எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

tamil-nadu-chief-minister-e-palanisamy-eps-and-deputy-chief-minister-o-panneerselvam-ops-pti-894661-1601363469

ஒரு தலைவராகப்பட்டவர் –
மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டு
தன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…?

நல்லவராகவா…? வல்லவராகவா…?

வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…
அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது…

வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்கு
நல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.

எனவே, நல்லவராகவும், அதே சமயம் வல்லவராகவும்
இருப்பவரே கட்சிக்கும், நாட்டிற்கும் தேவை. அத்தகைய
தலைவரையே மக்களும் விரும்புவர்….

ஓபிஎஸ் – நல்லவர் தான். ஆனால் வல்லவரா…?

ஒருக்காலத்தில் வல்லவராகவும் இருந்திருப்பார்; அதனால் தானே
இந்த அளவிற்கு முன்னுக்கு வர முடிந்தது….!!!
ஆனால், தற்போதைய காலகட்டத்தில், அவர் தன்னை
முழுமையாக, பாஜவின் ஆளுமைக்கு உட்படுத்திக்கொண்டு
விட்டார். எந்த விஷயமாக இருந்தாலும் சரி –

பாஜக-வை மீறி அல்லது எதிர்த்து – அவரால் செயல்பட முடியாது;
அதிமுக – முழுவதுமாக அவர் வசப்பட்டால் –
அது பாஜக-வின் தமிழக கிளையாகவே செயல்பட வேண்டியிருக்கும்…. செயல்படும்…!!!

எடப்பாடி….. இவரும் பாஜகவுக்கு எதிரானவர் அல்ல.


ஆனாலும், பாஜகவை சமாளிக்கத் தெரிந்தவர்.
பாஜக-வை விரோதித்துக்கொள்ளாமலே, அதன் ஆளுமைக்கு
உட்படாமல் தப்பிப்பது எப்படி என்கிற தந்திரத்தை அவர்
அறிந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இதை
நாம் நடைமுறையிலேயே பார்த்திருக்கிறோம்.

எனவே, அதிமுக என்கிற கட்சி தொடர்ந்து சுயேச்சையாக, வலிமையுடன், மக்கள் செல்வாக்கையும் பெற்று இயங்க வேண்டுமானால் அது எடப்பாடி அவர்களின் தலைமையின் கீழ் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

  1. புதியவன் சொல்கிறார்:

    ஆரம்பகாலத்தில், ஓபிஎஸ் அவர்களே தொடரணும் என்று நான் விரும்பினேன். Level headed, ஜெ. வின், அதிமுகவின் விசுவாசி, ஜெ.வின் எண்ணத்தைச் செயலாற்றுவார், சசிகலாவிற்கு அடிமையாகமாட்டார் என்ற நினைப்பில். பிறகு அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. தன் சுயநலத்திற்காக அதிமுகவை அடகு வைக்கத் தயங்கமாட்டார் ஓபிஎஸ் என்பது பல்வேறு நிகழ்வில் எனக்குத் தோன்றியது. அதிமுக உள்கட்சி விவகாரங்களையும் பாஜக தலைமைக்கு pass பண்ணக்கூடியவர் என்ற எண்ணம்தான் எனக்கு எழுகிறது. ஓபிஎஸ் அவர்களாலும்தான் எடப்பாடி, பாஜகவை கழற்றிவிடமுடியாத நிலைமைக்கு உள்ளாகியிருந்தார் என்றும் நான் கணிக்கிறேன். ஆட்சிக்கு வருவதற்குப் பிரச்சனை ஏற்பட்டாலும், தினகரனையும் சசிகலாவையும் ஒதுக்கிவைக்க வேண்டும் என்று சரியான தீர்மானத்தை எடப்பாடி அவர்கள் எடுத்திருந்தார்.

    1. அரசியலுக்கு நீக்கு போக்கு, மக்களின் ஆதரவைப் பெறும் தன்மை, அரசியலுக்கே உரித்தான வேலைகள் எல்லாமும் தேவை.
    2. முடிவைத் தலைவர்தான் எடுக்கவேண்டும். பிற கட்சியின் ஆதிக்கத்தில் முடிவு எடுக்கக்கூடாது.
    3. எளிமையாக இருக்கணும் (இதில் இருவரும் ஓகே). மக்களைத் திரட்டும் ஆளுமை நிச்சயம் எடப்பாடி அவர்களுக்கு இருக்கு, வளரும்.

    முதல் இரண்டும் கொண்டவர் எடப்பாடியார் என்பது என் அபிப்ராயம். அதிமுகவின் கட்சிக் கொள்கைகளை அப்படியே கொண்டுபோகக்கூடியவர் எடப்பாடியார். இவரை வெறும் சாதிக்குள் அடைக்கக்கூடாது என்பதும் என் எண்ணம்.

    திரும்பவும் என் எண்ணத்தைப் பதிவு செய்கிறேன். அதிமுக எந்தக் காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டுச் சேரக்கூடாது. மாநிலத்தில் அதிமுக, மத்தியில் மத்திய அரசுக்கு இணக்கமான போக்கு என்றுதான் கொள்ளவேண்டும். அதனால், அதிமுக ‘பாஜக’வுக்கு எதிராக இருக்கவேண்டாம் (அதாவது விரோதப் போக்கு வேண்டாம். கண்ணைமூடிக்கொண்டு மோடி எதிர்ப்பு, பிறகு காலில் விழுவது), ஆனால் பாஜகவை சேர்க்கக்கூடாது. அவங்க எண்ணவோட்டம், கூட்டணியைக் கொண்டுசெல்லும் விதம் எதுவுமே ஏற்புடையதில்லை. இதற்கு உதாரணமாய், நாலு பின்னூட்டம் எழுதியதால், விமர்சனம் தளத்தில் இதனைத்தான் எழுதணும், இப்படித்தான் எழுதணும் என்று கா.மை. சாருக்கு நான் சொன்னால் (சொல்வதில்லை. Instruction கொடுப்பது) அது எப்படி நகைப்பிற்கிடமோ அதுபோல, பாஜக கட்சி, அதிமுகவிடம் நடந்துகொள்ளப்பார்க்கும்/வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்கிறது). இதற்கு மிகவும் இடம் கொடுப்பதற்குக் காரணம் ஓபிஎஸ் அவர்கள்தான் என்பது என் கருத்து. பாஜகவை அதிமுக விலக்கி வைக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அதிமுக கூட்டணி, தேர்தலுடன் முடிவுக்கு வரணும்.

    பாஜக நம்பிக்கைக்கு உரிய கட்சி அல்ல. அதிமுகவுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கியை பாண்டிச்சேரியில் பதம் பார்த்தது மட்டுமல்ல, பாஜக அங்கு நடந்துகொள்வது, cheap politics மற்றும் arrogant politics., அடாவடித்தனம். இது அதிமுக தலைமைக்குப் புரிந்திருக்கும். பெருச்சாளியை, கட்டுச் சோற்றுக்குள் சேர்த்துக் கட்டாதீர்கள். இது அதிமுக அனுதாபியின் வேண்டுகோள்.

  2. விவேகன் சொல்கிறார்:

    எனது ஆசை,
    எதிர் காலத்தில் பாஜக , திமுகவையும் சிபிஐயை வைத்து மிரட்டி அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதிமுகவை விட்டு விடவேண்டும்.

    எதுவும் அரசியலில் சாத்தியமே…..

    முருகன் மனது வைப்பாராக …..

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எந்த முருகன் விவேகன்….??? !!!!

    .

    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.