………………….
அனைத்து தேர்தல் கணிப்புகளும்(exit polls) கிட்டத்தட்ட
ஒரே கருத்தை தான் சொல்கின்றன….
எண்ணிக்கையில் சிறிது வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.
ஆனால், தனிப்பட்ட மெஜாரிடியுடன் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது….
எனவே அடுத்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக
பொறுப்பேற்கவிருக்கும் –
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது அட்வான்ஸ்
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருக என்று திரு.ஸ்டாலின்
அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
.
—————————————————————————————————
ஒட்டு மொத்த மீடியாக்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் , இது போன்ற செய்திகளை எளிதாக பரப்ப முடியும். போன சட்ட மன்ற தேர்தலிலும் இவர்கள் இதே கூத்தைத்தான் கடைசி வரை அரங்கேற்றினார்கள். தினமலரை கூட விலை கொடுத்து வாங்கி, திமுக தான் ஜெயிக்கும் என்ற கருது கணிப்பை வெளியிட்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு.
அதனால் இது போன்ற கருது கணிப்புகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது. இது அவர்களின் மீடியா பலத்தை காட்டும் இடம். சிறிது நாட்கள் பொறுத்திருப்போம்.
விவேகன்,
திமுக ஆட்சியைப் பிடிக்கிறது என்பதில்
எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல முறையில்
மக்கள் விரும்பும் விதமாகத் தான் ஆட்சி புரிந்தார்.
ஆனாலும் கூட, நல்ல நிர்வாகம் என்பது மட்டுமே
தேர்தல் முடிவுகளை நிச்சயிப்பதில்லை;
ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு,
இறுதியான எண்ணிக்கைகள் கிடைத்த பிறகு
மே-2-ந்தேதியன்று, நாம் விரிவாக விவாதிக்கலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்