…..
…..
……
“நாம் தமிழர்” என்கிற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தி “நாம் தமிழர் இயக்கம்” என்ற இயக்கத்தை 1950-களிலேயே முதலில் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும் அதன் முதல் ஆசிரியருமான திரு.சி.பா.ஆதித்தனார் அவர்கள்.
பிற்காலத்தில் அவர் அறிஞர் அண்ணா அழைத்ததன் பேரில்திமுக-வுடன் இணைந்ததால், அந்த இயக்கம் காணாமல் போனது.
தற்போது திரு.சீமான் நடத்துவது “நாம் தமிழர் version 2.0.” என்று தான் சொல்ல வேண்டும்.
சி.பா.ஆதித்தனார் தனது நாம் தமிழர் இயக்கத்தை துவக்கியபோது திராவிடச்சிந்தனைக்கு எதிராக பல புதிய கருத்துகளைக் கூறினார்.
அவற்றில் சில –
கேள்வி பதில் பாணியில் சி.பா.ஆதித்தனாரின் விளக்கங்கள் –
1. கேள்வி: திராவிடர்கள் யார்?
பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள்.
தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.
2.கேள்வி:
திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?
பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது.
அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார்.
அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்துமூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள்.
திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம்.
அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும்.
தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும்.
திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.
3.கேள்வி:
திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?
பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்து தான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.
4.கேள்வி:
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே ?
பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார்.
அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.
(மனோன்மணியம் – 1891-ல் இயற்றப்பட்டது…)
5.கேள்வி:
இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?
பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்டநூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.
6.கேள்வி:
தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?
பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடுமுன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால்
உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.
————————————————————————–
சீமான், தனது சீனியர் சி.பா.ஆதித்தனாரின் இந்த கருத்துகளை பயன்படுத்தியோ, வலியுறுத்தியோ எங்கும் பேசியதாகத் தெரியவில்லை..
அண்ணன் சீமான் இவ்வளவு அருமையான கருத்துகளை எப்படித தவற விட்டார்….?
.
————————————————————–
இது ஒரு பக்கம் இருக்கட்டும்…..
திராவிடம் குறித்து நான் அறிந்தவை சிலவற்றை தனியாக, கீழே தந்திருக்கிறேன்…
இது விஷயத்தில் நண்பர்கள் எதாவது கருத்து கூற விரும்பினால், பின்னூட்டத்தில் தரலாம்.
-விந்திய மலைக்கு கீழே(தெற்கே) இருக்கும் பகுதிகள் அனைத்தும் சேர்ந்தது தான் திராவிடம் என்று பல ஆவணங்கள் கூறுகின்றன. நமது தேசிய கீதமான’ஜனகணமன’வில் கூட, திராவிட என்று கூறுவது பூகோள அடிப்படையில் தான்.
ஆதி சங்கரரை “திராவிட சிசு” என்றழைத்தனர். சங்கரர் பிறந்தது தற்போதைய கேரளத்தில் உள்ள காலடியில். அது பூகோள அடிப்படையை வைத்து தான்இருக்க முடியும்….(அவர் காலத்தில், கேரளா என்கிற ஒரு பிரதேசமே கிடையாது… காலடி -தமிழகத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது…! )
உண்மையில், தமிழ் தான் மூத்த மொழி என்றும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகள் தமிழிலிருந்து உருவானவையே என்றும்ஒரு வாதம் உண்டு…. இதில் ஓரளவுக்கு உண்மையும் இருப்பதாகவே தெரிகிறது.
மஹாபாரத போரில் பாண்டியர்கள் பாண்டவ அணிக்காக போரிட்டனர் என்று இதிகாச குறிப்புகள் இருக்கின்றது.
சாரங்கத்துவஜன் என்கிற பாண்டிய மன்னரின் தலைமையில் பாண்டியப்படைகள் பங்குபெற்றதாக கதைகள் இருக்கின்றது.
