…….
……………
மாநில அரசுகளை விட, வெளிநாடுகளுக்கு விற்கப்படும்
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை குறைவு….????
பின்னணியில் என்ன மர்மம்…?
இந்தியாவில், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் விலையிலும்,
தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் விலையிலும்
விற்கப்படும் அதே கோவிஷீல்ட் தடுப்பூசியை பூனாவில்
உள்ள அதன் உற்பத்தியாளர்கள் –
ஐரோப்பிய நாடுகளுக்கு – ரூ.160 முதல் ரூ. 260 வரை
இங்கிலாந்துக்கு – ரூ. 225
அமெரிக்கா, வங்கதேசம் நாடுகளுக்கு – ரூ.300
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு – ரூ. 392
பிரேசில் நாட்டிற்கு – ரூ.235
என்கிற விலைகளுக்கு விற்பனை / ஏற்றுமதி செய்திருப்பதாக
தகவல் வெளியாகி இருக்கிறது….
இந்திய மாநிலங்களை விட, இந்திய மக்களை விட,
இந்த வெளிநாடுகள் எந்த விதத்தில் குறைந்த விலையில்
முன்னுரிமை பெறுகின்றன…?
வெளிநாடுகளுக்கு குறைந்த விலையிலும், இந்தியாவில்
அனைத்து மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும்
அதிக விலையிலும் விற்க –
இந்த நிறுவனத்திற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது…?
இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்…?
இந்த மருத்து உற்பத்தி தொழிற்சாலையில், இதுவரை
எத்தனை டோஸ்’கள் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி
செய்யப்பட்டிருக்கிறது…?
அதில் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு ஏற்றுமதி
செய்யப்பட்டிருக்கிறது…? என்ன விலைக்கு….?
இதுவரை இந்தியாவிற்குள் எத்தனை டோஸ்’கள்
விற்கப்பட்டிருக்கின்றன ? மத்திய அரசுக்கு எவ்வளவு ?
மாநில அரசுகளுக்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு
எவ்வளவு…?
இந்த விவரங்கள் அனைத்தும், விவரமாக உடனடியாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டாலொழிய –
“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி”
என்பது போல் –
“உலகத்திலேயே இளிச்சவாயர்கள் இந்திய மக்கள் தான்”
-என்கிற உணர்வும்,
- இதன் பின்னணியில் பெரும் ஊழல்களும், மர்மங்களும்
மறைந்திருப்பதாகவும் மக்களுக்குத் தோன்றுவதை
தவிர்க்க முடியாது….
.
——————————————————————————————–
தடுப்பூசிக்கு மூன்று விதமான விலை ஏன் ?
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
இன்றைய செய்தி –
கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது.
இந்த பிரச்னைகள் குறித்து, தானாக முன்வந்து,
உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்,
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்
உத்தரவிட்டதாவது:
தேசிய நெருக்கடியான விவகாரங்களில், நாங்கள்
வெறும் பார்வையாளராக இருக்க மாட்டோம்.
அவசியமான நேரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிடும்.
கொரோனா தடுப்பூசிக்கு மூன்று விதமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை,
மத்திய அரசு விளக்க வேண்டும். அதேபோல்,
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள்
வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள்
பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2757796
காங்கிரஸ் அரசு இருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களின் என் கருத்து ஒன்றே. அரசுக்கான விலையில் சிறிது சலுகை இருக்கலாம், தனியாருக்கான விலை பொருட்களின் MRP போல லாபத்துடன் கூடியதாக இருக்கலாம். வெளிநாட்டுக்கான விலை, அந்நியச் செலாவணி மற்றும் வரிகள் தவிர்ப்பதால் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்தியப் பொருட்கள் சிலவற்றை, இந்திய விலையைவிடக் குறைவாக நான் வெளிநாட்டில் இருந்தபோது வாங்கியிருக்கிறேன். Strategy காரணமாகத்தான் இருக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
உச்ச நீதி மன்றத்தின் சரமாரி கேள்விகளை வரவேற்கிறேன். திரைமறைவு விஷயங்களை அது அம்பலப்படுத்தாலாம். அதே சமயம், அடுத்தவர்களைப் பற்றிக் கேள்வி கேட்பதில் ரெடியாக உள்ள சிலர் (நான் நீதித்துறையைச் சொல்லவில்லை. அவர்கள் மிக நேர்மையானவர்கள். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்படுபவர்கள்) தங்களிடம் வரும் பிரச்சனைகளை எப்படி ஆறி அவலாகி பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்று முனைந்து செயல்படுவது ஆச்சர்யம்தான்.
