சத்குரு “ஜக்கி” பற்றி சவுக்கு சங்கர் ….

aadhaan -savukku -

சவுக்கு சங்கர் நிறைய செய்திகள் சொல்கிறார்….

அவர் சொல்லும் விஷயங்கள்
எந்த அளவிற்கு சரியானவை ?

இவற்றைப்பற்றியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்களா…?

மக்கள் இவற்றையெல்லாம் சட்டை செய்கிறார்கள் என்றால் –

அவரைப்பற்றிய விமரிசனங்கள் தொடர்ந்து பலரிடமிருந்தும் வந்தவண்ணம் இருக்க, மற்றொரு பக்கம் –

நாளுக்கு நாள் – அவரது (பணக்கார) பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறதே …. எப்படி …?


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to சத்குரு “ஜக்கி” பற்றி சவுக்கு சங்கர் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  ஆளையும், மதத்தையும் மட்டும் பார்த்து கருத்துச் சொல்பவர்கள், உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள் என்றுதான் எல்லோரும் புரிந்துகொள்வார்கள். ஜக்கி வாசுதேவிற்கு முன்பு, எத்தனை மசூதிகள், காருண்யா போன்ற பல்கலைக்கழகங்கள், ஏன் கோவில் நிலத்தில் குத்தகைக்கு இருக்கும் (இந்த வருடம் முடியப்போகிறது) லயோலா கல்லூரி போன்ற எதைப்பற்றியும் யாராவது அரசியல்வாதிகள் இல்லை so called நேர்மை பத்திரிகையாளர்கள் பேசியிருக்காங்களா? பேச மாட்டாங்க. காரணம், அவங்களுக்கு வன நிலத்தை மீட்பதோ இல்லை நேர்மையாக எல்லோரும் இருக்கணும் என்ற நினைப்போ கிடையாது. அவர்களது target Hindu religion. அதனால் சவுக்கோ இல்லை யூகலிப்டஸோ… யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலை பலரிடம் இருக்கவே இருக்காது, அதிலும் திமுக ஆதரவு கட்சிகளோ பத்திரிகைகளோ இல்லை திராவிடச் சிந்தனை என்று விஷத்தைப் பரப்பும் பத்திரிகையாளர்களோ இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு Anti Hindu Religion என்பது மட்டுமே காரணம் என்பதால், அதனால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

  வேற்று நாட்டு குடியுரிமை பெற்றவர்களெல்லாம் ஹிந்து மதத்தை, அதன் சார்பானவர்களைக் குறிவைத்துத் தாக்குவது உள்நோக்கம் கொண்டது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ளமுடியாதா? தாக்கும் இவர்களெல்லாம் சமூகத்தின் விஷக்கிருமிகள் அல்லது பிற மதங்களின் ஏஜெண்டுகள்.

  இதுதான் என் கருத்து.

 2. atpu555 சொல்கிறார்:

  இவர் நன்கொடை பற்றிச் சொல்வது அநேகமாக எல்லா ஆன்மிக நிலையங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆலயங்களின் அர்ச்சனைச் சீட்டு உட்பட. பேசுபவர் பாரபட்சமில்லாமல் இருந்தால் அவரில் மதிப்பேற்படும். பிற மதங்களையோ மக்களைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையோ கண்டிக்காதவர் பேசினால் அதைக் காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாகவே கருத வேண்டியுள்ளது. ஆலயங்கள் அரசாங்க மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு இவர் கூறும் காரணங்கள் நன்றாக உள்ளன. அருண்மொழி நல்ல கேள்விகள் கேட்கிறார்.

 3. புதியவன் சொல்கிறார்:

  கோவில்கள் அரசிடமிருந்து வெளிவந்து தனியாருக்குக் கொடுக்கவேண்டும் – இதனை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அரசு, தங்கள் கட்சிக் கொள்கைக்காகவும் தங்கள் ஆட்களை நுழைத்து கோவில் வருமானங்களைக் கபளீகரம் செய்ய அனுமதிப்பதுதான் அரசின் முதல் தவறு.

