எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

.sun tv logo

.————————————————————-

தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பின்னர்,
வாக்காளர்களின் போக்கை கண்காணித்து,
இந்த கட்சி ஜெயிக்கும் – இவ்வளவு சீட்டுகள் பெறும் ..
ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம்
மீடியாக்கள் கணித்து அறிவிப்பது தான் எக்சிட் போல்….

தேர்தல் நாள் அன்று ( 6/4/2021 ) இரவு அனைத்து
மீடியாக்களும் இவற்றை மிகுந்த பரபரப்புடன் வெளியிடும்….

எக்சிட் போல் மூலம் ஒரு கூட்டம் பணம் பண்ணியது எப்படி
என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான இடுகை கீழே…

இது கடந்த 2016 ஏப்ரல் மாதம்
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்ததையொட்டி
எழுதப்பட்ட இடுகை…

இந்த தேர்தலின்போது என்ன நடக்கும் ….?

————————————————————-

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் ஆகக்கூடும்….
திமுக வோ, அதிமுக வோ – யார் வேண்டுமானாலும் ஆட்சியை
பிடிக்கக்கூடும்.

யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்கிற விஷயத்திற்குள்
போவதல்ல இந்த இடுகை….

ஆட்சியை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் – திட்டம் போட்டு,
” எக்சிட் போல் “-ஐ வைத்து பணம் பண்ண முடியும் என்கிற
யோசனை, சாமர்த்தியம் யாருக்கு வரும்….?

” எக்சிட் போல் ” முடிவால் பங்குகள் விலையை 11 % எகிறச் செய்து,
ஒரே நாளில் பங்கு விற்பனை மூலம் சுமார் 400 கோடி அளவிற்கு
பணம் பண்ணக்கூடிய கேடித்தனம் யாருக்கு வரும் …?

ஒரு 40 கோடியை செலவழித்து, அதன் மூலம்
தாம் விரும்பும் விதத்தில் சில எக்சிட் போல் முடிவுகளை வரவழைத்து,
அதன் மூலம் அந்த 400 கோடி பணத்தை சம்பாதித்த
வில்லாதி வில்லராகிய அந்த வியாபாரிகளின் சாமர்த்தியத்தை
என்னவென்று வியப்பது….!!!

இந்த 400 கோடி, முதல் தவணை தான்….

அசல் முடிவுகள் வெளிவரும்போது, திமுக ஆட்சியைப் பிடித்தால்,
விலை இன்னும் எகிறும்…. அது கூடுதல் லாபம்.

ஒருவேளை ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றால்,
பங்குகள் வீழ்ச்சி அடையும். அதை குறைந்த விலைக்கு வாங்கி
சேர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு தவணை லாபம்.

இந்த வாதத்திற்கு எதாவது அடிப்படை உண்டா என்கிற கேள்வி
வரக்கூடும்…

” Exit Poll Results ” தந்தவர்களில் –
தங்களது நம்பகத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள விரும்பும்
முக்கியமான ஒரு நிறுவனம் – axis-myindia நிறுவனம்.

16- ந்தேதி மாலையில் எக்சிட் போல் முடிவுகளை ஆரவாரத்துடன்
வெளியிட்ட திரு ராஜ்தீப்-சர்தேசாய் – அசல் முடிவுகள் வரும்போது,
தன் மதிப்பீடு பொய்யென்று ஆகி விடுமோ என்கிற அச்சத்தில்,

– சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வில் –
அன்று இரவே – 11.16 க்கு வெளியிட்ட ட்விட்டர் செய்தி இது…..
( இன்று மாலை, நான் வெளியிட்ட முடிவுகளில் –
ஒன்று தவறாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்….!! )

 

rajdeep -2

இன்று ( புதன் -18- ந்தேதி ) காலை 9.26-க்கு
மீண்டும் ராஜ்தீப்-சர்தேசாய் வெளியிட்டிருக்கும்
ஒரு ட்விட்டர் செய்தி –
( மறந்து விடாதீர்கள் நண்பர்களே – நான் வெளியிட்ட
முடிவுகளில் ஒன்று தவறாக இருக்குமென்று நான்
ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டேன்…! )

rajdeep twitter-1

தேர்தலுக்கு முன்னர்,
திமுக குடும்பம் என்னவெல்லாம் செய்தது,
என்னவெல்லாம் செய்யக்கூடிய திறமை வாய்ந்தது என்பது பற்றி
நாம் எவ்வளவு தான் எழுதினாலும் –
அதனை ஏற்றுக் கொள்ளாமல், சிலர்
நாம் தேவையில்லாமல் காழ்ப்புணர்ச்சியால் எழுதுகிறோம்
என்று தமது பின்னூட்டங்களில்
திரும்ப திரும்ப தெரிவித்து வந்தார்கள்…

இப்போதும், இனியும் – நடக்கின்ற செயல்களை பார்த்தாவது –
அவர்களுக்கு உண்மை புரியும் என்று நம்புகிறேன் /
புரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி –
அந்த கூட்டத்தின் முதல் லாபம் இது….

தேர்தலில் அவர்கள் செய்த முதலீட்டின் –
-லாபத்தில் முதல் தவணை
returned now as raise of 11 % share value
or 400+ crore gains in transactions …!!!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது…..!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சினிமா, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    நாட்டில் எத்தனையோ தகிடுதத்தங்கள் நடக்கின்றன. என்ன ஒன்று…சன் தொலைக்காட்சியில், ‘வரவு’ திமுக தலைமைக்கும் போய்ச்சேரும். அவ்ளோதான் விஷயம்.

    சென்னை ரெய்டில், காஷ்மீர் மெகபூபா பெயரும் அடிபடுகிறது, ஆவணங்களில் அவருடைய மற்றும் சகோதரிகளின் பெயரும் இருப்பதாக.

  2. புதியவன் சொல்கிறார்:

    வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு (ஹஸன்) வாக்களிக்க, Ghaziabad, UP லிருந்து 120-5123239 என்ற நம்பரிலிருந்து எனக்கு call வந்தது. நாடு எதை நோக்கிப் போகுதுன்னு பாருங்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.