…
…
….
வாலி – கண்ணதாசனைப்பற்றி ….!!!
…..
…..
வாலிக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல் –
(எனக்கும் கூடத்தான்…!!! )
….
….
.
——————————————————————————————————————-
…
…
….
வாலி – கண்ணதாசனைப்பற்றி ….!!!
…..
…..
வாலிக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல் –
(எனக்கும் கூடத்தான்…!!! )
….
….
.
——————————————————————————————————————-
1. கவியரசுக்குத் திறமை மிக அதிகம். குழந்தைத்தனம் அதைப்போலவே. வாலி தன் சுயசரிதையில் சில விஷயங்களை (கண்ணதாசன் பற்றி) எழுதியிருக்கிறார். அவருடைய நண்பர்கள், வாலியை ஒரு இக்கட்டான சமயத்தில் போலீஸிடம் மாட்டி விடுங்கள் என்று சொன்னபோது, என் விருந்தினராக வந்திருக்கும் அவருக்கு ஒரு நாளும் கெடுதல் நினைக்கமாட்டேன் என்று அந்த நண்பர்களைக் கடிந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
2. எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது (அவருக்கும் கண்ணதாசனுக்கும் உரசல். அதனால் அவர் வாலியையே தனக்குப் பாட்டெழுதப் பயன்படுத்திக்கொண்டார். எப்போதாவதுதான் மற்றவர்கள்), கண்ணதாசனுக்கே அரசவைக் கவிஞர் பட்டம் வழங்கினார் (வாலியிடம் அதைப்பற்றி முதலில் சொல்லி அவரது கருத்தையும் கேட்டுக்கொண்டார்). அப்படி வழங்கியபோது வாலி எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கம், கண்ணதான் தூரம். இதுபோல தன்னிடம் மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்களுக்கும், தக்க மரியாதைகள் செய்தவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்கள்.
கண்ணதாசன் திரைப்படப்பாடலை எழுதிமுடித்தபின் (கண்ணே கலைமானே என்று நினைவு. வேறு பாட்டாகவும் இருக்கலாம்) இதுவே தன்னுடைய கடைசிப் பாடல் என்று சொன்னாராம்.
சமீபத்தில் (இரு நாட்களுக்கு முன்பு) ஏ.எல்.எஸ் அவர்களின் மருமகள் கொடுத்த பேட்டியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார், அவர்கள் குடும்பத்தில் 54 வயதுக்கு மேல் ஜீவிதம் இல்லை என்று. ஏ.எல்.எஸ் அவர்களும் 54ல் மறைந்தார், அவர் சகோதரர் கண்ணதாசனும் 54ல், ஏ.எல்.எஸ் அவர்களின் புதல்வர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பனும் 54ல் இறந்தார் என்று சொன்னார்.
எம்ஜிஆரைப் பற்றி எழுதும்போது தீயசக்தியையும் நினைக்கத் தோன்றுகிறது. பழிவாங்குவதில் தீயசக்தியை மிஞ்ச இனி ஒருத்தர் பிறந்துதான் வரணும். காமராஜர், முதலமைச்சர் கிடையாது, அதனால் சடலத்தை மெரினாவில் புதைக்க அனுமதி கிடையாது, காலம் என்றாலே கலகம் என்று அர்த்தம் அதனால் அப்துல் கலாம் இறந்தபோது அவருக்கு மரியாதை செலுத்தச் செல்லவில்லை, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன், எம்ஜிஆரை அதிகமாக மதித்தார், எம்ஜிஆர் விடுதலைப்புலி இயக்கத்துக்காகச் செய்த ஏகப்பட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டார், ஆனால் தன்னை மேடையில் புகழ்ந்துபேச பிரபாகரன் வரவில்லை என்ற காரணத்துக்காக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அவர் செய்த தீமைகளை எல்லோரும் அறிவர், பிறகு பிரபாகரனின் உடல் நிலை சரியில்லாத தாயைக்கூட சென்னையில் மருத்துவ உதவிகள் பெறக்கூடாது என்பதற்காக ஏர்போர்டிலிருந்தே திருப்பி அனுப்பியவர் இந்த தீயசக்தி. இதைப்போல எத்தனையோ நிகழ்வுகளை எழுதியிருக்கிறேன். குணம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான், இறந்து 30 வருடங்கள் ஆனாலும் இன்னும் எம்ஜிஆர் ஆட்சி வரவைப்போம் என்று எல்லோராலும் பரப்புரை செய்ய முடிகிறது. இறந்து இரண்டே ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றும் திமுக கூட்டணிக் கட்சிகள், திமுக முதற்கொண்டு, காமராஜ் ஆட்சி அமையப் பாடுபடுவோம் என்று சொல்ல முடிகிறதே தவிர கருணாநிதி பெயரைக்கூடப் பயன்படுத்த முடிவதில்லை.
புதியவன்,
உங்கள் பின்னூட்டம் எம்.ஜி.ஆர். பற்றி எப்போதோ
படித்த ஒரு கட்டுரையை நினைவுபடுத்துகிறது.
