பா.ஜ.க-வுடன் கூட்டணி காரணமாக அதிமுக தோற்குமா …..?


….
….

….

தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் நடத்திய
கருத்துக் கணிப்புகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.

மக்களிடம் நடத்தப்படும் நேரடி பேட்டிகளையும்
பார்க்கிறோம்.

எங்கேயுமே – அதிமுக ஆட்சிக்கு விரோதமாக
தீவிரமாக கருத்துகள் எதுவும் வெளிப்படுவதில்லை;
ஆட்சிக்கு எதிரான anti-incumbency மனோபாவம்
நிச்சயமாக மக்களிடத்தே இல்லை.

சாதனைகளை விட, மக்களுக்கு விரோதமாக
எடப்பாடி அரசு எதையும் செய்யவில்லை என்பதையே
அவர்கள் ஒரு positive point ஆகப் பார்க்கிறார்கள்.

ஆனால் மெஜாரிடி தமிழ் மீடியாக்கள் அதிமுக அரசுக்கு
எதிராகவும் திமுக-வுக்கு சாதகமாகவுமே செயல்படுகின்றன…

அடுத்து திமுக ஆட்சி தான் வரும் என்று பொதுவாக
அவர்கள் நினைப்பதால், பதவிக்கு வரக்கூடியவர்களுக்கு
சாதகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்கள் போலும் ….!!!

கூடவே.. இன்ன பிற…………. காரணங்களும்….!!!

பாஜக மீது பொதுவாக தமிழ் மக்களிடம் ஒரு வெறுப்பு
இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை….

கருத்து கணிப்புக்காக பேட்டி காண்பவர்களும்,
மீடியாக்களும் –

பாஜக மீது பொதுவாக மக்கள் காட்டும் வெறுப்பை,
அதிமுக ஆட்சிக்கு எதிரானதாக சித்தரித்து –
அதிமுக அரசுக்கு எதிரான தீர்ப்பு என்று காட்டுகிறார்கள்.

நான் முதலில் எழுதிய இடுகையில்,

துவக்கத்தில் திமுக படுசுலபமாக வெற்றி பெற்று
ஆட்சியை கைப்பற்றும் என்கிற நிலை இருந்தது….

ஆனால் இன்றைய தேதியில், கடுமையான ஒரு போட்டி
உருவாகி இருக்கிறது…. திமுக நிச்சயமாக வெற்றி பெறும்
என்று சொல்லக்கூடிய நிலை இன்று இல்லை என்று
எழுதி இருந்தேன்.

சில வாசக நண்பர்கள் (திமுக அனுதாபிகள்) நான்
ஒருதலைப்பட்சமாக எழுதுவதாக குறை கூறி இருந்தார்கள்>

அதன் பின் நான், அதிமுக ஆட்சியை விட, திமுக ஆட்சி
எந்த விதத்தில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தரும்
என்பதை விளக்கி எழுதுமாறு அவர்களுக்கு கோரிக்கை வைத்தேன்…

ஆனால், வருகின்ற பின்னூட்டங்கள் எதுவுமே,
திமுக-வால் எந்த விதத்தில் எடப்பாடி அரசை விட
சிறப்பான ஆட்சியைத் தர முடியும் என்கிற கேள்வியை
தொடக்கூட இல்லை;

எழுதி இருக்கின்ற வெகு சிலரும் கூட பாஜகவுடன்
கூட்டு வைத்திருப்பதற்காக அதிமுகவை குறை கூறி
இருக்கிறார்களே தவிர, திமுக எந்த விதத்தில்
சிறப்பான ஆட்சியைத் தரும் என்கிற விஷயத்தை
தொடவே இல்லை;

————

எழுகின்ற கேள்வி –

பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்கிற
ஒரே காரணத்திற்காக –

அதிமுக ஆட்சி போய் திமுக வரவேண்டும் என்று
எத்தனை பேர் விரும்புவார்கள்….?
(திமுக கட்சியினரையும், அனுதாபிகளையும்
விட்டு விடுங்கள் – அவர்கள் நிலை தெரிந்ததே…
நான் சொல்வது பொதுவான மக்களைப்பற்றி … )

என் மனதில் படுவது – பாஜகவுடன் கூட்டு
வைத்திருக்கிறது என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும்
அதிமுக மீது கோபமாக இருப்பவர்கள்,

-அதற்காக
நிச்சயமாக ஒட்டு மொத்தமாக அனைவரும் திமுக-வுக்கு
ஓட்டு போட்டுவிட மாட்டார்கள்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு
கொஞ்சம் குறையக்கூடும் என்றாலும் கூட –

அவர்கள் அதிக பட்சம் செய்யக்கூடியது –
பாஜக போட்டியிடும் 20 இடங்களில் மட்டும்
பாஜக-விற்கு எதிராக (திமுக-வையும் தவிர்த்து விட்டு)
வேறு எந்த கட்சிக்காவது ஓட்டு போடக்கூடும்.

