ஜூ.வி.யில் ஸ்டாலினுக்கு குமுறல் கடிதம் …எழுதியவர் தயாநிதி மாறனா….?

joo.vee

லேடஸ்ட் ஜூனியர் விகடன் இதழில் –            

திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் என்கிற பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது….

ஆனால், இந்த கடிதத்தை எழுதியவர் அதன் பினாமி முதலாளியா என்கிற சந்தேகம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை…. ஏற்கெனவே கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் இவர் உண்டாக்கிய பல கலகங்கள் நினைவிற்கு வருகின்றன. 

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரசலை ஏற்படுத்தி, மதுரைதினகரன் அலுவலகத்தையும் அதில் பணிபுரிந்த 3 ஊழியர்களையும் எரித்த சம்பவத்தை இன்னமும் மறக்க முடியவில்லையே…!!! )          

கடிதத்தின் தொனி, தொண்டனின் குரலாகத் தெரியவில்லை; பங்கு கிடைக்காத பங்காளியின் வயிற்றெரிச்சல் குரலாகவே தெரிகிறது…!!!                               

ஜூவியில் வெளிவந்துள்ள கடிதத்திலிருந்து –

——————————————

அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடைக்கோடி தொண்டனின் கனிவான வணக்கம்.

1971 சட்டமன்றத் தேர்தலில் ல்தொடங்கிய உங்கள் அரசியல் பயணம் மிசா சிறைவாசம், இளைஞரணிப் பொறுப்பு என்று படிப்படியாக வளர்ந்து, இன்று கட்சியின் தலைவராக ஒரு மகத்தான சாதனை படைத்துள்ளீர்கள்.

தமிழகத்தில் மதவாத சக்திகளை வென்ற உங்கள் கூட்டணி வியூகங்களைக் கண்டு, அகில இந்திய கட்சிகளே வியந்து நிற்கிறார்கள். அதன் பலனாக, இன்னும் சில தினங்களில் தமிழக அரசுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும் உங்களுக்காக காத்திருக்கிறது. 70 வயதில் இந்த இலக்கை அடைந்திருக்கும்உங்களிடம் கழகத்தின் கடைக்கோடி தொண்டனாகநான் சொல்ல நினைக்கும் விஷயங்களை இந்தக்கடிதம் மூலம் சொல்கிறேன்.  காரணம், உங்களைச்சுற்றி நெருக்கமாக  வலம் வரும் யாரும் இதை எப்போதும் உங்களிடம்சொல்லப்போவதில்லை.

தலைவரே,

சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சரவைப்பட்டியல் என்றோரு பட்டியல் உலா வருகிறது.   அது வதந்தியான பட்டியல் தான் என்றாலும் கூட, அந்தப்பட்டியல் எங்களுக்கு பாடம் நடத்துகிறது.

பல்வேறு காலகட்டங்களில் கழகம் சந்தித்த சிக்கலான நேரங்களில் கழகம் நடத்திய போராட்டங்களின்போதும்,    எதிர்முகாமில் இருந்துகொண்டு பதவிசுகத்தை அடைந்தவர்களே இன்று நமது அமைச்சரவையிலும் இடம்பெறப் போகிறார்கள் என வதந்தியாக வரும் செய்திகள் கூட வேதனையாக இருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளாக உங்களோடு களத்தில் பயணித்தபலரும் இன்றும் அதே இடத்தில் நிற்கிறார்கள் என்பது தெரியுமா தலைவரே !

இளைஞரணியில் உங்களுக்கு பக்கபலமாக இருந்த நிர்வாகிகள் பலரும் இன்று உங்களைவிட்டு வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் போஸ், சாயல்குடி ராமர், ராஜபாளையம் அருள்மொழி,  புதுக்கோட்டை செந்தில், குத்தாலம் அன்பு,         திருவண்ணாமலை ஸ்ரீதர், செய்யாறு அன்பழகன், அன்னியூர் சிவா,   விழுப்புரம் ஜனகராஜ் என உங்களோடு 30 ஆண்டுகளுக்கு   முன்பாக புறப்பட்ட பலருக்கும் இதுவரை வாய்ப்பே வழங்கவில்லையே …

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுக்கு நம்பிக்கையாக இருந்த ரூசோ மறைந்த பிறகு, பெரியகருப்பன் வைப்பதே அங்கு சட்டமாகி விட்டது.

