துவக்கம் நன்றாகவே இருக்கிறது…..

fort

புதிய அரசின் துவக்கம் நன்றாக இருப்பதாகவே
தோன்றுகிறது.

முதல் நாள் அறிவிப்புகள் சிறப்பாக இருக்கின்றன.

ஒதுக்கி, ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சில
நல்ல -திறமை மிக்க மூத்த IAS அதிகாரிகளுக்கு
மீண்டும் முக்கியமான பொறுப்புகள் அளித்திருப்பது
வரவேற்கத்தக்கது….

அவர்களை எல்லாம் சுதந்திரமாக
செயல்பட அனுமதித்தாலே போதும்… நிர்வாகம் சிறக்கும்..

ஆனால் – புதிய அரசில் – பழம் தின்று கொட்டையும் போட்ட அனுபவமிக்க (!!!) குறிப்பிடத்தக்க மூத்த அமைச்சர்கள் சிலர் இருக்கிறார்களே…


இந்த IAS அதிகாரிகளால் அவர்களை எதிர்கொண்டு, சமாளித்து
வெற்றிகரமாகச் செயல்பட முடியுமா…?….

அல்லது இவர்களை மீண்டும் ஒதுக்கி
வைப்பதில் அந்த அமைச்சர்கள் வெற்றி பெற்று விடுவர்களா…?

தெரியவில்லை; காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

.

—————————————————————————–.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to துவக்கம் நன்றாகவே இருக்கிறது…..

  1. bandhu சொல்கிறார்:

    தொடக்கம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. ஸ்டாலின் பல விதத்தில் ஜெயலலிதா போல செயல்படுகிறார், தன்னிஷ்டம் போல மந்திரிகளை தேர்ந்தெடுத்ததில்.. பார்க்கலாம். ஒரு ஆறு மாதங்கள் அனாவசியமாக குற்றம் சுமத்தாமல் அவரை செயல் பட விட வேண்டும்!

  2. புதியவன் சொல்கிறார்:

    ஜெ.வின் முதல் ஆட்சியில் இப்படித்தான் ஆரம்பித்தது.

    It is not easy to control senior ministers, who fund for party. பார்க்கலாம்.. எப்படிப் போகுதுன்னு. இவ்வளவு invest பண்ணிட்டு எப்படிச் செல்கிறது என்று பார்ப்போம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்தான் பாவம்… உடனே தங்கள் நிறத்தை முற்றிலும் மாற்றிக்கொள்ளணும், கே ஜி ஜவர்லால் என்பவர் ஒரு டிக்‌ஷனரியே இந்த கட்சிசார்பான அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும், தந்தி, மாலைமுரசு, புதிய தலைமுறை… இவங்களுக்காகத்தான்.

    நிர்வாகத் திறமையின்மை = சவாலான சூழ்நிலை
    பொருளாதார வீழ்ச்சி = பொருளாதாரச் சிக்கல்கள்
    மத்திய அரசின் அடிமை = மத்திய அரசுடன் இணக்கம்
    கோமாளித்தனம் = நகைச்சுவை உணர்வு
    மெத்தனம் = நிதானம்
    முழுமுடக்கம் = கடும் கட்டுப்பாடுகள்
    ரகளை செய்யும் ஆளும் கட்சியினர் = மர்ம நபர்கள்
    அனுபவம் இல்லாதவர்கள் = இளைஞர்கள்
    உட்கட்சிப் பூசல்கள் = கட்சி ஜனநாயகம்
    மத்திய அரசுக்கு கடிதம் எழுதுதல் = மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்
    அதிரடி விலைஉயர்வு = தவிர்க்கவியலா காரணங்களால் xxx விலை உயர்ந்த படுகிறது
    விமர்சனம் = அவதூறு
    வன்மையாக கண்டிக்கிறோம் = மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்
    மின்வெட்டு = மின்தடை
    நடவடிக்கையெடுக்காத,கையாலாகாத அரசு = ஆழ்ந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அரசு
    கண்மூடித்தனமான = சிந்தித்து செயல்பட்டு
    புரட்சிகரமான போராட்டம் = அமைதியான வழியில் அறப்போர்
    தொண்டர்கள் எழுச்சி = தொண்டர்கள் விழிப்புணர்வு
    மக்கள் பொங்கி எழுந்தனர் = மக்கள் ஆதங்கம்
    மத்திய அரசிடம் தமிழகம் போர் முரசு கொட்டும் = மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் கே.ஜி.ஜவர்லால் அவர்களின் டிக்-ஷனரி அருமை…
    very realistic…!!! – பாராட்டுகள்.

    ஜவர்லாலுக்கும், அதை இங்கு கொண்டுவந்து சேர்த்த
    நண்பர் புதியவனுக்கும் நன்றி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. Kamal சொல்கிறார்:

    Writer Charu has written in similar viewpoint.
    http://charunivedita.online/blog/?p=10285

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.