தமிழக சட்ட சபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும்
பெற்ற வாக்குகள் சதவிகிதமும்,
பெற்ற மொத்த வாக்குகளும் – பெற்ற இடங்களும் ….. !!!
திமுக – 37.15%
அதிமுக – 33.28%
காங்கிரஸ் – 4.28%
பாட்டாளி மக்கள் கட்சி – 3.81%
இந்திய கம்யூனிஸ்ட் – 1.09%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85%
தேமுதிக – 0.43%
பாஜக – 2.63%
விசிக- 1.3%
முஸ்லிம் லீக்- 0.48%
மக்கள் நீதி மய்யம் 2.4%
நாம் தமிழர் கட்சி 6.6% அமமுக 2.4%
———————————————————————————-
தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு
கட்சியும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை –
திமுக – 1,56,85,421
அதிமுக – 1,43,85,410
நாம் தமிழர் – 29,58,458
காங்கிரஸ் – 19,06,578
பாட்டாளி மக்கள் கட்சி -17,45,229
பாஜக -11,80,456
அமமுக -10,65,142
மக்கள் நீதி மய்யம் -10,58,847
இந்திய கம்யூனிஸ்ட் – 5,04,037
மதிமுக -4,86,979
விசிக -4,57,763
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 3,90,819
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – 3,39,342
ஐயுஎம்எல் -2,22,263
தமிழ் மாநில காங்கிரஸ் -2,21,051
தேமுதிக -1,95,610
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி -22,156
சமத்துவ மக்கள் கட்சி -89,220
இந்திய ஜனநாயக கட்சி – 39,288
———————————————————————————————–
ஒவ்வொரு கட்சியும் பெற்ற இடங்களின் எண்ணிக்கை –
திமுக கூட்டணி – 159 இடங்கள்
திமுக – 125
காங்கிரஸ் – 18
விசிக – 4
மதிமுக (உதயசூரியன் சின்னம்) – 4
சிபிஎம் – 2
சிபிஐ – 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,
மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட
இதர கட்சிகள் – 4 இடங்கள்
அதிமுக கூட்டணி – 75 இடங்கள்
அதிமுக – 65
பாமக – 5
பாஜக – 4
இதர கட்சிகள் – 1 இடம்
மநீம+, நாம் தமிழர், அமமுக+ – ஆகிய கட்சிகள்
எந்த தொகுதியிலும் –
முன்னிலையோ, வெற்றியோ பெறவில்லை;
.
.
——————————————————————————————————–
கா.மை. சார்… இது சாதாரண ஸ்டாடிஸ்டிக்ஸ்தான். இதன் மூலம் நீங்க சொல்ல வருவது என்ன என்பது தெரிந்தால்தான் அதை ஒட்டி எழுத முடியும்.
தமிழகத்துக்கு என்னைப் பொறுத்தவரையில் 3 கட்சிகளும் 2 தேசியக் கட்சிகளும் more than enough. மற்றவர்கள் எல்லோரும் சாதிக்கட்சிகள், இல்லைனா கம்யூனிஸ்டுகள் மாதிரி லெட்டர் பேட் கட்சிகள். இவங்களால மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்று மக்களே நினைப்பதால்தான் இவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை.
இதைவிட நான் மிக முக்கியமாக நினைப்பது பாண்டிச்சேரி. அதைத்தான் நீங்க சூடாக விமர்சனம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு இந்த ஆதரவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றியும் எழுதுவீங்க என்று நினைத்தேன்.
புதியவன்,
மொத்த புள்ளி விவரங்களையும், ஒரே இடத்தில்
தொகுத்துத் தருவது தான் இந்த இடுகையின்
முக்கிய நோக்கம்.
இதில் ஹைலைட்ஸ் என்று சில விஷயங்களை
சொல்லலாம்…..
– ஆட்சியைப் பிடித்த திமுக-வுக்கும், எதிர்வரிசையில்
அமரும் அதிமுக-வுக்கும் இடையிலான
வாக்கு சதவீத வித்தியாசம் சுமார் 3.87 % தான்….!!!
– பெற்ற மொத்த ஓட்டுக்களின் வித்தியாசம்
சுமார் 13 லட்சம் மட்டுமே….!!!
– ஏகப்பட்ட அலம்பல் செய்து, அடுத்த முதல்வராகவே
தன்னை டிக்ளேர் செய்துகொண்டு களத்தில் நுழைந்த
கமல்ஹாசனின் கட்சி 150 இடங்களுக்கும் மேலே
போட்டியிட்டும் பெற்ற மொத்த வாக்குகள்
11 லட்சத்தைக் கூட தொடவில்லை…..( 10,58,847 )
25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில்
வெற்றி பெற்று -காங்கிரஸ் 72 % வெற்றியுடன்
முதல் முறையாக தமிழகத்தில் சாதனை படைத்திருக்கிறது….