எனவே, இந்த வகையில் பார்த்தால், பாஜக-வால்
அதிமுக தோற்கும் என்கிற கருத்து அதிகம் வலுப்பெறவில்லை
என்றே தோன்றுகிறது.

பார்ப்போம்…. இன்னும் ஒரு வாரம் தானே இருக்கிறது…!!!

வழக்கம்போல், நண்பர்களின் கருத்தூட்டங்களை
எதிர்பார்க்கிறேன்.

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to பா.ஜ.க-வுடன் கூட்டணி காரணமாக அதிமுக தோற்குமா …..?

 1. யாராக இருந்தாலென்ன ? சொல்கிறார்:

  சிரிக்க மட்டும் –

 2. யாராக இருந்தாலென்ன சொல்கிறார்:

  சிரிக்க மட்டும் –

 3. விவேகன் சொல்கிறார்:

  அய்யா,
  இது தமிழகத்திற்கான தேர்தலாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். நம்மை நேரடியாக ஆளப்போகிறவர்கள் அடுத்து ஆட்சி அமைக்க போகின்ற அவர்கள் மட்டுமே.வலுவான மாநில கட்சி ஆட்சி அமைக்கும் பொழுது மத்திய அரசால் தமிழகத்தை நேரடியாக ஆள முடியாது .அடுத்து அமைய போகிற நமது தமிழக அரசு மட்டுமே நம்மை நேரடியாக நம்மை பாதிப்படையவோ, அல்லது நல்லது செய்யவோ இயலும்.இதை புரிந்து கொள்ளும் நிலையில் நமது ஊடக அறிவு ஜீவிகள் இல்லை, மேலும் மக்களையும் அவ்வாறே அறிவீலி களாக மாற்ற முயலுகிறார்கள்.

  இதைப்போன்ற அறிவு ஜீவிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் யாவரும், தொடர்ந்து மத்திய அரசு தான் தமிழகத்தை ஆளுகிறது என்று நம்ப வைக்க படுகிறார்கள்.அதிலும் முட்டாள் தனமாக அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இதே மத்திய அரசாங்கம் தமிழகத்தை கண்டு அஞ்சி நடுங்கும் என்றும் உறுதியாக நம்ப வைக்கப்படுகிரறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளால் நிரம்பி வழியும் திமுக பெரும்புள்ளிகளின் மீது ஒரு வருமான வரி ரெய்டு புரளி கிளப்பப்பட்டாளே,இந்த நாளைய மாவீரர்கள் மத்திய அரசாங்கத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயமோ.
  இதில் இந்த மாவீரர்களுக்கு வோட்டு போட சொல்லி ஒரு கூட்டம் வலிய முனைவது பரிதாபத்திற்குரியது.
  இவர்களின் பின் தொடரும் படிப்பறிவில்லாதவர்களின் நிலை கவலைக்குரியது.

 4. Surya சொல்கிறார்:

  The only reason why ADMK has alliance with BJP is because ADMK got blackmailed by BJP. For someone to get blackmailed, they should have done something wrong. So, what does ADMK do wrong? May be, KM sir and other ADMK fans may have some inside news on this 🙂

  • விவேகன் சொல்கிறார்:

   Dear SURYA Sir,
   Its because of the fear of income tax raids. ADMK also corrupted. No doubt about it. . Here the debate is who is the better deal for selection, with minimum corruption, minimum rowdism, fear for people, fear for majority peoples sentiments, fear for gods etc..etc….
   Incase if you want to justify for DMK, please list down the valuable reasons. Nobody is going to object you.
   But here we always witnessing the peoples, whoever asking support for DMK, dont provide valuable reasons for thier request, and demand.
   They keep on singing the same song, that BJP is ruling the ADMK. so that they want to punish the ADMK.
   But how these innocent people still dont know ,that same BJP, can arm twist the DMK with income tax raids in future.
   Poor illiterate people….

