துரைமுருகன் அய்யோ பாவமா ….?

……..

durai-2

……..

durai

………

……..

durai-2

……..

durai

………

அதில் –

திருவாளர் துரைமுருகனுக்கு புதிய திமுக
அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவி கிடைக்காது என்றும்,

வயது முதிர்வு காரணமாக
அதிகம் பணிச்சுமை ( ?) இல்லாத லைட்’டான
அமைச்சர் பதவி தான் அவருக்கு கொடுக்கப்படும்
என்றும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதய நோயாளியான துரைமுருகனுக்கு திடீரென்று
ஷாக் கொடுக்கக்கூடாது என்பதால், முதலிலேயே
இந்த மாதிரி வதந்தி போல் செய்தியைக் கொடுத்து
அவர் மனதை தயார் செய்கிறாரோ திருவாளர் ஸ்டாலின்…?

இன்று வெளியிடப்பட்டிருக்கும் செய்தி கீழே –


திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
துரைமுருகன் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில்
போட்டியிட்டார். சில நாட்களுக்கு முன் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் சென்னை
குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று நேற்று (ஏப்ரல் 14) குணமடைந்து டிஸ்சார்ஜ்

செய்யப்பட்டார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த துரைமுருகனுக்கு
அவரது பங்களாவில் திருடர்கள் புகுந்த விஷயம் லேசான அதிர்ச்சியைதான் கொடுத்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி
மலையில் துரைமுருகனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது.
அங்கேதான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் துரைமுருகன்.
சில நாட்களுக்கு முன் அந்த பங்களாவுக்குள் திருடர்கள்
நுழைந்தனர். துரைமுருகன் பங்களா என ஏகப்பட்ட
எதிர்பார்ப்புடன் நுழைந்த அவர்களுக்கு ஒன்றுமே
கிடைக்காததால், கையில் கிடைத்த

லிப்ஸ்டிக்கை எடுத்து சுவற்றில்,
‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’ என்று துரைமுருகனுக்கே நக்கலாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே திமுக உயர் மட்ட வட்டாரத்தில் பேசப்பட்டு
வரும் தகவல் துரைமுருகனுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும்
என்ற நம்பிக்கையில் திமுக தலைமை அடுத்து
அமைக்கவுள்ள ஆட்சியின் அமைச்சர்கள் பட்டியலையும்
தயாரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
துரைமுருகனுக்கும் இது தொடர்பான தகவல்கள் காதில் விழுந்திருக்கின்றன. அதைக் கேட்டுதான் அவர் அதிர்ச்சியாகியிருக்கிறார்,

“அதாவது திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் துரைமுருகன்
தான் மிகவும் சீனியராக இருப்பார். ஏற்கனவே அவர் கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, சட்டம் உள்ளிட்ட
துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
பொதுப்பணித்துறையில் அவர் நிபுணர் என்றே சொல்லலாம்.

ஆனாலும் தற்போது துரைமுருகனுக்கு வயதாகிவிட்டதால்,
அவருக்கு பொதுப்பணித்துறை போன்ற பணிச் சுமை மிகுந்த
துறையை வழங்கினால் சரியாக இருக்குமா என்று ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

பொதுப்பணித்துறையை தானே வைத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின்.

சட்டம் அல்லது வேறு ஏதேனும்
அதிக பணிச்சுமை அல்லாத ‘லைட்டான’துறையை
துரைமுருகனுக்குக் கொடுக்கலாம் என்று ஸ்டாலினுக்கு
நெருக்கமான வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது” என்பதுதான் துரைமுருகனுக்குக் கிடைத்த தகவல்.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை
பொறுப்பு வகித்த துரைமுருகனிடம் இருந்து அத்துறையை
பறித்து சட்டத்துறையை அவரிடம் கொடுத்திருந்தார்
கலைஞர் என்பது குறிப்பிடத் தக்கது.

திமுக பற்றி மின்னம்பலம் சொன்னால் அது பொய்யாகவா இருக்கப்போகிறது…!!!

.

————————————————————————————-

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , . Bookmark the permalink.

1 Response to துரைமுருகன் அய்யோ பாவமா ….?

  1. புதியவன் சொல்கிறார்:

    இவங்களுக்கெல்லாம் ‘பதவி’ வேண்டும், மற்றபடி வேலையை யார் செய்தால் என்ன என்ற நிலைமைதான். அன்பழகனும் ‘பொதுச் செயலாளர்’ போஸ்டில் இறக்கும் வரை இருந்தவர்தானே. ஒருவேளை இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு தரணும் என்ற போர்வையில் ஸ்டாலின் தனக்கு பொதுப்பணித்துறையும், உதயநிதிக்கு சட்டம் ஒழுங்கும் கொடுக்கலாமோ?

    இப்போதெல்லாம் நக்கீரனுக்கு விகடன், மின்னம்பலம் போன்று பல, tough fight கொடுப்பதைப் பார்த்தீர்களா….. யார் அதிக கொத்தடிமையாக இருப்பது என்று…

    அது சரி… ஆரம்பத்தில் வெளிநாட்டு தடுப்பூசி வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும் என்ற தன்னலத்தால், ஸ்டாலின், திருமா போன்றோர் நம் தடுப்பூசிகளைக் குறை சொல்லி, மக்கள் போட்டுக்கொள்ளவிடாமல் discourage செய்து, திமுக ஆட்சிதான் வரப்போகிறது என்று confirm ஆனதும் முதல் ஆட்களாக போய் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதைக் கவனித்தீர்களா? (இல்லைனா, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் கொரோனா பிரச்சனையை சமாளிக்கவே முழு கவனத்தையும் செலுத்தவேண்டியதாகிவிடும், வெளிநாட்டு தடுப்பூசிக்குக் கொடுக்க கஜானாவில் காசு இருக்குமா என்ற சந்தேகம் வந்திருக்கோ என்று பலர் பேசிக்கொள்கிறார்கள்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.