5 மாநில தேர்தல்கள், கும்பமேளா, கொரானா தடுப்பூசி -சரியா…?மக்கள் கருத்து என்ன…? ABP -Cvoter சர்வே …

Kumbh

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி மட்டுமே…
விமரிசனம் அல்ல…!!!

abp survey


https://www.maalaimalar.com/amp/news/national/2021/06/04093350/2697184/Tamil-News-PM-Modi-mistake-that-was-involved-election.vpf

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to 5 மாநில தேர்தல்கள், கும்பமேளா, கொரானா தடுப்பூசி -சரியா…?மக்கள் கருத்து என்ன…? ABP -Cvoter சர்வே …

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த கருத்துக் கணிப்பு யாரிடம் எடுத்தார்கள், எந்த எந்த மாநிலங்களில் எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லாமல் வெளியிடும் இத்தகைய செய்திகளுக்கு எந்தவித மரியாதையும் கிடையாது. இவை அடுத்த லயோலா கருத்துத் திணிப்புதான்.

  கா.மை. சார் உண்மையைச் சொல்லவேண்டும். பிரதமர், 5 மாநிலத் தேர்தல்களையும் 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்திருந்தால், அது சம்பந்தமாக குற்றம் சொல்லி, சொந்த இடுகைகளையோ அல்லது மற்றவர்களின் கருத்துக்களை பதிவாகவோ போட்டிருக்கமாட்டீர்களா? தேர்தல் எல்லாம் தேர்தல் கமிஷன் எடுக்கும் முடிவு. அரசு, இந்துக்களின் விழாக்களில் தலையிடணும் என்று சொல்பவர்கள் நாட்டின் தீவிரவாதிகள்தான். நம்முடைய அரசுகளுமே கிறிஸ்தவர்களின் பண்டிகை, முஸ்லீம்களின் பண்டிகை வரும் சமயங்களிலெல்லாம் தளர்வும், அவை முடிந்த பிறகுதான் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கிறது. இதை கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம். 200 ரூ உ.பிஸ் இடுகை, 2000 ரூ பத்திரிகை உ.பிஸ் செய்திகள், 20,000 ரூ தொலைக்காட்சி உபிஸ் செய்திகளுக்கெல்லாம் மரியாதை உண்டா?

  நீங்கள் ஒரு கருத்துக்கணிப்பு எடுங்கள். கொரோனா சமயத்தில், அரசு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதம் 10,000 ரூபாய் கொடுத்திருக்கவேண்டுமா என்று. 90 சதம், வேணும் என்று சொல்வார்கள். கொரோனாவால் இறந்தவர்களுக்கு அரசு 2 கோடி ரூபாய் இழப்பீடும், இறந்தவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தால், அரசு வேலையும் கொடுக்கவேண்டுமா என்று கேட்டுப்பாருங்கள். திமுக அரசு, இரண்டு மாதங்களுக்கு முன்பு சொன்னதுபோல, ஒவ்வொரு கொரோனா இழப்புக்கும் 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கவேண்டுமா, திமுக இரண்டு மாதங்களுக்கு முன்பு தீவிரமாக எதிர்த்ததுபோல, ஊரடங்கை முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டுமா என்றெல்லாம் கருத்துக்கணிப்பு எடுக்க, தமிழக பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு முதுகெலும்பு இல்லை, ரொட்டித் துண்டுக்கு வாலாட்டிக்கொண்டிருக்கின்றன. கருத்துக் கணிப்புகளில் அனேகமாக எல்லாமே உள்நோக்கமுடைய கேள்விகளாகத்தான் இருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   கருத்து கணிப்புகளை நடத்துபவர்களின்
   நோக்கத்தைப் பொறுத்து தான் அவற்றின்
   முடிவுகளும் இருக்கும் என்பது தான்
   என் கருத்தும்.

