அதிசயமாக இப்படியும் ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பு …!!!

….
….

….

மழை வருது; மழை வருது; குடை கொண்டு வா…..!!!

அதிசயமாக,
அபூர்வமாக,
தமிழக ஊடகங்களிலேயே முதல் முதலாக –

இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது…!!!

—————————————————————

அதிமுக ஆட்சிக்கு வரும் என்கிறது அசோகா அறக்கட்டளை-
வாக்காளர் கல்வி கருத்து கணிப்பு

Published: Tuesday, March 30, 2021, 14:32 [IST] சென்னை: சட்டமன்ற
தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின்
வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்
என்று அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம்
நடத்திய கருத்து கணிப்பு கூறுகிறது.

அசோகா அறக்கட்டளை மற்றும்
வாக்காளர் கல்வி மய்யம் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து
சட்டமன்ற தேர்தலில் பெண்கள் விவசாயிகள், தொழிலாளர்கள்
உள்ளிட்டோர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்ற
கருத்து கணிப்பை நடத்தினர்.

இதில், 52% விவசாயிகளும் 51% பெண்களும்
36% தொழிலாளர்களும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக
கருத்து கணிப்பு கூறுகிறது

கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில்
தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக 34% பேரும்
வீழ்ச்சியடைந்துள்ளதாக 30% பேரும் தெரிவித்துள்ளனராம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு
மிகச்சிறப்பு என்று 28% பேரும்
சிறப்பு என்று 39% பேரும் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன்
தள்ளுபடி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு,
கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, வேளாண் பாதுகாப்பு
மண்டலம் அறிவிப்பு, குடிமராமத்து ஆகியவை மக்களுக்கு
பயனுள்ளதாக இருப்பதாக 54% பேர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் மக்களை
சென்றடைந்துள்ளதோடு, அதனால் மக்கள் பயனடைந்துள்ளனர்
என்பதை காட்டுவதாக உள்ளது. இத்திட்டங்கள் அதிமுகவிற்கு
தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்று தரும் என்று
தெரியவந்துள்ளது.

அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41% பேரும் –
அலை உள்ளதாக 22% பேரும் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் வாக்குகளை
கவர்ந்த தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உள்ளார் என்று 40% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இளைஞர்களின் வாக்குகளை
கவர்ந்த தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று 27% பேரும்
தலித் மக்களை கவர்ந்த தலைவராக முதலமைச்சர் இருப்பதாக
32% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
என்று 32% பேரும் –

மு.க. ஸ்டாலின் என்று 30% பேரும் கருத்து
தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பினரின் கருத்து கணிப்பு
தெரிவிக்கிறது.

—————————-
links –

https://tamil.oneindia.com/news/chennai/ashoka-trust-opinion-poll-says-admk-will-be-back-in-power-416437.html

https://tamil.asianetnews.com/politics/the-votes-of-women-farmers-and-workers-go-to-the-aiadmk-qqrvhp

.
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அதிசயமாக இப்படியும் ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பு …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இது போல நான் 7 கருத்துக்கணிப்புகளை (அதிமுகவுக்குச் சாதகமான) பார்த்தேன். ஆனால் நான் அவைகளை பொருட்படுத்துவதில்லை. மக்கள் எப்போதுமே, யார் கருத்துக்கணிப்பு எடுக்கிறார்கள் என்று பார்த்து அதற்கு ஏற்றமாதிரி தங்கள் குரலை மாற்றிக்கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு. இப்போ நக்கீரன், விகடன், தினகரன், தந்தி தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, பி.கே டீம் போன்றவர்கள் கேட்டால், திமுகவுக்கு வாக்களிப்பேன் என்றும், நமது எம்ஜிஆர் பத்திரிகை கேட்டால் ரெட்டை இலைக்கு என்றும் வாய் கூசாம சொல்லிடுவாங்க.

