130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

vaccine

கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பீகாரில்,
கங்கையில் மிதந்து வரும் பிணங்களைப் பார்த்து,

அவை உத்திரப்பிரதேசத்தில் கங்கையாற்றின் கரைகளில் உள்ள
கிராமங்களிலிருந்து வீசப்படும் கொரோனா நோயாளிகளின்
பிணங்களோ என்று பீகார் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
(பீஹாரில் பிணங்களை ஆற்றில் வீசும் பழக்கம் இல்லை –
பீஹாருக்கு மேலே உள்ள உ.பி.யில் மட்டுமே அந்தப்பழக்கம்
உண்டு…)

130 கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு
புனாவில் உள்ள ஒரே ஒரு மருந்து கம்பெனி மட்டும் தான்
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பது எந்த
விதத்தில் சரி…?

இந்த தடுப்பூசியை மேலும் பல மருந்து தயாரிக்கும்
கம்பெனிகளிலும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இதுவரை அரசுக்கு தோன்றாதது ஏன்…?

தடுப்பூசி ஃபார்முலாவை மற்ற கம்பெனிகளுக்கும் பகிர்ந்து
கொடுக்காமல் தடுப்பது யாருடைய நன்மையை கருதி… ?

உள்நாட்டில் எண்ணற்ற மருந்து தயாரிப்பு கம்பெனிகளை வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், வேறு வழியேயின்றி
மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி வாங்க “உலக அளவிலான டெண்டர்கள்” விடுகின்றன….

ஆந்திரா, டெல்லி என்று பல மாநிலங்களும்,
தடுப்பூசி ஃபார்முலாவை பல மருந்து தயாரிப்பு கம்பெனிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல்,
பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில்
தடுப்பூசி தட்டுப்பாட்டால் தேவையுள்ள நபர்களுக்குக் கூட முழுமையாகத் தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் – ” இந்தியாவில் 2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. அந்த நிறுவனங்களால் ஒரு மாதத்துக்கு
6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தயாரிக்க முடியும்.
இந்த வகையில் சென்றால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் பல அலைகள் வந்துவிடும்.

எனவே தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து அதற்கான
தேசிய திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம்.இதற்கான ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, தயாரிப்பு பார்முலாவை மத்திய அரசு பெற்று, பிற நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.

கடினமான இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளது ” என்கிறார் கெஜ்ரிவால்…

எதார்த்தத்தை உணர்ந்து செயல்பட அரசு முன்வருமா….?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to 130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    26 ஏப்ரல் செய்தி – மஹாராஷ்டிரா அரசின் Haffkine Biopharmaceutical Corporationக்கு கோவேக்சின் தயாரிக்கும் உரிமை 1 வருடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    7 மே செய்தி
    The Indian Council of Medical Research (ICMR) is willing to share the know-how to produce the indigenously-developed Covid-19 vaccine, Covaxin, with any company as the contract with co-developer Bharat Biotech is not close-ended.

    Royalty arrangement
    An official involved with the developments told BusinessLine that the terms and conditions agreed upon while transferring the Covid-19 vaccine technology was that Bharat Bio will pay the ICMR 5 per cent royalty on the net sales of Covaxin.

    “The contract with Bharat Biotech is not close-ended, it is open-ended in terms of sharing of technology. So, we are free to share the know-how with other companies. Currently, we are entitled to get 5 per cent royalty from Bharat Biotech on an annual basis,” the source said.

    The government has roped in a few public sector undertakings (PSUs) involved in vaccine production such as Haffkine Biopharmaceutical Corporation (owned by the Maharashtra government), Indian Immunological Limited (owned by the National Dairy Development Board), and Bharat Immunologicals and Biologicals Limited (under the Department of Biotechnology) to make Covaxin.

    Besides Covaxin, the other vaccine available in India is Covishield, which was developed by the Oxford University-AstraZeneca partnership. Serum Institute of India is one of the many manufacturers across the world licensed to produce Covishield and it is liable to pay a royalty to the pharma MNC.

    The government procures both the vaccines at ₹150 per dose. Covishield constitutes around 90 per cent of the total vaccine supply in India, with the indigenously developed Covaxin having only 10 per cent market share.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இத்துடன் முடிந்து விட்டதா
    அரசாங்கத்தின் பொறுப்பு …?

    • புதியவன் சொல்கிறார்:

      After Govt decided to allow vaccines for 18)+, Govt realizes the quantum required and what can be done by one vaccine. அதனால்தான் நிறைய தடுப்பூசிகளுக்கு இப்போது அனுமதி வழங்கப்படுகிறது. மாநிலங்களும் தேவை என்றால் வெளிநாட்டிலிருந்து நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொள்ளும் (மத்திய அரசு, இருக்கும் அளவை மாநிலங்களுக்கிடையே பகிர்வதால், அது தேவையின் 20 சதத்தைக்கூட நிறைவுசெய்யாது).

      இந்த மாதிரி சமயத்தில் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். கொரோனா பரவுவதே to some extend, மக்கள் அரசின் guidelinesஐப் பின்பற்றாததால்தான்.

      குறை கண்டுபிடிக்கணும் என்று ஆரம்பித்தால் அதற்கு எல்லையே இல்லை.

      நிச்சயம் தமிழக அரசு மருந்துகளைக் கொள்முதல் செய்யும்போது, அதற்கு 150 ரூபாய்க்கு மேல் நிச்சயம் கொடுக்காது என்று நாம் நம்புவோம்.

  3. புதிய பித்தன் சொல்கிறார்:

    ஜால்ரா போடுவது என்று ஆரம்பித்து விட்டால்
    இப்படித்தான்.
    வார்த்தைகளுக்கு அர்த்தமே இருக்காது.
    உளறலின் உச்சபட்சத்தை அங்கே காணலாம்.

  4. bandhu சொல்கிறார்:

    இந்த மாதிரி சமயங்களில் அரசு பல பார்மா கம்பெனிகளை வற்புறுத்தி – வாக்சின் தயாரிக்கும் கம்பெனிகளுக்கே மற்ற மருந்து தயாரிக்கும் உரிமை – தயாரிக்க செய்ய வேண்டும். மாநில அரசுகளே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றால் மத்திய அரசு எதற்கு? இது நாடு முழுக்க உள்ள பிரச்சனை.

    மாநில அரசு பொறுப்பு / மக்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத வாதம்.

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    // தேவையில்லாத வாதம்.//

    இது வாதம் அல்ல நண்பரே.

    … விதண்டாவாதம்
    ….
    …. பாஜக அரசு எது செய்தாலும்
    அது சரியே என்கிற பிடிவாதம்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.