கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின், இதைப்பற்றித்தான்
அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி …..
.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில்
(ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர்
பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில்
இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை
நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம்
தைரியமாகச் சொல்லிவிட்டு,
.
பிறகு நடைமுறையில் தேர்தல் செலவுகளை
சமாளிக்க முடியாமல் இவர்கள் மிகவும் திணறியதாகவும்,
சொத்து-பத்துகளை எல்லாம் விற்றும், எக்கச்சக்கமாக
கடன் வாங்கியும் செலவழித்திருக்கிறார்கள் என்றும்,
.
திமுக அரசு அமைத்தாலும், முக்கியமான, வளமான
பதவிகள் எதையும் பெறக்கூடிய அளவிற்கு கட்சியில்
இவர்கள் செல்வாக்கானவர்களோ, முக்கியஸ்தர்களோ அல்ல
என்றும் வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம்…
இழந்த சொத்துகளை எப்படி மீட்கப்போகிறோம் என்கிற
பெரும் கவலையில் இவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்றும்,
.
எனவே, இவர்களை எதிர்த்தரப்பினர்
வளைத்துப்போடுவது அப்படியொன்றும் கடினமான காரியம்
அல்லவென்றும் திமுகவிற்கு நெருக்கமான வாரம் இருமுறை
வெளிவரும் அரசியல் பத்திரிகையொன்று தெரிவித்திருக்கிறது….
.
ரிசல்ட் வரும்போது, மிக சௌகரியமான மெஜாரிடியுடன்
திமுக ஜெயித்தாலொழிய, இந்த மாதிரி பலவீனங்கள்
முடிவுகளை கவிழ்த்து விடக்கூடும் என்றும் அந்த கட்டுரை
கூறுகிறது.
.
இதையெல்லாம் அதிமுகவோ, பாஜகவோ – இன்னமும்
ஆராயாமலா இருக்கும்….? திமுக, அதிமுக ஆகிய இரண்டு முக்கிய
கட்சிகளுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இல்லையென்றால்….
தமிழகத்திலும் “ஆயா ராம்-கயா ராம்”கள் உருவாகக்கூடுமோ…?
.
யார் திமுக-வின் தினகரனாக ஆகக்கூடும்…..?
.
—————————————————————————————————
//வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம்… இழந்த சொத்துகளை எப்படி மீட்கப்போகிறோம் என்கிற பெரும் கவலையில் இவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்றும்//
இதில் அந்த திமுக பத்திரிகை எழுதியிருப்பது சரியான கண்ணோட்டத்தில் இல்லை.
பணமுள்ளவர்கள் திமுகவிலேயே இருப்பார் என்பதுபோலும், சாதாரண திமுக தொண்டன் (அதாவது திமுக பத்திரிகையின் கண்ணோட்டத்தில் பெரும் பணக்காரராக இல்லாதவர் பணம் கண்ட இடம் நோக்கி ஓடிவிடுவார்) எப்போதும் தனக்கு விலை வைப்பவரின் கட்சிக்குத் தாவிவிடுவார் என்று எழுதியது சாதாரணர்களுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுத்துவிடக் கூடாது என்று உள்நோக்கத்தோடு எழுதப்பட்டதாகத்தான் தோன்றுகிறது. நான் அப்படி நினைக்கவில்லை. திமுகவில் (அதிமுகவைவிட) இருப்பவர்கள் தங்கள் கொள்கைக்காகவோ இல்லை உள்ளூரில் தன் மதிப்புக்காக வழிவழியாக இருப்பவர்கள். அதற்காகத்தான் தேர்தலின்போது சீட் வாங்குகிறார்கள். அதனால் கட்சி மாறமாட்டார்கள். பதவி கிடைத்து பணத்தைச் சுருட்டிவைப்பவர்கள்தான் பயத்துக்காக கட்சி மாறுவார்கள். இதற்கு கரூர் திண்டுக்கல் பக்கம் தேடினாலே உதாரணம் கிடைக்கும். எளிய தொண்டன் (அல்லது எம்.எல்.ஏ/எம்.பியாக இருப்பவர்கள்) தங்கள் தன்மானத்துக்குச் சவால் வரும்போதுதான் கட்சி மீது கோபம் கொள்வான்.