150, 400, 600 – கொள்ளையடிக்கப்படும் பணம் – யாருக்குப் போகிறது…..?

Delhi-Covid-19-hospital

delhi covid

………

delhi-covid-28

……..

.

——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

6 Responses to 150, 400, 600 – கொள்ளையடிக்கப்படும் பணம் – யாருக்குப் போகிறது…..?

  1. புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… இந்த ஜெயரஞ்சனுக்கு வேற வேலையில்லை.இவருடைய சொந்த லாபத்துக்காக எதையாவது உளர வேண்டியது. பாஜக அரசைக் குறை சொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இந்த ஜெயரஞ்சனுக்கு. இதற்கு முன்னால் இந்தப் பொருளாதாரப் புளி என்ன செய்துகொண்டிருந்தது?

    1. அரசு தனியார் மருத்துவ மனையின் மூலமாக 250 ரூபாயில் தடுப்பூசி முதலில் 60+ பிறகு 45+ என்று வழங்கினார்கள். அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக வழங்கினார்கள்.
    2. தற்போது 18+க்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கின்றனர். இது Supply & Demandடை ஒட்டி நடந்த நடைமுறை.
    3. தமிழகத்தில் எதிர்கட்சிகளின் பரப்புரையால், முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆளே இல்லாமல் எவ்வளவு வீணாணது என்பதை இந்தப் பொருளாதாரப் புளி அறிந்தாலும் வாயைத் திறக்கமாட்டார். அவர் அஜெண்டா பாஜகவைப் பற்றிக் குறை சொல்வது. இல்லாவிட்டால் திமுகவிடமோ இல்லை பத்திரிகைகளிடமோ அவர் வியாபாரம் நடக்குமா?

    எனக்கு முதல் தடுப்பூசிக்கு 250 ரூபாய் ஆனது. இரண்டாவதை இலவசமாகப் போட்டுக்கொண்டேன்.

    நாம் சுலபமாக ‘கொள்ளையடிக்கும் பணம்’ என்று எழுதுகிறோம். இதில் நியாயம் இருக்கிறதா? மருந்தைத் தயாரிக்கும் கம்பெனி, மருந்துக்கு ஒரு விலை வைத்திருக்கிறார்கள். முதலில், அமெரிக்க மருந்துகளைத்தான் மக்கள் உபயோகிக்கணும் என்ற சுயநலத்தில் ஸ்டாலின், திருமா போன்ற அரசியல்வாதிகள் கோவேக்ஸின்/கோவிஷீல்ட் சரியில்லை என்று பரப்பினார்கள். பிறகு தாங்கள் மட்டும் திருட்டுத்தனமாகச் சென்று போட்டுக்கொண்டு பிறகு மக்களிடம் இப்போது போட்டுக்கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர். டாஸ்மாக் மூலமாக அரசு பணம், சாராய வியாபாரிகளுக்குச் செல்கிறதே, ஏன் அரசு அவர்களைப் பணக்காரர்களாக்க முயல்கிறது என்று இந்த ஜெயரஞ்சன் கேள்வி எழுப்புவாரா? அப்புறம் இவர், திமுகவிடமோ இல்லை பத்திரிகைகளிடமோ அவர் வியாபாரத்தை மேற்கொள்ளத்தான் முடியுமா?

    அரசை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா? இந்த ஜெயரஞ்சன் திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, அரசு சொன்ன நடைமுறைக்கு மாறாக மாஸ்க் அணியாமல் இத்தனைபேர் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்களே என்று சொன்னாரா? முதலில் இவர், அரசு சொன்னதைப் பின்பற்றினாரா? மக்கள் முககவசம் இல்லாமல் பொது இடங்களுக்கு வருவதையும், தேர்தல் பரப்புரைகளுக்குக் கூட்டமாகக் கூடுவதையும் பற்றி வாயைத் திறக்கத் தெரியாத இந்த ஜெயரஞ்சன், தன் சொந்த பிஸினெஸுக்காக எதையாவது பேசுவதை ஏன் சட்டை செய்யவேண்டும்? நாளைக்கே பாஜக, இவருக்கு காசு கொடுத்தால் தாளத்தை மாற்றிப் பேசும் நாக்கு வியாபாரி இந்த ஜெயரஞ்சன். அரசு சொன்ன நடைமுறைகளைச் சட்டை செய்யாதவர்களுக்கு தடுப்பூசி மாத்திரம் இலவசமாகத் தரவேண்டும் என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

    விளம்பரங்களுக்கு பெருத்த காசு வாங்கிக்கொண்டு, பிறகும் தொலைக்காட்சி சேனல்களைக் காசு கொடுத்துக் காட்டும் சன், விஜய் போன்ற பல குழுமங்களைப் பற்றி இவர்கள் பேசுவார்களா? தங்கள் பிஸினெஸ் என்று வரும்போது அதற்கு தனி லாஜிக், அரசு என்று வரும்போது கண்ணைமூடிக்கொண்டு பாஜகவை எதிர்ப்பது என்ற நடைமுறைகளைப் பின்பற்றும் கயவர்களைப் பற்றி நமக்கு என்ன கவலை எனப் பலர் பேசிக்கொள்கிறார்களே. நிற்க,

    வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகள் தங்கள் பிஸினெஸுக்காக இந்தியாவை நோக்கி வரப்போகிறது (வந்துவிட்டது) அவர்களுக்கு இங்குள்ள தடுப்பு மருந்து குறைந்த விலைக்குக் கொடுக்கப்படுவது கண்ணை உறுத்துகிறது. அதனால் இந்த ஜெயரஞ்சன்களைப் போல பலர் குரல் எழுப்புவார்கள்.

