணாத அளவுக்கு மணல்
விலையும் உச்சத்துக்குச் சென்றது. மணல் அதிகம்
அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
மணலுக்கு மாற்றாக ‘எம்-சாண்ட்’ விற்பனையை அரசுஊக்குவித்துவருகிறது. தொடர்ந்து, சட்டவிரோதப்பணப்பரிவர்த்தனை வழக்கிலும், சேகர்ரெட்டி மற்றும் அவரின் மணல் கூட்டணி நண்பர்களான ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோரும் அமலாக்கத்துறையிடம் சிக்கியதும்,
குறிப்பிடத்தக்கது.
தற்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,
நீர்வளத்துறை மூலமாக மணல் குவாரிகளை மீண்டும் நடத்த
மூன்று நிறுவனங்கள் ரகசியமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான
துரைமுருகன் வீட்டில் கையெழுத்தாகியிருப்பதாகவும், மணல் கூட்டணியிடமிருந்து 300 கோடி ரூபாய் துரைமுருகன் தரப்புக்குகைமாறியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலவுகின்றன.
அதிலும், சேகர்ரெட்டி தலைமையிலான மணல் கூட்டணியின் பெயர்களே அடிபடுகின்றன. இது தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் உதவியாளராகச் சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோஉரையாடல் ஒன்று வேகமாகப் பரவிவருகிறது.
அந்த உரையாடல் பதிவு அப்படியே…
எதிர்முனையில் பேசுபவர்: ‘‘போய்விட்டார்களா…
இருக்காங்களா?’’
உதவியாளர் எனக் கூறப்படும் நபர்: ‘‘முடிந்தது.’’
எதிர்முனையில் பேசுபவர்: ‘‘தமிழ்நாடு முழுக்கவா…
நாலு மாவட்டம் மட்டுமா? ‘படிக்காசு’ (மணல் மாஃபியா
கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’’
உதவியாளர் எனக் கூறப்படும் நபர்: ‘‘தமிழ்நாடு
முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சு தருவாங்க.
எதிர்முனையில் பேசுபவர்: ‘‘மொத்தம் மூணு பேரா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘இல்லை. நாலு பேர்.’’
எதிர்முனையில் பேசுபவர்: ‘‘யார், யாரு?’’
உதவியாளர் எனக் கூறப்படும் நபர்: ‘‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’’
எதிர்முனையில் பேசுபவர்: ‘‘சேகர்ரெட்டி வந்தாரா?’’
உதவியாளர் எனக் கூறப்படும் நபர்: ‘‘அவர் வரலை. முன்ன
ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே
பிரிச்சு கொடுப்பாங்க.’’
எதிர முனையில் பேசுபவர்: ‘‘எது இருந்தாலும், ஐயா
(துரைமுருகன்) கிட்ட கேட்டுச் சொல்லுங்க.
உதவியாளர் எனக் கூறப்படும் நபர்: ‘‘வாங்கிக்கிலாம்… வாங்கிக்கலாம்’’ என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது.
இந்தப் பணப் பரிவர்த்தனை சென்னை கோட்டூர்புரத்திலுள்ள
வீட்டில் நடந்ததா அல்லது காட்பாடி காந்தி நகரிலுள்ள
வீட்டில் நடந்ததா என்ற தகவல்கள் அதில் இடம்பெறவில்லை.
அதேசமயம், துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான
கதிர் ஆனந்த் மூலமாகத்தான் இந்த ஏற்பாடுகள் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இது தொடர்பாக, கதிர் ஆனந்த்தை செல்போனில் தொடர்பு
கொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், ‘‘இந்த கேள்விகளையெல்லாம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்?
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். கொரோனா
தடுப்புப் பணிகளுக்காக ஊர் ஊராகச் சுத்திக்கிட்டு இருக்கிறேன்.
சமூக வலைதளங்களில் என்ன வருகிறது என்பதைப் பார்க்க நேரமில்லை’’ என்றார்.
தொடர்ந்து, அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அந்தத் தகவல்களை அனுப்பிவைத்தோம். மேலும், சேகர்ரெட்டியின் மணல் கூட்டணியிலுள்ள கரிகாலன் என்பவருடன் துரைமுருகனும்,
கதிர் ஆனந்த்தும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்
கதிர் ஆனந்த் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிவைத்து
பார்க்கச் சொன்னோம்.
