திமுக ஆட்சிக்கு வந்தால்…..? – ஒரு விறுவிறுப்பான ட்ரெயிலர் ….!!!

….
….

….

….

நடக்கவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தான்
வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பாலான
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் திமுக ஜெயிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல
என்று நாம் கருத்து தெரிவித்திருந்தோம்.

நமது கருத்தை உறுதிசெய்வது போல், சில நிகழ்ச்சிகள்
நடந்து கொண்டிருக்கின்றன. அது குறித்த ஒரு இடுகை….

————————-

” வரப்போவது நமது ஆட்சி தானே; மிஞ்சி மிஞ்சிப்போனால்
இப்போது வழக்கு தொடுப்பார்கள்….
தொடுத்தால் தொடுத்துக்கொள்ளட்டுமே. ஆட்சிக்கு
வந்தவுடன் வழக்கின் கதியை
நாம் தானே தீர்மானிக்கப்போகிறோம்…”


என்கிற நம்பிக்கையோ என்னவோ,
திமுகவின் முக்கியஸ்தர்கள் சிலர் நடந்துகொள்ளும்
விதம் பற்றிய சில சுவாரஸ்யமான
வீடியோக்கள், செய்திகள் – கீழே ….

முதலில் திண்டுக்கல் தியோனி-யின்
திமிர்ப் பேச்சு -காணொலி –

….

….

அடுத்து ஆ. ராசாவின் ஆபாசப்பேச்சு –

…………………………………………………………………………………..

போலீசுக்கே ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா திமுக -நேரு….?

திருச்சி மேற்கு திமுக வேட்பாளர் திருவாளர்
கே.என்.நேரு போலீசுக்கே ஓட்டுக்கு பணம் கொடுத்தது பற்றிய
ஒரு செய்தி –

திருச்சி: தபால் ஓட்டுக்காக போலீசாருக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த
ரூ.70 ஆயிரத்தை கமிஷனர் பறிமுதல் செய்தார். இந்த சம்பவம்
தொடர்பாக 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,
4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர்
ஆய்வு மேற்கொண்ட போலீஸ் கமிஷனர் லோகநாதன் தில்லை நகர்
மற்றும் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து 35
கவர்களில் இருந்து, 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினார். தொடர்ந்து,

சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்
அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களிடம், போலீஸ் கமிஷனர்
லோகநாதன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை
நடத்தினர். தபால் ஓட்டு போடும் போலீஸ்காரர்களுக்கு தி.மு.க.,
வேட்பாளர் தரப்பில் இருந்து, கவர் கொடுக்கப்பட்டது, தெரிய வந்தது.

அதனால், தி.மு.க., தரப்பில் இருந்து, போலீஸ்காரர்களுக்கு பணம்
கொடுத்தது தொடர்பாக விசாரிக்க, குழு அமைத்து உத்தரவிட்டனர்.

————–

குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க நேரு முயற்சி –

திமுக வேட்பாளர் நேரு, நேற்று இரவு, திருச்சி மேற்கு தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக
தெரிவித்து, புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,
போலீஸ்காரர்களுக்கு பணம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில்
செய்தி வெளியிட்டு, என் புகழை களங்கப்படுத்தவும்,
தேர்தலை நிறுத்தவும் பொய்யான பிரசாரம்
செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்

—————————————————————————————————-

முதல்வரின் பிறப்பு பற்றி
ஆ.ராசாவின் அசிங்கப்பேச்சு –

பத்திரிகையாளர் மாலன் நாராயணன் முகநூல் பதிவு –

மாலன் நாராயணன்
நேற்று, முற்பகல் 9:09 ·

முதல்வர் பழனிசாமியின் தாய் குறித்த ஆ.ராசாவின் பேச்சு
கண்டிக்கத்தக்கது. அறுவருப்பானது. இது போன்று பெண்களை
இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் திமுகவில் நெடுங்காலமாக உண்டு.

‘நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்’ என்பதில் தொடங்கி
பேரன் உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது வரை அந்தப் பாரம்பரியம்
நீள்கிறது.

இந்தப் பேச்சுக்கள் தன்னிச்சையாக அந்த நொடியில்
வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும்
அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது.
ஜெயலலிதாவின் சேலையை உருவ முற்பட்டதும்
அது போன்ற தன்னிச்சையான செயல்பாடுகள் தான்.

பெண்களை உடலைத் தாண்டி பார்க்க முடியாத பார்வையின்
வெளிப்பாடு அது.வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத
நேரங்களில் எல்லாம் வன்மத்தோடு வசைகளிலும்
தனிமனித தாக்குதலிலும் ஈடுபடுவது திமுகவின் வழக்கம்.

