இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சிகளும்
திரும்பத் திரும்ப திரு.ஸ்டாலின் அவர்களின் மகள் வீட்டில்
வருமான வரி இலாகா ரெய்டு என்று செய்தி வெளியிட்டு
வருகின்றன.
சம்பந்தப்பட்ட வீட்டின் புகைப்படம் கீழே –
இது வீடா… பங்களாவா…?
ஸ்டாலின் மகளுக்கு இவ்வளவு பெரிய பங்களாவா…?
இதை ஸ்டாலின் தான் கட்டிக்கொடுத்தாரா
அல்லது அவரது மாப்பிள்ளை சபரீசனே
தன் சொந்த வருமானத்தில் கட்டினாரா…?
சபரீசன் என்ன தொழில் செய்கிறார்…?
சுமாராக எவ்வளவு சம்பாதிப்பார்…?
இதில் எத்தனை பேர் வசிப்பார்கள் ….?
என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது….!!!
ஒரே ஒரு செய்தி நிறுவனம் மட்டும் கீழ்க்கண்டவாறு
செய்தி வெளியிட்டுள்ளது…
” திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்,
ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர்
எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின்
பங்களா மற்றும் அலுவலகங்களில் வருமான
வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன ” –
என்று.
இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக
பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் ..?
மொத்தத்தில் இந்த ரெய்டு’களின் விளைவாக பணம் ஏதும்
சிக்குகிறதோ இல்லையோ –
திமுக தரப்பின் –
தேர்தல் நேரத்து “பண சப்ளை”
நிச்சயம் பாதிக்கப்படும் என்று புரிகிறது.
ஆனால், திமுக பிரபலங்கள் சொல்லி இருப்பதுபோல்,
இதனாலெல்லாம் தேர்தல் முடிவுகள் மாறி விடுமா என்ன…?
திமுகவின் வெற்றி பண பலத்தை நம்பியா இருக்கிறது…?
காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் அல்லவா
அதைக்குறித்து கவலைப்பட வேண்டும்.
மக்களின் மகோன்னத ஆதரவால் திமுக மாபெரும் வெற்றி
பெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்ன –
மீடியாக்கள் தான் சொல்ல வேண்டும் ….
பணபலம் முடக்கப்பட்டால்,
திமுக வெற்றி பாதிக்கப்படுமா என்பதை…!!!
இந்தத் தலைப்புகளை எல்லாம் பார்த்தேன்.
ஒரு பங்களாவைப் படம் பிடித்ததற்கே திமுக பொதுச்செயலாளர் வந்து அறிக்கை கொடுக்கவேண்டியிருக்கு. (திமுகல உள்ள எல்லோரும் உழைத்துத்தானே ஆயிரக் கணக்கான கோடிகளும் வெளிநாட்டுக் கார்களும் சம்பாதித்திருக்காங்க). பங்களாவை தொலைக்காட்சியில் பார்த்தேன்…என்ன பிரம்மாண்டம். மாறன் சகோதரர்களுக்குப் போட்டியா கட்டியிருப்பாங்க. உழைத்துச் சம்பாதித்த பணமா என்ன? என்று யார் கவலைப்படப் போகிறார்கள்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை” – ஹாஹா. யார் சொல்றா? மத்திய அரசிடமிருந்து தன் மகன்களுடைய கம்பெனிக்கு குறைந்த விலையில் டீசல் பெற்றுக்கொண்ட டி.ஆர்.பாலு (காங்கிரஸ் அரசில்)
பயந்து காலில் விழ அதிமுக அல்ல – காங்கிரஸ் கரங்களில் சிக்கித் தவித்த இந்த மண்புழு பேசுகிறது என்று படிப்பவர்கள் நினைத்துக்கொள்ளப் போகிறார்கள். சோனியாவின் காலில் தயாநிதி மாறன் விழுந்தபோது (செய்திகளில் வந்திருந்தது) ஸ்டாலின் எங்க இருந்தார் என்று தெரியலை.