புதியவன்,
மிக சாமர்த்தியமாக சமாளிக்கப் பார்க்கிறீர்கள்… ஆனால்….!!!
மாநில அரசுகளும் தனியார் தான் என்று சொல்ல வருகிறீர்களா…?
மத்திய அரசுக்கும் – மாநில அரசுகளுக்கும் விலையில்
வேறுபாடு ஏன் என்பது தான் நான் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி…
அதற்கு உங்களிடம் பதில் இல்லை;
ஆனால், மீண்டும் மீண்டும் மத்திய அரசின் கொள்கையை நியாயப்படுத்த
முயற்சி செய்கிறீர்கள்….!!!
அதில் உங்களுக்கு என்ன அக்கறை என்று தான் எனக்குப் புரியவில்லை….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
லேடஸ்ட் செய்தி –
சீரம் நிறுவனம் தலைவர் அதார் பூனவாலா
வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு
உள்ளதாவது:
கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கான
விலை ரூ.400ல் இருந்து ரூ.300 ஆக
குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு
வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம்
மிச்சப்படுத்தப்படுவதுடன், ஏராளமானோருக்கு
தடுப்பூசி கிடைக்க உதவும்….
———————————————————
“ரொம்ப சந்தோஷம்” – அதே 400 ரூபாய் விலை
தொடர்ந்திருந்தால் அந்த கோடிக்கணக்கான
பணம் யாருக்குப் போயிருக்கும்…?
கா.மை. சார்…
உங்க பாயிண்ட் எனக்குப் புரியவில்லை. எனக்கு Gas 10 ரூபாய்க்குக் கிடைக்கணும், ஆனால் இந்திய அரசு 800 ரூபாய் வாங்கிக் கொள்ளையடிக்கறாங்க, எனக்கு சரவணபவன் உணவு 1 ரூபாய்க்குத்தான் வேணும், ஆனால் அவங்க 200 ரூபாய்னு விலை நிர்ணயித்து கொள்ளையடிக்கறாங்க, சன் தொலைக்காட்சியின் திராபை நிகழ்ச்சியைப் பார்க்க அவங்கதான் எனக்கு மாசம் 500 ரூபாய் தரணும் ஆனால் அவங்க என்கிட்டயே சார்ஜ் பண்ணறாங்க…இந்த மாதிரி விருப்பத்துக்கு எல்லையே இல்லை.
அரசு என்ன செய்யணும் என்பது உங்கள் எண்ணம்? நான் ஹெல்மெட் போட்டுக்கொள்ள மாட்டேன், அரசின் எந்தச் சட்டத்தையும் லட்சியம் செய்ய மாட்டேன், ஆனால் அரசு எல்லாவற்றையும் இலவசமாக வழங்கணும் என்பது உங்க விருப்பமா?
தனியாருக்கு எதற்கு கோவிஷீல்ட்/கோவேக்சின் தடுப்பு மருந்து? 1 மாதத்துக்கு இட்லி சாப்பிட்டதற்கு மட்டுமே 1 கோடி ரூபாய் சார்ஜ் செய்யும் மருத்துவமனையை நாடுபவர்களுக்கும் தடுப்பூசி இலவசமா வழங்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா?
