( ஜ.வா. – இந்த “சீசன்” இத்துடன் முடிவிற்கு வருகிறது…!)
புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் அவர்கள்,
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நீண்ட கேள்வி-பதில்
நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்துகிறார்….
“அக்னி பரீட்சை – கோயிலுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம் ? சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆவேசம்”
ஜக்கி அவர்கள் தான் ஒரு ஆன்மிகவாதியல்ல
என்பதை நிரூபிக்கிறார்….
தமிழ் மண்ணின் மீதும், காவிரி நீரின் மீதும், ஆற்றங்கரை பாசன விவசாயிகள் மீதும் அவர் காட்டும் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது…!!!
காரத்திகைச் செல்வனுக்கு ஜக்கி அவர்களை
எதிர்கொள்ளும் அளவிற்கு சாமர்த்தியம் இல்லை
என்பதும் தெளிவாகிறது…!!!
கார்த்திகைச் செல்வன் சொல்வதில் எதுவும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. கோவில்கள் எல்லாம் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று எதனை வைத்துச் சொல்கிறார்? அவருடைய Pay Masters சொல்லச் சொல்லியிருக்காங்களா?
இந்து அறநிலையத்துறை எதற்காக இதுவரை 50,000 ஏக்கர் கோவில் நிலங்களை பட்டா போட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கொடுத்துள்ளது? 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதெல்லாம் கார்த்திகைச் செல்வனுக்குத் தெரியாது. இதனைப் பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால்தானே அல்லது அக்கறை இருந்தால்தானே அதனையெல்லாம் படித்துவிட்டு பேட்டி எடுக்க வருவார். Pay Masters கொடுக்கும் கேள்விகளை எடுத்துக்கொண்டு பேட்டி எடுக்க வந்தால் அவரது அறியாமைதான் எல்லோருக்கும் தெரியும்.
அரசு என்ன செய்கிறது என்றால் (நான் உதாரணங்களெல்லாம் பார்த்திருக்கிறேன்), அரசியல்வாதி அல்லது அடாவடியாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு, லஞ்சம் வாங்கிக்கொண்டு நிலத்தை பட்டா போட்டுக் கொடுத்துவிடுகிறது. பிறகு இந்த முறைகேடாக நிலத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சம்பந்தமே இல்லாமல் யார் காசு அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். பெரும்பாலும் இதனை வெளிநாட்டுப் பணத்தின்மூலம் கிறிஸ்துவர்களோ இல்லை முஸ்லீம்களோ வாங்கிவிடுகிறார்கள். ,லஞ்சம் வாங்கிக்கொள்வதால், வக்கணையாக அரசியல் தலைவர்கள் இதற்கு அரசியல் ரீதியாக விளக்கம் கொடுத்துவிடுகிறார்கள் (அறிவாலயம் கட்டுகிறேன் என்று பொது இடங்களை ஆக்கிரமித்து, பிறகு அதனை Park என்று சொல்லி, பிறகு மெதுவாக வளைத்துக்கொண்டதைப் போல, கோவில் நிலங்களை மாற்று மதத்தவர்களுக்குச் செல்லும்படியாக அறநிலையத்துறை செய்துவிடுகிறது. கருணாநிதிதான் இந்த மாதிரி முறைகேடுகளுக்கு முழுமுதல் காரணம். தி நகர் உஸ்மான் ரோட்டில் எந்த இடம் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதற்கு அருகில் இருந்த பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டது என்றெல்லாம் கருணாநிதி ஆட்களுக்குத் தெரியாதா?)
தமிழக கோவில்களிலிருந்து 1350 திருமேனிகள் திருடப்பட்டுள்ளன. இராஜராஜ சோழன் சிலை, குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. ஆனால் யார் விற்றார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. காரணம் அது எந்த இடத்தில் போய் நிற்கும் என்பதை எல்லாரும் அறிவார்கள்.
இந்த மாதிரி கோவில் சொத்துக்களைத் திருடுவது மற்றும் சொத்துக்களை மற்றவர்களுக்குப் பட்டா போட்டுவிட்டு லஞ்சம் வாங்கிக்கொள்வது என்று அரசு செயல்படுவதால்தான், கோவில்கள் அரசு கையிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்ற குரலே எழுகிறது. (ஆனால் நான் இதனைச் சுத்தமாக ஆதரிக்கவில்லை. கோவில் கடைகள், இடம் எல்லாமே இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படவேண்டும், மாற்று மதத்தவர்கள் அங்கிருந்து விரட்டப்பட வேண்டும். கோவில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இந்துக்களாக மட்டும்தான் இருக்கவேண்டும், அதற்குரிய உடைகள், சின்னங்களோடுதான் அவர்கள் பணிபுரியவேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தாலே போதுமானது. கோவில் நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கக்கூடாது, கோவில் நிதி கோவிலுக்கு மட்டும்தான் செலவழிக்கப்படவேண்டும். அரசு நியமிக்கும் அலுவலர்கள் சம்பளம் அரசு தன் மற்ற வருவாயிலிருந்து கொடுக்கவேண்டும்)
//தான் ஒரு ஆன்மிகவாதியல்ல என்பதை // – இது ஒரு அர்த்தமில்லாத comment. ஒவ்வொரு மனிதனும் (குறைந்தபட்சம் ஹிந்துக்கள்), அவர்களது நன்னூல் புத்தகங்கள் சொல்லியபடி நடக்கவேண்டும் என்றால் எதற்கும் கோபபபடக்கூடாது, ஆவேசமாக பதிவுகள் போடக்கூடாது, எல்லாம் அவன் செயல் என்று இருக்கவேண்டும். அப்போ யார்தான் பூனைக்கு மணி கட்டுவார்கள்? துறவிகளில் இருவகை உண்டு, முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கி, தனக்கென எதுவும் இல்லாமல் இருப்பவர்கள், தங்கள் கடமையை தாமரை இலைத் தண்ணீராய் அதன் விளைவுகள் தங்களைப் பாதிக்காத வகையில் செயல்படுபவர்கள். பரமாச்சார்யார் மற்றும் பல துறவிகள் இந்த வகை. இன்னொரு வகை சமூகத்துக்காக அதன் மேன்மைக்காக பாடுபடுபவர்கள். நான் ஜக்கி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற பலரை இந்த categoryல சேர்க்கிறேன்.