‘‘புகைப்படம் எடுத்துக்கொண்டவருக்கும், உங்களுக்கும்
என்ன சம்பந்தம்… அவர் யார்?’’ என்று வாட்ஸ்அப்பிலேயே கேள்வியைப் பதிவிட்டோம்.
கேள்வியைப் பார்த்த கதிர் ஆனந்த், நீண்ட நேரமாகியும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால், மீண்டும் அவருக்கு போன் செய்தோம். நீண்ட நேரம் ரிங் அடித்ததே தவிர… போனை அவர் எடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த விவகாரம் மக்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தரப்பில் விளக்கம் அளித்தால், அதையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்!
பின் குறிப்பு – திமுகவுக்கு பாதகமான இந்த செய்திக்கட்டுரையை
திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் பங்காளராக இருக்கிறார் என்று சொல்லப்படும் விகடனே –
பிரசுரம் செய்திருப்பதால், ஒருவேளை இது திமுக-விற்குள்
யாராவது போட்டுக்கொடுக்கும் வேலையை துவங்கி இருக்கிறார்களா என்கிற சந்தேகத்தையும் சேர்த்தே கிளப்புகிறது.
இது குறித்து அரசு சார்பாக, உறுதியான விளக்கங்கள்
விரைவாக வெளியிடப்படுவது மிகவும் அவசியம்…..
ராஜ்குமார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
கண்ணன் ஜீ
இதுக்கு என்ன சொல்ரீங்க.
ஊராட்சிகள் வரை முரசொலிக்கு சந்தா கட்டச்சொல்லி நிர்ப்பந்தித்து 120 கோடி ரூபாய் தங்கள் குடும்பத்திற்குச் சம்பாதிக்கத் திட்டமிட்டது முதலில் நடந்ததா இல்லை மணல் குவாரி ஊழல் முதலில் நடந்ததா? எது என்று விகடன் செய்தியில் சொல்லியிருக்காங்களா? இல்லை துரைமுருகனை மட்டும் மாட்டிவிடுவதற்காக விகடன் அதிபர் கேடி பிரதர்ஸ் இதனைச் செய்திருக்கிறார்களா?
புதியவன்,
// ஊராட்சிகள் வரை முரசொலிக்கு சந்தா கட்டச்சொல்லி
நிர்ப்பந்தித்து 120 கோடி ரூபாய் தங்கள் குடும்பத்திற்குச்
சம்பாதிக்கத் திட்டமிட்டது //
இது சம்பந்தமாக எதாவது தகவல் இருந்தால் தாருங்களேன்.
அல்லது நீங்களே கூட பின்னூட்டத்தில் விவரமாக
எழுதலாம்…
எனக்கு இந்த தகவல் கிடைக்கவில்லை.நானும் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.
//அடுத்த கட்ட ஊரடங்குத் தளர்வில் டாஸ்மாக் திறப்பு என்ற முடிவெடுக்கப்படும் அதேநேரம், மது பான விலைகளையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. எனவே விரைவில் டாஸ்மாக் திறப்பு என்ற அறிவிப்பும் மது பான விலைகள் அதிகரிப்பு என்ற அறிவிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக வரலாம்//
குடிமகன்கள் எல்லோரும் அரசுக்கு கோரிக்கை வைத்து, டாஸ்மாக் கடையைத் திறக்கச் சொல்கிறார்களாம்… விலை உயர்வை ஜெயரஞ்சனின் மின்னம்பலம் justify பண்ணி, மக்களைத் தயார் செய்யும் விதமாக சாராய ஆலை அதிபர்கள் (வேற யாரு..ஹிஹி) அரசை விலையை உயர்த்திக் கொடுக்குமாறு நிர்பந்திக்கிறார்களாம்.
பெட்ரோல் விலை உயர்கிறதே என்றும் கவலைப்படுகிறது செய்தித் தளங்கள் (அதாவது மத்திய அரசுதான் விலை உயர்வுக்குக் காரணமாம். அதனால் தைரியமாகச் சொல்கிறது. தமிழகம், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவித வரியும் வேண்டாம் என்று சொன்னால் அதுவே 15 ரூபாய்க்கு மேல் குறைந்துவிடுமே)