ஆங்கிலத்தில் ஒரு துண்டுச்செய்தி வந்தது…
முதலில் மேலோட்டமாகப் பாரத்ததும், சரி வழக்கம் போல்,
ஏதோ பிஜேபி-காரர்கள் அனுப்பி இருக்கிறார்கள் என்று
நினைத்துக்கொண்டே,
முழுவதுமாகப் படித்தேன்.
கடைசி வரியைப் பார்த்ததும் அடேடே தேவலையே –
இப்படியும் கூட நல்ல செய்தி சொல்ல முடிகிறதே என்று
பாராட்டத்தோன்றியது….
முதலிலிருந்து செய்தியை முழுவதுமாகப் படிக்க வேண்டும்…..
அப்போது தான் ரசிக்கும்….!!!
…….
.
—————————————————————————————————
இதை முன்பே பார்த்திருக்கிறேன். Literally if we analyze, anyway one has to die. மாஸ்க் போட்டுக்கொண்டால் ஆயிரம் வருடங்கள் வாழமுடியாது. 65-90க்குள் எந்தச் சமயத்தில் எல்லாத்தையும் அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பவேண்டியதுதான். அப்புறம் ஏன் கொரோனாவுக்கு பயப்படவேண்டும்? அதன் காரணம் ரொம்ப சிம்பிள்.
1. கோவிட் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனால் (மூச்சுத் திணறல் போன்று வந்து, அதிலும் சிகரெட் புகைப்பவர்களுக்கு இன்னும் ஆபத்து), செலவு லட்சத்தில். நம் கெபாசிட்டியைப் பொறுத்து ட்ரீட்மெண்ட்.
2. எந்த உறவினரும் சென்று பார்க்க வாய்ப்பே இல்லை. அட்மிட் ஆனவர்களுக்கும் ரொம்பவே கஷ்டம்.
3. கோவிட் பிரச்சனையினால் இறந்தால் எந்தக் காரணம் கொண்டும் சரியான வழியனுப்புதல் மேற்கொள்ளமுடியாது. நேரே cremation ground, தூரத்தில் நின்று ஒரு சிலர் மட்டும், bye சொல்லணும். அதுமட்டுமல்ல, அதிகப்படியான செலவும் உண்டு.
4. கோவிட் வந்து பிறகு சரியானாலும் நுரையீரல் பாதிக்கப்படும் என்றும் சொல்கின்றனர்.
இதற்கு எனக்குத் தெரிந்த பாதுகாப்பு முறை,
1. மாஸ்க், முழுமையாக மூக்கை cover பண்ணியிருக்கணும். லிஃப்ட் போன்ற பகுதிகளில் மாஸ்க் உபயோகிக்காதவர்களோடு சேர்ந்து பயணிக்கக்கூடாது.
2. எந்தக் காரணம் கொண்டும் உறவினரோ அல்லாதவரோ.. யாரையும் தேவையில்லாமல் வீட்டுக்கு அழைப்பது, ரொம்பவே ஈஷிக்கொள்வது கூடாது. யார் கேரியர் என்று யாருக்கும் தெரியாது. மாஸ்க் போடாமல் மற்றவர்களுடன் பேசுவதும் ஆபத்துதான். அதுவும் பாதுகாப்பாக இருக்காதவரிடம் மாஸ்க் (அவரும் போட்டுக்கொண்டிருக்கணும்) இல்லாமல் பேசுவதே ஆபத்து
3. சந்தேகம் வந்தால், மூன்று நாட்களுக்கு கபசுர (இன்னொரு மருந்து அதிமதுர காம்பினேஷனில்) குடிநீர் குடிக்கணும் (அதாவது மொத்தமே மூன்று வேளைகள்).
உறவினர்களிடமே நான் கோவிட் இறப்பைப் பார்த்திருக்கிறேன். (அவர்களிடம் கெட்ட பழக்கம் என்று ஒன்றுமே கிடையாது) தடுப்பூசி போட்டுக்கொண்டால் ‘இறப்பு’ வாய்ப்பு மிகக் குறைவு என்று சொல்கின்றனர். அவ்வளவுதான். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் போட்டுக்கொள்வதையோ இல்லை மேலே சொன்னவற்றையோ கடைபிடிப்பதில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது
புதியவன்,
கொரோனா பற்றிய விழிப்புணர்வை மிகவும்
தெளிவாக, விவரமாக எழுதி இருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
இவையனைத்தையும் அவ்வப்போது
நினைவுறுத்திக்கொண்டே இருப்பது
நமக்கும், பிறருக்கும் நல்லது.
பலர் இத்தனை விளைவுகளும் தெரிந்தே
தனக்கு ஒன்றும் வந்துவிடாது என்று
அலட்சியமாக இருக்கிறார்கள்…. அத்தகையோர்
முக்கியமாக இந்த விளைவுகளை
நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் பொறுப்பான பின்னூட்டத்தை
நன்றியுடன் வரவேற்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்