அரசுக்குதான் தெரியும் என நினைக்காதீங்க..
நாங்கள் சொல்வதையும் பாருங்க.. விளாசிய உச்சநீதிமன்றம்
( இந்த இடுகையைப் பொருத்தவரையில், இதில் ஒரு வார்த்தை கூட
என்னுடையதில்லை. அனைத்தும் பத்திரிகைச் செய்தியே- )
‘Do you perceive your role in such manner that as the government of India,
you must procure all vaccines for the entire country?’- SC
“If the purpose is to procure vaccines, why should the central government
confine itself only to the post-45 and leave the pre-45 entirely to the
states to arrange? For the pre 45, Goa has to make its own arrangement,
Kerala and Uttarakhand have to make their own arrangements.
But for post 45, you are making the arrangement. How do you justify this?”,
asked the judge.
Is it the policy of the government of India that every municipal corporation in
the country and every state have its own device to issue the tender to
procure vaccines from foreign suppliers?
நீங்கள் அரசு என்பதால் எது சரி என்று உங்களுக்கு தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ்மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இருவாரங்கள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வாக்சின் பாலிசி தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்குவந்தது. சொலிசிட்டர் ஜெனரல் அப்போது நீதிமன்றம் மத்திய அரசுக்கு
கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார்மேத்தா வாதிட்டார். அவரது வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
மத்திய அரசு ஏன் வாங்கவில்லை …?
அப்போது நீதிபதிகள்.. “45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை முழுக்க மத்திய அரசு வாங்குகிறது. ஆனால் 45 வயதுக்கு கீழுள்ளோருக்கான வாக்சின்களை வாங்குவதில்லை.
உற்பத்தியாளர்களிடமிருந்து 50 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசு வாங்க முடிகிறது.” என்று சுட்டிக் காட்டினர்.
விலை வித்தியாசம்
“மத்திய அரசை விட மாநில அரசுக்கு அதிக விலையில் வாக்சின் விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசுகள் தங்களுக்குள் வாக்சின் வாங்க போட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று, நினைக்கிறீர்களா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு அதிகாரம்
“மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், உற்பத்தியாளர்கள் வேறுபட்டவிலை நிர்ணயம் செய்ய முடியாது. விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஏன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விடவேண்டும்? ” என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சரி என்று உங்களுக்கு தெரியுமா
“நீங்கள் அரசாக இருப்பதால், எது சரி என்று உங்களுக்குத் தெரியும் என்று எங்களிடம் சொல்ல முடியாது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டத்திற்கு வலுவான கரங்கள் உள்ளன.
நீதிமன்றமாக நாங்கள் சில சிக்கல்களை குறிப்பிட்டுச் சொல்கிறோம் என்றால், நீங்கள் அதை கவனிக்க வேண்டும்.
டிஜிட்டல் கல்வியறிவு என்பது நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகும். உங்கள் பிரமாணப்பத்திரத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, உங்கள் தடுப்பூசி கொள்கை ஆவணத்தை எங்களுக்குக் காட்டுங்கள் ” என்று உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக கூறியது.
Constitutionஐ read பண்ணினால் இன்னும் நிறைய கண்டுபிடிக்கலாம். பாரதம் (Not India), இட ஒதுக்கீடு மிகக் குறைந்த காலத்துக்கு மட்டும்தான் 10-20 ஆண்டுகள் மட்டும்தான் என்பது போல. எதை வைத்து ‘சிறுபான்மையினர்’ என்று நிர்ணயித்து அவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டது என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிக்கலாம், ஆரம்பிக்கணும்.
இப்போ அடிப்படைப் பிரச்சனை, (1) தடுப்பூசி உற்பத்தி தேவையான அளவிற்கு இல்லை (2) முதலில் போட்ட காண்டிராக்ட் பிரகாரம் குறைந்த விலையில் தடுப்பூசியை விற்ற நிறுவனங்கள் பிற காரணங்களால் (மூலப் பொருட்கள், demand & supply, External factors) விலையை உயர்த்தியிருக்கின்றன. (3) வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் இங்கு பணம் பார்க்க யத்தனிக்கின்றன. (4) மக்களுக்கு அரசைப் பற்றியோ அல்லது அவர்கள் கூறும் guidelines பற்றியோ எந்தவித அக்கறையும் கிடையாது, அவர்கள் எதிர்பார்ப்பது இலவசம் இலவசம்.