புதுச்சேரி, மேற்கு வங்கம் பற்றி- நான் தனியே இடுகை
எழுதுவதாக இல்லை. நீங்கள் எதாவது
கருத்து சொல்ல விரும்பினால், அப்படியே இங்கேயே
சொல்லலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நீங்கள் சொல்வது சரிதான். இப்போ அனலைஸ் செய்து பார்த்தால், அதிமுக, பாமக, பாஜக. இவங்களுக்கு எதிரே திமுக, காங்கிரஸ்-வலிமையான கட்சி, விசிக, திமுக-பார்ட் 2, கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய கட்சிகள் என்று பலத்த கூட்டணிதான். அதிமுகவுக்கு பாமகவினால் பெரிய லாபம் வந்த மாதிரி தெரியவில்லை. தினகரனால் 20 தொகுதிகள் சென்றுவிட்டது. அப்போ அதிமுக வலிமை இழக்கவில்லை, திமுக மக்கள் மனதைத் தொடவில்லை என்பதுதான் தேர்தலின் செய்தியாக எனக்குப் புரிகிறது. (பாருங்க..இன்னைக்கே அம்மா கேண்டீனை அடித்து நொறுக்கி டிராமாவை ஆரம்பித்துவைத்துவிட்டது திமுக)
எடப்பாடி அவர்கள், பாஜகவை சரியாக ஹேண்டில் செய்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது. எடப்பாடி, தினகரனைச் சேர்த்துக்கொண்டிருக்க முடியாது என்பது புரிகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி உருவாக ஆரம்பித்திருக்கிறது என்றும் நான் புரிந்துகொள்கிறேன்.
சாருஹாசன் சொன்னதுபோல, கமலஹாசனால் அதிகபட்சம் 5 சதவிகித வாக்குகளைத்தான் வாங்க முடிந்திருக்கிறது, முடியும். இன்னொரு அனாலிஸிஸில், நாம் தமிழர் கட்சி, 8 சதத்துக்கு மேல் எக்காலத்திலும் வாக்கு வாங்காது, அவர்களால் மற்றவர்களைத் தோல்வியடையச் செய்ய முடியுமே தவிர, தங்களால் வெற்றி பெற முடியாது என்று சொல்வதும் யோசிக்க வைக்கிறது.
இருக்கும் சிஸ்டத்தில், புதுத் தலைவராக ஒருவர் உருவாகணும் என்றால், அவருக்கு அரசியலில் பத்து வருடங்களாவது தாக்குப் பிடிக்கும் சக்தி இருக்கணும். இல்லையென்றால் தமிழகத்தில் எப்போதுமே திமுக, அதிமுகதான் போலிருக்கிறது. என் சொந்தக் கருத்து, அதிமுக, சமயம் பார்த்து பாஜகவை கழற்றிவிடுவது நல்லது. பாஜக நம்பிக்கைக்குரிய பார்ட்னர் கிடையாது. இல்லையென்றால், ஒரு சமயத்தில் பாஜக Vs திமுக என்றாகி, மற்ற கட்சிகளெல்லாம் காணாமல் போய்விடும் என்று நம்புகிறேன் (மற்ற மாநிலங்களில் நடப்பதுபோல)
மேற்கு வங்கம் – Polarization of minorities plus வங்காளி pride என்று தோன்றுகிறது. அதிலும் இஸ்லாமியர்களின் polarizationதான் மம்தாவின் வெற்றிக்குக் காரணம். அதனால்தான் மஜ்லிஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. Similar model might happen in TN as well in future.
புதுச்சேரி – I don’t like what has been happening there. அடுத்தவன் வேட்டியை உருவி, நான் பணக்காரன் வேஷம் போட்டால் அது நிலைத்து நிற்குமா? ரங்கசாமி இப்போது பணிவது போலத் தெரிந்தாலும், தகுந்த சமயத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவார் என்று கணிக்கிறேன்.
புதியவன்,
// புதுச்சேரி – I don’t like what has been happening there.
அடுத்தவன் வேட்டியை உருவி, நான் பணக்காரன்
வேஷம் போட்டால் அது நிலைத்து நிற்குமா?
ரங்கசாமி இப்போது பணிவது போலத் தெரிந்தாலும்,
தகுந்த சமயத்தில் பாஜக கூட்டணியிலிருந்து
விலகுவார் என்று கணிக்கிறேன்.//
தற்போதைய ரங்கசாமி+அமீத்ஜி ஒப்பந்தப்படி,
முதல் 15 மாதங்கள் ரங்கசாமி முதல்வர்;
அதன் பிறகு பாஜக நமச்சிவாயம் முதல்வர்…!!!
ஆனால் – இப்போதே சொல்லி வைத்துவிடலாம்.
ரங்கசாமி பலே கில்லாடி….
16-வது மாதம் புதுச்சேரி ஆட்சி கவிழ்ந்து விடும்.
அல்லது புதிய கூட்டணியில், ரங்கசாமி
முதல்வராகத் தொடர்வார்…!!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்