சீரம் இன்ஸ்டிடியூட் தங்கள் தடுப்பூசி விலை 300-400 ரூபாய் என்று நிர்ணயித்திருக்காங்க (சலுகை விலைல.. something like Ration) and for Private 600 Rs. இதை யார் வாங்கி மக்களுக்குக் கொடுப்பது என்பது பிரச்சனை என்றால், என் கருத்து, மாநில அரசுகள்தான் வாங்கி இலவசமாகவோ இல்லை அதன் மேல் லாபம் வைத்தோ மக்களுக்கு வழங்கவேண்டும். இது, யார் மத்தியில் ஆளுகிறார்கள் என்பதைப் பொறுத்து நான் சொல்லும் கருத்து இல்லை. 7 பேர் விடுதலையிலும் என் கருத்து, அரசைப் பொறுத்து மாறுவதில்லை. மத்திய அரசு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த guidelines கொடுத்தது. ஆனால் மாநில அரசுகள்தான் அதனை implement செய்கின்றன. உதாரணமா, தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கை என்று விஜய் படத்துக்காக சலுகை வழங்கியது, இப்போ ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்களுக்காக ஊரடங்கு இரவு 10 முதல் காலை 4 மணிக்கு என்று சொல்லியிருக்காங்க. முதல்ல தேர்தல் ரிசல்ட் அன்று ஊரடங்கு கிடையாது என்று சொன்னாங்க. இவற்றை எல்லாம் முடிவு செய்வது மாநில அரசு. நோய்த் தொற்று வரும்போது மத்திய அரசு இலவசமா தடுப்பூசிகளை வழங்கணும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?
என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கேன். முதல் தடுப்பூசி 250 ரூபாய் (போக்குவரத்துச் செலவைச் சேர்க்கலை. தனியார் மருத்துவமனை. இதில் தடுப்பூசிக்கான 150 ரூபாய். தனியார் மருத்துவமனைக்கு 100 ரூபாய் செர்வீஸ் சார்ஜ்) இரண்டாவது தடுப்பூசி, மாநகராட்சி போட்டதால், இலவசம் என்று. இப்போது மூலப்பொருட்கள், ஆராய்ச்சிக்கான பணம் என்று காரணங்கள் சொல்லி விலையை உயர்த்தியிருக்காங்க. கீழே உள்ள செய்தியையும் பாருங்க.
The other two vaccines that may be available over the next few months in India are from Pfizer and Johnson & Johnson, although neither company has applied for approval in India yet. Pfizer recently offered to supply its vaccines to India at a not-for-profit price, but only through the government.
This said, the prices aren’t yet clear. Since starting production, Pfizer has supplied vaccines to the US at $19.50 (Rs 1,462) per dose, to the UK for around £15 (Rs 1,500) per dose and to the EU at $12 (Rs 900) per dose.
There has yet been no indication of the price of the J&J vaccine, although its price is known to be $10 (Rs 750) in the US.
நீங்க இந்தச் செய்தி மூலமாக அறிந்துகொண்டது என்ன? இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு யாருக்கோ போகிறது என்று எந்த ஒரு செய்தியிலும் நான் பார்க்கவில்லை அதனால் இந்த விலை உயர்வில், பாஜக ஆதரவு எதிர்ப்பு என்ற நிலையில் எந்த அர்த்தத்தையும் நான் காணவில்லை. இந்த விலை உயர்வினால் இவருக்கு லாபம், விலை உயர்வின் பலனை இந்த நபருக்கு சீரம் இன்ஸ்டிடியூட் கொடுக்கிறது என்று ஏதேனும் செய்தி இருந்தால், தயவு செய்து அதனைப் பகிரவும். உங்களோடு சேர்ந்து நானும் எதிர்க்கத் தயார்.
புதியவன்,
நான் கேட்டது இரண்டே இரண்டு
சின்ன சின்ன கேள்விகள்….
1) தடுப்பூசி விலையில் – மத்திய அரசுக்கும்,
மாநில அரசுக்கும்- வேறுபாடு ஏன்…?
இரண்டும் அரசுகள் தானே…? ஒன்று அரசு,
மற்றொன்று தனியார் இல்லையே…?
இரண்டும் மக்களின் வரிப்பணம் தானே…?
————-
2) சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து,
பெருந்தொற்று (pandemic) வரும்போதெல்லாம்,
அதை கட்டுப்படுத்தும் பொறுப்பையும்,
நிதிச்சுமையையும் மத்திய அரசு தானே
ஏற்றிருந்தது…?
இப்போது அதை மாநில அரசுகளின் தலையில்
சுமத்துவது ஏன்…?
மேல் இரண்டைத் தவிர இப்போது 3-வதாக
ஒரு கேள்வி….
3) மாநில அரசுகளுக்கான விலையை
400-லிருந்து 300-ஆக குறைத்ததன் நிதி மதிப்பு –
மாநில அரசுகளின் மொத்த தேவை –
2 டோசுகள் -சுமார் 120 கோடி தடுப்பூசிகள்
என்று செய்தி வந்திருக்கிறது.