அது காமராஜரின் கருநிறத்தில், எம்ஜி.ஆரைக் கிழவராக
சித்தரிக்கும் முரசொலி கார்ட்டூனில் ராஜாஜியின் ஜாதி
பற்றிய விமர்சனத்தில், இந்திராவின் கைம்பெண்மை பற்றிய
எள்ளலில், ஜெயலலிதாவை நடிகையாகக் கேலி பேசுவதில்
மட்டுமல்ல, அவர்களை விமர்சித்து எழுதுகிற
சாதாரணமானவர்களைத் தாக்குவது வரை வெளிப்படும்.

இந்த வன்மம் பெண்ணாக இருந்தால் உடல் ரீதியாகவும்
ஆண்களாக இருந்தால் ஜாதி ரீதியாகவும் வெளிப்ப்படும் .
பட்டியல் இனத்தவருக்கு நீதிபதி பதவிகளை பிச்சை போட்ட
ஆர். எஸ். பாரதியின் பேச்சு ஓர் அண்மைக்கால உதாரணம்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு எதைக் காட்டுகிறது?

திமுக பதற்றமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஏன் பதற்றம்?
எல்லோருக்கும் முன்னதாக அது தேர்தல் பிரசாரத்தைத்
தொடங்கிய போது அதன் வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இ
ருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

அதிமுக பிரசாரக் களத்தில் இறங்கிய பின்,
குறிப்பாக பழனிசாமியின் அறிவிப்புக்களுக்கும்,
பிரசாரத்திற்கும் பின் அந்த பிம்பம் கலையத் தொடங்கியது.
இப்போது போட்டி நெருக்கமாகி வருகிறது.
‘கேக் வாக்; என்ற நிலை மாறிவிட்டது. கஷடப்பட்டு
உழைக்கணும் என்று திமுக தலைமையே தனது
தொண்டர்களிடம் பேசத் தொடங்கியிருக்கிறது.

——————————–====================———–

அடுத்த சில நாட்களில் இன்னும் நிறைய ட்ரெயிலர்கள்
வரலாம்… பார்த்து ரசிக்க நாம் தயாராக வேண்டும்.

பின் குறிப்பு –

என் முந்தைய இடுகையை குறை சொன்ன நண்பர்களுக்கு
இந்த ட்ரெயிலர்கள் சமர்ப்பணம்….!!!

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திமுக ஆட்சிக்கு வந்தால்…..? – ஒரு விறுவிறுப்பான ட்ரெயிலர் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
  நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்
  தவத்தளவே யாகுமாம் செல்வம் சேர்ந்த
  கட்சியள வாகுமாம் குணம்.

  இது நவீன அவ்வையார் புதியவன், ஆபாசப் பேச்சாளர் 2ஜி திகார் புகழ் 1.76 லட்சம் கோடி ராசாவுக்கும் காசுக்காக மானத்தை விற்கும் திண்டுக்கல் லியோனிக்கும் பாடியது. இது பதற்றத்தினால் வரும் பேச்சல்ல. தங்கள் ஆட்சி வரும் என்ற ஆணவத்தால் வரும் பேச்சு. செந்தில் பாலாஜியும் இதேமாதிரிதான் பேசினார். இதற்குக் காரணம் இவர்களின் தலைவரான உதயநிதியின் பேச்சு. அவரும், ஆட்சிக்கு வந்த பிறகு… என்று எத்தனை மிரட்டல்கள் விடுத்திருக்கிறார்.

  சென்றமுறை தனியார் பேருந்து மூலமாக திருச்சியில் பிடிபட்ட 5 கோடி, எங்கிருந்து வந்தது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் நேரு பணம் போய்விட்டதே என்று பரிதவித்தார் என செய்தித்தாள்களில் படித்தோமே… இந்தச் சம்பவத்திலும் அந்த போலீஸ்காரர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் இவர்களே திருடர்களை உருவாக்கும் துறை என்பது இன்னும் ஆணித்தரமாகிவிடும்.

 2. Surya சொல்கிறார்:

  All of this can be avoided if ADMK stood by themselves without joining hands with BJP.