வீட்டுக்கு வரச்சொல்லும் உதயநிதி – இவர் திமுகவின் ‘விஜய பிரபாகரன்’
“கொந்தளிப்பில் தொண்டர்கள்” – பின்ன..கொத்தடிமைகளுக்கு வேறு என்ன செய்யத் தெரியும்? மேயராக இருந்தபோது ஒன்றும் செய்யாத மா.சு. இப்போ அவசர அவசரமாக சபரீசன் பங்களாவுக்கு வெளியில் (பின்ன அவரை உள்ளயா விடுவாங்க) நின்று ஆதரவுக்குரல் எழுப்பவேண்டிய நிலை. 80+ துரைமுருகனும் போயிருப்பார்..ஒருவேளை வெட்கமாக இருந்திருக்குமோ?
வாட்சப் செய்திகளில் 700 கோடி ரொக்கம், 260 கிலோ தங்கக்கட்டிகள், 30,000 கோடி ரூபாய்க்கான வரி ஏய்ப்பு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படங்களுடன் உலவுகின்றது. ஆனால் செய்தித் தளங்களில் இதைப்பற்றிச் செய்தியில்லை.
இந்தியாவில், பொருளாதாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை இல்லை. இதில் நாம் அமெரிக்காவைப் பார்த்து பாடம் கற்கவேண்டும். அப்போதுதான் வரி ஏய்ப்பு செய்கிறவர்களும் பணம் பதுக்குபவர்களும் கொஞ்சமாவது கவலைப்படுவார்கள்.
சபரீசன் – வருமான வரித் துறை சோதனை.!!
மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்; சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.
வருமான வரித் துறை வாயிலாக சோதனை நடத்தினால், நாங்கள் பயந்து விடுவோமா?’
என, ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்தில் கொந்தளித்திருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
அவரது மருமகன் சபரீசன் மற்றும் அவரின் நண்பர்கள் அண்ணா நகர் எம்.எல்.ஏ.,வின் மகன் கார்த்திக் மற்றும், ‘ஜீ ஸ்கொயர்’ நிறுவனத்தின் பாலா ஆகியோரின், இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் தகவல் தான், ஸ்டாலினை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
வருமான வரித் துறையினர் எந்த அடிப்படையில், சபரீசனை குறி வைத்தனர் என்று விசாரித்த போது, சுவாரசியமான தகவல்கள் வந்து விழுந்தன.
சபரீசன் வசிப்பது, கிழக்கு கடற்கரை சாலையில், ஒன்றரை ஏக்கர் பரப்பில், பிரமாண்டமாக கட்டப்பட்ட மாளிகையில்.
அது, ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு சொந்தமானது.
சபரீசன் இங்கிருந்து தான், தமிழகம் கடந்தும் அரசியல் ரீதியில் செயல்படுகிறார்.
தி.மு.க.,வின் வெற்றிக்காக, பிரஷாந்த் கிஷோரின், ‘ஐ – பேக் டீமோடு’ ஒப்பந்தம் போட்டு, ஓராண்டாக அவர்களை தமிழகத்தில் களம் இறக்கி விட்டதில் துவங்கி, கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை இறுதி செய்தது வரை எல்லாமே, சபரீசன் இங்கிருந்து செய்த பணிகள்.
அவரது நெருங்கிய நண்பர் அண்ணா நகர் தி.மு.க., எம்.எல்.ஏ., மோகனின் மகன் கார்த்திக்.
இன்னொருவர், ‘ஜீ ஸ்கொயர்’ என்ற, நிறுவனத்தின் அதிபர் பாலா.
தி.மு.க.,வில் இவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலைக்கு சென்றது தான், இப்போது வருமான வரி சோதனை நடப்பதன் பின்னணி என்கிறார்கள்,
கட்சி நிர்வாகிகள் சிலர் தமிழகத்தில், பெரிய தொழில் நிறுவனங்கள், ஆலைகள் அல்லது கம்பெனிகள் அமைக்க இடம் தேவைப்பட்டால், ‘ஜீ ஸ்கொயர்’ நிறுவனத்தை அணுகுவர்.
