தோற்றது – எக்ஸிட் போல் கணிப்பு ….!!!

————————–

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து
நடந்து வருகிறது. முழுமையான ரிசல்ட் தெரிய,
மாலை/இரவு வரை ஆகலாம்.

தொலைக்காட்சிகள் தொடர்ந்து முன்னிலை விவரங்களை
தெரிவித்து வருகின்றன.

முன்னதாக வெளிவந்த எக்ஸிட் போல் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்துமே –
திமுக கூட்டணி 160 சீட்டுகளுக்கு மேல் பெறும் என்றும்,
அதிமுக கூட்டணி 60 சீட்டுகளைத் தாண்டாது என்றும்
தெரிவித்திருந்தன…..

அதிமுக-வுக்கு ஒரு humiliating தோல்வி என்பது போல்
சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது வெளிவரும் முன்னிலை விவரங்கள்
அப்படி காட்டவில்லை;

இதுவரை வெளிவந்துள்ள செய்திகளின்படி, திமுக தனிப்பட்ட மெஜாரிடியை கூடச் பெறுவதாகத் தெரியவில்லை;

எனவே, காங்கிரஸ் கட்சியையும், அமைச்சரவையில் சேர்த்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற கட்டாயம் கூட திமுக-வுக்கு ஏற்படலாம்.

திரு.ஸ்டாலின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் திருமதி விஜயதாரிணியும் இடம் பெறுவாரோ .. ..??? !!!

இறுதியில் – திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதிமுகவும் ஓரளவு கௌரவமான தொகுதிகளைப் பெறும் என்று தெரிகிறது..


தேர்தல் முடிவுகள் – எதிர்பார்த்ததை விட சுவாரஸ்யமாகவே இருக்கின்றன..!!!

காலை 11 மணி நிலவரப்படி வெளியான முன்னிலை
விவரங்கள் கீழே –

புதிய தலைமுறை –

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 131 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 102 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தினமலர் –

results-1

தினத்தந்தி –

results-2

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to தோற்றது – எக்ஸிட் போல் கணிப்பு ….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இங்கே – இந்த பதிவையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்….

  “திமுக – கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருக்குமா…?
  விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவற்றை
  தனக்கு சமமாக – அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள
  ஸ்டாலின் தயாராக இருப்பாரா..?
  அவரது ஈகோ அதற்கு இடம் கொடுக்குமா…?”

  https://vimarisanam.com/2021/03/26/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  கொஞ்சம் மாலை வரை காத்திருந்திருக்கலாம். அத்துடன் இடுகையில், ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும் என்பதையும் சேர்த்திருக்கணும். ஒரு இடுகையை எப்போதும் ரெஃபர் பண்ணும்படி (அடுத்த தேர்தலின்போதாவது) இருக்கணும்னு நினைக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கும் 1 மணிக்கு இருக்கும் நிலைமைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். அதனால்தான் சொல்கிறேன். என் கருத்துக்குப் பிறகு வருகிறேன்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  அந்தந்த நேரத்திற்கான “த்ரில்” என்று ஒன்று உண்டு.
  அப்போது விட்டு விட்டால், பின்னர்
  அந்த விநாடி,நிமிடம், மணி – நேரம் திரும்ப கிடைக்காது.

  அதை நானும் அனுபவித்து, வாசக நண்பர்களுக்கும்
  தரவேண்டும் என்பதே என் நோக்கம்.

  அந்த – அனுபவிக்கும் ரசனை உங்களுக்கு இல்லை…
  என்பது தெரிகிறது….

  உங்கள் ரசனை உங்களுக்கு….!!!

  • புதியவன் சொல்கிறார்:

   காலைல, நெக் டு நெக் என்று மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ரொம்பவே அதீதமாகப் பேசிய தொலைக்காட்சிகள் இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே திருனமுல் காங்கிரஸ் பெரிய வெற்றியை நோக்கிச் செல்வதைக் காண நேர்ந்தது.

   முடிவுகளைப் பற்றி உங்களுடைய பதிவு வரும். அப்போது விவாதித்துக்கொள்ளலாம்.

   //அனுபவிக்கும் ரசனை// – எனக்கு அது கிடையாது. நான் Live Cricket Matchகளையே பார்ப்பதில்லை, பார்த்ததும் இல்லை. நிச்சயம் வெற்றி பெறப்போகிறது என்ற நிலையில் மட்டும்தான் பார்ப்பேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.