I am comparing the present situation with அத்தி வரதர். ஆரம்பத்துல கூட்டமே இல்லை, நானெல்லாம் சட் சட் என்று மூன்றுதடவைகள் மூன்று வெவ்வேறு நாட்களில் தரிசனம் செய்தேன். ஏற்பாடுகள் சூப்பராக இருந்தது. பிறகு கூட்டம் அள்ள ஆரம்பித்ததும் ஊழல் கட்டுக்கடங்காமல் போனது. நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சென்றபோது, வரவேற்று அழைக்காத குறை. இரண்டாவது தடவையும் எங்கள் வளாகத்திலேயே வந்து இலவசமாகப் போட்டார்கள். ஆனா பாருங்க, 20 சதவிகிதத்தினர்கூட (எங்கள் வளாகத்துல) போட்டுக்கலை. இப்போ எல்லாரும் ஆலாப் பறக்கறாங்க, 18+க்கு எப்போ தடுப்பூசி போடுவீங்கன்னு கேட்கறாங்க. இப்போதைய நிலைமை, கோவிஷீல்ட் 1100 ரூ, கோவேக்சின் 1500 ரூ. இதுக்கு முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. Demand & Supply காரணமாக ஊழலுக்கு வித்திடப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
மக்களோ, அரசு தடுப்பூசி தரணும் என்று மட்டும்தான் நினைக்கிறார்களே தவிர, அரசு சொல்வதைக் கேட்கணும் என்று நினைப்பதில்லை. அரசியல்வாதிகளும் (குறிப்பாக ஸ்டாலின் மற்றும் திமுக அல்லக்கைகள்) நேரத்துக்குத் தகுந்தாற்போல் பேசுகிறார்கள். முதலில் யாரும் இந்திய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள், முதலில் பிரதமமந்திரி மற்றும் அமைச்சர்கள் போட்டுக் கொள்ளட்டும் என்று ஏகடியம் பேசி, 12 சதவிகிதத்துக்கும் மேல் தமிழகத்தில் தடுப்பூசி வீணாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஸ்டாலின், திமுக அரசியல்வாதிகள், திமுக கட்சியைச் சேர்ந்த திருமா, கோவாலசாமி உட்பட. எதற்கு ஊரடங்கு, மக்களின் வாழ்வாதாரம் போய்விடும், ஒவ்வொரு கொரோனா சாவுக்கும் அரசு 1 கோடி ரூபாய் கொடுக்கணும் என்று பேசியவர்கள் இவர்களே. திமுகவின் கொத்தடிமையான தந்தி மற்றும் பல தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் ஊரடங்கை எதிர்த்தும் தடுப்பூசிகளைப் பற்றிச் சந்தேகம் எழுப்பியும் பேசிவந்தன. ஸ்டாலின் முதலமைச்சர் என்றதும் அப்படியே குரங்குகள் போல தங்கள் நிலையை மாற்றிக்கொள்கின்றன. அதனால் திமுகவுக்கோ, தொலைக்காட்சிகளுக்கு தடுப்பூசி சம்பந்தமாகப் பேசுவதற்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை, பாலிமர் தொலைக்காட்சி தவிர. மக்களும், ஓசில தடுப்பூசி போடணும் என்று கேட்கவும் எந்தவித உரிமையும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
புதியவன்,
கட்சி தப்பு பண்ணும்போது ஒத்துக்கொள்ள வேண்டும்.
கட்சிக்கு விசுவாசியாய் இருக்கலாம் அடிமையாய் இருக்கக்கூடாது. உங்களுக்கெல்லாம் ஆறாவது அறிவுவெல்லாம் இருக்குதா?
சுப்ரீம் கோற்ட்டாவது புடலங்காயாவது
பாஜ்க அரசு எங்கேயாவது தப்பு செய்யுமா ?
புதியவன் போதுமே எதிலும் தீர்ப்பு சொல்ல .
கோர்ட்டுகள் எல்லாமே வேஸ்ட் .