மதுரையில் மூர்த்தி சொல்வது தான் வேதவாக்கு.

விருதுநகரையே தன் விரல் நுனிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.                             

இன்னொருபுறம் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி, மறைந்த பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோரின் மகன்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

ஐ.பெரியசாமிக்கும் எம்.எல்.ஏ. சீட்டு. அவரின் மகனுக்கும் சீட்டு.

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு மாவட்டசெயலாளர்…..

மகள் தமிழச்சி ——-எம்.பி.

என கட்சிக்குள்  ஒரு சில குடும்பங்களே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி ஆதிக்கம் செலுத்தும் குறுநில மன்னர்களும், சில குடும்பங்களும் கைகாட்டும் நபர்களுக்கு போட்டியிட சீட் வழங்கினால், பல ஆண்டுகளாக உங்களை நம்பி உழைத்தவன் நிலை  ?     

தலைவா…

உங்கள் தந்தையாரைச்சுற்றி அமர்ந்த ஐந்து பேரே இப்போது  உங்களைச் சுற்றியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு கட்சியினரை நீங்கள் சந்தித்தால்,

பல உண்மைகள் உங்கள் காதுகளுக்கு வரும்.  சீட்டும் கிடைக்காமல், மரியாதையும் கிடைக்காமல் போனதால்தான்  கரூர் சின்னசாமி, விழுப்புரம் ஏ.ஜி.சம்பத், கள்ளக்குறிச்சி   செல்வநாயகம், சிதம்பரம் மாமல்லன்                            உள்ளிட்டோர்  கட்சி மாறி விட்டார்கள் என்ற செய்தியாவது உங்கள் காதுகளுக்கு எட்டியதா என்று தெரியவில்லை. 

உங்களோடு தோளோடு தோள் நின்ற ஜின்னாவுக்கு  ஆயிரம் விளக்கு  சீட்டை மறுத்து விட்டு உங்கள் உறவினரான எழிலனுக்கு கொடுத்தீர்கள். உங்கள் மைத்துனர் பரிந்துரைத்தார் என்பதற்காக புதுக்கோட்டை தொகுதிக்கே சம்பந்தமில்லாத முத்துராஜாவுக்கு சீட் வழங்கினீர்கள்.

இப்படி வசதி படைத்தவர்களுக்கு, தங்கள் வசமானவர்களுக்கும்தான் சீட் என்றால் 40 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள் நிலை என்ன  ?

1989-ல் கழகம் ஆட்சிக்கு வந்தபோது, புதியவர்களுக்கு மறைந்த தலைவர் கலைஞர் தன் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கினார்.

அப்படி அமைச்சரானவர்களின் இன்றைய சொத்து     மதிப்பு எவ்வளவு…?

இம்முறையும் அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு          என்றால் …புதியவர்களை எப்போது தான் நீங்கள் அடையாளம் காணப்போகிறீர்கள்…?

இம்முறை அமைச்சரவை பட்டியலில் தலைவர் மறந்துபோய் ஆற்காட்டார் பெயரையும்,வீரபாண்டியார், கோ.சி.மணி பெயரையும்                            சேர்த்துவிடப்போகீறார் என்று நம் தொண்டர்ககளே கமெண்ட் அடிக்கும் நிலையில் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

ஆட்சியில் அமர்ந்த பிறகு, சீனியர்கள் சொல்லும் நபர்களுக்கு வாரியம் முதல் வளமான பதவிகள் வரை நீங்கள் ஒதுக்கினால்,

அடுத்த 10 ஆண்டுகளில் கட்சி கலகலத்துவிடும் தலைவரே.

உண்மையான உடன்பிறப்புகளுக்கு புதுவாழ்வு கிடைக்க முதலில் ஒரு அமைச்சரவைப்பட்டியலை

– நீங்களே – தயார் செய்யுங்கள்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட உடன்பிறப்புகளுக்கு வாய்ப்பு வழங்கி, கட்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயிர்த்துடிப்பாக வைத்திருங்கள்.

அதுவே உங்கள் வாரிசுக்கும், கட்சிக்கும் நீங்கள் செய்யும்   விசுவாசமான வழிகாட்டுதலாக இருக்கும்.

இப்படிக்கு,

உங்கள் உடன்பிறப்புகளில் ஒருவன்.