  • விவேகன் சொல்கிறார்:

   SURYA அய்யா,
   தாங்கள் பிஜேபியை மனதில் வைத்து கொண்டு அதை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு
   தவறான ஆட்சிக்கு வழிகாண வேண்டாம்.
   திமுக ஆட்சியில் , தலைமைக்கே கட்டுப்படாத, தலைமைக்கே சவால் விட்ட அராஜகங்களை தாங்கள் 10 வருட இடைவெளியில் மறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.நில அபகரிப்புகள், கட்ட பஞ்சாயத்துகள்,ரவுடியிசம் , கவுன்சிலர் அட்டகாசங்கள்.வரும்காலத்தில் உங்களால் நிம்மதியாக வீடு கூட கட்ட முடியாது .நான் குறிப்பிடும் இவர்கள் யாவருக்கும் தாங்கள் படியளக்க வேண்டியிருக்கும்.தற்போதைய ஆட்சியில் இது போன்ற கு ற்ற சாட்டுக்கள் சிறிதளவும் இல்லை என்பதை என்னால் உறுதிபட கூற இயலும்.ஏனெனில் தற்பொழுதுள்ள அமைச்சர்களே திமுகவிற்கு பயப்படுகிறார்கள்.அவர்களால் பிற்காலத்தில் சட்ட பிரச்சினை ஏற்படுமோ என்ற பயம் அதிமுக அமைச்சர்களுக்கே இருக்கிறது.ஆதலால் அவர்கள் இது போன்ற அராஜகங்களை செய்வதற்கு பயப்படுகிறார்கள்.இதுவும் மக்களுக்கே சாதகமான அம்சமே.

   ஆதலால் உபயோகம் இல்லாத ஆட்சியாக இருந்தாலும் , மக்களுக்கு நேரடியாக தீங்கிழைக்காத ஆட்சியை தேர்ந்தெடுப்பதே விவேகமாகும் இது எனது தனிப்பட்ட கருது.
   கழனிபானைக்கு பயந்து எரிகின்ற கொள்ளியில் குதித்து விட கூடாது.

   • Surya சொல்கிறார்:

    if we put vote for ADMK, will that get counted for ADMK or for BJP. Isn’t it BJP controlling ADMK crystal clear. With the way things are happening, I won’t be surprised if all ADMK winning MLA’s move to BJP and BJP forms the government in TN! 😀

    No one seem to care of the fact that BJP is killing democracy in India.

    Whether we put vote for DMK or not is a different issue. But ADMK simply don’t deserve to get votes when we know BJP is entirely controlling it.

    • Senthil Selvananth சொல்கிறார்:

     அதாவது, எரிகிற கொள்ளிக்கு (DMK) பயந்து எரிமலைல (BJP binami ADMK) விழுந்துற கூடாதுங்கிறீங்க.

     ஆனா நாடு எக்கேடு கெட்டா என்ன…. திமுக மட்டும் வரக்கூடாதுன்னு கிணற்று தவளை பேசுற இடத்துல உங்க பருப்பு வேகாது

     • விவேகன் சொல்கிறார்:

      பிரஷாந்த் கிஷோரின் ஆட்கள் பல வலைத்தளங்களிலும் ஊடுருவியுள்ளதை சரியாக உணர முடிகிறது.
      அவர்கள் திமுகவை பல வகைகளிலும் உத்தமமான கட்சியை போன்றும், பிஜேபியை மையமாக வைத்து அதிமுகவை மக்கள் புறக்கணிக்க பல வகைகளிலும் வாதாடுவதை காண முடிகிறது.
      ஆனாலும் மக்கள் இந்த புரட்டுகளுக்கு ஏமாறுவார்கள் என்று எனக்கு தோன்ற வில்லை.

 3. வருண் சொல்கிறார்:

  இப்படித்தான் காவிரிமைந்தனும் அவரின் கருத்தடிமைகளும் 2014 முன்னர் கேடி ஆட்சிக்கு வரவேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள்!!

  பின்னாளில் காவிரிமைந்தனே வெட்கப்பட்டு அதை மறைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். இப்போது அதே தவறை திரும்பவும் செய்கிறார். தமிழ்நாட்டு உரிமைகளை ஒவ்வொன்றாக வடக்கனுக்கு எழுதி வைத்துக்கொண்டிருக்கும் மிக பெரிய ஆபத்தை பற்றி மூச்சு கூட விடாமல் திமுகவின் லோக்கல் ரவுடிகளின் அட்டகாசங்கள் என திசை திருப்பும் அதிமேதாவித்தனம்… அடடடட!!

  தெருவிலேயே கால் வைப்பதில்லை போலிருக்கு.

  . அதிமுக லோக்கல் ரவுடிகளே இல்லாதமாதிரி பில்டப் வேற. போன வாரம்தான் திருப்பத்தூர் புலிப்பைல அதிமுக கவுன்சிலர் பண்ண டார்ச்சர்ல ஒரு குடும்பமே விஷத்தை குடுச்சது. காவிரி மைந்தன் சார், போங்க..போயி புண்ணியமா எதாவது பண்ணுங்க 2014 அப்ப பண்ண தப்புக்கே இன்னும் விடை தெரியல.

