“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்”- ஆதித்யநாத் கருத்தை குறிப்பிட்டு சித்தார்த் ட்வீட்
Published :27,Apr 2021 09:43 PM
http://www.puthiyathalaimurai.com/newsview/100606/Actor-Siddharth-Tweets-
Any-false-claims-of-being-a-decent-human-being-or-a-holy-man-or-a-leader-
will-face-one-tight-slap-and-this-comes-after-UP-Chief-Minister-Yogi-
Adityanath-says-Hospitals-making-false-oxygen-shortage-claims-will-face-action
“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ட்வீட்.
வழக்கக்காம திரை பிரபலங்கள் அவரது ரீல் வாழ்க்கையில் பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்வது இல்லை. ஆனால் அதில் விதிவிலக்காக இருக்கிறார் நடிகர் சித்தார்த். “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லி இருந்தார். அவர் சொன்னதை ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களில் அந்த மாநிலத்தில் 394610 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————–
பின் குறிப்பு –
மேற்படி இடுகையை வெளியிடும் சமயத்தில், இன்றைய உ.பி.செய்திகளின் update பார்த்தேன்….. கீழே –
இன்று வெளியாகியிருக்கும் உ.பி.செய்திகள் –
– மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆக்ராவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் நேற்று எட்டு கொரோனா நோயாளிகள்உயிரிழந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை ஊழியர் தனு சதுர்வேதி தெரிவித்தார்.
– ஆக்ரா நகரில் உள்ள மருத்துவமனைகளில், “படுக்கை வசதி இல்லை, என்று வளாகத்திற்கு வெளியே நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இன்னும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே ஏற்பாடு செய்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அதுபோன்று பிரபா மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்களிடம் வெற்று சிலிண்டர் உருளையும், ஒரு கடிதத்தையும் கொடுத்து வருகின்றனர். அதில், ”மருத்துவமனையில் 100 நோயாளிகள் இருக்கின்றனர். ஆனால், போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை. அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கபடாவிட்டால், உயிரிழந்துவிடுவார்கள்” என எழுதப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், உத்தரபிரதேசமாநிலம் அமேதியில் ட்விட்டர் மூலமாக தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என உதவி கேட்ட இளைஞர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….
அதற்கும் பிறகு கடைசியான என் பின் குறிப்பு –
மேற்படி செய்திகளை வெளியிட்டதால், யோகிஜி கிரிமினல் வழக்கு போட்டு விடுவாரோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டே இருக்கிறேன்….
எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே….!!!
———————————————————————————————————
…மேற்படி செய்திகளை வெளியிட்டதால், யோகிஜி கிரிமினல் வழக்கு போட்டு விடுவாரோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டே இருக்கிறேன்….
சொத்தும் பரிமுதல் செய்யப்போறாங்க ஐயா! ஜாக்கிரதை!!
அஜீஸ்,
உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி….!!!
நல்லவேளையாக, என் மறைவிற்குப் பிறகு, குடும்பம்
அலையக்கூடாதே என்பதற்காக, என் ஒரே ஃப்ளாட்டை
ஏற்கெனவே என் மகள் பெயரில் பதிவு செய்து விட்டேன்.
வங்கி சேமிப்புகளை மனைவி கணக்கிலேயே
வைத்திருக்கிறேன்.
என் பர்சனல் சேவிங்க்ஸ் கணக்கில் 30-40 ஆயிரம்
எப்போதும் இருக்கும். யோகியார் அதிகபட்சம்
அதைத்தான் பிடுங்கிக் கொள்ள முடியும்….
ஆனால் – எனக்குத் துணையாக எப்போதும்
வாசக நண்பர்ளாகிய நீங்களெல்லாம் இருக்கிறீர்களே…
மனத்தெம்புக்கு அதைவிட வேறு என்ன பலம் தேவை…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
“இன்னும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே ஏற்பாடு செய்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
நல்ல வேளை , நோயாளிகளே, தங்களுக்கு தேவையான டாக்டர்களையும் தங்களுடன் அழைத்து வர வேண்டும் என்று கூறாமல் விட்டார்களே
I am not pro BJP. Let us see if this real hero speaks the same if something of this happens in TN tomorrow. Knowing DMK, if he speaks, he is a real hero.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இன்று கூறி இருப்பது –
——————————————————
ஆக்சிஜன் பற்றாக்குறை , தடுப்பூசி தட்டுப்பாடு மருத்துவர்கள், படுக்கைகள் பற்றாக்குறை என்று மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து மாநில காவல் டிஜிபிகளும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.