————————————————————————————-

பினாமி முதலாளி தலைகீழாக நின்றும், தோப்புக்கரணம் போட்டுப் பார்த்தும், கட்சியில் இன்று வரை எந்தப்பதவியும் கிடைக்கவில்லை  என்பது இந்தக் கடிதத்தின் பின்னணி காரணமாக இருக்கலாம்….!!!

                                                                                      

.

—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , . Bookmark the permalink.

3 Responses to ஜூ.வி.யில் ஸ்டாலினுக்கு குமுறல் கடிதம் …எழுதியவர் தயாநிதி மாறனா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆனாலும் கேடி பிரதர்ஸ் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என்பதை ஸ்டாலின் புரிந்துவைத்திருப்பார். இப்போதைக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடையாது என்பதால் கேடி பிரதர்ஸும் ரொம்பவே அலட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள். கட்சிக்கோ இல்லை எந்தப் பிரச்சனைக்கோ கேடி பிரதர்ஸ் ஒரு பைசா டொனேஷன் வழங்கியதாகவும் தெரியவில்லை. ஒருவேளை கேடி பிரதர்ஸ் என்றாலே பணம் சம்பாதிக்க மட்டுமே செய்வார்களோ?

  கருணாநிதி இருந்தபோது கட்சியை கபளீகரம் செய்யலாம் என்று கேடி பிரதர்ஸ் நினைத்துச் செயல்பட்டது இனி நடக்காது என்று நினைக்கிறேன்.

  இது ஏன் ஜூவி டீமே தயாரித்த கடிதமாக இருக்கக்கூடாது (சிலரின் கண்ணசைப்பில்)? இதனால் நடக்கப்போவது, இதில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் ஒதுக்கப்படுவதில் முடிந்துவிடுமோ?

 2. Tamilmani சொல்கிறார்:

  First they have to win the election then only they can discuss about ministers. In 2016 also same thing happened ultimately Aiadmk had the last laugh. This time it is very complex.
  But the sore note is when entire Tamilnadu is reeling under pandemic the party leader is holidaying in a hill station .

  • புதியவன் சொல்கிறார்:

   தமிழக தொலைக்காட்சி, பத்திரிகையைப் பொறுத்தவரையில் நீங்க எழுதின மாதிரி எழுதினா, அவங்க “சங்கிகள்தான் இப்படி எழுதுவாங்க” என்று முத்திரை பதித்துவிடுவார்கள்.. பிரதமர் 10 லட்ச ரூபாய் உடை போட்டுக்கொண்டதற்கு விவாத மேடை தினமும் நடத்துவாங்க. ஸ்டாலின் 400 கோடி ரூபாயில் தனி விமானம் வைத்திருக்கிறார் என்பதைச் சொல்ல மாட்டாங்க. ஏனென்றால் அவங்க எல்லோரும் திமுகவின் கொத்தடிமைகள். நாட்டில் இந்தப் பிரச்சனை இருக்கும்போது பிரியங்கா சோப்ராவை பிரதமர் சந்தித்து நேரத்தை வீணடிக்கிறார் என்று விவாத மேடை போடுவாங்க. ஆனால் கொரோனா பிரச்சனை மக்களைத் தாக்கும்போது, அடுத்த முதலமைச்சர், 220 சீட்டுக்களைப் பெற்று ஆட்சியமைப்பார் ஸ்டாலின் என்று சொன்னவங்க, தமிழ்நாடு பத்திக்கிட்டு எரியும்போது கொடைக்கானல் உல்லாசம் ஒரு கேடா என்று கேட்க மாட்டாங்க. அவங்க எல்லோரும் திமுகவின் கொத்தடிமைகள். யாராவது கேள்வி கேட்டால் உடனே அவர்களுக்கு ‘சங்கி’ என்று பட்டத்தை வழங்குவாங்க. ஒரு யூடியுபில் இந்த உல்லாசப் பயணத்துக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கிறார் ஸ்டாலின் என்று சொல்றாங்க. சொந்தக் காசைச் செலவழித்தால்தான் செலவழிக்க யோசிக்க வேண்டும்.

   அதுனால, தமிழ்மணி, உங்களுக்கு தமிழகப் பத்திரிகைகள், இணையப் புலிகள், ‘சங்கி’ என்று பட்டம் கொடுக்கணுமா இல்லை ‘தமிழன்’ என்று பட்டம் கொடுக்கணுமா என்பதை யோசித்து இந்தக் கேள்விகளை எழுப்புங்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.