விவேக் ….

vivek

……

vivek kalam

…..

விவேக் ….

ஒரு நல்ல கலைஞர் என்று சொல்வதை விட, முதலில் ஒரு
அற்புதமான மனிதர் என்று தான் சொல்லத்தோன்றுகிறது….

அரசியல் கலக்காமல், சமூக நலனை மட்டும் கருத்தில்கொண்டு,
விளம்பரம் அதிகமின்றி தன் வழியில் பல நல்ல செயல்களை
ஆற்றி வந்தவர். அவர் நட்டுவித்த பல லட்சம் மரக்கன்றுகள்
இன்று தமிழகத்திற்கு நல்ல காற்றை (ஆக்சிஜனை) தந்து
கொண்டிருக்கின்றன.

யார் மனதையும் புண்படுத்தாதவர்.
மிக இயல்பாக பழகக்கூடியவர்.
திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகத் தோன்றினாலும்,
பல நல்ல கருத்துகளை அதனூடே தெரிவித்தவர்.

முக்கியமாக பெயரையும், புகழையும் – தன் தலையில்
ஏற்றிக்கொள்ளாமல், பல நல்ல காரியங்களைச் செய்ய
அவற்றை பயன்படுத்திக் கொண்டவர்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களை தன் குருவாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு சமூகத்தொண்டில்
ஈடுபட்டவர்……

விவேக் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்று முழுவதும், தமிழக தொலைக்காட்சிகளில்
அவர் தான் நிறைந்திருக்கப் போகிறார்…..

சில நல்ல மனிதர்களுடன் நமக்கு நேரடியாக எந்தவித
தொடர்பும் இல்லாவிட்டாலும், அவர்கள் இறந்த பின்னரும் கூட
அவர்கள் நம் நினைவில் இருந்துகொண்டே இருப்பர்.

விவேக் அத்தகையவர்களில் ஒருவர். உடலால் மறைந்து
விட்டாலும், என்றும் நம் உள்ளங்களில் அவர் நிலைத்திருப்பார்.

விவேக்’கை இழந்து வாடும் அவரது இல்லத்தினருக்கு
நமது ஆறுதலை இந்த தளத்தின் மூலமும் தெரிவிப்போம்….

இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் கூட சமூக அக்கறை
அவரிடம் எப்படி நிறைந்திருந்தது என்பதை அவரது
இந்த கடைசி வீடியோ எடுத்துக்காட்டும்…..

……..

……..

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to விவேக் ….

  1. புதியவன் சொல்கிறார்:

    Dramatic death. எப்படி பெரிய நிலைல இருப்பவர்கள் ரெகுலர் ஹெல்த் செக்கப் செய்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்பது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. (இன்னொருவர் கிரேசி மோகன்) விவேக்கின் நகைச்சுவை நடிப்பைவிட, அவரது சமூக சேவை நிறைய நாட்கள் நினைவுகூரப்படும். அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதனை மக்கள் அறியவேண்டும் என்று எண்ணின அவரது சமூகக் கடமை வியப்பளிக்கிறது.

  2. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Some sort of unknown sadness & disturbance comes to my mind abt. Vivek’s sudden demise
    Sir.

  3. arul சொல்கிறார்:

    Not able to digest Vivek sir sudden death..RIP

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.