ஒன்றரை மாதங்களில், பங்குச்சந்தையில்,
2 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறார்
தமிழர் ஒருவர்….!!!
அதில் 50 லட்சத்தை முதல்வரின் கொரோனா
நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார்….
ஒன்றரை மாதத்தில், அதுவும்
இந்த பஞ்ச கொரோனா காலத்தில் பங்குச்சந்தையில்
தமிழர் ஒருவரால் இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க
முடிகிறது என்பதும்,
அதில் கால் பங்கை அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு
நன்கொடையாக கொடுத்திருக்கிறார் என்பதும் –
இரண்டு செய்திகளுமே ஆச்சரியம் அளிப்பதாகவும்,
பாராட்டத்தக்கதாகவும் இருக்கின்றன.
பி.ஆர்.சுந்தர் – அவர்களின் குடும்பத்திற்கு
நமது மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்…..!!!
பங்குச் சந்தை கொஞ்சம் ஆபத்தான விளையாட்டு என்பது என் எண்ணம்.
என் சகோதரனின் ஆபீஸில் பணிபுரிந்த ஒருவன், தினமும் 3000 ரூ மட்டும் லாபம் சம்பாதிக்கும் அளவு டிரேட் பண்ணுவானாம். அதற்கு மேல் ஆசைப்படமாட்டானாம். நான் ஒரு காலத்தில் விஷயம் புரியாமல் காசை வீசியெறிந்து நஷ்டப்பட்டுக்-மிலியனில் கற்றுக்கொண்டேன் (இனி பங்குச் சந்தை பக்கம் தலைவைக்கக்கூடாது என்று ஹாஹா)
கழக ஆட்சியில் கொடை , தானம் ஆட்டை போடப்படாமல் மக்களை சென்றடைய வேண்டுமாறு வேண்டி கொள்ளுகிறேன்.