“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்ற
ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்
சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –
மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையான
மக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி….
( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டு
கொடுக்கப்பட்டாலும் கூட –
அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…
இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு
அறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்
சிறுபிள்ளைத்தனமானது….)
அது கிடக்கட்டும்….
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின்
குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக
சென்னை, காமராஜர் அரங்கில் இளையராஜா
அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
முழுக்க முழுக்க எம்.எஸ்.வி. அவர்களின்
இசையமைப்பில் உருவான பாடல்களால் நிறைந்த நிகழ்ச்சி அது ….
அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளும்
வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
விழாவின் இறுதியில் ரஜினியை, இளையராஜா
அவர்கள் மேடைக்கு அழைத்தபோது நிகழ்ந்ததன்
காணொலி வடிவம் கீழே –
……
……
Excellent impromptu speech by Rajni. இந்த நிகழ்ச்சியின் காணோளி கிடைத்தாலும் தயைகூர்ந்து பகிருங்கள். நன்றி.
Rajiniyaal viruthukku perumai…Whenever Rajini gets award, then some people started politics. But Rajinikanth already won/living millions people heart as a “GREAT HUMAN”. Thank you KM sir
ரஜினி ரொம்பவே யதார்த்தமான மனிதன். எளிமையானவரும்கூட. அவ்வளவு பணம் புகழ்…இதனைத் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்றால்தான் நிதானமாக வாழ இயலும். 20 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்கலாம். இல்லை விஜயகாந்தாவது (ஒரு உதாரணத்துக்குத்தான். அவரோட மச்சான் மனைவி மகன் கும்பலை கனவிலும் நினைக்கமுடியாது) நல்ல ஆரோக்கியமாக இருந்திருக்கலாம். நம் தமிழக அரசியல் இன்னும் நல்லா இருந்திருக்கும். இல்லைனா பாருங்க, பத்திரிகைகள் இன்று வலிந்து வலிந்து வீடு என்று எழுதுகின்றன, பார்த்தால் உலகப் பணக்காரரான பில் கேட்ஸ் வீட்டைவிடப் பெரிய பங்களாவாக இருக்கிறது. (பெண் வீடு என்று எழுதவும் தயங்கி மாப்பிள்ளை வீடு என்று தலைப்பு போடுகின்றன, வாங்கின காசுக்காக) ஊழலைப் பற்றி இவங்க நமக்குப் பாடம் எடுக்கறாங்க.
எம்.எஸ்.வி, ரஜினி, இளையராஜா போன்றவர்கள் பற்றி நிறைய எழுதலாம். ஒரு வகையில் இளையராஜாவின் ஆதிக்கம் திரையுலகில் வீழ்ந்ததற்கும் ரஜினி ஒரு சாட்சி. ரஜினி கேட்டுக்கொண்டும் இளையராஜா தேவையில்லாமல் மறுத்தது, இளையராஜாவின் திரையுலகவாழ்க்கையை மலையிலிருந்து இறங்கிச் செல்லும் பாதைக்குக் கொண்டுசென்றது.
ரஜினி செய்த தவறு என்று என்னைக் கேட்டால், ‘அரசியலுக்கு வருவேன் வருவேன்’ என்று வெற்று நம்பிக்கையைத் தொடர்ந்து விளைவித்ததுதான். அதுதான் அவரைப் பற்றிய நெகடிவ் கருத்தாக, அவர் காலத்துக்குப் பின்னும், ஒரு குறையாக இருக்கும்.
// So true, he sets example.
Thank you Sir. //
(the above mail was received
in my personal mail box
from friend P.K. )
-with all best wishes,
Kavirimainthan
ரஜினியைப் பற்றி சாருஹாசன் ஒரு இண்டர்வியூவில் (சில வருடங்களுக்கு முன்பு) சொன்னது நினைவுக்கு வந்தது.
இந்தத் தமிழகத்துல குறைந்த பட்ச எதிர்ப்போட (அதாவது 60 சதவிகித எதிர்ப்போட) வந்த ஒரே முதலமைச்சர் – கடந்த 50+ வருடங்கள்ல, ஜெயலலிதா மட்டும்தான். மத்தவங்கள்லாம் 65 சதவிகித எதிர்ப்போடத்தான் முதல்வராயிருக்காங்க. ரஜினிக்கு ஒரு தனி மனிதனா தமிழக மக்களின் 90 சதவிகித ஆதரவு உண்டு. ஆனால் அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் அவருக்கு நிச்சயம் 60 சதவிகிதமாவது எதிர்ப்பு வாக்குகள் இருக்கும், அவ்வளவு பேர் அவரைத் திட்டுவார்கள். மத்த அரசியல்வாதிகளுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ரஜினிக்கு, அவருடைய புகழை முழுமையாக இழந்துவிட்டுத்தான் அரசியலுக்கு வரணும், அதாவது தன்மீது அன்பு செலுத்துபவர்களைத் தியாகம் செய்யணும். அப்படிச் செய்யவே மாட்டார். அதனால அரசியலுக்கு வரவே மாட்டார் என்று அப்போ சொல்லியிருந்தார். எதேச்சையாக அந்தக் காணொளியை திரும்பவும் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது.
அதே காணொளில தெளிவா சொல்லியிருக்கார்…கமலஹாசனுக்கு 5 சதவிகித வாக்குகள் கூட எப்போதும் கிடைக்காது என்று.