  அரசு மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டே இந்துக் கோவில்களில் மட்டும் மூக்கை நுழைத்து, கோவிலிலிருந்து வரும் பணத்தைத் தவறாக உபயோகிக்கிறது. கோவில்களில் அரசியல்வாதிகளை உள்நுழைக்கிறது. இந்துக் கோவில்களில் வேற்று மதங்களைச் சார்ந்தவர்களை நுழைத்து அங்குள்ள பணிகளில் தலையிடவைக்கிறது. கோவில் நிலங்களை பிற மதங்களுக்குத் தாரைவார்க்கிறது. இதையெல்லாம் செய்வதால்தான் கோவில்களைவிட்டு அரசு வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. தஞ்சையில் கோவிலையே வீடாக்கி வாழ்வதைப் பார்த்தேன் (வேற்று மதத்தவர்). இதெல்லாம் அரசின் ஆதரவு இல்லாமலா நடக்கிறது?

  மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும், நாத்திகர்களும் கோவில் நிர்வாகத்தில் வந்து உட்காரும்போது, கோவில் நடைமுறைகளைக் கேள்விக்குரியதாக ஆக்குகிறது, கோவில் வழிபாடுகளில் தலையிட்டு பலவற்றைச் செய்ய அனுமதிப்பதில்லை. இதற்கு நிறைய உதாரணங்கள் கொடுக்கலாம்.

  இந்துமதத்தைச் சேர்ந்த, இறை நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் ஒரு குழுவாக வைத்து போர்டு ஒன்றை உருவாக்கி, அரசின் கண்காணிப்பில் அந்த தேவசம் போர்டு இருந்தால் போதுமானது. இந்து அறநிலையத்துறை என்பதே தேவசம் போர்டு போலத்தான் என்பவர்கள், பிறகு எப்படி கோவில் பணிகளில் கிறிஸ்துவர்கள் இடம் பெறுகிறார்கள், எப்படி நாத்திகர்கள் கோவில் நடைமுறைகளில் தலையிடவைக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கணும்.

  உதாரணமாக, தாமிரவருணி நதியின் புஷ்கரம் என்ற நிகழ்வின்போது (2018), அந்த நிகழ்வே நடத்தக்கூடாது என்று கிறிஸ்துவர்கள் சார்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதற்கான நிதிகள் குறைக்கப்பட்டு, லோகல் பஞ்சாயத்துகள் நடத்திக்கொள்ளலாம் என்று அரசு தீர்மானித்தது. பல கோவில்களில், உற்சவ மூர்த்திகள் தாமிரவருணி நதிக்குக் கொண்டுசெல்லக்கூடாது என்று சொன்னார்கள். இதன் காரணம், வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் இருப்பதுதான். அவர்களின் உள்நோக்கம், இத்தகைய நிகழ்வுகள், மத மாற்றத்துக்கு இடைஞ்சலாகிவிடுகிறது என்பதுதான்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  இந்து கோவில்களைப் பொறுத்தவரையில் –

  இறை நம்பிக்கையுடைய,
  உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற,

  அரசியல்வாதி அல்லாத,
  நல்ல செல்வந்தர்களையே
  (கோவில் பணத்தில் சாப்பிடாதவர்களை)

  அறங்காவலர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  இதை அந்தந்த உள்ளூர் மக்களுடன் கலந்துபேசி அரசு
  தீர்மானிக்க வேண்டும்.

  கோவில்கள் -பொதுவாக அரசின் மேற்பார்வையில்
  தான் இருக்க வேண்டும். முழுவதுமாக தனியாரிடம்
  விட்டால், கொஞ்சநாட்களில் கோவிலே காணாமல்
  போய் விடும் ஆபத்து இருக்கிறது….

  ஆனால் கோவில் நிகழ்வுகளில், அரசாங்கத்தின்
  தலையீடு நிச்சயம் இருக்கக்கூடாது.

  இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.