  As I mentioned earlier, thatstamil, Minnambalam போன்றவை திமுகவிடம் நிறைய காசு வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஏற்ற மாதிரி செய்திகளை மட்டும் போடுகிறார்கள். ஆ.ராசா ஆபாசமாகப் பேசியதைப்பற்றி எழுதாத இவர்கள், அவர் மன்னிப்பு கேட்டதை மட்டும் நிறையதடவை செய்தியாக வெளியிட்டனர். இந்த மாதிரி விலைபோன அல்லது திமுக கட்சி ஊடகங்களை நம்பாமல் இருப்பதுதான் நமக்கு நல்லது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இன்னுமொரு கருத்துக் கணிப்பு இன்று மாலை
  வெளிவந்திருக்கிறது –

  ———————————————————————-

  அதிமுகவுக்கு 131 இடங்கள் கிடைக்கும்.. மீண்டும் ஆட்சியமைக்கும்.. புதுயுகம் சர்வே
  Published: Tuesday, March 30, 2021, 17:57 [IST] சென்னை:

  அதிமுக 131 இடங்கள் பிடித்து மீண்டும் ஆட்சியமைக்கும், திமுக 102 இடங்கள் பெறும் என்று புதுயுகம் டிவி நடத்திய ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 44% வாக்குகளை பெற்று, 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று புதுயுகம் டிவி கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

  https://tamil.oneindia.com/news/chennai/puduyugam-tv-says-aiadmk-will-capture-the-power-again-416461.html?story=4

  • புதியவன் சொல்கிறார்:

   ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர், எந்த அளவீடுல தேர்ந்தெடுத்திருப்பாங்கன்னு தெரியாது, சர்வே எடுக்கறவங்க மேனேஜ்மெண்டுக்கு திமுக பிடிக்காது/பிடிக்கும் என்பதற்கு இணங்க மாற்றுவாங்க….இன்னும் எத்தனையோ தகிடுதத்தம் இருக்கிறது. There is no accountability. I hope you would remember, கருணாநிதி 1 கோடிப்பேர் கையெழுத்து இயக்கம்னு எதோ ஒரு வெட்டி வேலைக்கு ஆரம்பித்து, அவரது கட்சியினர் (யார் இதனை பொதுமக்களிடமிருந்து வாங்கணுமோ அவர்கள்) ஒரு மூலையில் நின்றுகொண்டு தாங்களே பலவிதமாக கையெழுத்திட்டதுலாம் செய்தித் தாள்களில் அப்போது வந்து பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரித்தான் இதெல்லாம். இன்னொரு கருத்துக் கணிப்பு பிரஹஸ்பதி, 20 கேள்விகள் கேட்டு குறித்துக்கொள்கிறான். யாருக்கேனும் பொறுமை இருக்குமா, எதுக்கு முகம் தெரியாதவனிடம் உண்மையைச் சொல்லப்போறாங்க? அவர்களை சுத்தல்லதான் விடுவாங்க.

   நக்கீரன் கோபால், கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதற்காக தேர்தல் கணிப்பு எடுத்து, 140 இடங்களுக்கு மேல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பை வெளியிட்டு, வாக்குச்சீட்டுகள் எண்ணும் அன்று, அதிகாலையிலேயே கருணாநிதி தொலைக்காட்சிக்குச் சென்று நல்லா காலை உணவு சாப்பிட்டு காபி குடித்துவிட்டு, நாங்கள் சொன்னதுதான் நடக்கப்போகிறது என்றெல்லாம் பேசி, அரை மணி நேரத்தில் நிலைமை தலைகீழ் என்றதும், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓட்டம்பிடித்தார் கோபால் (அவர் ஓடினாரா இல்லை கருணாநிதி கட்சியினர் துரத்தினார்களா என்று தெரியாது). பிறகு திரைப்படம்தான் போட்டாங்க.

   எதுக்குச் சொல்றேன்னா, கருத்துக்கணிப்புகளே பல தகிடு தத்தங்களோட பண்ணறாங்க. நாம உண்மையைச் சொல்லி எதுக்கு அந்தக் கட்சித் தலைவர்ட்ட கெட்ட பெயர் சம்பாதிக்கணும் என்றெல்லாம் நினைக்கறாங்க. கிளி ஜோசியம் மாதிரித்தான் இவை.