 4. Veerasamy சொல்கிறார்:

  இந்த புதியவன்னு ஒருத்தரு எப்படா கமெண்டு போடலான்னு இருக்காரே (ஒரு காமையின் இன்னொரு பெர்சனாலிட்டி யோ?) அச்சு அசலா சவுகார்பேட்டைல செட்டிலான மார்வாரி பேசற மாதிரியே பேசறாரே அவருதான்

  கடந்த ரெண்டு ஆண்டுகளா தமிழக அரசு பணிகள்ல சதம் வடமாநிலத்தவர்களை பணியமர்த்தியதற்கு இங்கே படியளக்கிறார். ஏப்பா உன்னோட இனத்துக்கு உமக்கு அவ்வளோ துடிக்குதுன்னா உங்களுக்கு கஞ்சி கொடுக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்? அதிமுக ஒருவேளை ஜெயித்திருக்கலாம் ஆனால் எங்கள் உரிமைகளை பறிக்கும் பாஜகபோட சேந்து ஓட்டு கேக்க நின்னதுக்கு நீங்கள் நினைக்காத அளவு ஆப்பு ரெடியாக இருக்கிறது வாங்க மகனுங்களா

  • விவேகன் சொல்கிறார்:

   ஐயா
   தாங்கள் கூறும் உதாரணம் மற்றும் அறியாமை எனக்கு பரிதாபத்தை தான் வரவழைக்கிறது. திமுக ஆட்சியில் இல்லாத நிலையிலேயே அதன் ரௌடித்தனத்தை தாங்கள் செய்தி தாள்களில் படித்ததில்லை போலும்.பிரியாணி கடைகளில் புகுந்து அங்கிருப்பவர்களை தாக்குவதில் இருந்து, போலீஸ் அதிகாரிகளை மேடைகளில் பகிங்கிரமாக மிரட்டுவது வரை அவர்களின் ரவுடியிசம் அறியாதது பரிதாபம்தான்.

   மேலும் திமுக தான் அடுத்த ஆட்சி அமைக்கும் என்று எவ்வாறு நம்புகிறீர்கள் என்றே எனக்கு புரியவில்லை.ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அதிருப்தி நிலையை அடைந்து நான் கண்டதில்லை.
   ஆனால் திமுக கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன் செய்த அதே தந்திரத்தை இப்பொழுதும் கையாண்டு , பத்திரிக்கைகளை விலை கொடுத்து வாங்கி.திமுகதான் ஜெயிக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள்.அதை நம்பும் அளவில் நான் இல்லை.இதில் உங்கள் ஆப்பு கனவு சிரிப்புதான் வருகிறது

 5. புதியவன் சொல்கிறார்:

  நிறையபேர், தமிழகத்தில் வடவர் ஆதிக்கம், வேலைகள் வடவர்களுக்குச் செல்கிறது என்றெல்லாம் எழுதறாங்க. திமுக, தன் விளம்பரங்கள், அதற்கான materials (freebies, கொடி, Printed materials etc.), மாநாட்டுக்கான மேடை மற்ற அமைப்புகள் – எல்லாவற்றையும் தமிழர் அல்லாத, தில்லி மற்றும் வட இந்திய கம்பெனிகளுக்குத்தான் கொடுத்திருக்கிறது-இந்தத் தேர்தலில். திருப்பூரில் 30,000 க்குமேல் பங்களாதேஷிகள் இருப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. Construction, Sweet shops, Any contracted labors – எல்லாமே தமிழர்கள் அல்லாதவர்களால் நிரம்பியிருக்கின்றன. இவை எல்லாமே தனியாரால், தமிழரால் நிர்வகிக்கப்படுபவை. ஏன்… சில கட்சிகள் வெளிநாட்டு நிதியையும் பெற்றுக்கொண்டுதான் இயங்குகின்றன. உங்களுக்கே தெரிந்தது கோவாலசாமி திருமா போன்றவர்கள்.

