தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….?

chengleput

( செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல்.தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிலையம் )

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி வெரோனிகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 17 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், `செங்கல்பட்டு ஹெச்எல்எல் தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன்படி – தடுப்பூசி வளாகத்தை அமைத்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியார் நிறுவனங்களோ, பிற அரசுத்துறை நிறுவனங்களோ –

15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 21 கடைசி நாளாகும்’ எனத் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு இந்த டெண்டரை விடுவதற்கு முன்னரே –
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த
உடனடியாக முன்வந்திருக்க வேண்டும்….. ஆனால், இப்போது கூட இதுவரை தமிழக அரசு இன்னும் முடிவேதும் எடுத்ததாகத் தெரியவில்லை; மத்திய அரசுடன் பேசுவோம் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்..

தமிழ்நாடு அரசு தனியாரிடமிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றை ஜூலை மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் விநியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதற்காக குறைந்தது ரூ.1,500 கோடி செலவாகக் கூடும். தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் காட்டப்படும் ஆர்வம் தமிழ்நாட்டிலேயே தயாரிக்க இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் இருப்பதாகத் தெரியவில்லை;

தமிழக அரசின் குளோபல் டெண்டரை பார்த்து, தடுப்பூசி
சப்ளை செய்ய யாரும்/உலகின் எந்த நிறுவனமும் தாமாக முன்வந்து நிற்கப் போவதில்லை. உலகம் பூராவும் தடுப்பூசிகளுக்காக
அலைந்து கொண்டிருக்கையில், நமது டெண்டரை யாரும்
லட்சியம் செய்யப்போவதில்லை; தேவையென்றால் நாம் தான் தேடிப்போக வேண்டும். இப்போது தேடியலைந்தாலும் கிடைக்கப்போவதில்லை. சப்ளை, டிமாண்ட் பொசிஷன் அந்த நிலையில் இருக்கிறது.

தடுப்பூசியை க்ளோபல் டெண்டர் விட்டு வாங்கி விடலாமென்று யார் ஆலோசனை சொன்னார்களோ தெரியவில்லை; இது நடக்கக்கூடிய காரியமே இல்லை.

இதேபோல், முன்னதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம், ஒரு கோடி தடுப்பூசிக்கான டெண்டரை கோரியது. இதற்கான தேதி
முடிந்தும் யாரும் தடுப்பூசி சப்ளை செய்ய முன்வரவில்லை.
எனவே, தற்போது மகாராஷ்ட்ரா அரசு, விடுவிடுவென்று
அடுத்த நிலைக்கு சென்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் கோவாக்சின் தடுப்பூசியை அந்த மாநிலத்திலேயே உற்பத்தி செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

செங்கல்பட்டில் இருக்கும் ஹெச்.எல்.எல். தடுப்பூசி தயாரிப்பு மையம் தனியார் கையில் போனால், அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

அவர்களின் தயாரிப்பை தமிழ் நாட்டிற்கு தான்
கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருக்காது.
தமிழக அரசே கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டாலொழிய, அந்த தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்கிற உத்திரவாதம் இல்லை;

தமிழக அரசு `பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டு தடுப்பூசிகளைத் தயாரிக்கலாம். கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமல்லாமல், ஸ்புட்னிக், ஜான்சன் அண்ட் ஜான்சன், போன்ற, இந்தியாவில் தயாரிக்கக்கூடிய நிலையில் உள்ள இதர தடுப்பூசி நிறுவனங்களுடனும் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுத்தலாம். நமக்குத் தேவை தடுப்பூசிகள்தானே…?

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசியைத் தயாரிப்பதில். எந்தவிதச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை;. அங்கே ஏற்கெனவே பணிபுரியும் 200 ஊழியர்கள் தற்போது சானிடைசர் உள்பட மருந்துப் பொருள்களைத் தரம் பார்க்கும் சாதாரண வேலைகளில் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களையும் பயன்படுத்திக்கொண்டு, மேலும் தேவைப்படுவோரையும்
ஈடுபடுத்தலாம்.

அங்கு பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் –
“300 கோடி ரூபாய் பணமும், 3 மாத அவகாசமும் கிடைத்தால் போதும், தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் உடனடியாகத் துவக்கி விடலாம்” என்று சொல்கிறார்கள்.


எனவே, உலகநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி/கொள்முதல்
செய்து விடலாம் என்கிற, நிறைவேற வாய்ப்பே இல்லாத கனவை மறந்து விட்டு,

தமிழகத்திலேயே செங்கல்பட்டு ஹெ.எல்.எல் வளாகத்தில் தடுப்பூசிஉற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகளை – மத்திய அரசுடன் கலந்துபேசி, தமிழக அரசு துரித கதியில் முன்னெடுக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பு மிக்கது. அவசரமாகச் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். அமைச்சர்களை விடுங்கள்… அரசு அதிகாரிகளுக்கு இது புரியாதா என்ன…? ஏன் இந்த மந்தகதி….?

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

6 Responses to தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….?

  1. புதியவன் சொல்கிறார்:

    மிகச் சரியான நேரத்தில் வந்த பதிவு இது. பாராட்டுகள்.