  2. புதியவன் சொல்கிறார்:

    Apart from above topic, தமிழ்நாட்டில்தான் தேவைக்கு மேல் (in a positive sense) மருத்துவமனைகள், படுக்கைகள் செவிலியர், என அனைத்தையும் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வட மாநிலங்கள் இவற்றில் நல்ல வளர்ச்சி, நம்மைப்போல் பெறவில்லை. எமெர்ஜென்சி என்று வரும்போது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு இந்திய அளவில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை எல்லோரும் recognize செய்யவேண்டும். கிராமம் வரை நம் மருத்துவக் கரங்கள் நீண்டிருக்கின்றன.

    ஒரு செய்தியில், குஜராத் 4000+க்கு 1 மருத்துவர், உத்திரப்பிரதேசம் 20,000+க்கு 1 மருத்துவர், மஹாராஷ்டிரா 4500+க்கு 1 மருத்துவர் என்ற நிலையில் இருக்கும்போது தமிழகம் மட்டும்தான் 500க்கு 1 மருத்துவர் என்ற நிலையில் இருக்கிறது எனப் படித்தேன் (இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). நம் கட்டமைப்பு, இந்திய அளவில் மிகச் சிறப்பானது. அதனால் நாம் மற்ற மாநிலங்களிலிருந்து கட்டமைப்புகளில் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் இல்லை. (என் பார்வையில் கர்நாடகா மாதிரி, அதிலும் பெங்களூர் மாதிரி நீர் நிலைகளை தமிழகத்தில், சென்னையில் பராமரிப்பதில்லை. ஆக்கிரமிப்புகள் அதிகம்)

    நம் அரசியல்வாதிகள் மட்டும் (வேறு யார்… இமாலய ஊழல் கட்சியின் தலைவர்கள்தான்) உருப்படியாக இருந்திருந்தால், மக்களுக்கு முழுமையாக இதன் பயன் போய்ச்சேர்ந்திருக்கும், இன்னும் மேன்மையை அடைந்திருப்போம். அந்த அரசியல்தலைவர்களுக்கே தாங்கள் செய்த தவறுகள் உறுத்துவதால்தான், தனியார் மருத்துவமனையை நாடி தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  3. Karthik சொல்கிறார்:

    Centeral govt policy is like monkey. everyday they change their stand.
    very poor thought process.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    இந்த விஷயத்தில் உங்கள் அணுகுமுறை சரியில்லை என்பது
    என் கருத்து.

    எதற்கெடுத்தாலும், எந்த விஷயம் பற்றி எழுதினாலும்,
    அதில் திமுக எதிர்ப்பை நுழைப்பது என்கிற பார்வையோடு
    நீங்கள் எழுதினால் – அதில் நடுநிலை இருக்காது, நியாயமும்
    இருக்காது, தெளிவும் இருக்காது.

    திமுக எதிர்ப்பு என்கிற ஒரே கோணத்தில் உங்கள் பார்வை
    செல்வதால், பாஜக அரசு செய்யும் தவறுகள் உங்கள்
    சிந்தனையின் பக்கமே செல்லவில்லை; கண்மூடித்தனமாக
    அவற்றை நியாயப்படுத்தப்படுத்தப் பார்க்கிறீர்கள் என்றே
    எனக்குத் தோன்றுகிறது….

    ஜெயரஞ்சன் – திமுகவாக இருந்தாலென்ன, கம்யூனிஸ்டாக
    இருந்தாலென்ன…? இங்கே நாம் எடுத்துக்கொண்ட விஷயம்
    ஜெயரஞ்சன் அல்ல …

    – மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முடிவுகள்.

    ஜெயரஞ்சனையும், திமுக-வையும் இந்த இடத்தில் குறை கூறுவதை
    தவிர்த்து விட்டு –

    அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை,
    விளக்கங்களை நீங்கள் தந்திருந்தால், அது உங்கள்
    பின்னூட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கும்.

    அமெரிக்கா, பிரிட்டன், ஏன் மிக மிக பணக்கார துபாய் உட்பட
    உலக நாடுகள் அனைத்தும், தங்கள் குடிமக்கள் அனைவருக்கும்
    இலவசமாக தடுப்பூசி போடும்போது, உலகுக்கே தடுப்பூசி
    தயாரித்துத் தரும் இந்தியா இத்தகைய ஒரு கொள்கை
    முடிவை எடுத்ததன் பின்னணி என்ன…?

