பரபரப்பான க்ளைமேக்சை தரும் ஒரு வித்தியாசமான எக்சிட் போல் முடிவு …..

chanakya-2

…….

இதுவரை வெளிவந்த எக்சிட் போல் கருத்து கணிப்பிலிருந்து
முற்றிலும் மாறுபட்ட ஒரு பரபரப்பான க்ளைமேக்சை
தருகிறது பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின்
“சாணக்யா எக்சிட் போல்”…

எந்த விதத்தில் வித்தியாசம்….?

இதுவரை வெளிவந்த – அநேகமாக -அனைத்து கருத்து
கணிப்புகளிலும், திமுக தனிப்பட்ட மெஜாரிடி பெற்று ஆட்சியை

கைப்பற்றும் என்று சொல்லப்பட்டது. திமுக கூட்டணி
180 சீட்டுகள் வரை பெறக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், ரங்கராஜ் பாண்டேயின் கருத்து கணிப்பு ஒரு
பரபரப்பான தகவலைத் தருகிறது…. இது நிஜமாக இருக்குமேயானால்
தமிழகம் அநேகமாக ஒரு தொங்கு சட்டமன்றத்தை நோக்கிச்
செல்கிறது என்று தோன்றுகிறது….

கெட்டிக்கார கட்சி, முடிவுகளை சற்றே திசைதிருப்பி,
ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பை கைப்பற்றிக்கொள்ளும்
என்றும் நினைக்கத் தோன்றுகிறது….

ரங்கராஜ் பாண்டேவின் யூ டியூப் சேனலான சாணக்யாவின்

நேற்றைய எக்ஸிட் போல் முடிவுகள் –
தமிழக சட்டசபை தேர்தலில்


திமுக அணி 111 இடங்களிலும்
அதிமுக கூட்டணி 97 இடங்களிலும் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலினை விட,
எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது என்றும் ரங்கராஜ் பாண்டேவின் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டும்
81 தொகுதிகளில் வெல்லும்….

அந்த கூட்டணியில் பாமக 9 இடங்களிலும்….

பாஜக 5 இடங்களிலும் …
தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடத்திலும் ….
புரட்சி பாரதம் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்று
இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது….


திமுக கூட்டணியில்
திமுக மட்டும் 84 தொகுதிகளிலும்
காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளிலும்

சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள்
தலா 3 இடங்களிலும்,


வி.சி.க. மதிமுக, மனித நேய மக்கள் கட்சி,
முஸ்லிம் லீக் ஆகியவை தலா 2 இடங்களில்,தமிழக வாழ்வுரிமைக்கட்சி,
பார்வார்ட் பிளாக் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும்
வெற்றி பெறும் என்றும்
இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.


மீதி 26 இடங்களில், எந்த கட்சிக்கு வெற்றி கிட்டும் என்று
யூகிக்க முடியாதபடி நிலைமை இழுபறியாக இருக்கிறது
என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது…


எனவே, இந்த 26 தொகுதிகளின் முடிவுகள் தான்
எந்த அணி இறுதியில் வெற்றி பெற்று ஆட்சியை
கைப்பற்றப் போகிறது என்பதை தீர்மானிக்கப்போககின்றன..
என்கிறது இந்த கருத்து கணிப்பு.


இறுதியில் எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது
என்பது நாளை இந்நேரத்திற்குள் உறுதியாக தெரிந்துவிடும்.

இருந்தாலும்,
எல்லா கருத்துகணிப்புகளும் ஒன்றுபோல “போர்” அடிக்கும்
ஒரே முடிவை தெரிவித்து வந்த நேரத்தில் –

ஒரு வித்தியாசமான, பரபரப்பான – க்ளைமேக்சை தருவதற்காகவாவது சாணக்யா கருத்து கணிப்புக்கு
பாராட்டு தெரிவிக்கலாம்.

நாடகமே உலகம்… நாளை வெளிவரப் போவதை யார் அறிவார்…!!!

.

.

—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to பரபரப்பான க்ளைமேக்சை தரும் ஒரு வித்தியாசமான எக்சிட் போல் முடிவு …..

 1. Surya சொல்கிறார்:

  “பாஜக 5 இடங்களிலும்…” – Joke of the century! 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  இதையும் அப்போ கேட்டுவைத்தேன். இன்னொரு கருத்துக்கணிப்பு இந்தியா நியூஸ்-ஜன் கீ பாத், 110-130 திமுகவுக்கு, 102-123 அதிமுகவுக்கு என்று சொல்லியுள்ளது. இந்த இரண்டு பேரும்தான் இழுபறி ஆனாலும், திமுக நூலிழையில் முந்துகிறது என்று சொல்கிறார்கள்.

