பொதுவாக, தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை.
இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே வாழ்க்கைத் துணையோடு
அது சாத்தியம் …
ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம்.
வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள்வாழ்கிறோம்.
வாழ்நாளின் இறுதியில் ஒருவருக்கு மிகவும்
விருப்பமான நபர் என்று கேட்டால் –
அது அவருடைய வாழ்க்கை துணையாக மட்டுமே
இருக்க முடியும்….
ஆதலினால் காதல் செய்வீர் மனிதர்காள் ;
மனிதர்கள் அன்பு, கோபம் இரண்டு குணங்களையும்
ஒருங்கே கொண்டவர்கள்.
ஆனால் – நம்மிடம் தொடர்ந்து இதில் ஏதோவொரு குணத்தை மட்டுமே ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால்,
தவறு நம்மிடமா அல்லது அவரிடமா என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர வேண்டும்.
உறவு மற்றும் நட்பு வட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.
அவர்களால் சிலநேரங்களில் தொல்லையே என்றாலும்,
சிறந்த, உறுதியான வாழ்க்கைக்கான உந்துதலை
அவர்கள் தான் அளிக்கிறார்கள்.
இன்னும் 10 வருடங்கள் கழித்து, இன்றய தேதியில் நடந்ததில்
1% கூட நமக்கு ஞாபகத்தில் இருக்காது.
யாரோ ஒருவருடன் கொண்டிருக்கும் மனவருத்தத்தை –
இன்றே மறந்து விடலாமே…!!!
தீய்ந்து போன உப்புமா / பிரியாணியை வைத்துக்கொண்டு கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சமைத்து சாப்பிட்டால் போச்சு.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி யாருடனும் –
நட்பு கூட பாராட்ட இயலாது.
எங்கேயும் நிரந்தர நட்பு / பகை இல்லை.
(ஒரு வலைத்தளத்தில் இந்த எண்ணங்களை திருமதி சீதாலக்ஷ்மி….வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்து, இங்கே தருகிறேன்….!!!)
இவற்றில் சில கருத்துகளில் வேறுபடுபவர்கள் இருக்கலாம்…!!!
எந்த விதத்தில்..? – என்பதை அவர்கள் வெளிப்படுத்தலாம்…!!!
தத்துவங்கள் என்றும் சொல்வதற்கும் ,உபதேசிப்பதற்கும் எளிதானைவையே .ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தான் தினம் தினம் எத்தனை மன உளைச்சல்கள் இன்றைய இளைஞர்களுக்கு .
அந்த காலத்தில் , எல்லோருக்கும் எளிமையான வேலை மட்டுமே சாத்தியப்படும்.எல்லோருக்கும் 3 வேலை உணவிற்கு போதுமான சம்பளமே எல்லோருக்கும் வழங்க பட்டது.யாரும் மற்றவரை விட, கூடுதல் சம்பாத்தியத்தையோ, வீடு வாகனங்களையோ வாங்குவது சாத்தியப்படாமல் இருந்தது.அதனால் பொறாமை படும் நிலை மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை.இது தான் உண்மை.
இன்றோ நிலைமையே தலைகீழ் .நம்மை விட, நமது நண்பன் பல லட்சங்களை சம்பாதிக்கிறான்.என்னை விட எனது நண்பனின் வாகனம் விலை உயர்ந்தது. அவனை போன்று நகரத்தின் மத்தியில் எனக்கு சொந்த வீடு இல்லை.இந்த ஏற்ற தாழ்வுகளே நண்பர்களின் மத்தியிலும்,உறவினர்களின் மத்தியிலும் மன உளைச்சல்களையும் , ஏற்ற தாழ்வுகளையும் ஏற்படுத்தி கொண்டே இருக்கின்றன.
பொருளாதாரத்தில் உயந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் நமக்கு மறைமுக நெருக்கடிகளை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
மன அமைதி என்பது காண கிடைக்காதது.ஏற்ற தாழ்வுகளற்ற சமுதாயத்தில் மட்டுமே சாத்தியப்படலாம்.
அந்த காலத்தில் சாத்தியப்பட்டது.
படு பயங்கர சம்பள விகிதாச்சாரங்கள் கொண்ட இந்த சமுதாயத்தில் மன அமைதி சாத்தியமில்லாதது.