   நேர்மையாக, எந்தவித இன்ஃப்ளூயன்சுக்கும்
   உட்படாமல் எந்தவித கருத்து கணிப்புகளும்
   இந்தியாவில் நடத்தப்படுவது இல்லை
   என்பதில் நான் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன்.

   ஆனால் ———-

   ———————–
   // கா.மை. சார் உண்மையைச் சொல்லவேண்டும்.//

   ———

   காவிரிமைந்தனாகிய நான் எப்போதும்
   உண்மையைத் தான் சொல்கிறேன்…./சொல்வேன்
   என்று உறுதி கூறுகிறேன். என் மனசாட்சிக்கு
   விரோதமாக நான் என்றும் நடந்துகொள்ள மாட்டேன்.

   என் மனமும், உங்கள் மனமும் -வெவ்வேறு
   கோணங்களில் பார்த்துக் கொண்டிருந்தால் –
   அதற்குப் பெயர் நான் பொய் சொல்கிறேன் என்பதல்ல….
   நமது பார்வைகள் வித்தியாசப்படுகின்றன என்பதே…

   பாஜக தொடர்புள்ள விஷயங்களில் குறை சொல்வது,
   மதசார்பற்றவனாக இருப்பது ஆகியவை
   எனக்கும் உங்களுக்கும் உள்ள முக்கியமான
   வேறுபாடு….

   அநேகமாக மற்ற பொது விஷயங்களில் நாம்
   இருவருமே ஒரே மாதிரி கருத்துகளைத் தான்
   கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்….
   சில விஷயங்களில் நான் தீவிரம்…
   சில விஷயங்களில் நீங்கள் தீவிரம்…

   விஷயத்திற்கு வருவோம்….
   —————————————
   பிரதமர், 5 மாநிலத் தேர்தல்களையும்
   6 மாதங்களுக்குத் தள்ளி வைத்திருந்தால்,
   அது சம்பந்தமாக குற்றம் சொல்லி, சொந்த
   இடுகைகளையோ அல்லது மற்றவர்களின்
   கருத்துக்களை பதிவாகவோ போட்டிருக்க
   மாட்டீர்களா? //

   ———–
   பிரதமர் தானாக முடிவெடுப்பதைத் தவிர்த்து,
   அனைத்து கட்சி தலைவர்களையும் கூப்பிட்டு
   மாநில தேர்தல்கள் இந்த சமயத்தில் அவசியமா
   அல்லது கொரோனா தீவிரம் குறையும் வரை
   தள்ளிப்போடலாமா என்று கேட்டு
   முடிவெடுத்திருந்தால் – யார் குறை சொல்லப்
   போகிறார்கள்….?
   பாஜக அரசை குறை சொல்வதையே காரியமாக
   வைத்துக்கொண்டிருக்கிறார் என்று நீங்கள்
   வாதிக்கும் காவிரிமைந்தன் கூட குறை கூற
   முடியாதே….?

   ஏன் செய்யவில்லை….?
   ———————————————————

   // தேர்தல் எல்லாம் தேர்தல் கமிஷன்
   எடுக்கும் முடிவு. //

   மற்ற விஷயங்களில் எல்லாம் புத்திசாலித்தனமாக
   வாதிக்கும் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டும்
   கோட்டை விட்டது ஏன்…?

   தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்கிறது என்று
   நிஜமாகவே நீங்கள் நினைக்கிறீர்களா..?
   மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்….!!!

   ————————————————-

   பி.கு. இது எல்லா நண்பர்களுக்குமே…..

   நான் இங்கு பின்னூட்டம் எழுதுபவர்களுடன்
   மோதினால், அதை யாரும் பெர்சனல் மோதல் என்று
   எடுத்துக் கொள்ள வேண்டாம்…. கருத்து மோதல்கள்
   தவிர்க்க முடியாதவை… அவை கண்ணியமான
   முறையில் நிகழ்த்தப்பட வேண்டும் – அவ்வளவே…!!!

   .
   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s