  ஜன் கி பாத் சொல்லும் காரணங்கள், 1. நகர்ப்புறங்களில் திமுக பெரும் வெற்றி பெறும் 2. கிராமப் புரங்களில் அதிமுகவை நோக்கி அதிகம் பேர் செல்கின்றனர் 3. 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள் பெரும்பான்மையினர், நாம் தமிழருக்கும் சிலர் கமலஹாசனுக்கும் வாக்களித்துள்ளனர். கிராமப்புறப் பெண்கள் அதிமுக சார்பாக வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் 8.5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும். 4. சிறுபான்மையினர் பெரும்பாலும் திமுகவுக்கே வாக்களித்துள்ளதால், திமுக வெற்றி பெறும் தொகுதிகளில் பெருத்த வித்தியாசத்திலும், தோல்வியுறுக் தொகுதிகளில் குறைந்த பட்ச வாக்கிலும் தோல்வியடைவார்கள். மொத்த வாக்குகளில் அதிகம் திமுகவுக்கும், அதிமுகவுக்கு குறைவாகவும், ஆனால் சீட் எண்ணிக்கையில் ஓரளவு சரிசமமாகவும் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் வரும். ஜன் கீ பாத்தும், சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும், தோல்வியடையும் இடங்களில் நூலிழையில் தோல்வியுறும் என்றும் திமுக கூட்டணி (திமுக அல்ல) சில இடங்களில் 3வது இடத்தை நோக்கிச் செல்லும் என்றும் சொல்கிறார்.

  சிறுபான்மையினர், அதிலும் கிறிஸ்துவர்கள், பாஜகவைப் பிடிக்காமல் (அதன் காரணம் Fake NGOs) , மிக மிக அதிக அளவில் திமுகவுக்கு வாக்களித்துள்ளதால், திமுக, நான் எதிர்பார்க்கும் 150+ ஐவிட மிக அதிகமாக வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ஜன் கி பாத் – analysis நன்றாக இருக்கிறது.
   சொல்லும் காரணங்கள் எல்லாமே ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான்.
   இந்த அளவிற்கு அவர்கள் அனலைஸ் பண்ணியது
   பெரிய விஷயம். அவர்களின் எண்ணிக்கை
   பலிக்கிறதோ இல்லையோ – ஒரு நியாயமான அலசல்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  இன்னொரு முக்கியமான பாயிண்டை நாம consider பண்ணணும். தமிழக முதல்வர்களாக, முக்கிய சாதியைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. தமிழர்கள் மனதில் ஊறியிருக்கும் சாதீய எண்ணம்தான் இதற்குக் காரணம். மைனாரிட்டி சமூகத் தலைவர்களை மட்டுமே தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது 50 வருடங்களுக்கு மேலானது. நாம் எடப்பாடி, ஸ்டாலின், ஓபிஎஸ் என்று பார்க்கிறோமே தவிர, இந்த சாதி என்ற விஷயத்தை எடுத்துக்கொள்ளவில்லை. எடப்பாடி கவுண்டர் சாதி என்பதால், கொங்குப் பகுதியில் ஜெ பெற்ற அதே வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வார் என்று நினைக்கவே முடியாது. ஜெ.வும், அந்த அந்தப் பகுதியில் அந்த அந்த பெரும்பான்மை சமூகத்தை முன்னிறுத்தினாலும், அவர்கள் மற்ற சமூகத்தை அதிகாரம் பண்ணமுடியாது என்ற நம்பிக்கையை விளைத்திருந்தார். இப்போ எடப்பாடி அவர்கள் முன்னிலையில் இருக்கும்போது, மற்ற சாதி மக்கள் (அதாவது கொங்கு கவுண்டர்கள் தங்களை டாமினேட் செய்கிறார்கள் என்று நினைப்பவர்கள்), வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சியான திமுக பக்கம் போகவே நிறைய வாய்ப்பு இருக்கிறது.

  நான் திமுக மிகப் பெரும் வெற்றி பெறும், அது ஸ்டாலினுக்கானது அல்ல என்று நம்புகிறேன்.

  நாளை தேர்தல் முடிவுகள் வரும் நேரம். பார்ப்போம் என்னுடைய, தமிழகத்தைப் பற்றியதான அரசியல் அறிவு எந்த அளவிற்கு இருக்கிறது என்று புரிந்துகொள்ள.

 4. bandhu சொல்கிறார்:

  பாண்டே ஒருவர்தான் சரியாக கண்டித்திருக்கிறார் போல இருக்கிறது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.