தேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …!!!

ballot box

தமிழக தேர்தல் முடிவுகளைப்பற்றிய ஒரு விரிவான
அலசலை இந்த காணொலியில் காணலாம் …..

………………

.

இந்த அலசலைப்பற்றி நாமும் அலசலாம்.. பின்னூட்டங்கள் மூலம் ….!!!

………………

.

——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , . Bookmark the permalink.

3 Responses to தேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    1. முதல்ல 1 சதவிகித வித்தியாசத்தில்தான் ஜெ. வெற்றி பெற்றார் என்று சொல்லப்படுவதை நான் சரியான அனுமானமாக எடுத்துக்கொள்வதில்லை. அதிமுக Vs திமுக+காங்கிரஸ்+முஸ்லீம் கட்சிகள். ஜெ. தன்னை மட்டும் நம்பி களத்தில் நின்றார். அது ஒரு கேல்குலேடட் ரிஸ்க் என்பது என் எண்ணம். இருந்தாலும் பொதுமக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.

    2. ஸ்டாலின் மீது நம்பிக்கை மக்களுக்கு இல்லை என்று (அதாவது வாக்குகள் ஸ்டாலினுக்காக விழவில்லை என்று) சங்கர் சொல்வது சரியான கருத்து அல்ல. முதல் தேர்தலில் எப்போதும் எல்லா பொதுமக்களும் ஆதரிக்க மாட்டார்கள். அவருடைய கடந்தகால track recordம் ஓஹோ என்று இல்லை. அவருடைய ‘முதலமைச்சர்’ என்ற பதவியில் செயல்பாடுதான் ஸ்டாலின் வளர்வதைத் தீர்மானிக்கும். ஆனால், காங்கிரஸ் இல்லாதிருந்தால், ஸ்டாலினுக்கு ‘மதச்சார்பின்மை’ என்ற லேபிள் மற்றும் கிறிஸ்துவ வாக்குகள் முழுமையாகக் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். ராகுலின் வருகைகள் உதவியிருக்கின்றன என்றே கருதுகிறேன். காங்கிரஸ் இல்லாமல் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்காது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.

    3. சங்கர், முதலில் வளர்ந்ததே கருணாநிதி, திமுக ஊழல்களைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித்தான். சென்ற பல வருடங்களாக அவர் சிந்தனை திமுக சார்பாகத் திரும்பிவிட்டது. அதனால் ‘திராவிடம்’ என்றெல்லாம் பேசுகிறார். நடுநிலையாக பாஜகவையும் காங்கிரஸையும் எடைபோட்டால், நான் பாஜக பல மடங்கு காங்கிரசைவிடச் சிறந்தது என்றுதான் நினைக்கிறேன். தமிழகத்தில் அது வளர்கிறது என்பதை நான் நிச்சயமாக உணர்கிறேன். இதற்கு முக்கியமாக உதவுவது ஸ்டாலின், கோவாலசாமி, திருமா போன்றவர்கள். இந்தத் தேர்தலிலேயே அவர்களின் பரப்புரையில், ஒவ்வொரு அதிமுகவின் வெற்றியும் பாஜகவின் வெற்றி என்றே அச்சுறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள். (To polarize Christians and Muslims votes). இதை மட்டும் செய்தால் பாஜக வளராது. ஆனால் இந்த மூவரும் இந்துமதத்தை இழித்துப் பேசினார்கள். இப்படிச் செய்யும்போது, சர்வ சாதாரணமாக பாஜக வளரும். இந்தத் தவறை அவர்கள் பின்புதான் உணர்வார்கள்.

    4. ஸ்டாலினால் இந்தத் தேர்தலில் எடப்பாடியையோ அதிமுக ஆட்சியைக் குறை கூறியோ பரப்புரை செய்ய முடியவில்லை என்பதைக் கவனிக்கணும். அவர்கள் சொன்னதெல்லாம் அதிமுக, பாஜவுக்கு அடிமையாக இருக்கிறது என்றுதான். அதிமுகவை, ‘ஊழல்’ என்றோ, மக்களுக்கு எதிரானது என்றோ ஸ்டாலினால் பிரச்சாரம் செய்திருக்க முடியாது. அதிமுக எனக்குத் தெரிந்தவரை மக்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

