……..
மிகச்சுலபமாக திமுக 170-180 சீட்டுகளைப் பெற்று,
ஆட்சியை கைப்பற்றும் என்று தான் நேற்று வரை
முக்காலே மூணு வீசம் ஊடகங்கள் கருத்து வெளியிட்டு
வந்தன….
இப்போது, வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் கழித்து,
முதல் தடவையாக, திமுக ஆதரவு தளமான நக்கீரன்
– அதிமுக 100 முதல் 110
சீட்டுகளை பெறக்கூடும் என்று ஒரு செய்திக்
கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
ஒரு வேளை ரிசல்ட் அவர்கள் எதிர்பார்த்தபடி
இல்லையென்றால், எதற்கும் உதவுமென்றே
நக்கீரன் இப்படியெல்லாம் –
தேர்தல் முடிந்த பல நாட்களுக்குப் பிறகு காரணங்களை
கண்டு பிடிக்க ஆரம்பிக்கிறதா …?
இதற்கு வேறு என்ன அர்த்தம்….?
————————————————————————
நக்கீரன் செய்தியிலிருந்து –
கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்! –
எடப்பாடி தரப்பை நம்பிக்கையூட்டும் கணக்கு!!!
“அதே சமயம், எடப்பாடி தரப்பும் கடைசி வரை நம்பிக்கையூட்டும்
கணக்குகளைப் போட்டு வைத்துள்ளது. நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள்
எடுத்த கருத்துக் கணிப்புகள், எடப்பாடி தரப்புக்கு தொடர்ந்து பலத்த
அதிர்ச்சியைத் தந்ததால், உளவுத்துறை மற்றும் முக்கியப் புள்ளிகள்
மூலமாக, கொஞ்சம் பூஸ்ட் தரும்படியான சர்வே ஒன்றைக் கொடுங்கள்
என்று எடப்பாடி தரப்பு கேட்டு வாங்கியுள்ளது.
அவர்கள் குழம்பிக் குழம்பி பல்வேறு கணக்குகளைப் போட்டுப்
பார்த்துட்டு, அ.தி.மு.க. 85, பா.ம.க. 9, பா.ஜ.க. 8, த.மா.கா. 2
-என்றெல்லாம் கணக்குப் போட்டு, கடைசிக் கட்டத்திலும் பண
விநியோகம் நடந்தால், அ.தி.மு.க. கூட்டணி 100-ல் இருந்து 110
தொகுதிகள் வரை பிடித்து, ஆட்சியில் அமரலாம் என்று
சொல்லியிருக்கிறார்கள்.
இதைக் கையில் வைத்துக்கொண்டுதான்,
பல தொகுதிகளிலும் வைட்டமின் ‘ப’ மூலம் தெம்பு
ஏற்றியது எடப்பாடி தரப்பு. எல்லோருமே பெரிய அதிகாரிகளாக இருந்ததால் அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு ஆளாகாமல் சென்றுள்ளது.
இப்படி தமிழகம் முழுக்க, அதிகாரிகள் மூலமாகவே
டிஸ்ட்ரிபியூஷன் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறையின்உதவியோடு பணம் அனுப்பப்பட்டுவிட்டதால், அது தேர்தலில்தங்களுக்கு ஆதரவாக மாயங்கள் செய்யும்னு எடப்பாடி நம்பறார். “
கருத்துக் கணிப்புகளில் 90 விழுக்காடு, 160க்கு மேல்தான் திமுக வெற்றி பெறும் என்று சொல்கின்றன. என் தனிப்பட்ட assessment திமுக 150க்கு மேல் திமுக பெறும், பாஜக கூட்டு என்பதால் அதிமுக 40-தான் பெறும் என்பதே. கருத்துக்கணிப்பு குறைந்த அளவு சாம்பிள்கள் வைத்து எடுக்கப்பட்டது, தமிழக மக்கள் கருத்துக் கணிப்பு எடுக்கும் பத்திரிகை/தொலைக்காட்சிக்கு ஏற்ப சொல்லுவதில் கெட்டிக்காரர்கள், திமுக பெரும் பணத்தை கருத்துத் திணிப்புக்காக இறக்கிவிட்டிருக்கிறது என்றெல்லாம் படித்ததால், கருத்துக் கணிப்புகளில் தவறுகள் இருக்கலாம். இருந்தாலும் திமுக வெகு சுலபமாக அதிக இடங்கள் (150+) பெறும் என்றே நம்புகிறேன். சிலர், (1) துணை முதல்வராக இருந்தவர் முதல்வராக ஆனதே இல்லை (2) ஸ்டாலின் ஜாதகம், எடப்பாடி ஜாதகத்தைவிட குறைவான பலன் கொண்டது, எடப்பாடிக்குத்தான் இப்போது யோகம் (3) Odd வருடங்களில் நடந்த தேர்தலில் அதிமுகவை திமுக வென்றதே இல்லை (89ல் அதிமுக இரண்டாகப் பிரிந்து இரட்டை இலை தேர்தலில் இல்லை) (4) வருடங்களைக் கூட்டினால் வரும் எண், அதிமுகதான் அரசமைக்கும் என்பதைக் காட்டுகிறது (5) எப்படியும் ஸ்டாலின் தோற்பார், அது தான் சொல்லி நடந்தது என்று இருக்கவேண்டாம், அமைதியாக இருந்தால் தனக்கு உறுதியளித்தபடி திமுகவில் லாபம் கிடைக்கும் என்பதனால் மு.க.அழகிரி அமைதியாகிவிட்டார் (6) ஆ.ராசா பேச்சு போன்றவை கொங்கு பகுதியில் எடப்பாடிக்கு சாதகமாக கடைசி கட்டத்தில் திருப்பியது என்றெல்லாம் பல analysisகளை வைக்கின்றனர். ஆனால் மனம் அவற்றை நம்ப மறுக்கிறது.
//கொஞ்சம் பூஸ்ட் தரும்படியான சர்வே ஒன்றைக் கொடுங்கள் என்று எடப்பாடி தரப்பு கேட்டு வாங்கியுள்ளது.// – திமுக பத்திரிகையான நக்கீரன் இப்படி எழுதுவது எதிர்பார்த்ததுதான். இவங்கதான், சொந்த லாபத்துக்காக கருணாநிதியிடம் 2011ல், 160 இடங்கள் நிச்சயமாக திமுகவுக்கு என்று தெரிந்தே பொய் சொல்லி அதனால் பயன் பெற்றார்கள்.
//காவல்துறையின் உதவியோடு பணம் அனுப்பப்பட்டுவிட்டதால்// – புளுகுவதற்கு நக்கீரனுக்குச் சொல்லியா தரவேண்டும்? இது நக்கீரனின் கதை. உண்மைச் செய்தி திருச்சியில் நேரு சார்பாக ஒரு வாக்குக்கு 2000 ரூபாய், போலீஸ்காரர்களுக்குக் கொடுத்து மாட்டிக்கொண்டது. இதைப்பற்றி நக்கீரன் மூச்சு விடாது. விட்டால், அப்புறம் தமிழகத்தில் தொழில் செய்யமுடியுமா? இல்லை பெற்ற லாபத்தைத்தான் திருப்பித்தர முடியுமா? என்று பலர் பேசுகிறார்கள்.
admk alliance will win 140 above dmk alliance 75 to 80 rest of other parties definitely