ஒரு தடுப்பூசிக்கு 100 ரூபாய் என்றால்,
120 கோடி தடுப்பூசிகளுக்கு –
12,000 (பன்னிரெண்டாயிரம்) கோடி ரூபாய்.
கடும் எதிர்ப்பு காரணமாக எரிச்சலோடு
குறைக்கப்பட்டிருக்கும் இந்த விலைக்குறைவு
இல்லையென்றால்- இந்த பன்னிரெண்டாயிரம் கோடி
ரூபாய் யாருக்குப் போயிருக்கும்….?
—————————————————————
பொது அக்கறையில் நான் இந்த கேள்விகளை
எழுப்பியதற்காக, 1 ரூபாய் சரவண பவன் இட்லி,
10 ரூபாய் LPG சிலிண்டர், சன்டிவி நிகழ்ச்சிகள்,
கட்டாய ஹெல்மெட் விவகாரம் என்று
எதையெல்லாமோ சொல்லி மிரட்டி –
சம்பந்தமே இல்லாத சாதங்களைக் கொண்டு
இந்த அப்பாவி முதியவனை மொத்து மொத்தென்று
மொத்துகிறீர்களே இது உங்களுக்கே நியாயமா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
1. Central Govt wants to control distribution of Vaccines, given the limited availability at the moment. State Govts want open market distribution. So Serum institute decides to allocate 50 percent to Central Govt at a price and for States at another price. Possibly Central Govt may be behind this.
2. நம்ம சௌகரியத்துக்கு, ‘சுதந்திர காலத்திலிருந்தே’ என்ற பாட்டை இங்க பாடலாம். மத்திய அரசு Covid சம்பந்தமாகக் கொடுத்த guidelinesஐ, மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி மாற்றிக்கொண்டன. நான் ஒரு சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். May be Central Govt wants to show to State Govts who is the boss, by using influence.
3. மாநில அரசுகளோ அல்லது மத்திய அரசோ, அல்லது தனியாரோ, இதற்கு முன்பு, ஒரு பொருளின் விலையை 40 ரூபாய் விலை ஏற்றி, பிறகு கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக 20 ரூபாய் மட்டும் விலை ஏற்றம் என்று (உதாரணம்தான்) சொல்லியிருக்காங்க. அதற்கு அர்த்தம், அழுத்தத்தின் காரணமாக லாபத்தில் ஒரு அளவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அந்த மாதிரி நேரங்களில், நான் எங்குமே, என்றுமே, வித்தியாசமான 20 ரூபாய் x consumption கொள்ளையடிக்கப்பட்டது என்று சொல்லிக் கேட்டதே இல்லை. இதற்கு மட்டும் அந்த மாதிரி கொள்ளையடித்தார்கள் என்று சொல்வது அர்த்தமில்லாதது, ஒரு தலைப்பட்சமானது.
நமக்குத் தேவையானவர்கள் விலை உயர்வு வைக்கும்போது அமைதியாக இருப்பதும், நமக்குப் பிடிக்காதவர்களை இதன் காரணமாக ஆவேசமாக எதிர்ப்பதும் தமிழகத்தில் சகஜம்தான்.
நீங்கள் இதற்கு பதிலாக மத்திய அரசு எது சொன்னாலும் அதை நம்ப கண்முடித்தனமா சப்போர்ட் பண்ணனும்- னு நேரடியா சொல்லி இருக்கலாம்!
மத்திய அரசிடம் மாநில அரசு பிச்சை எடுக்கும் போது, மாநில அரசுக்கு அதிக விலை ஏன்னு கொஞ்சம் தெளிவு பண்ணலாமே!
During national disaster period, companies should not try to make profit. Neither Hospital can make profit. Government can control it very easily if they want to. It is as simple as that.
Sir.. Central Govt, mask போடணும், 6 அடி இடைவெளி விடணும் என்று சொன்னது. இதனைச் செய்யாதவர்கள் அனைவரும் இந்த கொரோனா பரவலுக்கான காரணம். They don’t deserve any support from Govts, whether Central or State. That is it. This includes all who went to theatres, malls, election meetings during this period. இதுல விதிவிலக்குகளே இல்லை.