    5. அதிமுகவுக்கு எடப்பாடி, சரியான தலைவராக உயர்ந்திருக்கிறார் என்பது என் எண்ணம். பாஜக தலைவர்கள், தலைக்கனம் கொண்டு பேசியபோதும், அதீதமாக தங்களைப்பற்றி எண்ணிக்கொண்டபோதும் (முருகன் சொன்னார், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று தில்லி சொல்லுமாம், எப்படிப்பட்ட ஆணவம். அடுத்தது, குறைந்தபட்சம் 60 சீட்டுகள் என்றெல்லாம் பேசி, அதிமுகவுக்கு எதிராக பொதுமக்களின் மனநிலையை மாற்ற முயற்சித்தார். இதெல்லாம் சிறுபிள்ளைத் தனமானது. திமுக மற்றும் எதிர்கட்சிகள், அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது என்பதைத்தான் முதலிலிருந்து பேசுகிறார்கள். இது அதிமுகவின் வாக்குகளைப் பதம் பார்க்கும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக பாஜக தலைமைக்கு இல்லை என்பது ஆச்சர்யம்தான். பாஜகவினால்தான் அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது). எடப்பாடி, பாஜகவை மிக நன்றாக ஹேண்டில் செய்தார் என்பது என் எண்ணம். மத்திய அரசின் ஆதரவு, கொடுத்தது 20 சீட்டுகள் மட்டுமே என்பது அவருக்கு ஒரு சாதகமான பிம்பத்தைக் கொடுத்தது. அதிமுக, எதற்காக புதிய தமிழகத்தைக் கைவிட்டது என்பது எனக்கு ஆச்சர்யம். கடைசிவரை தேதிமுகவைத் தக்கவைக்க அவர் முயன்றார், ஆனால் அவரால் பிரேமலதாவின் பேராசையைத் திருப்தி செய்ய முடியவில்லை. இனி தேதிமுக என்பது களத்தில் இல்லாத கட்சிதான். எடப்பாடி, தன்னை அதிமுகவின் நல்ல தலைவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார், 10 வருட ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தாமல் இருந்தது பெரிய சாதனை. மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். அவரை மனதார பாராட்டுகிறேன். Well Done Sir. You have done your duty to AIADMK.

    6. தமிழகத்தில் விசிக, மதிமுக கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளுக்கு இடமில்லை என்பதையும் இந்தத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

    அதிமுகவின் அனுதாபி என்ற வகையில் எடப்பாடி அவர்களுக்கு நான் கூறும் யோசனைகள் சிலதான்.
    1. அதிமுக தலைவர் என்ற நிலைக்கு இப்போது உயர்ந்திருக்கிறீர்கள். நிச்சயம் நல்ல எதிர்கட்சித் தலைவராக இருப்பீர்கள். எந்தக் காரணம் கொண்டும், அதிமுகவில் கருநாகங்களைச் சேர்த்துவிடாதீர்கள். தினகரன், சசிகலா போன்றோர் அதிமுகவை (பொதுமக்கள் மனதில் உள்ள அதிமுக பிம்பத்தை) அழிக்கவந்தவர்கள்.. மனம் மாறி வரும் உண்மையான அதிமுகவினரைச் சேர்த்துக்கொள்ளத் தயங்காதீர்கள், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட. தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் அரணாக இருங்கள், ஆனால் அவர்களுக்காக இந்துக்களை பலி கொடுக்காதீர்கள் (அப்படிச் செய்வது திமுக, அதனால் அதன் விளைவுகளை அவர்கள் மட்டும் அனுபவிக்கட்டும்)
    2. எப்போதும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லாத, இந்துக்களுக்கு எதிரான விசிக போன்ற கட்சியினரைச் சேர்க்காதீர்கள். பாஜக அதிமுகவை ஆதிக்கம் செய்ய நினைத்தால் அவர்களைக் கழற்றிவிடத் தயங்காதீர்கள். அதிமுகவிலிருந்து யாரையேனும் பாஜக இழுத்தால் அதனைப்பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். வாக்குகள் இரட்டை இலைக்குத்தான். எதிர்காலத்தில் தேர்தல் நடக்கும்போது, எடப்பாடியின் அதிமுக அரசு மக்களுக்கு எதிராக இதைச் செய்தது என்று சொல்லும் வாய்ப்பை நீங்கள் தராததே பெரிய விஷயம்.

    சங்கர் பேட்டி உணர்த்துவது ஒன்றைத்தான். அவர் பாஜக வளருவதை உணரவில்லை. இந்துக்களுக்கு எதிராக திமுக, விசிக, முஸ்லீம் கட்சிகள் செயல்பட செயல்பட பாஜக தமிழகத்தில் வளரும். சங்கர் பாஜகவின் ஆதரவாளர்கள் பிராமணர்கள் என்று இன்னும் கனவு கண்டுகொண்டிருக்கிறார். பிராமணர்களில் மூன்றிலொரு பகுதிதான் பாஜகவை ஆதரிக்க வாய்ப்பு. மற்ற இரண்டு பகுதி, அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று பிரிந்திருக்கிறது. பாஜக, அதிமுக வாக்குகளை மட்டும் வாங்கியிருக்கிறது என்று சங்கர் கனவு காண வேண்டாம். அதற்கென வாக்குவங்கி உருவாயிருக்கிறது. இதற்கு முழுக்காரணம் இந்துக்களுக்கும் அவர்கள் மதம், கோவில், வழிபாடுகளுக்கு எதிராகப் பேசி அதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்கலாம் என்று நினைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.