புதியவன்,
உங்கள் statement –
/தான் ஒரு ஆன்மிகவாதியல்ல என்பதை //
– இது ஒரு அர்த்தமில்லாத comment….
——————–
இதற்கான என் விளக்கம் –
நிஜத்தை பார்க்க மறுத்து,
ஏற்க மறுத்து,
ஒருதலைப்பட்சமாக சிந்திப்பவர்களுக்கு வேண்டுமானால்
இது அர்த்தமில்லாத comment ஆக இருக்கலாம்.
நான் சொல்லும் அர்த்தம் –
ஆன்மிகவாதி என்பவன் –
பொய் சொல்ல மாட்டான்…
பசப்பு வார்த்தைகள் பேச மாட்டான்;
திருட மாட்டான்…
அடுத்தவன் சொத்துக்கு
(அரசாங்க சொத்துக்கும்)ஆசைப்பட மாட்டான்;
வளைத்துப்போட
முயற்சிக்க மாட்டான்….
அரசியல்வாதிகளின் துணையுடன்,
சட்டத்தை மீற மாட்டான்/ வளைக்க மாட்டான்.
டாம்பீக வாழ்வு வாழ மாட்டான்…
விற்பனை செய்யும் பொருளுக்கு
வரிகட்டாமல் ஏமாற்ற மாட்டான்.
சம்பாத்தியத்திற்கு வருமான வரி கட்டாமல்
ஏய்க்க மாட்டான்….etc. etc.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நல்ல மனிதனுக்கு உள்ள qualitiesஐ ஆன்மீக வாதிகளுக்குச் சொல்லிட்டீங்களே கா.மை.சார்… நல்ல நாத்திகவாதியும் இந்த qualitiesஉடன் இருக்கலாமே.
முழுமையான துறவி என்பவன், கடவுள் தேடலில், அல்லது அந்த உயர் உணர்நிலையில் தொடரும் நிலையில் இருப்பவன். அவனுக்கு தான் லீடர் என்று சொல்லிக்கொண்டு திரியும் வேலையில்லை. புகழைத் தேடி ஓடவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. உணவு, சௌகரியங்கள் போன்றவை அவனுக்கு முக்கியமல்ல… ஆயினும் சுவாமி விவேகானந்தர் தான் ‘ராஜரிஷி’ என்பதால் தன்னை இவைகள் கட்டுப்படுத்துவதில்லை என்று எழுதியிருக்கிறார்.
இங்கு ஜக்கி செய்வது சரியா இல்லையா என்பதைப்பற்றி நான் சொல்ல வரலை. (அதற்கான qualificationம் எனக்குக் கிடையாது). ஆனால் இந்த so called ஊழல் ஜால்ரா கோஷ்டிகளான கார்த்திகைச் செல்வன் போன்றவர்களுக்கு மற்றவர்களை, அதிலும் உள்நோக்கத்தோடு ஹிந்து தலைவர்களைக் குறைசொல்லவோ கேள்வி கேட்கவோ அருகதை கிடையாது. இதே தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சென்ற மாதத்தில் எப்படி செய்திகளை, விவாதங்களை வடிவமைத்தார்கள், இப்போது எப்படி பேம்பர்ஸ் மாற்றிவிட்டுக்கொண்டு கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என நினைக்கிறேன்.
//தமிழ் மண்ணின் மீதும், காவிரி நீரின் மீதும், ஆற்றங்கரை பாசன விவசாயிகள் மீதும் அவர் காட்டும் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது…!!!// – We want to have different yardsticks for each person. அதனால்தான் மெய்சிலிர்ப்பதும் ஏமாற்றமடைவதும். ஜக்கி போன்றவர்கள் பரமாச்சார்யார் போல இருக்கணும், அரசியல்வாதின்னா அவன் நல்லவனாகவோ தேசத்திற்கு உண்மையாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம் பொதுப்புத்தி yardstick வைத்துக்கொள்கிறது. இல்லைனா, தேசத்திற்கு எதிராக இன்னொரு நாட்டின் பயங்கரவாதியைச் சந்தித்த துரோகிகள் எல்லாம், இப்போது ஏதோ சீரியலில் தமிழன் ஒருவனை பாகிஸ்தான் தொடர்புடைய பயங்கரவாதியாகச் சித்தரிக்கிறார்கள் என்பதற்குப் பொங்கியதற்கு , நீங்க கண்டித்து ஒரு பதிவு போட்டிருப்பீங்க.