நிறுவனத்துக்கு சொந்தமாகவே, சென்னையிலும், சுற்றியுள்ள ஊர்களிலும் எக்கச்சக்கமான நிலங்கள் உள்ளன.
தேவையான இடத்தில், தேவையான அளவு நிலம் வாங்கித் தர முடிகிறது என்பதால், இந்த நிறுவனத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பில் இருக்கின்றன.
இதனால், பெரிய தொழில் அதிபர்களை, சபரீசனும், அவரின் நண்பர்களும் சுலபமாக சந்தித்து, கட்சிக்கு தேர்தல் நிதி திரட்ட முடிகிறது.
அவ்வாறு குவிந்த நிதியை, சபரீசன் வீட்டில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் பிரித்து அனுப்பி உள்ளனர்.
அதுபோக, கணிசமாக மீதி இருக்கும் நிதி, இந்த மூவருக்கும் சொந்தமான இடங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என முகவரி, போகும் வழி, ‘மேப்’ எல்லாம் போட்டு வரித் துறைக்கு தகவல்கள் போயிருக்கின்றன.
அதன் அடிப்படையில், ஒரு வாரமாக மூவரையும் கண்காணித்த பிறகே, ரெய்டுக்கு உத்தரவு பெறப்பட்டது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரமாக இருப்பதால், இந்த ரெய்டுக்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதும், உயர் அதிகாரிகளுக்கு தெரியும்.
என்றாலும், கருப்புப் பண நடமாட்டமும், தேர்தல் சார்ந்ததாக இருப்பதால், ரெய்டு போவதை தள்ளிப்போட முடியாது என, அவர்கள் தீர்மானித்தனர்.
சபரீசனும், அவரது நண்பர்களும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, மும்பை, டில்லி, நாக்பூர் போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
அங்கெல்லாம், அவர்கள் எங்கே தங்கினார்கள், யார் யாரை சந்தித்தார்கள் என்ற தகவல்களும் வரித் துறைக்கு கிடைத்துள்ளன.
சபரீசன் ஏழு கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார்.
அவரது உறவினர் பிரவீன் கணேஷ், 12 கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார்.
அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மின் உற்பத்தி, தாமிர உற்பத்தி, நிதி, கல்வி சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில், சபரீசனும், அவரது ஆட்களும் சாதாரண தொழில் அதிபர்களிடம் கூட, 25 முதல்,- 50 லட்சம் வரை நிதி வசூல் செய்துள்ளனர்.
அடுத்து ஆட்சிக்கு வருவது நாங்கள் தான்; நல்லபடி தொழில் நடக்க வேண்டும் என்று தானே விரும்புவீர்கள்?’
என்ற, இரண்டே வாக்கியங்கள், தொழிலதிபர்களை பணிய வைத்து விடும் என, நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டார்.
இதில் என்ன பிரச்னை என்றால், அந்த தொழில் அதிபர்களில் பலரிடமும், இதற்கு முன் தேர்தல் நிதி வசூல் செய்தது உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தான்.
இப்போது சபரீசன் வாயிலாக, நேரடியாக தலைமையே வசூலில் இறங்கியதால், அந்த, ‘லோக்கல்’ புள்ளிகளுக்கு பெரும் இழப்பு.
இதை அவமதிப்பாகவும் பார்க்கின்றனர். அவர்களும் வரித்துறைக்கு போட்டுக் கொடுத்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.
இந்த சோதனைகளை நடத்துவதால், வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பணத்தையும் எடுக்க முடியாத அளவுக்கு சிக்கல் உருவாகி விடும்.
பதற்றத்தில் பணத்தை வெளியே எடுக்க மாட்டார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, அது கட்டுப்படுத்தும் என்ற அளவில் தேர்தல் கமிஷனுக்கு அதுவே திருப்தியாக இருக்கும்.