  அரசு வேலைகளில் (மத்திய) 15-20 சதவிகிதம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்கிறது. இதைப்பற்றி யார் பேசவேண்டும், தர்ணா செய்யவேண்டும், பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்யவேண்டும்? தமிழக எம்பிக்கள். செய்தார்களா? செய்யமாட்டார்கள். மாறன் ப்ரதர்ஸின் தமிழகத்துக்கு வெளியேயான பிஸினெஸ், டி.ஆர்.பாலுவின் மாநிலம் தாண்டிய பிஸினெஸ், என்று எல்லாவற்றிர்க்கும் பாதிப்பு வரும், தொழில் பாதிக்கும் என்று தெரிந்து அமைதியாக இருக்கின்றனர். தமிழகத்தின் இரயில்வே கோட்டம் முழுமையாக கேரளத்தின்வசம்தான் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. பேசினால், எல்லா நட்புக் கட்சிகளையும் பகைத்துக்கொள்ள வேண்டும், அரசியல் நஷ்டமும் வந்து சேரும். குற்றத்தை திமுக எம்பிக்கள் மீது சுமத்தாமல் அதிமுக மீது சுமத்துவதுதான் இந்த திமுக கொத்தடிமைகளின் வேலை.

  தமிழக அரசுப் பணியில் எத்தனை வட மாநிலத்தவர் இருக்கின்றனர்? ஜாக்டோ தலைமையே திமுககாரர்கள்தான் (எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது). அவர்கள் ‘வடமாநிலத்து ஆசிரியர்கள்’ லிஸ்டை வெளியிடவேண்டியதுதானே. அவ்வளவு ஏன்… திமுக, அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டும்தான் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சட்டம் போட வேண்டியதுதானே. அப்படிச் சட்டம் போட்டால், திமுகவின் பிஸினெஸ் பாதிக்கப்படும் என்பதுதானே காரணம்? வட நாட்டில், அரசு அதிகாரத்தில், தில்லி செக்ரெட்டேரியட்டுகளில் எத்தனை தமிழர்கள் இருந்தார்கள் என்பது இவர்கள் யாருக்காவது தெரியுமா? எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்-தமிழர்கள் பிற மாநிலங்களில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா?

  மோடி அரசாங்கம் பற்றி கா.மை. சாரின் எண்ணம் வேறு என் எண்ணம் வேறு. எனக்கு, சில விஷயங்களில் பாஜக ஏமாற்றத்தை அளித்திருக்கிறது, குறிப்பாக ஊழல்வாதிகளை உள்ளே தள்ளுவதில். (கா.மை. சாருக்கு பெரும்பான்மையான விஷயங்களில் பாஜக மீது அதிருப்தி இருக்கிறது என்று பதிவுகளைப் படித்து அறிந்துகொள்கிறேன்) மற்றபடி, காங்கிரஸ் அரசை ஒப்பிட்டு, மோடி அரசிடம் என்ன குறை என்பதை இங்கு லிஸ்ட் போடுவதை யார் தடுத்தது? வெறும்ன வடவர், அடிமை என்று பஜனை பாடுவதை விட்டுவிட்டு.

  இந்திய மக்கள் ‘இந்து’ என்ற மதரீதியான காரணத்தை வைத்து வாக்களிக்க ஆரம்பித்தால், பாஜக தவிர வேறு கட்சிகள் எந்தக் காலத்திலும் வருவதற்கு வாய்ப்பில்லை. இந்துத்வா காரணம் என்றால், வாஜ்பாயி அரசு மீண்டும் வந்திருக்க வேண்டும். (பாபர் மசூதி உடைப்பு, ராமர் கோவில் பிரச்சனை மக்கள் மனதில் இன்னும் இருந்தது) அதற்கு அடுத்த இரண்டு டெர்ம் களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் வந்தது. அதன் பிறகு பாஜக வந்ததற்கான காரணம் என்ன? அதிலும் அத்தனை பெரிய வெற்றியோடு? 1. காமன் வெல்த் விளையாட்டில் 70,000 கோடி ஊழல், 2. 2ஜி ஊழல் 1.76 லட்சம் கோடி 3. கனிம வள ஊழல் 1.5 லட்சம் கோடி 4. ராபர்ட் வாத்ரா ஹரியானா நில ஊழல், ஹெரால்ட் பத்திரிகை ஊழல் 5. விமானங்கள் வாங்கியதில் ஊழல் 6. விஜய் மால்யாவின் 6000 கோடி என்று பெரிய லிஸ்ட் உண்டு. காங்கிரஸ், திமுகவை விரட்டவேண்டும் என்ற மக்களின் எழுச்சியே தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய வாக்கு சதவிகிதம் 2014ல் வாங்கியதன் காரணம். (அதே எழுச்சியை 2019ல் பெறவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்)

  நம் நாட்டின் நீதி நிர்வாகம், ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்துத் தண்டனை வாங்கித்தரவேண்டிய அதிகார அமைப்புகள், நம் நாட்டுச் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் இவைகள்தாம் குற்றங்களை நிரூபித்து உள்ளே தள்ளுவதற்குத் தடையாக இருப்பவை. கல்ஃப் தேசங்களில், முதலில் உள்ளே போட்டுவிட்டு, குற்றவாளிதான் தான் நிரபராதி என்று நிரூபிக்கவேண்டும். இங்கு, கடைசிவரை குற்றவாளிகளை நிரபராதிகள் என்றுதான் நீதிமன்றங்கள் கருதுகின்றன.

