கடந்த சில நாட்களாக, 4 வருடங்களுக்கு முன்னர்
இந்த தளத்தில் வெளிவந்த, சுவாரஸ்யமான ஒரு இடுகையை
இப்போது பலர் விரும்பி எடுத்துப் பார்ப்பது, dash-board மூலம்
தெரிய வந்தது….
அவர்கள் இந்த தளத்திற்கு புதிதாக வருகை தரும்
வாசக நண்பர்களாக இருக்கக்கூடும்….
இந்த இடுகை சுவாரஸ்யமானது என்பதுடன், அனைவரும்
அவசியம் படிக்க வேண்டிய ஒன்றும் கூட என்று நான் நினைக்கிறேன்.
எனவே – இதை மீண்டும் ஒருமுறை இங்கு மறுபதிவு செய்தால்,
அனைத்து வாசக நண்பர்களுக்கும் இது சென்று சேர
உதவியாக இருக்கும் என்று தோன்றியது….
எனவே அதனை இங்கு மீண்டும் பதிவு செய்கிறேன் ….
——————————————————————
தமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக
ஆகமுடியாது….?
Posted on ஓகஸ்ட் 19, 2017 by vimarisanam – kavirimainthan
யூதர்கள் மிகப்பெரும்பாலான துறைகளில்
உலகிலேயே அதி சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்று
சொல்வதுண்டு….
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம், நீர் மேலாண்மை,
சொட்டுநீர்ப்பாசனம், ஆயுத தயாரிப்பு என்று பல
துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்…..
உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே
உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப்
பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும்
பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.
இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ
மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக தங்க வேண்டியிருந்த
Dr. Stephen Carr Leon என்பவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி
கட்டுரையை ( நன்றிகள் பல : தமிழாக்கத்திற்காக திருமதி ரஞ்சனி
நாராயணன் அவர்களுக்கு )ஒரு வலைத்தளத்தில்
( http://nerudal.com/nerudal.58575.html ) படித்தேன். அதிலிருந்து சில
தகவல்கள் –
—————————————–
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்
என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக்
கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது
ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில்
ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த
திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள
முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2-ஆம் ஆண்டில்
அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர
இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு,
கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார்
செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும்
ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள்
பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு
பார்க்க முடிவு செய்தேன்.
தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக
இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி
முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள்.
அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக்
கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான
கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான்
போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச்
செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட
உதவி செய்வேன்.
அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?”
என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி
கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?”
என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை
விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
( நமது மஹாபாரதத்தில், அர்ஜுனனின் மகன் அபிமன்யு
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, சக்கரவியூகத்தின் உள்ளே
எப்படி நுழைவது என்கிற தந்திரத்தை கேட்டு தெரிந்து கொண்டது
ஞாபகத்திற்கு வருகிறதா…? )
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு
முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும்
கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட
மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும்
(nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads)
ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று
நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு
நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய்
உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத
பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி
சாப்பிடுவதில்லை. இறைச்சி, மீன் இரண்டையும் ஒன்றாக
சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது
என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள்.
முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம்
வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள்
சரிவர புரியாது என்கிறார்கள்.
புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின்
முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA
வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை
அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும்
உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட்
புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில்
மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின்
மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய்
என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு
உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் –
ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் –
அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து
பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத்
தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ
(intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள்
ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன்
திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே
மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள்
வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம்
முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும்
யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா
குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று
சொல்லலாம்..
யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய
உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள்.
இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி
துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க
அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம்
ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள்
செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில்
தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத்
திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப
கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை
கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள்
கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை
நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள்
அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை
திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால்
தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும்
மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற
லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக
வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business
and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து
இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப்
பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை
தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன்
கிடைக்குமாம்.
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக
நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது.
யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால்
வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம்
தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே
ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY,
ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள்
மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது
ஆதரவில் நடை பெறுகின்றன.
யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும்
யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப்
பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால்
நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில்
போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
2005-ல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை
வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை
சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய
பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின்
விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு
அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு;
மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின்
விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும்
மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்?
லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு
எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்;
பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ,
தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்!
அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது.
ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப்
படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான்.
சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை
அறிவற்றதாகத்தான் இருக்கும்.
——————————————————————
தேவைப்பட்டால், இந்த இடுகையை மீண்டும்
மேலேயிருந்து ஒரு தடவை
வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்….
இவற்றில் – நம்மால் செய்ய முடியாத விஷயம் என்று
எதுவுமே இல்லை.
நம் குழந்தைகளை அதி சாமர்த்தியக்காரர்களாக
உருவாக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முதலில் நம்
மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்….