இப்பவும் கூட – அந்த 12,000 கோடி ரூபாயை
அப்படியே விட்டு விட்டீர்களே…!
பெரிய மனசு சார் உங்களுக்கு…
ஆமாம் ….விலையை குறைக்காமல் அப்படியே விட்டிருந்தால்,
அந்த 12,000 கோடி யாருக்கு சார் போயிருக்கும்….???
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… I have a feeling, Central Govt would have ordered in bulk at the 150 rs price (as known earlier). When it orders new lot, possibly the price would be same like states. Here my support is for Serum institute.
இப்போ சீரம் இன்ஸ்டிடியூட் 300 ரூபாய்னு குறைக்கலைனா, அந்த 12,000 கோடி (அல்லது இன்னு அதிகம்) அந்த இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிருக்கும். The institute will have P&L. They are free to decide the right price.
Still my stand is same. The institute based on it’s spending and profit, can put whatever is the right price. It is for the Govt to purchase this or whatever vaccine it chooses and distribute for end users thru Govt hospitals.
If you see reports, the institute is sending vaccines at a much lower price than current price to foreign countries, at a less agreed price.
இது மாதிரி, தனியார்கள் எல்லாரும் MRPயை 50 சதவிகிதமாவது குறைக்கணும் என்று நீங்க கேட்கணும், ஹோட்டல் முதல்கொண்டு. When கையேந்தி மற்றும் பல hotels 10 ரூபாய்க்கு சாப்பாடு போடும்போது எதற்கு மாறன் கம்பெனி சரவணபவன் 200 ரூபாய்க்கு விற்கணும், Mega TV 5 rsக்கு சேனல் கொடுக்கும்போது, இவங்க மட்டும் 22 ரூபாய்னு ஏன் சொல்லணும் என்றெல்லாம். இந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு திமுகவுக்குச் செல்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு absurdஓ, அதுமாதிரித்தான் தடுப்பூசிக்கான விலையும்னு நினைக்கிறேன்.
இதற்கு மூலப்பொருள் யார் வழங்குகிறார்கள், அமெரிக்காவுக்கு டிரம்ப் கடுமை காட்டி இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை அமெரிக்காவுக்குத் தரணும் என்று இதற்கு முன்பு வாங்கியது, சமீபத்துல பைடன் அரசு மூலப்பொருட்களைத் தடை செய்யக்கூடாது என்ற அழுத்தம் என பல செய்திகள், priceஐ எந்த எந்த factors influence செய்கின்றன என்பதும் புரியும்.
தவறான ஒரு முடிவை,
தவறு என்று தெரிந்தும்,
உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள்
என்பதால் ஆதரித்தீர்கள்…
ஈகோ காரணமாக
தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள்.
நீங்கள் இதில் பின்வாங்குவதில்லை என்று
தீர்மானித்து விட்டீர்கள்; உங்கள் ஆதரவு நிலை
நிச்சயமாக பூனாவாலாவுக்காக அல்ல
என்பதையும் நான் உணர்வேன்.
வெங்காயத்திற்கு, உருளைக்கிழங்குக்கு –
தட்டுப்பாடு வந்தாலே அரசு தலையிடுகிறது.
கொரோனா காலம் – கோடிக்கணக்கான
இந்திய மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கிறது.
மக்கள் தினமும் லட்சக்கணக்கில்
செத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகமே இந்தியாவை
பார்த்து பரிதாபப்படுகிறது… அத்தனை நாடுகளும்
இந்தியாவுக்கு உதவிசெய்ய முன் வருகின்றன…
இந்த படுமோசமான, படு-ஆபத்தான சமயத்தில்,
மிகுந்த அளவில் தடுப்பூசியை தயாரிப்பதிலும்,
அதை உரியமுறையில் விநியோகிப்பதிலும் – மத்திய
அரசுக்கு எந்தவிட கடமையோ, பொறுப்போ
இல்லையா…?
கொவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில்
தயாரிக்க அனுமதி கொடுத்தது யார் ….?
யாரிடம் அதற்கான அதிகாரம் இருக்கிறது…?
