நீண்ட நாட்களாயிற்று…
இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்
வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்..
முதுமை காரணமாக இருக்கலாம்.
அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராக
மதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன.
முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…?
அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்
அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –
ஐயா
புதியவன் எங்கே சில நாட்களாக வரவில்லை.
ஏனென்றால் உங்களின் பறபல பதிவுகளுக்கு அவரின் பின்னூட்டங்கள் சுவாரசியத்தை கூட்டும்.
தற்போது அவரின் பங்களிப்பு இல்லாமல் இந்த தளம் ஒரு வெறுமைக்குள் உட்பட்டுள்ளது போல நான் உணருகின்றேன்.
சைதை அஜீஸ்,
உங்களைப் போன்றே எனக்கும் நண்பர்
புதியவனின் பின்னூட்டங்கள் மிகவும் பிடிக்கும்.
இந்த விமரிசனம் தளத்தின் பரபரப்பிற்கு அவரும்
ஒரு முக்கிய பங்காளர். அவருடைய
பின்னூட்டங்களில் பல சுவாரஸ்யமான
தகவல்களும் சேர்ந்து கிடைக்கும்.
அரசியல் களத்தில் கருத்துமோதல்கள் சகஜம்.
அவை இருந்தால் தான் சுவாரஸ்யம். எனவே,
கவலைப்பட வேண்டாம்; கருத்து மோதல்கள்
காரணமாகவெல்லாம் புதியவன் விலகிப்போக
மாட்டார். எதிர்த்து நின்று மேலும் அழுத்தமாக
தன் கருத்தை பதிவு செய்யக்கூடியவர் அவர்.
எதாவது பயணத்தில் இருக்கக்கூடும். அல்லது
வேறு எதாவது காரணங்கள் இருக்கலாம்.
பார்த்துக்கொண்டிருப்பார்; ஆனால், எழுதக்கூடிய
வசதி இருந்திருக்காது.
எனக்கு கூட அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு.
அவரே விரைவில் வந்து தனது அடுத்த பின்னூட்டத்தில்
விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
என்ன புதியவன், நான் சொல்வது சரிதானே….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் அஜீஸ்.. நன்றி…
கருத்து மோதல்கள் சகஜம்தானே… பாருங்க.. நான் திமுக அல்லக்கை ஜெயரஞ்சன் என்றே எழுதிக்கொண்டிருந்தேன். பதவிக்காக, பணத்துக்காக எல்லாவற்றையும் (மானம் உட்பட) அடகு வைக்கும், நியாயவான்கள் போலப் பேசிய போலி பத்திரிகையாளர்கள், ஊழல், போலி போராளிகள் நிறைந்த உலகத்தில் சில நேரங்களில் எதுக்குடா இவங்களை விமர்சிக்கிறோம் எனத் தோன்றிவிடுகிறது.
காணொளி பார்க்கவும், பதிவுக்கான பதில் கருத்துகளைப் பார்க்கவும் சந்தர்ப்பம் அமையவில்லை. பொதுவாக அரசியல் நிகழ்வுகள் வெறுப்பையும் எரிச்சலையும் ஒருசேர இருவாக்குகின்றன. எப்போதாவது சிரிப்பு சேனலாவது பார்க்கலாம் என நினைத்தால் அரசு செலவில் விளம்பரங்கள் மூலம் வருவாயைப் பெருக்க, முதல்வர் எப்படி மாஸ்க் அணிவது என சில நிமிடங்களுக்கு ஒருமுறை பரப்புரையாற்றுகிறார். சரி வாட்சப்பில் ஏதேனும் செய்திகள் உண்டா என்று பார்த்தால், முரசொலி சந்தா ஊராட்சிகள்வரை அழுத்தத்தினால் பெறப்பட்டு, 120 கோடி ரூபாய் விஞ்ஞான ஊழல் நடைபெறுகிறது. விரைவில் விட்டுப்போனவைகளுக்கும் பதிலெழுதப் பார்க்கிறேன்.