  திமுகவின் candidatesகளில் 60 சதவிகிதம் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் இதைப்பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள். மத ரீதியாக தமிழர் அல்லாதவர்களைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் (பேசினால் தலை இருக்காது என்ற பயம்தான்). ஆனால் வடவர்கள், ஹிந்தி என்று பஜனை பாடுவார்கள். நிறைய திமுக எம்பிக்கள் தத்திகள், தமிழே ஒழுங்காகத் தெரியாது, தயாநிதிக்கு ஹிந்தி தெரியும் அதனால் மத்திய அமைச்சராக்கினேன் என்று கருணாநிதி சொன்னபோது, தமிழரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்க மாட்டேன், மராத்தியரான பிரதீபா பாடீலுக்கு ஆதரவு என்று கருணாநிதி சொன்னபோது, தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு ஆனால் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்று சொன்னபோது, இந்த ‘தமிழ்நாட்டைப் பற்றி ரொம்பவே கவலைப்படும்’ தமிழ் உணர்வாளர்கள் இணையத்துப் பக்கமே வரமாட்டார்கள். ஆனால் வாய் கூசாமல் அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, உதயநிதியின் பையனுக்கு பேம்பர்ஸ் போடவேண்டுமா, நான் ரெடி என்று கொத்தடிமையாக இருப்பார்கள். அதிமுகவை, பாஜக பெயரால் எதிர்ப்பவர்கள் உள் நோக்கம் கொண்டவர்கள். இவர்களை ஆட்டுவிப்பது வேறு சக்திகள். அவ்ளோதான்.

  • mekaviraj சொல்கிறார்:

   மாநாட்டுக்கான மேடை மற்ற அமைப்புகள் – எல்லாவற்றையும் தமிழர் அல்லாத, தில்லி மற்றும் வட இந்திய கம்பெனிகளுக்குத்தான் கொடுத்திருக்கிறது ????

   அரசு வேலையும் இதுவும் ஒண்ணா ?

   பொதுவாகவே labour work செய்ய தமிழ்நாட்டில் ஆட்கள் கிடப்பது அரிதாகி உள்ளது. இதற்கான காரணம் இங்கே ஏற்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம்.

   வேற ஏதாவது முட்டு குடுங்க புதியவன்

  • mekaviraj சொல்கிறார்:

   ஆனால் இதைப்பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள். மத ரீதியாக தமிழர் அல்லாதவர்களைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் (பேசினால் தலை இருக்காது என்ற பயம்தான்). ??

   தாராளமா பேசலாம்.
   இதைதான் சீமான் ரொம்பநாள பேசுகிறார். அவர் தலையை யாரும் எடுக்கவில்லை. நீங்களும் தாராளமா பேசலாம்.
   தமிழ்நாடு இன்னும் UP, MP போல ஆகவில்லை.

 6. வணக்கம் தமிழா சொல்கிறார்:

  இந்த தேர்தலில் திமுக தோல்வி ஆ. ராசா வினால் அரங்கேறப்போகுது. 2011 இல் ஆற்காடு வீராசாமி மிக முக்கிய காரணம், 2021 இல் ஆ ராசா. ஆக எத்தனை ipac வந்தாலும் DMK டௌன் டௌன் தான்.
  ஆ ராசா மன்னிப்பு கேட்ட செய்தியை அணைத்து ஊடகமும் வெளியிட்டது ஆனால் அவர் பேசியதை எந்த தலைவரும் தவறு என்று சொல்ல வில்லை- திமுக வின் கீழ்த்தர பேச்சு அணைத்து வாட்ஸுப் மற்றும் முகநூட்களிலும் வைரல் ஆனதன் விளைவு எடபடியார் இமேஜ் கூடிவிட்டது என்பதை மறுக்க முடியாது.