   ஒரு காலத்தில் இதை குறைந்தபட்ச மனசாட்சியோட ஆரம்பித்தாங்க. நக்கீரனும் ஆரம்பத்துல அப்படிச் செய்தது. பிறகு எப்போ கட்சிப் பத்திரிகையா விகடன், நக்கீரன் போன்றவை அடையாளம் காணப்பட்டதோ (குமுதத்தை நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அது சினிமா கவர்ச்சிப் பத்திரிகை) அப்போதே அவைகளின் கருத்து கணிப்புகளுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. பாண்டே ஓரளவு உண்மையைச் சொல்லணும் என்று முயற்சித்தார். அவருக்குப் பிறகு அந்த மாதிரி எண்ணமே யாருக்கும் வந்த மாதிரித் தெரியவில்லை.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  கருத்து கணிப்புகளை நானும் முழுவதுமாக
  நம்புவதில்லை; சில ஒப்பீடுகளுக்காக
  அவற்றை கொஞ்சம் உள்வாங்கி படிக்கிறேன்…
  அவ்வளவே…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. வணக்கம் தமிழா சொல்கிறார்:

  திமுகவின் தோல்வி 100% உறுதியானது..
  திமுக தான் ஜெயிக்கும் என்று கருத்து திணிப்பு நடத்தும் ஊடகங்கள் மே 2 க்கு பிறகு..
  ஐபேக் எப்படி சொதப்பியது? திமுக தோல்வி எப்படி ஏற்பட்டது என்பதை so-called வல்லுனர்கள் வைத்து மணிக்கணக்கா செய்தி ஓட்டுவாங்கோ பாருங்களேன் !!!!!

 5. Arumugam சொல்கிறார்:

  விமரிசனத்தில் எழுதுவது ஒரு பெரியவர் என்று நினைத்து நேற்றைக்கு விலாவரியாக ஒரு பதில் அளித்திருந்தேன்.

  இபிஎஸ் ஆட்சியில் எப்படி பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போனது என்று. உடனடியாக அதை இந்த தளத்தை நடத்துபவர்கள் அழித்து விட்டனர்.

  சந்தேகம் வந்தவுடன் எங்கள் அலுவலக டாட்டா சைபர்செகுரிட்டி அனலிஸ்டுகளை வைத்து இதை ஆராய்ந்தோம் இதில் ஒரே நபரே ஒரே ஐபியில் இருந்து பல பேர்களில் ஒரே கருத்தை பலவடிவில் எழுதுவது தெரிந்தது. இங்கே எழுதும் எவருக்கும் உண்மைப்பெயரோ, புகைப்படமோ, சமூக வலைதள லிங்குகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆக மொத்தம் இது ஒரு ரேடியோ ருவாண்டா போன்ற ஒரு தளம். முழுக்க முழுக்க யாருக்கோ ப்ரோபகாண்டா பண்ண அமைக்கப்பட்டிருக்கிறது.

  இன்னொரு சுவாரிஸ்யம் இங்கே வரும் விசிட்டர் எண்னிக்கை ஆக சொற்பம். அதுவும் ஒரே ஐபியில் இருந்து வருபவை.
  இதை போட்டவுடன் இதை அழித்து விடுவார்கள் அல்லது புனைபெயர் வைத்துக்கொண்டு ஒரே நபர் பல பேரில் எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் செய்வார்.

  நேரத்தை வீணாக்க விரும்பினால் இங்கே கும்மியடிக்கலாம்

  ஆறுமுகம்
  Diginfo Creative Solutions,
  100 ft Road, Velacherry

  • ஸ்ரீதர் சொல்கிறார்:

   Ha…ha…. Can feel the burning stomach.

   Nakeeran, vikatan, …. ஜல்லி எல்லாம் எந்த வகையோ “அய்யோ ஆறுமுகம்”.

   கொஞ்சம் அதையும் ஆராய்ந்து அங்கு போய் சொல்லி “அய்யோ ஆறுமுகம்” நடுநிலை ஜல்லி அடிப்பாரா.

   ஸ்ரீதர்
   100 ft road, Vadapalani

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.