    சங்கர் சொல்வதில் என்னை யோசிக்க வைத்தது, சீமானால், அவரின் இளைஞர் படையைத் தக்கவைக்க முடியாது என்பது. அந்த இளைஞன் maturity அடையும்போது சீமானை விட்டு விலகிவிடுவான் என்பது சங்கரின் கூற்று. யோசிக்க வைக்கிறது.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // 5.அதிமுகவுக்கு எடப்பாடி, சரியான
    தலைவராக உயர்ந்திருக்கிறார் என்பது
    என் எண்ணம். பாஜக தலைவர்கள்,
    தலைக்கனம் கொண்டு பேசியபோதும்,
    அதீதமாக தங்களைப்பற்றி எண்ணிக்கொண்ட
    போதும் (முருகன் சொன்னார்,
    யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று
    தில்லி சொல்லுமாம், எப்படிப்பட்ட ஆணவம்.?

    அடுத்தது, குறைந்தபட்சம் 60 சீட்டுகள்
    என்றெல்லாம் பேசி, அதிமுகவுக்கு எதிராக
    பொதுமக்களின் மனநிலையை மாற்ற
    முயற்சித்தார். இதெல்லாம் சிறுபிள்ளைத்
    தனமானது. திமுக மற்றும் எதிர்கட்சிகள்,
    அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது
    என்பதைத்தான் முதலிலிருந்து பேசுகிறார்கள். //

    – இது வரை நீங்கள் சொல்வது சரியே…

    ஆனால் –

    // இது அதிமுகவின் வாக்குகளைப் பதம் பார்க்கும்
    என்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக
    பாஜக தலைமைக்கு இல்லை என்பது
    ஆச்சர்யம்தான்.//

    இது தான் சரியில்லை….

    பாஜக தெரியாமலோ, புரியாமலோ செய்த
    தவறு இல்லை இது. வேண்டுமென்றே
    அவர்கள் செய்த திமிர்த்தனம் இது.
    அதிமுக-வை நாங்கள் தான் ஆட்டி வைக்கிறோம்
    என்று தமிழக மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும்
    உணர்த்த வேண்டி, விரும்பி அவர்கள்
    செய்த செயல் இது.

    அவர்களின் இந்த செயல் – எடப்பாடியாருக்கு
    மக்களிடம் இருந்த நல்ல பெயரையும் மீறி,
    அதிமுக-வுக்கு தோல்வியை கொடுத்தது.

    எடப்பாடியாரின் வெற்றியை “காவு” கொண்டது
    பாஜக அவர் மீது சுமத்திய “வலுக்கட்டாய
    கூட்டணி உறவு” தான்….

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. புதுச்சேரியிலும் மக்கள் மனநிலை பாஜக பக்கம் இல்லை. அங்கும் ஆரம்பத்திலிருந்தே பாஜக நடந்துகொள்வது அடாவடித்தனம். அங்கு பாஜக இந்த ஆட்டிடியூடுடன் வளரவே வளராது. To be fair, பாஜக, ச்சிகலா factorஐ அழுத்தியதில் அதிமுகவுக்கு நன்மை புரிந்துள்ளது. சிலபல டகால்டி வேலைகளை திமுக செய்யாமல் பார்த்துக்கொண்டது. அதற்குமேல் politicalஆக அதிமுகவுக்கு எதிராகவோ இல்லை திமுகவுக்கு எதிராகவோ (உதாரணம் மிரட்டி துரைமுருகன் போன்ற தலைகளையோ இல்லை ஓபிஎஸ் லெவல் தலைவர்களையோ.. what I mean is even forcing leaders to switchover loyalty) செயல்பட்டால் அந்தக் கட்சி வாக்கிழப்பு, நம்பிக்கை இன்மை போன்றவற்றைச் சந்திக்கும், படுதோல்வி அடையும். இதே பாஜக, ஒருவேளை ஐம்பது சீட்டுகளை அதிமுகவிடம் வாங்கியிருந்தால், எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஒன்றிலுமே வெற்றிபெற்றிருக்காது. அதிமுக கட்சியினர், பொதுமக்கள் வாக்கு கிடைத்திருக்காது. இதற்கு classic example, 63 சீட்டுகளை மிரட்டி வாங்கிய காங்கிரஸ்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.