 5. புதியவன் சொல்கிறார்:

  1. அதிமுக ஆட்சியை, அதுவும் எடப்பாடி தலைமையில் உள்ள ஆட்சியை குறை சொல்வதற்கில்லை. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக எடப்பாடி எதுவுமே செய்ததில்லை. கொஞ்சம் அதீத உதவிகளை (எனக்கு அவை பிடிப்பதில்லை. உதாரணம் இரண்டு. 1. தான் வெட்டிய குழியை மூடாததால் தன் மகன் அதில் விழுந்து இறக்க நேர்ந்தபோது, அந்தக் குடும்பத்துக்கு அரசு பணத்தைக் கொடுத்தது 2. தப்லீக் கொரோனா பரவல் கேஸ்களுக்கு அவர்கள் விருப்பப்படி தமிழகத்தில் உதவி செய்தது) எடப்பாடி செய்திருக்கிறார். எடப்பாடி சாமானிய தமிழனின் முகம்.

  2. அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருந்தது என்று சொல்வது ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக paid media சொல்வது அது. திமுக, காங்கிரஸ் காலடியில் விழுந்து கிடந்தது போல, ஏற்கனவே நான் எழுதியிருந்ததுபோல, அடிமையாக இருந்த கதை 80லிருந்தே திமுகவுக்கு உண்டு. காங்கிரஸை விலக்கி எம்.பி. தேர்தலில் திமுக நின்றால் அது வெற்றி பெற இயலாது. அந்த தைரியம் கொண்டவர் ஜெ. மட்டும்தான். அதிமுக, பாஜகவின் முகம் என்று இப்போ ராகுல்காந்தியும் சொல்கிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதிமுக பாஜகவின் முகமாக இருந்திருந்தால், காங்கிரஸ் செய்ததுபோல 63 இடங்களை கையை முறுக்கி வாங்கியிருக்கலாமே. 10 சதவிகித இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியிருக்கலாமே. இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். (BJP is capable of such tactics. They are not to be trusted. But EPS played beautifully and took decision on his own. நடுநிலைல நாம் அவதானித்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்) ராகுலின் முகமூடியை விலக்கினால் அங்கு தெரிவது கிறிஸ்துவர்களுக்கான, வெளிநாட்டு நலனுக்காக உழைக்கும் ஒருவரின் முகம்தான். (தமிழகத்தில் அவர் கிறிஸ்துவ கல்லூரிகளுக்கும் சர்ச்சுகளுக்கு மட்டும்தான் சென்றிருக்கிறார்-பெரும்பாலும் என்பது செய்திப்பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்) Rahul’s strategy is not wrong, as he wants to consolidate his voters.

  3. ராகுல் முன்னிலையில் திமுக ராகுல் (ஸ்டாலின்) சொல்லியிருக்கிறார், தமிழக மக்களுக்கு எதிரான மீத்தேன் (கையெழுத்து போட்டது தமிழக ராகுல்), ஸ்டெர்லைட் (கையெழுத்து போட்டது திமுக+காங்கிரஸ்), நீட் (கொண்டுவந்தது திமுக+காங்கிரஸ்) போன்ற பல திட்டங்களை பாஜக கொண்டுவந்தது என்று சொல்லியிருக்கிறார். காசை வாங்கிவிட்டதால், பத்திரிகையாளர்களும் அதனையே விளம்பரம் செய்கிறார்கள். காங்கிரஸ் திமுக ஆட்சியில்தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சிறைவைக்கப்பட்டது, கொல்லப்பட்டது நடந்தது. இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அவர்களின் உரிமைகளை நீக்கி கொன்றுகுவித்ததும் நடந்தது. ராகுலின் தந்தை கொல்லப்பட்டதும் யாரால் என்பது ராகுல் மறந்திருக்கலாம். ஆனால் இன்று தமிழகத்துக்கு அப்பால் செல்லாக் காசாக ஆகிவிட்ட ராகுலுக்கு திமுக என்ற ஊன்றுகோல் தேவையாக இருக்கலாம்.