    அந்த அந்த மாநிலங்களே உற்பத்திசெய்யும் பணியில் ஈடுபட்டாலொழிய (அதாவது invest செய்து), தேவையான தடுப்பூசிகள் கிடைக்காது. Demand மிக அதிகமாக இருப்பதால் விலை உயர்வையும் தடுக்க முடியாது. தனியாருக்குக் கூடுதல் விலையில் தடுப்பூசிகள் விற்கப்படுகின்றன. அவர்களோ, 1200 ரூபாய் விலையிட்டு தடுப்பூசிகள் போடுகின்றனர். (இது பரவலாக நடைபெறுகிறது) நான், ஒரு தனியார் நிறுவனம், 200 பேர்களுக்குக் குறைவு என்றால் 1200 ரூ விலையிலும் 200க்கு அதிகம் என்றால் 1100 ரூ விலையிலும் தடுப்பூசிகள் போடுவோம் என்று வந்த செய்தியை இங்கு பார்த்தேன். முன்புபோல தடுப்பூசிகள் இருந்து, மக்கள் முனையவில்லை என்ற நிலை இல்லை. (அப்போதெல்லாம் நான் நேராகப் போய் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்). இப்போது முதல் டோஸுக்கும் இரண்டாவதற்கும் 80+ நாட்களாக்கிவிட்டுட்டாங்க (தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால்). 18+க்கு தடுப்பூசி கிடைப்பது மிகவும் துர்லபமாக இருக்கிறது.

    தமிழகத்தில் மக்கள் முன்வருவது relatively குறைவாக இருந்ததால் (தேர்தலுக்கு முன்) 12 சதவிகிதம் தடுப்பூசிகள் வீணாகின. ஆனால் இப்போது தடுப்பூசிகள் இல்லாத நிலைமை. திமுகவுக்கு, தேர்தலுக்கு முன் அரசியல் செய்ததற்கும் அரசை வழிநடத்தும்போது கஷ்டப்படுவதற்கும் வித்தியாசம் புரிந்திருக்கும். மக்களுக்கு மறதி என்ற ஒன்று இல்லையென்றால் திமுகவின் சாயம் வெளுத்திருக்கும். (ஒவ்வொரு கொரோனா இறப்புக்கும் 1 கோடி கொடுக்கவேண்டும், ஊரடங்கு என்பது ஏழைகளைப் பாதிக்கக்கூடியது லாக்டவுன் என்பது இருக்கவே கூடாது என்று பல லிஸ்டுகள் இங்கு நான் போடமுடியும், ஆதாரத்துடன். இவை எல்லாமே ஸ்டாலின் சொன்னது)

    குளோபல் டெண்டர் என்பது, போகாத ஊருக்கு வழி. இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன் (சைனா தடுப்பூசியை உள்ளே கொண்டுவருவதற்காக)

    பொதுவாக செய்திகளைப் படிக்கும்போது, ஜூன் இறுதிக்குள் கொரோனா பல மாநிலங்களில் மிகவும் கட்டுப்படுத்தப்படும் என்றும் தமிழகத்துக்கு அந்த நிலை வர செப்டம்பர் ஆகிவிடும் என்றும் தெரிகிறது. இத்தகைய நிலைமை,
    1. காய்கறிகள் விலை உயர்வில் முடியும்.
    2. அத்தியாவசியப் பொருட்களுக்கு அலையும் நிலை உண்டாகும்.
    முழுமையான லாக்டவுன் நீடிப்பதும் தவிர்க்க இயலாது போகும்.

    • சினேகிதன் சொல்கிறார்:

      நிலைமை கைமீறி போனால் இருக்கவே இருக்கிறார் எங்கள் ஆபத்பாந்தவன் மோடி.
      அவர் மீது பழியை போட்டு விட மாட்டோம்? தமிழகத்தை பழி வாங்குகிறார் என்று கூறினால்
      எதிர்க்கட்சிகளும், மீடியாக்களும் எங்களுடன் இணைந்து கவி பாடமாட்டார்களா என்ன …

      • புதியவன் சொல்கிறார்:

        நீங்க சொல்றதைப் பார்த்தால், அதற்காகத்தான், தனியார் கம்பெனிகளான தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் ஊழியர்கள் கொரோனாவில் இறந்தால் தமிழக அரசால் 10 லட்சம் தரப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது என்று சொல்வீர்கள் போலிருக்கே. தனியார் தொலைக்காட்சிகள் சம்பாதிக்கத்தான், எப்படி மாஸ்க் அணிவது என்று ஸ்டாலின் ஐந்து நிமிடங்கள் படம் எடுத்து, விளம்பர வருவாயை அவர்களுக்குக் கொடுக்கிறார், அதிலும் தன்னுடைய சொந்தத் தொலைக்காட்சிகளுக்கு என்று சொல்வீர்கள் போலிருக்கே.

        • சினேகிதன் சொல்கிறார்:

          இதுவே அதிமுக அரசாக இருந்திருந்தால் , மோடியின் கைக்கூலி, அடிமை அரசு என்று வர்ணித்து அக மகிழ்ந்திருப்பேனே…
          என்ன செய்வது நடப்பது மதசார்பற்ற கழக ஆட்சியாயிற்றே. என் செய்வேன். நமது மாநிலத்திலேயே அதை எளிதாக தயாரிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் ,குளோபல் டெண்டர் விடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
          எதற்கு வம்பு, தமிழின துரோகி பட்டம் நமக்கெதற்கு.அமைதியாக இருந்து விடுவோம்

  2. vimarisanam - kavirimainthan19031943 சொல்கிறார்:

    நன்றி கணபதி.

    தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைகளில்
    ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.