நண்பர் புதியவன் எழுதிய ஒரு பின்னூட்டம் நான்
சில வருடங்களுக்கு முன் படித்த எம்.ஜி.ஆர். பற்றிய
ஒரு கட்டுரையை நினைவுபடுத்தியது.
அதை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
வேண்டுமென்று, தேடிக்கண்டுபிடித்து, கீழே
பதிந்திருக்கிறேன்.
……………………….
.
.
——————————————————————————————-
இரு வருடங்களுக்கு முன்பு தி நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்துக்குச் சென்றிருந்தேன். அந்த இன்றும் பொதுமக்கள் வந்து காண்கிறார்கள் (வருபவர்கள் தாங்களே போட்டோ எடுத்துக்கொண்டால், தன் ஆளுக்கு வருமானம் போய், தனக்கு கமிஷன் வராது என்று எண்ணும் சில்லரை மனிதர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்)
ஒரு தயாரிப்பாளர் எம்ஜிஆரை வைத்துப் படம் எடுத்து சிறிது நஷ்டம் வந்துவிட்டதாம். அவர் ஏ.எல்.எஸ். வீட்டிற்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதேச்சையாக வந்த எம்ஜிஆர் (ஏ.எல்.எஸ்ஸைப் பார்க்க வந்திருப்பார்), ஏஎல்.எஸ்ஸுடன் யார் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு, தன் காருக்குச் சென்று ஒரு பையை எடுத்துவந்தாராம். பிறகு ஏ.எல்.எஸ்ஸைக் கூப்பிட்டாராம். அவரிடம், நான் வந்தேன் என்று சொல்லவேண்டாம், அவர் நட்டம் என்பதைப் பற்றிப் பேசத்தான் உங்களிடம் வந்திருப்பார், நீங்களே அவரிடம் இதனைக் கொடுப்பதுபோலக் கொடுத்துவிடுங்கள், என் பெயரைச் சொன்னால், பணம் பெற்றுக்கொள்ளத் தயங்குவார் என்றாராம். (25 ஆயிரத்தை) இதனை ஏ.எல்.எஸ் அவர்களின் மருமகள் சமீபத்தில் ஒரு காணொளியில் சொல்லியிருந்தார். (ரஜினிக்கும் இதே குணம் உண்டு, தன்னால் தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது, அப்படி நஷ்டமடைந்தால் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவாராம். அதுபோல இஷ்டத்துக்கும் தன் சம்பளத்தை ஏற்றும் வழக்கமும் கிடையாதாம். அதிகமாகக் கொடுக்க வந்தவர்களிடம், 12 தான் சென்ற படத்திற்கு வாங்கினேன். இன்னொருவருக்கும் அதே சம்பளத்திற்குத்தான் நடிக்கப்போகிறேன் என்று கமிட் செய்துள்ளேன்.. நீங்கள் அதிகமாகத் தரத் தயாராக இருந்தாலும் நான் வாங்கிக்கொள்வதி நியாயமாக இருக்காது என்றாராம். இதனை ஏ.வி.எம். சரவணன் ஒரு காணொளியில் சொன்னார் என்று நினைவு.)