“குணம்” என்பதற்கும், “பதவி” என்பதற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லையென்றே தோன்றுகிறது.
மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் /
இருப்பவர்கள் – கூட சில சமயங்களில்
அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். கட்டுரையைதேடிக்கொண்டிருக்கிறேன்..
கிடைத்தால் -அடுத்த பதிவாகப் போடுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
குணம் என்பது வேறு. பதவி என்பது வேறு. I believe பதவி பூர்வ புண்யானாம் என்பதில். பிறந்தபோது உள்ள குணத்தை மட்டையால கட்டி அடிச்சாலும் போகாதும்பாங்க. சிலர் நல்ல சுபாவமாக இருப்பார்கள், சிலர் நிறைய தானம் பண்ணுவாங்க, செலவு பண்ணுவாங்க. சிலர் கஞ்சத்தனமா இருப்பாங்க. சிலர் முன்கோபியாக இருப்பாங்க. சிலர் எவ்வளவு கோடீஸ்வரனாக இருந்தாலும் பணிவோடு இருப்பாங்க (டாட்டா பற்றிய நிகழ்வுகளை நீங்க படிச்சிருப்பீங்க.
எம்ஜிஆரைப் பத்தி எழுதும்போது அவர் வீட்டில் நியூஸ் பேப்பர்கள் வாங்குவதே தேவையானவர்களுக்கு ரூபாய் நோட்டுக் கட்டுகளைச் சுற்றிக் கொடுப்பதுக்குத்தான் என்று வலம்புரி ஜான் எழுதியிருந்தார். பிறருக்கு தானம் செய்வதில், தேவையானவற்றை வாங்கித்தருவதில் (அள்ளித் தருவதில்) எம்ஜிஆருக்கு இயல்பாகவே அந்தக் குணம் இருந்தது. அவருடன் உள்ள ஒருத்தர் எழுதியிருந்தார், பெங்களூரிலிருந்து சென்னைக்கு மதியம் காரில் வந்துகொண்டிருந்தபோது, வழியில் ஒரு வயதான பெண், தலையில் விறகுக்கட்டையுடன் வேகாத வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து (தன்?) செருப்புகளை அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னாராம். பிறகு இலவச செருப்புத் திட்டத்துக்கு அது வழி வகுத்தது என்று எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டியது, போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தவில்லை, யாரும் அவர் செய்கின்ற தானங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ஸ்டிரிக்ட் உத்தரவு போட்டிருந்தார். இதைவிட இன்னொரு சம்பவம், வாலி எம்ஜிஆருடன் காரில் சத்யா ஸ்டூடியோவிலிருந்து கோட்டைக்கு (?) பயணிக்கிறார். எம்ஜிஆர் கார் நம்பர் எல்லோருக்கும் தெரியும், ஆனால் உள்ளே இருக்கும் எம்ஜிஆரைப் பார்க்கமுடியாது (கண்ணாடியில் டார்க் ஷீட் ஒட்டியிருப்பாங்க, உள்ளிருந்து வெளில உள்ளவங்க தெரியும்). சைதாப்பேட்டைக்கு முன்பிருந்தே வழியில் காரைப் பார்க்கும் எளியவர்கள் கும்பிடறாங்க, எம்ஜிஆர் தன் கைகளைக் கூப்பிக்கொண்டே அப்படியே வைத்துக்கொண்டே வந்தாராம். இவர் கவனிக்கிறாரா என்று மக்களுக்குத் தெரியாது, ஆனால் எம்ஜிஆரிடம் நயத்தகு நாகரிகம் இருந்தது என்கிறார். இதுதான் குணம்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தன் பிறந்தநாள் அன்று எல்லா இடங்களுக்கும் காரைச் செலுத்தி மிகவும் தாமதமாக வீட்டிற்குத் திரும்பியபோது தன் கார் டிரைவருக்கு 10 ரூபாய் (டிப்ஸ்) கொடுத்தாராம்.-89ல் பின்னாலேயே நின்று கொண்டிருந்த ஆற்காடு வீராசாமி, சட் என்று கருணாநிதி நகர்ந்து போனதும், அவருக்குத் தெரியாமல் 500 ரூபாவை அந்த கார் டிரைவருக்குக் கொடுத்து, தலைவர் அப்படித்தான், காசுல கெட்டி என்றாராம். இதனை ஜூ.வி எழுதியிருந்தது (அந்தக் காலத்தில் நடுநிலைமையாக செயல்பட முயன்ற ஜூவி. இப்போதுள்ள முரசொலி அறக்கட்டளை ஜூவி இல்லை)
இதை எழுதும்போது எனக்குள்ள, சிக்கனத் தன்மையும் (எல்லோர்கிட்டயும் பொருளின் விலையை நெகோஷியேட் பண்ணுவேன்… எந்த டீலிங்லயும் எனக்கு/கம்பெனிக்கு லாபம் வரும்படித்தான் நடப்பேன்), என் நெருங்கிய உறவினருக்கு உள்ள தாராள மனப்பான்மையையும் compare பண்ணிக்கொள்கிறேன். அவர், எந்தக் காரணம் கொண்டும் எளியவர்களிடம் பேரம் பேச மாட்டார், ஆட்டோக்காரர் 40 ரூபாய் கேட்டாலோ இல்லை மீட்டரில் 30 ரூபாய் வந்தாலோ, சட் என்று 50 ரூபாயை எடுத்துக்கொடுத்துவிடுவார். நானோ, 2 ரூபாய் சில்லரையைத் தேடிக்கொண்டிருப்பேன். நேபாள் காத்மண்டுவில், சாளக்கிராமம் நான் வாங்கினபோது பேரம் பேசினதையும், அவர், சின்ன விஷயங்கள் எதிலுமே பேரம் பேசக்கூடாது, 30 ரூபாய் அதிகமாகக் கொடுப்பதால், வாங்குபவர் மாளிகை கட்டிக்கப் போவதில்லை, கொடுக்கும் நாம் ஏழையாகிவிடப் போவதில்லை என்பார். இதெல்லாம் பிறக்கும்போது உள்ள குணம் (ஜீன்) என்பது என் எண்ணம்.
