Exit poll முடிவுகள் – சீமான் சூடான பேட்டி ….

……………………….

seeman

Exit poll முடிவுகள் பற்றி சீமான் அவர்களிடம்
கேட்கப்பட்டபோது, அவர் கொடுத்த சூடான பேட்டி கீழே –

சீமான் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றில்
நமக்கும் உடன்பாடு உண்டு ….


அவை எவை எவை – பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே…

வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

…………

………….

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to Exit poll முடிவுகள் – சீமான் சூடான பேட்டி ….

  1. புதியவன் சொல்கிறார்:

    1. வாக்குக்குப் பணம் கொடுப்பது, வாங்குவது – தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதை எப்போது, தன் வீட்டுப் பெண்களை வைத்துச் சம்பாதிப்பதற்குச் சமம் என்று மக்கள் கருதுகிறார்களோ அப்போதுதான் அதற்கு விடிவுகாலம் ஏற்படும். தேர்தல் வாக்குறுதியில் சொல்கின்ற இலவசப் பொருட்களை வாங்குவதைக் குறை சொல்லமுடியாது (யாருக்குப் போய்ச்சேர வேண்டுமோ அவர்கள் வாங்கினால்)

    2. கருத்துக் கணிப்பு – ஓரளவு இதனை கணித்துவிடலாம். ஆனால் தமிழகத்தில், கேட்பவர்களுக்கு ஏற்றபடி நிறைய வாக்காளர்கள் சொல்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அதனால்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டுவிடுகிறது. மக்கள் மனதில், இந்தக் கட்சிதான் வெற்றி பெறும் என்பதைத் திணிக்க நிறைய பணம் செலவழித்திருக்கிறார்கள், தொலைக்காட்சிகளும் பணத்தை வாங்கிக்கொண்டோ இல்லை அதிகாரத்துக்குப் பயந்துகொண்டோ உண்மையைச் சொல்வதில்லை. They are mouthpiece of certain parties, religions என்பது என் எண்ணம், including Thanthi, Murasu, Vikatan etc..

    3. வாக்கு இயந்திரத்தில் தவறு – இதை நான் நம்புவதில்லை. சீமான் சொல்லிய குற்றச்சாட்டுகளைப்போல பலவற்றை வாக்குச் சீட்டுகள் இருந்தபோது திமுக செய்திருக்கிறது. அரசு அதிகாரிகள் வாக்குச்சீட்டில் ஒரு கட்சிக்கு முத்திரைகள் குத்தினதும், கள்ள ஓட்டுப்பெட்டி என்று பலர் கதறினதும் திமுகவின் வரலாறு.

    4. இருக்கும் டெக்னாலஜியில் எப்படி தவறுகளைக் களைவது என்றுதான் நாம் பார்க்கவேண்டும். அமெரிக்காவில் வாக்குச்சீட்டுதானே என்றெல்லாம் புலம்புவதில் அர்த்தமில்லை, அமெரிக்காவில் தமிழர்கள் மாதிரி பிச்சையெடுத்து அரசியல் கட்சிகளிடம் மானத்தை விற்று வாக்களிக்கிறார்களா? அமெரிக்காவில் சட்டத்தைக் கடைபிடிக்காத மக்கள் உண்டா? நமக்குச் சாதகம்னா அமெரிக்காவை உதாரணம் காட்டுவதும், பாதகம் என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நேர்மையா? வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்றால், வாய்ப்பு இருக்கிறது என்றால், காங்கிரஸ் தனது அதிகாரத்தை விட்டுக்கொடுத்திருக்குமா? ஊழலைப் பற்றி கவலைப்படாமல், இந்தியாவை விற்று, பொம்மை ஆட்சி நடந்த காலம் அது. பாஜகவும் அப்படிச் செய்ய முடிந்தால் 38 பாராளுமன்ற உறுப்பினர்களை விட்டுக்கொடுத்திருப்பார்களா?

