………..
” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும்
தவறில்லை “….நீதிமன்றம்
” தமிழகத்தில் 2-ம் அலை கொரோனா பரவலுக்கு தேர்தல்
கமிஷனும், பொறுப்பற்ற அரசியல் கட்சிகளுமே
முக்கிய காரணம்…”
“பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்று
கிரகத்தில் இருந்தீர்களா? –
- என்று தேர்தல் கமிஷனுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது
நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு
உண்மை… இந்தப் பரவலுக்கு காரணமானவர்கள் மீது
கண்டனம் செலுத்துவதோடு நில்லாமல் – கடுமையான
தண்டனையும் கொடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளைப்பற்றி,
வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்தி கீழே –
—————————————————————
`தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!’
- உயர் நீதிமன்றம் கண்டனம்
தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
குறித்த ஒரு வழக்கு நேற்றூ – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,
வாக்கு எண்ணிக்கைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிமன்றம்,
“தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு
தேர்தல் ஆணையமே காரணம்” என காட்டமாக தெரிவித்தது.
தொடர்ந்து, `
`அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரசாரம்
செய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம்
எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில்
வாங்கவில்லை.
பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்று
கிரகத்தில் இருந்தீர்களா? தேர்தல் ஆணையம் மீது
கொலை குற்றமே சுமத்தலாம்.
கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால்,
வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும். வாக்கு
எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்” என்றது காட்டமாக.
இந்நிலையில் தற்போது வரும் மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில்
முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தமிழக
அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. “வாக்கு எண்ணிக்கையின்
போது கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த பரிந்துரைகளை வழங்குகிறோம்.
மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை
ஏப்.28-ல் வெளியிட வேண்டும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை
மட்டும் அனுமதிக்கலாம்” என்றது நீதிமன்றம்.
——————————————————————————————–
தேர்தல் கமிஷன் ஒருவேளை இந்த மாதிரி சிந்தித்து, அதற்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் (அவர்களுக்கும் சில நடவடிக்கைகளுக்கு அரசின் அனுமதி தேவை என்று நினைக்கிறேன்) நீதிமன்றத்தை அணுகியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கிறேன். (ப.சிதம்பரம் போன்ற தேர்தல் வழக்குகள் என் கண்ணில் வந்துபோகின்றன) ஏற்கனவே மம்தா, தேர்தல் கமிஷன் மோடி அமித்ஷா சொல்வதை மட்டும் கேட்டுச் செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். பாஜக, தேர்தல் தோல்வியை எதிர்பார்ப்பதால், தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சிக்கிறது, சர்வாதிகாரமாக மக்களின் வாக்கைப் பெறாமல் குறுக்கு வழிகளில் தங்கள் மீதான குற்றச்சாட்டு மக்களிடம் போய்ச்சேரக் கூடாது என்பதற்காக, தேர்தல் கமிஷனை, கொரோனாவை ஒரு சாக்காக வைத்துக்கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது என்று எழுதியிருப்பார்கள், விவாதித்திருப்பார்கள். விமர்சனமும் அதைப்பற்றி ஒரு பதிவு வெளியிட்டிருந்தால் நான் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன்.
முழுமையாக தேர்தல் பரப்புரைகளை இல்லாமல் செய்து, தூரதர்ஷனில் மட்டும் பல்வேறு ஸ்லாட்டுகள் கொடுத்து பரப்புரை செய்யவைத்திருக்கலாம். இப்போதும் மே மாதம் முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை announce செய்து, ஐந்து பேர்களுக்கு மேல் மக்கள் கூடக்கூடாது, பதவியேற்பும் (தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில்) காணொளிலதான் நடைபெறும் என்று சொல்லிவிடலாம்.
கரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடைகோறிய வழக்கில் இதே உயர்நீதிமன்றம் “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் தடை விதிக்க மறுத்ததை” நாம் மறந்துவிடுகின்றோம். நமது மறதியே அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருந்தது. இப்போது அது உயர்நீதிமன்றத்துக்கும் பொருந்தும் பொல.
இந்த வழக்கு வந்தபோது அதே நீதிபதிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களோ?
அப்படியே கொலைக்குற்றமும் போட்டுவிடுவோமா?
இந்த நீதி மன்ற நடவடிக்கைகளும் பெரும்பாலும் கிளைமாக்ஸில் வரும் போலீஸ் போல இருக்கிறது. இத்தனை நாள் இவர்கள் எல்லாம் வேறு நாட்டிலோ / வேறு கிரகத்திலோ / அண்டர் கிரௌண்டிலோ இருந்தார்களா? ஒவ்வொரு தேர்தல் கூட்டம் நடக்கும்போதும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஒன்றும் ஆகவில்லை என்றால் சும்மா விடுவது. இல்லையென்றால் ‘அறச்சீற்றம்’!
இதே தான் ஸ்டெரிலைட் விஷயத்திலும். ஒரு பக்கம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரிப்பது எளிது என்று பல என்ஜினீயர்கள் சொல்லிக்கொண்டே இருக்க இதையே சாக்காக வைத்து மூடியிருந்த ஆலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் அனுமதி கொடுப்பது.. ஆக்ஸிஜன் இல்லை என்பவர்களுக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம் என்று பொங்குவது.. அப்படி ஒருவர் மாட்டினால் அந்த வழக்கு எத்தனை வருடம் போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த யாரும் சொல்லத்துணியாத கருத்து..
யாருக்கும் மனசாட்சி இல்லை!