  • விவேகன் சொல்கிறார்:

   திமுக பிரச்சாரத்திற்கு ஆ.ராசா , திண்டுக்கல் லயோனி,உதயநிதி போன்ற அரைகுறைகள் மிகப்பெரிய முட்டுக்கட்டைகள். கள்ள உறவில் பிறந்தவர் என்று இந்த மாநிலத்திலத்தின் மிகப்பெரிய பொறுப்பிலுருப்பவரையே பகிங்கரமாக , சிறிது கூட வெட்கமோ, மானமோ , பயமோ இல்லாமல் பேசும் நிலையில் மற்றவர்களின் நிலை ?

   இவரை போன்றவர்களுக்கு முட்டு கொடுத்து காப்பாற்றும் நிலையில், அல்லது ஆ.ராசாவின் பேச்சுக்கு தனி விளக்கம் கொடுக்கும் நிலையில் தமிழனின் நிலை தரம் தாழ்ந்திருப்பது அதை விட கொடுமை.

   நாளை இவர்கள் பதவிக்கு வரும் நிலையில், நாம் அவர்களை தட்டி கேட்க வேண்டியா நிலை வந்தால்,நம்மை பெற்ற தாயும் , இதை போன்ற தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு ஆளாகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்….

 7. புதியவன் சொல்கிறார்:

  கீழே உள்ள செய்தியை நான் படிக்க நேர்ந்தது. நான் எப்போதும் சொல்லிவருவது இதைத்தான். இணைய பத்திரிகைகளில் பொய்ச் செய்திகளைக் கூசாமல் எழுதும், partialஆக எழுதும், கட்சிக்காரரை நடுநிலைவாதிபோல project செய்து கட்சிச் செய்திகளை promote செய்யும் thatstamil.com மற்றும் minnambalam.com போன்றவையும் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். இணையதளம், Blogspot போன்றவை வைத்திருப்பவர்களிடம் ஒவ்வொரு பதிவுக்கும் 200 ரூபாய் என்று திமுக போன்ற கட்சிகள் செய்வதைப்போல, நிச்சயம் கருத்துத் திணிப்புகளுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. ‘பொருளாதாரப் புலி’ என்ற புது அடைமொழியோடு வெளிவந்த திமுக ஜெயரஞ்சனின் குட்டு வெளிப்பட்டது போல ஏகப்பட்ட திமுக பத்திரிகையாளர்கள், விதவித பெயர்களில் (பெண்கள் பெயரிலும்) இந்தத் தளங்களில் எழுதுகிறார்கள். இவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வெளிவரும் திமுக ஊழியர்கள்.

  பணம் கொடுத்து விளம்பரங்களை போடுவது பத்திரிகைகளின் வழக்கம் !

  விளம்பரங்கள் தருபவர்களின் செய்திகளை போடுவது ஒரு முறை !

  பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளை மறைப்பது அடுத்த நிலை !

  பெய்டு நியூஸ் கலாச்சாரம் துவங்கப்பட்டு, பணம் வாங்கிக் கொண்டு ஒரு நிறுவனத்தை தூக்கிப் பிடிப்பது ஒரு கட்டம் !

  அதில் அடுத்த நிலை, பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிரானவர்களைப் பற்றி அவதூறு பரப்புவது !

  இதன் தொடர்ச்சியாக விளம்பரங்கள் தராத கட்சிகளையும், தலைவர்களையும் ஒதுக்குவது !

  கடந்த சில் ஆண்டுகளாக தேர்தல் செய்திகளை வெளியிட கட்சி மற்றும் வேட்பாளர்கள்களிடம் மொத்தமாக ஒரு தொகையை பேக்கேஜ் முறையில் பேசி அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வெளியிடும் ஒரு கலாச்சாரத்தை துவக்கி வைத்தது தினத் தந்தி நாளிதழ் !

  தமிழ் மொழியையும் தமிழர்களையும் உலக அளவில் எடுத்துச் செல்ல ஆயுதமாக விளங்கிய ஒரு ஈடு இணை இல்லாத பத்திரிகை தினத் தந்தி !

  அப்படிப்பட்ட தினத் தந்தி இந்த பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தை கொண்டு வந்தது !

  அதன் அடிப்படையில், மற்ற கட்சி மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளை விட இந்த பேக்கேஜில் இடம் பெறுபவர்களின் செய்திகள் அதிகமாக வரும் !

  தமிழகத்தின் பிரபலமான பத்திரிகைகளான தினமலர், தினகரன், தினமணி, மாலை மலர் மற்றும் மாலை முரசு போன்ற அனைத்து பெரிய பத்திரிகைகளும் இதே வியாபார யுக்தியை கையில் எடுத்துக் கொண்டது !

  நிர்வாக ஊழியர்கள் மாவட்ட செய்தியாளர்கள் மூலம் வேட்பாளர்களை சந்தித்து இதுபோன்ற பேக்கேஜ்களை தனியாக பேசி முடிவு செய்வார்கள் !