  4. பாஜக Blackmail செய்தது என்பதற்கு ஏதாவது உதாரணம் சொல்லாமல் சும்மா அதையே சொல்வது, இந்த paid ஆட்கள்தான். திமுகவை காங்கிரஸ் blackmail செய்ததற்கு எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

  திமுக எம்பிக்களால் இதுவரை என்ன செய்ய முடிந்தது? ஸ்டாலினும் இந்த சாராய ஆலை முதலாளிகளான திமுக கட்சிக்காரர்களால், தனியார் கல்லூரிகளை நடத்தும் திமுக காரர்களால், தனியார் பேருந்துகள் நடத்தும் திமுக காரர்களால் ஆட்டிவைக்கப்படுகிறார். உதயநிதி வீட்டிற்கு வெள்ளையடிக்கக்கூட ரெடி என்று சொன்ன திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போன்ற கொத்தடிமைகளைக் கொண்டதுதான் திமுக என்ற கட்சி.

  நிற்க…. பாஜக என்ற கட்சிக்கு தமிழகத்தில் உணர்வு பூர்வமாக வரவேற்பில்லை. இது மாறுவதற்கு நிறைய காலமாகும், ஆனால் நிச்சயம் நடக்கும். பாஜக கூட்டணி என்ற காரணத்தாலும், தவறாக பாஜகவின் முகம் என்று மீண்டும் மீண்டும் இந்த paid media, paid தொலைக்காட்சிகள் செய்வதால் (தந்தி தொலைக்காட்சி ஒரு உதாரணம். பாண்டே நியாயத்தை முன்னிறுத்தியதால் திமுகவின் அழுத்தத்தால் அவரை தொலைக்காட்சியைவிட்டு வெளியே அனுப்பியது. திமுக கட்சிக்காரரான குணசேகரன்களால் ஆக்கிரமிக்கப்பட்டது இந்தத் தொலைக்காட்சிகள்), முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் அதிமுகவை விட்டு விலகுகிறார்கள். இதுதான் அதிமுகவுக்கான பெரும் பாதிப்பு. இது எதிர்காலத்தில் மாறும் (எப்படி என்றால், இந்து வாக்காளர்கள் பாஜக பக்கம் செல்வர். Polarization will make BJP as a sizeable party having more than 20 percent vote bank) . காங்கிரஸ் தளம் மிக மிகச் சுருங்கும்.

  சிறுபான்மையினர் வாக்கிழப்பு, 5 சதவிகித வாக்குகள் தினகரன்/சசிகலாவால் இழப்பு, அடிமட்ட தொண்டர்கள் 2 சதவிகித அளவிலாவது இருக்கும் தேதிமுக வாக்கிழப்பு போன்றவைகள் காரணமாக அதிமுக 40- என்ற நிலையில் இருக்கிறது. இல்லாவிட்டால் 70-80+ என்ற நிலையில் இருந்திருக்கவேண்டிய கட்சி அது.

 6. புதியவன் சொல்கிறார்:

  இந்தத் தேர்தலிலும் பாஜகவின் தாக்கம் இருக்கிறது. அதாவது, பாஜக ‘இந்துத்துவ முகம்’ என்ற பிம்பம் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.

  அதனால்தான், முஸ்லீம்களில் கூட்டத்தில் இந்துதர்மத்தைப் பற்றி எள்ளி நகையாடிய ஸ்டாலின், கோவில்களில் நெற்றியில் உள்ள பொட்டை அழிப்பது என்றெல்லாம் வெளிப்படையாக தான் ‘இந்து எதிர்ப்பாளன்’ என்று காட்டிக்கொண்ட ஸ்டாலின், தன் கட்சிக்காரர்கள் ‘இந்துக் கடவுள்களை எதிர்ப்பதை’ ரசித்துக்கொண்டிருந்த ஸ்டாலின், தானும் தன் மகனும் வேலை கையில் வாங்கிக்கொள்வது, தான் இந்துக்களுக்கு எதிரி அல்ல, கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கு ஆயிரம் கோடி ஒதுக்குவேன் என்றெல்லாம் சொல்லவேண்டி வந்திருக்கிறது. தன்னுடைய அல்லக்கைகளான கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், எஸ்.ரா.சற்குணம், கிறிஸ்துவ வைரமுத்து (இங்கு மதத்தை நான் சொல்லியிருக்கும் காரணம், இந்த அல்லக்கை இந்து மதத்தைப் பழிக்கும் விதமாகப் பேசியதுதான்) போன்றவர்களையெல்லாம் அறையில் வைத்துப் பூட்டி வைத்திருக்கும் திட்டமும் தேர்தலை ஒட்டித்தான். இதெல்லாம் தேர்தல் வேஷம் மட்டும்தான்.