திட்டமிட வேண்டும்…
தாயின் கர்ப்பத்திலிருந்தே இதை துவங்க வேண்டும்…
குழந்தைகள், சிறுவர்/சிறுமியர் வளர்ப்பில்
விசேஷ அக்கறையும், கவனிப்பும் வேண்டும்…
அவர்களின் உணவில், ரசனையில், படிப்பில்,
விளையாட்டில், யோசிக்கும் விஷயங்களில்….
( சாராயம், சிகரெட் – இரண்டும்
அவர்கள் கண்களிலேயே படக் கூடாது…)
– கவனம் செலுத்தினோமானால் அடுத்த தலைமுறை
தமிழர்களை யூதர்களை விட சிறந்தவர்களாக நம்மால்
உருவாக்க முடியும்.
ஏன் – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
மிகச்சிறந்த இனமாக இருந்தவர்கள் தானே நாம்…?
தொடர்ந்து 700-800 ஆண்டுகளாக – அந்நியர் வசம்
அடிமைப்பட்டு கிடந்ததால், நம் பெருமை அனைத்தையும்,
மறந்து, தன்னம்பிக்கை இழந்து கிடக்கிறோம் நாம்.
தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்யவில்லையா…?
கிரேக்க, ரோம, நைல்நதி வாசிகளுடன் பழகவில்லையா..?
பருவக்காற்றின் போக்கை கண்டுபிடித்து,
கிழக்கு நாடுகளுக்கு சென்று
சீனம் வரை வர்த்தகம் செய்யவில்லையா…?
வம்புக்கு வந்த கடற்கொள்ளையரை அடக்க,
ஜாவா, சுமத்திரா, இந்தோனேஷியா, கொரியா நாடுகளில்
தமிழ்க்கொடியை நாட்டவில்லையா…?
முதிய தலைமுறையை விட்டு விடுங்கள்…
இன்றைய இளைஞர்கள் அக்கறை எடுத்துக் கொண்டால்,
அவர்கள் தங்கள் வாரிசுகளை விஞ்ஞான பூர்வமாக
வளர்க்கத் துவங்கினால் –
அடுத்த தலைமுறை தமிழர்கள் யூதர்களைத் தாண்டியும்
சிறப்பாக வளர்வார்கள்…!!!
.
—————————————————————————————————-
எதிர்மறையாக கூறுவதற்கு மன்னிக்கவும்
வாய்ப்பில்லை ராசா- சீமான்
இதில் குறிப்பிட்ட குழந்தை வளர்ப்பு சம்பந்தமான விடயங்களில் பலவற்றை பிராமண சமூகத்தவர் பலர் பேணி வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதை பலவிதமாகப் பிரித்து நாம் அலசினால், யூத இனத்தின் முக்கியமான தொழில், வியாபாரம். யூத இனம், தன் மக்களை வளரச் செய்கிறது. இந்த இரண்டு aspectsஐயும், தமிழகத்தில் நாடார் community செய்துவருகிறது. அவர்கள் தென் தமிழகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். தங்கள் கல்வி, தொழில் பலத்தால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரையும் உயர்த்தணும் என்ற எண்ணத்தால் மேலோங்கி வந்திருக்கும் சமூகம் அது.
முதலில், சமூகமாக வெற்றி பெறணும் என்றால், கல்வி அறிவு அவசியம், பிறகு வியாபாரம் அவசியம். வியாபாரிதான் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பான். அப்படி இருக்கும்போது தன் சமூகத்தை முன்னேறச் செய்வான். மற்றபடி குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம், சமூகம் நல்லொழுக்கமுள்ள சமூகமாக வளர உதவும்.
யூதர்கள் வரலாற்றை இருந்து ஒரு செய்தி .
ஆரம்பித்தில் யூதர்கள் விவசாயம் பார்த்து வந்தனர் .
படிப்புக்கு அங்கே வேலை இல்லை . மக்கள்
கல்வியறிவு இல்லாமலே இருந்தனர் .
யூதர்கள் புனித நூலான தோரா படிப்பது
குருமார்கள் மட்டுமே .
அனைவரும் இந்த நூலை படிக்க வேண்டும் என்று
2000 ஆண்டுகள் முன் ஒரு புரட்சி ஏற்பட்டது .
படிக்க தெரிந்தவர்கள் யூத மதத்தை விட்டு
கொடுக்காமல் அனுசரித்து வந்தனர் .
படிக்காதவர்கள் ஒரு சில காலத்திற்கு
பிறகு அந்த மதத்தை கைவிட்டனர் .
இவர்கள் காலகாலமாக சொந்த ஊரை விட்டு
அடுத்த தேசங்களில் வசித்து வந்தனர் என்பது
குறிப்பிடதக்கது .
யூதர்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற எண்ணி
படித்தவர்கள் ஆனார்கள் என்று வருகிறது .