  ஆனால் தற்போது இதுபோன்ற செயல்கள் சென்னை போன்ற முக்கிய நகரங்களில், ஒட்டுமொத்த கட்சி சார்பில் கோடிகளில் பேசி முடிவு செய்யப்படுகிறதாக சொல்லப் படுகிறது !

  இதில் இரவு பகலாக செய்திகளை தந்து உழைத்த பத்திரிகையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை, முக்கியமாக மரியாதையும் இல்லை !

  காரணம் நம்முடைய தயவு உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தேவை இல்லை !

  இந்த முறை இதன் வளர்ச்சியாக, பேக்கேஜ் பட்ஜட் உயர்ந்து உள்ளது மட்டுமின்றி, பேக்கேஜில் இல்லாத வேட்பாளர்கள் பற்றிய செய்தியோ, புகைப் படங்களோ இடம் பெறாத நிலை வந்து விட்டது !

  சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வரும் தன்னார்வலர்களின் செய்திகள் எதுவுமே பத்திரிகைகளில் 90 % இடம் பெறுவது இல்லை !

  செய்தியாளர்கள் அனுப்பும் செய்திகளும் இவர்கள் ஒழுங்காக போடுவது இல்லை, இதனால் கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களால் முடிந்த 200, 300 ரூபாய் வந்து போகும் செலவுகளுக்காக, செய்தியாளர்களுக்கு கவர், கொடுப்பவர்களும் மன வேதனை அடைகின்றனர் !

  இந்த பேக்கேஜின் உச்சகட்ட வளர்ச்சி, தகுதியற்றவர்கள், கிரிமினல் குற்றவாளிகள் என்று யாராக இருந்தாலும் அவர்களை தலையில் வைத்து கொண்டாடும் அவலம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது !

  இந்த பேக்கேஜ் கலாச்சாரத்தில், கொள்கை, பத்திரிகை தர்மம், ஜாதி, மதம் போன்ற எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை, பணம் மட்டுமே !

  எத்தனையோ நல்ல வேட்பாளர்கள், மக்கள் மத்தியில் தெரியாமலே உள்ளார்கள் !

  உண்மை செய்திகள், மக்கள் பிரச்சினைகள்……. இவைகளை கடந்து, விளம்பரங்கள், பேக்கேஜ், பொங்கல் மலர், தீபாவளி மலர்……. இதற்கு ஆள் பிடித்து விளம்பரங்கள் பெற்று, அதை வசூல் செய்து கொடுக்கும் பணிகளுக்கு மட்டுமே இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் தேவை !

  உண்மையான தகவல்களையும் வெளியிட முடியாத நிலையில், மரியாதை தரக்கூட தெரியாத பல அரசியல் தலைவர்கள் நடுவில், நிர்வாகத்திற்கு விசுவாசமாக பணியை செய்து வரும் செய்தியாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்களே !

  இந்த நிலையில், இந்த ஜாம்பவான்களுக்கு நடுவில், சின்ன பத்திரிகைகள் வெளி வருவதிலேயே பல பிரச்சினைகள் !

  அப்படி பெரிய அளவில் மத்திய மாநில அரசு விளம்பரங்கள் கூட இல்லாமல், உண்மையான செய்திகளை வெளியிட்டு வரும் சிறிய பத்திரிகைகளுக்கு யாரும் உதவி செய்வது இல்லை !

  ஆனால் அது போன்ற பத்திரிகைகளும் இதுபோன்ற வியாபார ரீதியான செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே பத்திரிகை வெளியே வரும் என்ற நிலை தற்போது வந்துவிட்டது !

  இந்த நிலை மாற வேண்டும் !

  சிறிய பத்திரிகைகள், மற்றும் செய்தியாளர்கள் பாதுகாக்க பட வேண்டும் !

  சமூக வலைதளங்கள் மட்டுமே பல நல்ல வேட்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட உதவுகின்றது !

  பத்திரிகை முதலாளிகளும், நிர்வாகங்களும், கட்சிகளுடனும், வேட்பாளர்களுடனும் செய்து கொள்ளும் பத்திரிகை வியாபாரத்தில், பலியாகுவது உழைக்கும் பத்திரிகையாளர்களே !

  பெய்டு நியூஸ் கலாச்சாரத்தை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கையில் எடுத்தது போல, இந்த பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தை மத்திய தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டும் !

  இல்லையெனில் பத்திரிகைகளின் மீது உள்ள மக்களின் கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போய்விடும் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.