    சீமான் மேற்கொண்டிருப்பது ஒரு கொள்கை. அதனை இதுவரை அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. இப்படியே தனியாக தன் கொள்கைகளை மட்டும் முழக்கமிட்டால் நிச்சயம் ‘நாம் தமிழர்’ கட்சி தனித்துத் தெரியும். சீமான் போலப் பேசுவதற்கு மற்ற கட்சிகளில் ஆட்கள் இல்லை. காமெடியன் கோவாலசாமி உட்பட. அதனால் சீமான் மனம் தளரக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் எப்போதும் புதிதாக வருபவர்கள், தமிழக மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கணும், ஆரம்பத்தில் விஜயகாந்த் இருந்ததைப்போல.

    நான் எப்போதும் இங்கு எழுதிவந்துள்ளதைப் போல, திமுக பெரிய அளவில் வெற்றி பெறும் (150+) என்றே நம்புகிறேன். இதற்கு கிறிஸ்துவர்கள் வாக்கு பெரிய காரணம், அதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் வாக்கு. காங்கிரஸ், ராகுல், கிறிஸ்துவ கட்சியாகத்தான் தென் தமிழகத்தில் அடையாளம் காணப்படுகிறது. 15 சத வாக்குகள் இதன் மூலம் பெறுவதால்தான் திமுக பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று நான் கணித்தேன். பார்ப்போம், முடிவு எப்படி வருகின்றது என்று.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தேர்தல் கமிஷன் சரிவரச் செயல்படுவதில்லை
    என்று குறை சொல்வதில் நியாயம் இருக்கிறது.

    வசதி படைத்த இரண்டு கட்சிகளும் பணத்தை
    தண்ணீர் போல் செலவழிக்கின்றன. அவற்றின்
    செலவு வகையறாக்களை தேர்தல் கமிஷனால்
    கண்காணிக்க முடியாதா என்ன…?

    அதே போல், வாக்காளர்களுக்கு பணம்
    கொடுப்பதும்…. தேர்தல் கமிஷனுக்கு தெரிந்தே
    நடக்கும் அசிங்கங்கள்.. அவலங்கள்…

    எங்கோ அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும்
    நடக்கும் தேர்தல்கள் முடிந்தால் தான் தமிழக
    ஓட்டுக்களை எண்ண முடியும் என்பது வடிகட்டிய
    அபத்தம்…. முட்டாள்தனம். அந்த மாநிலங்களில்
    நடக்கும் தேர்தல்களுக்கும், தமிழக அரசியலுக்கும்
    என்ன சம்பந்தம்….

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கிட்டத்தட்ட
    ஒரு மாதம் தள்ளிப்போட்டு, அரசின் செயல்களை
    முற்றிலுமாக முடக்கிப் போட்டு விட்டது
    தேர்தல் கமிஷன். தமிழக முடிவுகள் வங்காளத்தையோ,
    அஸ்ஸாமையோ பாதிக்கும் என்று நினைப்பதே
    படுமுட்டாள்தனம்.

    அதேபோல் வங்காளத்தில் மாநில சட்டமன்ற
    தேர்தல்களை 8 பகுதிகளாக பிரித்து நடத்தியது –
    சகிக்கவே முடியாத ஒரு கொடுமை…
    கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு
    வன்முறைகளும், சட்டமீறல்களும் தொடர்ந்துகொண்டே
    இருந்தன. இதன் பின்னணியில் யார் இருந்தது…?

    மறைந்த டி.என்.சேஷனுடன் இந்திய தேர்தல் கமிஷனின்
    மாண்பும் மறைந்து போனது… இப்போது இருப்பது
    அரசின் இன்னொரு அங்கம் – அவ்வளவே.

    சீமான் குறைப்பட்டுக் கொள்வதில் நியாயம் நிறையவே
    இருக்கிறது.

    • புதியவன் சொல்கிறார்:

      இந்த பாயின்டை விட்டுவிட்டேன். ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை என்பது அபத்தம். பலகட்டத் தேர்தல் என்பது இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. அதுபற்றி எனக்குப் பெரிதான கருத்து இல்லை. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் பல் பிடுங்கப்பட்ட பாம்புதான். இந்த இடத்தில் டி என் சேஷன் மக்களின் பலத்த ஆதரவைப் பெற்றிருந்தார் என்பதும், ஒரு அரசு அதிகாரியை இத்தனை வருடங்கள் நம் நினைவில் இருக்கச் செய்திருக்கிறார் என்பதும் அவரின் சாதனைதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.