மற்றைய தயாரிப்பாளர்கள் யாரும் இதில்
ஈடுபட முடியாதபடி பார்த்துக் கொண்டது யார்…?
பெயருக்கு இன்னொரு உற்பத்தி நிறுவனம்….
அதில் ஏன் அதிகம் உற்பத்தி செய்ய அரசு
ஊக்குவிக்கவில்லை…? அங்கேயிருந்து ஏன்
கொள்முதல் செய்யப்படவில்லை…?
மோனோபோலியாக ஒரே ஒரு நிறுவனம் தான்
தயாரிக்கிறது. அது உற்பத்தி செய்யும் மொத்த
தடுப்பூசியையும் -உற்பத்தி விலையுடன்,
ஒரு நியாயமான லாப சதவீதத்தையும் சேர்த்து –
அரசே வாங்கிக்கொண்டு, அதை அனைத்து
மாநிலங்களுக்கும் உரிய முறையில்
பங்கீடு செய்வது தானே சரியான முறை…?
சரி – பூனாவாலா – அரசின் ஒப்புதலின்றி
தன் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயித்திருக்க
முடியுமா…? அவர் உத்தேசித்த / நிர்ணயித்த
விலையை அரசு அங்கீகரித்ததா இல்லையா…?
அங்கே உற்பத்தியாகும் தடுப்பூசியின்
உண்மையான அடக்க விலை என்னவென்பது
அரசுக்கு தெரியாதா…? தெரியாமலா 150 ரூபாய்
என்று விலை நிர்ணயித்தது…?
ஒரு தனிப்பட்ட நிறுவனம் மக்களை, மாநில
அரசுகளை – அவர்களின் பலவீனமான நிலையை
பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை லாபம் அடிப்பதை
வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருக்கத்தான் இங்கே அரசு எந்திரம் என்று ஒன்று
இருக்கிறதா…?
அரசின் அனுமதியின்றி கொவிஷீல்ட் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க முடியுமா…?
உள்நாட்டிலேயே பயங்கர பற்றாக்குறை இருக்கும்போது,
வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி…?
தடுக்கி விழுவதற்கெல்லாம் அறிக்கை விடுபவர்கள்
இந்த தடுப்பூசி விலை குறித்து ஏன் மௌனம்
சாதிக்கிறார்கள்…?
நீங்கள் தொடர்ந்து இந்த விஷயத்தில் விதண்டாவாதம்
செய்து வருவது – பொதுவாக உங்கள் மீதான
என் நம்பிக்கையை சிதைக்கிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sir… We see in two different angles. Only time will tell, who is correct. நாம் நம்புவதை, பிடிவாதமாக அதே கருத்தில் இருப்பது விதண்டாவாதமா?
ஸ்டெர்லைட் ஆலையைத் துவங்கியது, அதற்கு நல்ல மார்க்கெட் இருக்கு என்றதும், சைனாவிலிருந்து இம்போர்ட் செய்ய மருமகன் மூலமாக ஒரு கம்பெனி ஆரம்பிப்பது, பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டும் என்று அரசியல் போராட்டங்கள் நடத்துவது… என்று சொந்த நன்மைக்காகச் செயல்படுபவர்கள் போலவா நான் கருத்து சொல்கிறேன்? இந்த இடுகைக்கு என் கருத்தில் மாற்றம் இல்லை.
தனியார் நிறுவனம் தடுப்பூசி விலையை
நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதித்ததில்
எந்த தவறும் இல்லை என்று வாதிப்பவர்களின்
பார்வைக்கு -உச்சநீதிமன்றம் இன்று சொல்லி இருக்கிறது.
எது சரியென்று….
——————————-
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இன்று கூறி இருப்பது….
”மத்திய அரசுக்கு ஒரு விலையிலும்,
மாநில அரசுக்கு ஒரு விலையிலும் தடுப்பூசி
விற்பனை செய்யப்படுவது ஏன்?
ஏழை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி
கிடைக்கும் விதமாக தேசிய அளவிலான
பொதுத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
அதில், அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக
தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டும்.
கொரோனா தடுப்பூசி விலையை தனியார்
நிறுவனங்கள் நிர்ணயித்தால் சமநிலைத்தன்மை
இருக்காது. அதனால், மத்திய அரசே தடுப்பூசி
விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்”
……..
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்