காங்கிரசுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிட்டுமா….?


…………………………………………………………

மாலை 6 மணி –
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்கிறது….

மாலை 6 மணி நிலவரம்….

……………..

6 pm6 pm admk

………………

……………..

தனிப்பட்ட மெஜாரிடிக்கு தேவை – 118 …
திமுகவின் தற்போதைய நிலை – 122 தொகுதிகளில் முன்னிலை….
மெஜாரிடிக்கு 4 சீட்டுகள் அதிகமாகவே இருக்கின்றன….

ஆனாலும், அரசின் ஸ்திரத்தன்மைக்காக – காங்கிரஸ்
கட்சியையும் திமுக தனது அரசில், அமைச்சரவையில்
சேர்த்துக் கொள்ளுமா….?

அப்படி அமைந்தால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு,
(1967-க்குப் பிறகு) முதல் தடவையாக
தமிழக அரசில் காங்கிரசும் இருக்கும்…!!!

பார்ப்போம் – காங்கிரசின் அதிருஷ்டம் எப்படி
இருக்கிறதென்று….!!!

(அதற்காக, காங்கிரஸ் கட்சியை நான் தூண்டிவிடுகிறேன் என்று நண்பர் புதியவன் குற்றம் சாட்ட மாட்டாரென்று நம்புகிறேன்…!!!

காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற தலைவராக நியமிக்கப்படப்போகும் திருமதி விஜயதாரிணி அவர்களுக்கு இதிலெல்லாம் யாரும் யோசனை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை….!!! )

.

————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to காங்கிரசுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிட்டுமா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  என்ன மாதிரி ஆசை உங்களுக்கு? போனாப் போகுதுன்னு கொஞ்சம் ரொட்டித் துண்டுகள் போட்டால், உடனே, வீட்டிற்கு பார்ட்னர் ஆக்கச்சொல்றீங்களே….

  கருணாநிதி மைனாரிட்டியாக இருந்தபோதே, மத்தவங்கள்லாம் கப்சிப்புனு உட்கார்ந்திருந்தாங்க. திமுக சின்னத்தை இரவல் வாங்கி நின்ற கட்சிகளும் (உதாரணம் வை கோபால்சாமி கட்சி) திமுக கட்சி என்ற கணக்கில்தான் வரும். அதனால திமுகவுக்கு ஆட்சியைக் கொண்டு செல்வதில் எந்தச் சிரமமும் கிடையாது. இந்தப் பிரச்சனையெல்லாம் ஸ்டாலினுக்கு அடுத்தது என்ற நிலைமை வரும்போதுதான் வரும்.

  காங்கிரஸ் கட்சியை யார் தூண்டிவிட்டாலும் அவங்க மாட்டிக்க மாட்டாங்க. அவங்களுக்கு தமிழக அரசியல்ல எந்த இடம் என்பது அவங்களுக்குத் தெரியும். பாமகவை விடக் குறைந்த வாக்கு சதவிகிதம் வைத்திருக்கும் கட்சிதான் அது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  25 தொகுதிகளில் நின்று 18-ல் வெற்றி கண்ட
  கட்சியை அவமரியாதை செய்கிறீர்கள்…!!!

  anyway, திமுகவுக்கே 125 கிடைத்து விட்டதால்,
  காங்கிரசுக்கு அரசில் பங்கேற்கும் பாக்கியம்
  கிட்டவில்லை என்பது தான் நிதரிசனமான உண்மை.

  எதிர்காலத்தில், தமிழகத்தில் – காங்கிரஸ்
  தன்னம்பிக்கையுடன் செயல்பட இந்த வெற்றி
  அவர்களுக்கு உதவட்டும்….

  .
  வெள்ளிக்கிழமை, தமிழகத்தின் புதிய முதல்வராக
  பொறுப்பேற்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
  இந்த தளத்தின் சார்பாக உளமார்ந்த நல்வாழ்த்துகளை
  தெரிவித்துக்கொள்வோம்.

  • புதியவன் சொல்கிறார்:

   //25 தொகுதிகளில் நின்று 18-ல் வெற்றி கண்ட கட்சியை//

   இதுல என்னவோ உள்குத்து இருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. “நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 70 -75 சதத்துக்கு மேல் நாங்கள் வெற்றி பெற்றோம், ஆனால் நீங்கள் அவ்வளவு சதவிகித வெற்றியைப் பெறவில்லை’ . அதனால் எங்களுக்கு 50 சீட்டுகளுக்குக் குறையாமல் கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் பிற்காலத்தில் கேட்குமோ?

   பத்திரிகைகளும் (இந்த இணையப் புளுகுப் பத்திரிகைகள்தான்), காங்கிரஸ் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றதினால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடியலை என்று முடிந்த மட்டும் திமுகவுக்கு ஜால்ரா அடித்துப் பார்த்தார்கள். இப்போது காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு எந்த மாதிரி ரியாக்‌ஷன் காண்பிப்பார்களோ.

   அது இருக்கட்டும்…. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்காளத்தில் துடைத்து எறியப்பட்டதையும், காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் அசாமில் ஆட்சிக்கு வரமுடியாததைப் பற்றியும் நீங்க எழுதலையே. கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் achievementஐயும்தான்.

 3. விவேகன் சொல்கிறார்:

  என்னமோ போங்கள் ,
  அது ஏன், இப்பொழுது மட்டும் EVM பெட்டியை ஹேக் செய்த்துவிட்டார்கள் என்ற வழக்கமான ஒப்பாரியை காணோம். என்னமோ நமக்கு எதற்கு வம்பு. எப்பொழுதெல்லாம் இந்த நவீன மதச்சார்பின்மைக்கு எதிராக தீர்ப்பு வருகிறதோ , அப்பொழுது மட்டும் தான் நாம் இது போல் பொங்க வேண்டும் போல.
  எனது மண்டைக்கு இது கூட புரிய மாட்டேங்கிறது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.