  இல்லாவிட்டால், தேர்தல் வாக்குறுதிகளாக, முஸ்லீம்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள் (வக்ஃப் சொத்துக்கள்) வக்ஃப் வாரியத்துக்கு மீட்டுக் கொடுக்கப்படும், இந்துக் கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க முயற்சி எடுக்கப்படும் என்று திமுக ஸ்டாலின் சொல்லியிருப்பாரா? (By the by, this is also a strategy to give away temple properties to Loyola management, as their place is a leased out space out of temple properties)

 7. tamilmani சொல்கிறார்:

  Some of the 80s kids will remember Woodlands Drive in an economical place have your brakefast, lunch, dinner with so much greeneries around. It belonged to agri horticultural society leased to Mr Krishna Rao an Udupi Brahmin on a moderate rent. Karunanithi doesn’t like a brahmin that too from Udupi earning so much money..So he cancelled the lease and converted the place in to semmozhi park which is sheer waste of money .With poor maintenance only anti social elements go there and do all sorts mischief.
  This is just an example what DMK will do when
  it comes back to Power.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்கள் அனுமானம் தவறு. உட்லண்ட்ஸில் தன் மகளுக்கு பங்கு கேட்டார் (Do you remember, கனிமொழி, SRMன் பங்குகள் வேண்டும் என்று demand செய்ததால்தான் அவர் ஐ.ஜெ.கே கட்சியையே ஆரம்பித்தார்). அதைக் கொடுக்க இசையாததால், லீஸை நீட்டிக்காமல் அங்கு பூங்காவை வைத்தார், அரசு இடத்தை ஆக்கிரமித்து அறிவாலயம் கட்டிய கருணாநிதி. இன்றும் மாநகராட்சியில் தன் கட்சி ஆட்களை வைத்து, முன்புறம் பொதுமக்களுக்கான இடமாக இருந்ததை அறிவாலயமே maintain செய்துகொள்ளும் பூங்கா என்று மாற்றிவிட்டார். அந்த இடம் முழுவதும் அறிவாலயத்துக்குச் சொந்தம்போல documentsஐ மாற்றியவர் ஊழல் சக்கரவர்த்தி, பொதுச் சொத்துக்களை கபளீகரம் செய்த திமுகவின் கருணாநிதி.

 8. Ramaswamy thamilan சொல்கிறார்:

  Can we take it that you completely support this admk govt in below issues,
  1. Tutucorin killings
  2. Sathankulam custody deaths
  3. 8 way road issues
  4. Kasi rape case
  5. Pollachi rape case
  6. Corruptions in all phases and levels
  7. Allowing Norths in our jobs

  • விவேகன் சொல்கிறார்:

   Dear Ramaswamy thamilan sir,
   We clearly know that ADMK is also a corrupt government.But the we need to figure out who is less corrupt, who fears to the voters, who respects the majority peoples religious beliefs etc etc….
   But you people repeatedly listing the same issues…
   Can you please list the valid reasons, that why need to elect DMK?

   • Ramaswamy thamilan சொல்கிறார்:

    Unfortunately I don’t vote for dmk anytime.. I dont know why all Bakthas don’t answer questions and instead asking me why do you want to vote for dmk. Please answer my questions if possible.

    • Surya சொல்கிறார்:

     This is what we get from ADMK supporters. When we criticise one party (ADMK here), people assign us to a party of their liking (DMK). We never mentioned we support DMK!

     Instead of voting to corrupt parties knowing they are corrupt, these blogs can focus on writing articles to expose some good candidates from other parties who can be voted (Even if it would mean hung assembly). But then the obvious response will come that they are ‘B’ teams. Give them a chance!

  • புதியவன் சொல்கிறார்:

   ராமஸ்வாமி சார்…. Can I assume that, you completely support DMK Govt on below atrocities samples? Can I assume you are encouraging and appreciating DMK for this?

   a. Killing ex Minister on road (தா கிருட்டினன் மதுரை, திமுகவின் X ஆல் கொலை)
   b. Destroying News offices, and killing it’s staff if they are against the family (தினகரன் பத்திரிகை எரிப்பு, 3 ஊழியர்கள் எரித்துக் கொலை)
   c. கவுன்சிலர் லீலாவதி (சிபிஎம்) கொலை 1997 by DMK
   d. திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா 2004ல் கொலை (திமுக)
   e. முன்னாள் திமுக மேயர் உமா மஹேஸ்வரியின் கொலைக்குக் காரணமாக இருந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் சீனியம்மாள்

