……..
இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
சுகி சிவம் அவர்கள், அவசியமான சில செய்திகளைச்
சொல்கிறார் –
கேட்போமா…!!!
…………
…………
……..
இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
சுகி சிவம் அவர்கள், அவசியமான சில செய்திகளைச்
சொல்கிறார் –
கேட்போமா…!!!
…………
…………
சிறப்பான ஆலோசனைகள்.
கண்டிப்பாக நல்ல ஒரு ஆட்சியாக இது அமையும்.
அறிவியல்பூர்வமான அணுகும் நிலைப்பாடு அமைச்சரவை பெயர் மாற்றத்தில் தெரிந்தது.
சுற்றுச்சூழல் -> சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் என பெயர் மாற்றம் நடந்துள்ளது.
6 மாதங்கள் கழித்து எப்படி இருந்தது என்று எழுதுங்கள்.
இதே மாதிரி அதிமுக துறைகளின் பெயரை மாற்றியிருந்தால் என்னமாக கதறியிருப்பீர்கள்
அப்படி நினைக்கவேண்டாம் கார்த்திகேயன். தன் பெயரை வரலாற்றில் பதிக்கணும் என்ற எண்ணம் கொண்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறார் என்று நினைப்போம். இவர் என்ன செய்கிறாரோ அதுவே திமுக கட்சிக்கு எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது தெரியாதவரா ஸ்டாலின்
ஓ திராவிடர்கள் வரலாற்றில் தங்கள் பெயரை பதிக்கலாம் ஆனால் தமிழன் எடப்பாடி ்அல்லது பன்னீர் முயன்றால் பாசிச பாஜகவின் ஊதுகுழல் என பேசுறது
அது அரசியல் கார்த்திகேயன். எடப்பாடி அரசை மட்டும் எதிர்த்து மக்களிடையே வாக்குகளை வாங்க முடியாது. ஏனென்றால் எடப்பாடி அரசு மக்களுக்குத் துன்பம் கொடுத்ததில்லை. எல்லாரையும் தாஜா செய்து நடந்த அரசு அது. அதனால்தான் மோடி, பாஜக போன்றவற்றை தனக்கு எதிரியாகச் சித்தரித்தது திமுக. அப்போதுதான் சிறுபான்மையினர், டிரெடிஷனல் தி.க. சிந்தனை உள்ளவர்களின் முழு ஆதரவையும் பெற முடியும் என்று நினைத்தது. அதற்கு ஏற்ற மாதிரி, பாஜகவினால்தான் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்குச் செல்லவில்லை.
நீங்க இந்த டாபிக் எடுத்ததனால் என் கருத்தை எழுதுகிறேன். எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி அவர்களுக்கு மட்டும்தான் தகுதி உள்ளது. அப்படித்தான் அதிமுக முடிவு எடுக்கவேண்டும். ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடிக்கு அதிமுகவின் மீது விசுவாசம் அதிகம் என்பது என் கருத்து (இது என் பழைய கருத்துகளுக்கு மாறானது-அதாவது ஜெ. மறைந்த உடனே நான் எழுதிய கருத்துகளுக்கு)