//கோர்ட்டுகள் எல்லாமே வேஸ்ட் .// இதுல அப்படி என்ன சொல்லியிருக்கேன்? கோர்ட் எல்லாம் சூப்பர் என்று சொன்னால் 7 பேர் விடுதலை பற்றி பேசலாமா? ப.சி. தேர்தல் வழக்கு ஏன் பத்து வருடங்கள் எடுத்தது என்று கேட்கலாமா? உப்புமாவுக்கு உப்பு போடக்கூடாது என்ற வழக்கை ஏன் அவசர வழக்காக எடுத்தீர்கள், ப.சி. தேர்தல் வழக்கு முக்கியமில்லையா என்றெல்லாம் கேள்வி எழுப்பலாமா?
வயது, பாதிப்பு, available resource இதனை வைத்து மத்திய அரசு நிலை எடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லை, எல்லோருக்கும் இலவச தடுப்பூசி போடும் நிலைக்கு வரவில்லை என்று நினைக்கிறதோ தெரியவில்லை.
//பாஜ்க அரசு எங்கேயாவது தப்பு செய்யுமா ?// – உங்கள் இந்த stand தவறு. பாஜக என்பது நம்பிக்கைக்கு உரிய கட்சி (partner) அல்ல என்பதை பலதடவை இங்கு எழுதியிருக்கிறேன். கொரோனா என்ற பெரிய விஷயம் இருப்பதால், கா.மை. சார், புதுச்சேரி அரசியலில் நடக்கும் அநியாயங்களைப் பற்றியும், பாஜக அங்கு நடந்துகொள்ளும் முறையைப் பற்றியும் எழுதவில்லை என்று நினைக்கிறேன். காங்கிரஸோ திமுகவோ இதனைப்பற்றிப் பேசவே முடியாது, காரணம் அவங்க அங்க செய்த அநியாயங்கள்தான் (நியமன எம்.எல்.ஏ). ஆனால் தடுப்பூசி விஷயத்துல எனக்கு பாஜக மீது குறை, இப்போதுவரை இல்லை.
அறநிலையத்துறை, கோவில் பணத்தின் மூலமாக 1 சாப்பாடு 250 ரூபாய் விலையில் எல்லோருக்கும் வழங்குவதாக தமிழக அரசின் அறநிலையத்துறை வெளியிட்டிருந்த தகவல் பற்றியும் கா.மை சாரின் இடுகையைக் காணோமே என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
புதியவன்,
விதண்டாவாதம், திசைதிருப்பல் – இந்த இரண்டிற்காகவும்
ஞான பீட அவார்டு கொடுப்பதாக இருந்தால் –
நிச்சயம் தமிழில் அதைப்பெறும் முதல் நபராக நீங்கள் தான்
இருப்பீர்களென்று நம்புகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் தலைப்புகளைப்பற்றி மட்டுமல்ல-
இன்னும் கண்ணில் படும் பல அக்கிரமங்களையும்,
அத்துமீறல்களையும் பற்றியெல்லாமும்
எழுதத்தான் மனம் சொல்கிறது.
ஆனாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ன செய்ய …?
தண்டுவட பிரச்சினை -உட்கார்ந்து எழுதுவது சிரமமாக
இருக்கிறது என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் …
தமிழக அறநிலைத்துறை சாப்பாடு பற்றிய அறிவிப்பு எதையும்
நான் பார்க்கவில்லை; உங்களிடம் தகவல் இருந்தால்,
நீங்களே பின்னூட்டத்தில், பொடி வைத்து எழுதுவதற்கு பதிலாக
விவரமாக எழுதி இருக்கலாமே. பாஜக அரசின் மீது
சொல்லப்படும் குறைகளை திசை திருப்ப, எதை எதை எல்லாமோ
எழுதும் நீங்கள் இதைப்பற்றி எழுதினால் மட்டும் நானென்ன
ஆட்சேபிக்கவா போகிறேன்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன் சார் போன இடுகையில
பின்னூட்டத்தில் ராஜ்குமார் உங்களை
தேடிக்கிட்டிருந்தார். அங்கேயும் போய் கொஞ்சம்
எதாவது போடுங்களேன். மக்களுக்கு அறிவு தெளியும்.
இதை நேற்று சொல்லி இருப்பது டெல்லி உயர்நீதிமன்றம் –
“People Sitting Over India’s Untapped Vaccine Manufacturing Potential Must Be Charged With Manslaughter “: Delhi High Court To Centre