   Can you specify with solid details on Norths being allowed in our job? We can’t answer myths. (பாஜக மதவெறி ன்னு இங்க கூவுவானுங்க. மதமாற்றம் நடக்குதே, இஸ்லாமியர் வீட்டுத் திருமணத்துக்குப் போய் இந்து மதத் திருமண மந்திரங்கள் அசிங்கம் என்று ஸ்டாலின் பேசியது, இந்துக் கோவில்களை இடிக்கணும் என்று அல்லக்கை திருமா பேசியது இவைகளெல்லாம் மதவெறியில் வராதா? தங்கள் தங்கள் ஆலயங்களில் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்கணும் என்று சொல்வது மதவெறி இல்லையா? மதவாதம் பேசும் கட்சிகளைத் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக்கொள்வது மதவெறி இல்லையா என்றெல்லாம் கேட்டால், இவங்களுக்கு அதுக்கு பதில் சொல்லத் தெரியாது.)

   I have also mentioned here several times. In Chennai, construction companies, Sweet shops, Groceries, in Tiruppur several Banian companies employ North Indians. I personally asked such companies why they are not giving the job to Tamil youths. They told me, பாருங்க சார்…இவனுவளுக்கு வேலை செய்ய விருப்பம் கிடையாது. 8 மணி நேரம் வேலை பார்ப்பானுவ. திடுமென அக்கா வந்திருக்கா, கை கால் வலிக்குதுன்னு சாக்குச் சொல்லி லீவு போட்டுடுவானுவ. நாங்க பிஸினெஸ் நடத்தணுமா வேண்டாமா? இங்க நிறைய ஏஜண்ட்ஸ் இருக்கானுவ. எனக்கு 10 பேர் பெர்மனெண்டா வேலைக்கு வேணும்னு சொன்னா, ஆள் அனுப்பிருவானுங்க. அவனுவளும் 12-13 மணி நேரம் மாடா வேலை பார்ப்பானுவ. வெட்டி அரட்டை அடிக்கமாட்டானுவ. இவனுக யாரேனும் வரலைனா, அந்த ஏஜெண்டே உடனே மாத்து ஆளைக் கொடுத்துடுவானுங்க. அதுனாலதான் இவனுவளுக்கு இங்க வேலை. You need to specify in which job sector, North Indians are employed. For eg. if you say, in Southern Railway, (if this is true and you have proof), you should immediately call DMK MPs and ask them.. என்னப்பா இதைப்பத்திப் பேசாம பஜனை பண்ணிக்கிட்டிருக்கீங்க என்று.

   Corruptions in all phases and levels – இதை மாதிரி ஜோக் சொல்ல உங்களாலத்தான் முடியும். திமுக, corruptionsல double Phd என்றால் இன்னும் அதிமுக பள்ளிக்கல்வி லெவல்லதான் இருக்காங்க. அதிகாரிகள் மட்டத்துல corruptions என்றால், அதுக்கு யார் காரணம் என்று சின்னப் பசங்களுக்கே தெரியும். அவங்க மேல நடவடிக்கை எடுத்தால், ‘அரசு அதிகாரிகள் போராட்டம்’ யாரால் தூண்டி விடப்படும், அந்த மாதிரி சங்கத் தலைவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏ சீட் கொடுக்கறாங்க என்பதெல்லாம் சின்னப் பசங்களுக்கே இந்தக் காலத்துல தெரியும்போது, அதிமுக ஊழல் என்று சொன்னால் கேட்கவே சிரிப்பாகத்தான் இருக்கு. நேற்றைக்கு முந்தின நாள்தான் திருச்சி நேரு, போலீஸ்காரங்களுக்கு ஒரு வாக்குக்குக்கு 2000 ரூபாய் வீதம் 70,000 ரூபாய் ஒரு வக்கீல் மூலமாகக் கொடுத்தது பிடிபட்டு போலீஸ்காரங்க சஸ்பென்ஷன்ல இருக்காங்க. நான் உங்களை challenge பண்ணறேன். நீங்க அதிமுகவில் 2 உதாரணங்கள் கொடுங்க, நான் திமுகவில் 6 உதாரணங்கள் கொடுக்கறேன்.