    இதுநாள் வரை, பெருந்தொற்று எது வந்தபோதும், குடிமக்கள்
    அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பொறுப்பை
    மத்திய அரசு தானே ஏற்றிருந்தது….? இப்போது அது ஏன்
    அந்தச்சுமையை மாநில அரசுகளின் தலையில் ஏற்றுகிறது…?

    மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசி கொடுத்தபோதே,
    நஷ்டத்திற்கு யாரும் வியாபாரம் செய்ய முடியாது;
    எனவே, லாபத்தை குறைத்துக் கொண்டு, கொஞ்ச லாபத்திற்கு
    தடுப்பூசி மருந்தை கொடுத்தோம் என்று மருந்து தயாரிப்பு
    நிறுவனமே சொன்னது.

    150 ரூபாய்க்கு விற்றபோதே கொஞ்சம் லாபம் உண்டு என்றிருந்த
    நிலையில், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு அதை விற்க
    மத்திய அரசு எப்படி அனுமதி கொடுத்தது…? யாருடைய
    ஆதாயம் கருதி… ?

    அதுவும் மாநில அரசுகள் அத்தனையும்
    கொரானா பாதிப்பு காரணமாக படுமோசமான நிதிநெருக்கடியில்
    சிக்கித்தவிக்கும்போது…?

    மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் – இந்த விஷயத்தில்
    என்ன வித்தியாசம்…? விலையாக கொடுக்கப்படும் பணம்
    யாருடையது…? அதே மக்களின் பணம் தானே…?
    மக்கள் பணத்தை மாநில அரசுகளின் மூலம் சுருட்டிக்கொள்ள
    மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்படி அனுமதி
    அளிக்கப்பட்டது…?

    அதுவும் ஏகபோக தயாரிப்பாளர்களாக இருக்கும் ஒரு நிறுவனம்
    ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாய் என்றால், எத்தனை கோடி மக்கள்…?
    ஒவ்வொருவருக்கும் 2 டோஸ்கள்….
    அவர்கள் மூலம் அடையப்போவது எத்தனை கோடி லாபம்…?

    அந்த நிறுவனம் இப்படி கொள்ளை லாபம் அடிக்க மத்திய அரசு
    ஏன் அனுமதி கொடுக்கிறது…?

    இந்த மாதிரி கேள்விகளை எல்லாம், நீங்களும் எழுப்புவீர்கள்,
    விவாதிப்பீர்கள் என்று நான் நினைத்தது வீணாகி விட்டது குறித்து வருத்தப்படுகிறேன்.

    பாஜக எதைச்செய்தாலும் புதியவன் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பார் என்கிற உங்கள் பழைய இமேஜ் மீண்டும் உருவாக
    நீங்களே விரும்புவீர்களா…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      அமெரிக்கா, ஊரடங்குப் பிரச்சனையின்போது இத்தனை வேலை செய்பவர்கள் இருக்கும் கம்பெனிக்கு இவ்வளவு பணம் என்று மாதத்திற்குக் கொடுத்தது. வளர்ந்த நாடுகளை நாம் ஒப்பிட முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்தத் தடுப்பூசிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் உபயோகம். மீண்டும் இதனைப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன் (அதாவது வருடத்துக்கு ஒரு முறை என்பது போல, until one time தடுப்பூசி வரும்வரை).

      400,600 என்றெல்லாம் தடுப்பூசியின் விலை அதிகமாகாது என்று நான் நம்புகிறேன். இதனை ஜெயரஞ்சன், ‘கொள்ளையடிக்கும் பணம்’ என்று குறிப்பிட்டது மிக மிக அநாகரீகமானது. இந்தப் பிரச்சனையில் நம்முடைய பங்களிப்பும் இருக்கவேண்டும். அதாவது மாஸ்க் அணிவது, இடைவெளி பேணுவது போன்று. இதனையெல்லாம் அரசியல்தலைவர்கள் செய்யாதபோது கடும் விமர்சனங்கள் வராமல், தடுப்பூசிக்கு மட்டும் வேகமாக எதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்? இதனை பாஜக ஆதரவு என்று நினைக்கத் தேவையில்லை. ஜெயரஞ்சன் செய்வது திமுகவின் ஏவலினால் பாஜக எதிர்ப்பு.

      இதற்கு ஒரு வேறு ஒருவழி இருக்கிறது. மாஸ்க் இல்லாமல் அல்லது மாஸ்கை தொங்கப் போட்டுக்கொண்டு வெளியில் நடமாடுபவர்களுக்கு 1000-2000 ரூபாய் fine போட்டு, அதனை மாநிலங்கள் தடுப்பூசிக்கான பணத்துக்கு ஒரு வரவாக வைத்துக்கொள்ளலாம்.

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    மத்திய அரசின் முடிவு தவறானது என்று ஒப்புக்கொள்ள
    உங்களுக்கு விருப்பமில்லை என்பது புரிகிறது.

    இதற்கு மேல் வாதம் செய்ய நான் விரும்பவில்லை;

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.