திரும்பவும் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண்மணி, (முதல்வர், தன்னைச் சந்திக்கக் காத்திருப்பவர்களைச் சந்திக்கும் சமயத்தில்) ஏதோ அழுது தன் கஷ்டத்தைச் சொல்லி பணத்தைப் பெற்றுக்கொண்டார். தன் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணனிடம், ஏன் தன்னிடம் அந்தப் பெண், தன் நகைகளை தன் கூட வந்தவரிடம் கழற்றிக் கொடுத்து பிறகு என்னிடம் ஏழை என்று நடித்ததைப் பற்றிச் சொல்லவில்லை என்று கேட்டபோது, ராமகிருஷ்ணன், நீங்க கொடுக்கறீங்க, அந்தப் பெண் வாங்கிக்கொள்ளப் போகிறார், நான் ஏன் குறுக்கே புகுந்து அதனைக் கெடுக்கவேண்டும் என்று இருந்துவிட்டேன் என்று சொல்கிறார். இதுவும் ஒரு குணம்தான். (எம்ஜிஆர், அந்த மெய்க்காப்பாளரை ரொம்பவே பாராட்டினாராம்)
புதியவன்,
நீங்கள் உங்கள் நண்பரைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள்
அல்லவா…? கிட்டத்தட்ட அதே ரகம் தான் நானும்.
முன்னர் எப்போதோ இது பற்றி நான் பின்னூட்டத்தில்
எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
எளியவர்களிடம் நான் பேரம் பேசவே மாட்டேன்.
கீரை விற்கும் பாட்டி 20 ரூபாய் சொன்னால், நான்
அவரிடம் 30 ரூபாய் கொடுத்து விட்டு வருவேன்.
ஆட்டோ பிடிக்க தெருஓரத்தில் உள்ள
ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றால், அங்கே
உள்ளவர்கள் போட்டி போடுவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும்.
இதில் சிலர், ஸ்டாண்டிற்கு போனால், அவர்களின்
சீனியாரிடிபடிதான் போகவேண்டும் என்பதால்,
நான் தூரத்தில் நடந்து வருவதைப் பார்த்தாலே
ஆட்டோவை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்து விடுவார்கள்.
நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை;
நான் பணம் படைத்தவனும் அல்ல.
இந்த மாதிரி பிறருக்கு சின்ன சின்ன அளவிலாவது
உதவியாக இருக்க ஆண்டவன் எனக்கு ஓரளவு
வசதியையும் சந்தர்ப்பத்தையும்
தந்திருக்கிறானே என்று இறைவனுக்கு
அடிக்கடி நன்றி சொல்லிக் கொள்வேன்…
என்னைப் பார்த்து பார்த்து என் மனைவிக்கும்
இதே வழக்கம் வந்து விட்டது.
பெரும் பணக்காரர்களுக்கு மனம் வராது.
நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினர் தான்
இந்த மாதிரி எல்லாம் இருக்க முடியும்.
வறியவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை
நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை,
இருப்பதை பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சின்ன சின்ன அளவில் உதவி செய்ய நம்மால்
நிச்சயம் முடியும்.
நீங்கள் DNA பற்றி சொன்னீர்கள்.
எனக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு.
அவர் இதற்கு நேர் எதிர்……!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… அவர் என் FIL. ஜீன் என்பதும் நம் முன்னோர்களின் காம்பினேஷன். அதனால் ஒருவருக்கு இருக்கும் குணம் சகோதரருக்கு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. என் சகோதரன் ரொம்பவே பேரம்லாம் பேசமாட்டான், கேட்பதைக் கொடுத்துவிடுவான். நான் அப்படி அல்ல. அதை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை. (சின்ன வயதிலேயே சிறுதுளி பெருவெள்ளம் என்று பதிந்துவிட்டது). என் கடமைகள் முடிந்த பிறகு ஒருவேளை என் குணம் மாறும் என்று நினைக்கிறேன்.