   • Ramaswamy thamilan சொல்கிறார்:

    Unfortunately I don’t vote for dmk anytime.. I dont know why all Bakthas don’t answer questions and instead asking me why do you want to vote for dmk. Please answer my questions if possible… I can understand a brahmin’s anger in your message.. But poorly you Bhakths will never answer.. Again you are blaming DMK.. For me DMK and ADMK are same

  • Venkataramanan சொல்கிறார்:

   Sathankulam case handed over to CBI & case is pending for justice. Police brutality is reported here and there all times. It needs a fundamental change & reform.

   Corruption at all levels has taken cancerous proportions over many decades. Nobody has a positive opinion on this. It may take decades to transform ours into a corruptionless society.

   North indians come mostly into central government jobs like railways & banks, plus few state government jobs. Any holistic data over 10 years can only prove this statement. Also how can we cry foul without any evidence of bias or malpractice favouring north indians ? Has the recruitment process been compromised ?

   Other things should’ve been dealt promptly & sensitively by state government.

   Just few things which came to my mind. Excuse if I am wrong.

  • புதியவன் சொல்கிறார்:

   //people assign us to a party of their liking (DMK). We never mentioned we support DMK!//
   //why all Bakthas don’t answer questions//
   பூனைக்குட்டி வெளியில் வர இவைகள் போதாதா?

   ராமஸ்வாமி அவர்கள் எழுதியுள்ளது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. உசைன் போல்டிற்கு எதற்கு ஒலிம்பிக் கோல்ட் மெடல் கொடுக்கணும்? அவர் 8 விநாடிகளில்தானே 100 மீட்டரைக் கடந்தார். ஏன் 6 விநாடிகளில் கடக்கவில்லை, அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். Don’t assume that I am supporting the person who came second என்ற மாதிரி லாஜிக்.

   அதிமுக கையிலுள்ள வாட்சை திருடினானா இல்லையா? அவனுக்கு ஏன் வாக்களிக்கணும் என்று கேட்டால், automaticஆக, வேறு யாருக்கு வாக்களிக்கணும் என்று சொல்றாங்க என்ற கேள்வி வரும். ராமஸ்வாமி, இந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கணும் என்று கேட்டால் நான் பதில் தரத் தயாராக இருக்கிறேன். வெறும்ன வாட்ச் திருடினவனுக்கு எதுக்கு வாக்களிக்கணும் என்று கேட்டால், வாட்ச், மோதிரம், செயின் இவை எல்லாவற்றையும் திருட கையை வெட்டினவனுக்கும் கழுத்தை வெட்டினவனுக்குமா வாக்களிப்பது என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது.

   உடனே பழைய பஜனை….பக்தாள் என்று. அதற்கு என் பதில், இதோ வந்துவிட்டார்கள் கொத்தடிமைகள்.

 9. புதியவன் சொல்கிறார்:

  Sorry to write so much.

  இங்க ஏதோ திமுக வந்தால் தமிழர்களுக்கு முழுக்க முழுக்க வேலை அளிக்கும், தமிழக கம்பெனிகளைத்தான் ஆதரிக்கும் என்ற பிம்பத்தை போலி ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. அதிமுக ஆட்சியில் வடவர்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்று.

  சிவகாசியில் இல்லாத பிரிண்டிங் பிரஸ்களா? இல்லை தமிழகத்தில் இல்லாத, காண்டிராக்டர்களா, Event Managersஆ?

  சமீபத்தைய திமுக திருச்சி மாநாட்டை event management செய்தது எந்தக் கம்பெனி? தமிழ் கம்பெனியா இல்லை கர்நாடகத்திலிருக்கும் கம்பெனியா? திமுக print பண்ணின ‘ஸ்டாலிந்தான் வர்றாரு விடியல்தான் தரப்போறாரு” என்ற விளம்பர பிளாஸ்டிக்குகளை எந்தக் கம்பெனி செய்தது என்பதாவது இந்த திமுக கொத்தடிமைகளுக்குத் தெரியுமா? Hertx & Plxalx New Delhi என்ற கம்பெனி, முதல் setஆக 50 லட்சம் ஆர்டர்கள் இந்த கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டன. இதை மாதிரி நிறைய உண்மைகளை எழுதலாம்.

  • Ramaswamy thamilan சொல்கிறார்:

   Probably you have answers in your message both DMK and ADMK are same boats sailing with corruption and rowdism.. If you still dig you can find correct answer… We can vote for a good candidate (may be an individual candid) in spite of running behind argument and parties.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.