அதுவும் இல்லாமல் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதா-வை திருமணம் செய்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட “The Mahabharata” ஆங்கில நூலின்
தமிழாக்கத்தில் -. – உத்யோக பர்வம் பகுதி 172-ல் –
கௌரவர்கள் சேனைக்கு தலைமை தாங்கும் பீஷ்மர், துரியோதனனிடம் -பாண்டவர்கள் சேனையில் பங்குகொண்டிருக்கும் – “பாண்டியன் ஒரு மகாரதன்!” என்று சொல்வதாக ஒரு இடம் வருகிறது.
“பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், வலிய சக்தி கொண்ட வில்லாளியுமான பாண்டிய மன்னன்,பாண்டவர்களுக்கு மற்றுமொரு பெரும் ரதனாக {மகாரதனாக} இருக்கிறான்” என்றும் கூறுவதாக வருகிறது..
———————-
எது எப்படி இருந்தாலும் –
மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ” தமிழன்” என்பது தான் சரியாக இருக்க முடியும்.
“திராவிடம்” என்பது பூகோள அடிப்படையில், தென்னிந்தியாவை குறிக்கக்கூடிய ஒரு சொல்.
“திராவிடன்” என்பது ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டு –
பின்னர் சுயமரியாதை இயக்கத்தினரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்று தான் கொள்ள முடியும்.
.
————————————————————————————————
சிபா ஆதித்தனார் சிந்தனை is not practical. சீமான் is more practical. Pure தமிழர்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில், 30-40 சதவிகித தெலுங்கு மக்கள் – நாயுடு, செட்டி, நாயக்கர், அருந்ததியினர் என்று பலப்பல ஜாதிகளை உள்ளடக்கியது exclude ஆகிவிடுவார்கள். உருது பேசும் இஸ்லாமியர்கள், ஹிந்தி/கன்னடம்/மலையாளம் பேசும் மக்களும் exclude ஆகிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாக தமிழகத்தில் வசிப்பவர்கள். அதனால் இவர்களை விலக்கிவிட்டு தமிழக அரசியலைப் பேச முடியாது. கருணாநிதி வகையறாவே ஆந்திராவிலிருந்து சில தலைமுறைகளுக்கு முன்னால் தமிழகத்துக்கு வந்தவர்கள்தாம். கோவாலசாமியும்தான்.
தி.க. ‘திராவிடர்’ என்று எடுத்துக்கொண்டதற்குக் காரணம், அதனை ஆரம்பித்த தலைவர்கள் தெலுங்கு பேசுபவர்கள், அதை ஆரம்பித்ததன் பெரிய காரணம், பிராமணர்கள் பெரும்பாலான முக்கியப் பதவிகளில் கோலோச்சியதுதான். அப்போது ‘தமிழர்கள்’ என்று சொல்லியிருந்தால், தி.க வின் முக்கிய குறிக்கோளே நிறைவேறியிருக்காது.
தமிழன் என்பது தனி இனம். (தமிழர்கள் என்பது வேறு. அது தமிழகத்தில் வாழ்பவர்களைக் குறிக்கும். அதாவது தமிழன் பிரசன்னா, தமிழச்சி…என்று போலிப் பெயரில் வருபவர்கள், உருது பேசும் இஸ்லாமியர்கள் இவர்களெல்லாம் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள். ஆனால் தமிழ் இனம் அல்ல). தாய் மொழி தமிழ் என்று இருப்பவர்கள் மட்டும்தான் ‘தமிழன்’ என்ற இனத்துக்குரியவர்கள்.
சீமான், ‘தமிழன்’ என்ற இனத்தை address பண்ணவில்லை. ‘தமிழ்நாட்டுத் தமிழர்கள்’ என்ற வாக்காளர்களை address செய்கிறார். ‘நாம் தமிழர்’ என்றான் ‘நாம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்’ என்றுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். By the by, I am always impressed by Seeman’s speeches. ஓரளவு அவர் ஆரம்பத்தில் சொன்னதைத் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார், ஓரளவு செயலிலும் காண்பிக்கிறார்.
புதியவன்,
// By the by, I am always impressed by Seeman’s speeches.
ஓரளவு அவர் ஆரம்பத்தில் சொன்னதைத் தொடர்ந்து
பேசிக்கொண்டு வருகிறார், ஓரளவு செயலிலும்
காண்பிக்கிறார். //
நான் வழிமொழிகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்