….
….
….
” தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி
மந்திரிசபை அமையுமா….? ” என்கிற தலைப்பில்
நேற்று நான் எழுதிய இடுகையை, அதிமுக-வுக்கு
ஆதரவாக இயங்குகிறேன் என்று சில நண்பர்கள்
குறை கூறி இருக்கிறார்கள்.
முக்கியமாக, அத்தகைய நண்பர்களுக்காகவென்றே நான்
எழுதும் இடுகை இது. பொதுவாக, நான் எந்த ஒரு தனிப்பட்ட
அரசியல் கட்சியின் ஆதரவாளனோ, அனுதாபியோ அல்ல.
எந்த கட்சியாக இருந்தாலும், எனக்குத் தோன்றுவதை
பொதுவாக விமரிசித்து கருத்து கூறி வருகிறேன்.
மேற்கண்ட இடுகையில், நான் அதிமுக-வுக்கு ஆதரவான
கருத்துகளை கூறி இருப்பது உண்மை தான்… ஆனால்
அதற்கான காரணம் என்ன…?
இப்போது தேர்தல் நேரம். எதாவது ஒரு வகையில்
ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம்.
நமது தேர்தல் அரசியல் முறையில், நல்லவர்களைத்தேடி
நாம் ஆதரிக்க வாய்ப்பில்லை. நம் முன் நிறுத்தப்படுபவர்களில்
யாராவது ஒருவரைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இருப்பதில் சிறந்தது எது…? ( சோ அவர்களின் வார்த்தைகளில்
சொல்லப்போனால் – எரிகிற கொள்ளியில் எது சிறந்த கொள்ளி…?)
என்று தீர்மானிக்கக்கூடிய சாய்ஸ் மட்டும் தான் நமக்கு
இருக்கிறது….
இப்போது தீர்மானைக்கப்பட வேண்டியது –
அடுத்து ஆட்சியில் அமரவேண்டியது – திமுக-வா
அல்லது அதிமுக-வா – என்கிற விஷயம் மட்டும் தான்.
இந்த நேரத்தில் நாம் இந்த இரண்டில் ஒன்றையே
தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
திமுக-வின் கடந்த கால ஆட்சியின்போது நடந்தவை இன்னும்
கண்கள் முன் நிற்கின்றன. அவை எந்த விதத்திலும்
அங்கீகரிக்கப்படக் கூடியவை அல்ல. மிகவும் கசப்பான
அனுபவங்கள்… நான் அவற்றை இங்கே விவரிக்க
விரும்பவில்லை; நண்பர்களே நிறைய எழுதி இருக்கிறார்கள்.
மக்களும் அனுபவத்தில் அறிவார்கள்.
இப்போது – அதிலிருந்து திமுக மாறி விட்டது என்று
கூறக்கூடிய எந்த பின்னணியும் தற்போது ஏற்படவில்லை;
கலைஞருக்கு பதிலாக ஸ்டாலின் என்பதைத்தவிர அங்கு
வேறு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது…?
( அடுத்த தலைமுறை ஆட்சியை உறுதி செய்ய,
உதயநிதியும் உள்ளே வந்து விட்டார்…!!!)
இப்போதும் அங்கே ஸ்டாலினைச் சுற்றிலுமுள்ள
முக்கியஸ்தர்கள் யார் யார்…? அவர்களை ஸ்டாலினால்
தவிர்க்க முடியுமா…? அல்லது கட்டுப்படுத்தத்தான் முடியுமா…?
திமுக ஆட்சிக்கு வந்தால், அமைச்சரவையில் முக்கிய
பொறுப்பேற்கக்கூடியவர்கள் யார்…?
திருவாளர்கள் –
காட்பாடி துரைமுருகன்,
திருவண்ணாமலை எ.வ.வேலு,
விழுப்புரம் பொன்முடி,
தஞ்சை டி.ஆர்.பாலு,
திருச்சி கே.என்.நேரு….
– என்று பழைய திமுக ஆட்சியில்இடம் பெற்றவர்கள் தானே….?
பத்தும் பத்தாததற்கு ஆ.ராசா வேறு ….!!!!
இத்தனை பேரும் அரசியலில் ஈடுபட்டு, அமைச்சர்களாக
பதவி வகித்ததன் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்…
இவர்களில் உத்தமர் என்று யாரையாவது சொல்ல முடியுமா ..?
நான் அதிமுக ஆட்சியை, எடப்பாடியார் – அரசை உத்தமமானது,
அற்புதமானது என்றெல்லாம் வர்ணிக்கவில்லை;
அதிமுகவை நிராகரித்தால், அடுத்து வேறு என்ன சாய்ஸ்
என்று பார்த்தால் – திமுகவும், அதன் ஊழல் முகங்களும் தானே
கண்கள் முன் தெரிகின்றன…?
எனவே, அதிமுக-வை – எடப்பாடியார் ஆட்சியை – நிராகரித்தால்,
அதற்கு பதிலாக அதைவிடச்சிறந்த மாற்று ( alternative )
எதுவும் இல்லாத்தால்,
– இருக்கிற சாய்ஸ் திமுகவா அல்லது அதிமுக-வா என்று
மட்டுமே இருப்பதால்,
– அதிமுக-வையே தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது….
திமுக வேண்டாம் என்று கூறும் வாசக நண்பர்கள் –
அதற்கான காரணங்களை விவரமாக கூறி இருக்கிறார்கள்.
ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்
என்று கூறுபவர்கள் யாரும் அதிமுக-வை விட திமுக
எந்த விதத்தில் நல்ல ஆட்சியை தரக்கூடும் என்று
கூறவில்லை. ( அதை அவர்களாலேயே நியாயப்படுத்த
முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்…!!!)
நண்பர்கள் இது குறித்த இடுகைகளுக்கு
வந்துள்ள பின்னூட்டங்களைப் பார்த்தால் அது புரியும்.
திமுக-வை ஆதரிக்கும் நண்பர்கள் ….
அதிமுக-வை விட திமுக எந்த விதத்தில் சிறப்பான ஆட்சியை
கொடுக்கும் என்று விவரமாகச் சொன்னால், நாம் நிச்சயமாக
அது குறித்து விவாதிக்கலாம்.
எந்த கருத்தையும் இங்கே வெளியிட நான் மறுத்ததில்லை;
என் கருத்தை தவறு என்று சொல்லும் நண்பர்கள்
அது எந்த விதத்தில் தவறு என்று எடுத்துக் காட்டினால்,
அதையும் இங்கே வெளியிடத்தயாராகவே இருக்கிறேன்.
வெளிப்படையான விவாதம் ஒன்றிற்கு
நான் தயார்….
என் நிலையை (Stand -ஐ) குறை கூறும்
– நண்பர்கள் தயாரா…?
திமுகவுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் தங்கள் தரப்பு
காரணங்களை விவரமாக எழுதட்டும். அவற்றை
எதிர்க்கும் நண்பர்கள், தங்கள் தரப்பு விவாதங்களையும்
முன் வைக்கட்டும்.
வாசக நண்பர்கள் அனைத்து கருத்துகளையும் படிக்கட்டும்.
அதிலிருந்து அவர்களுக்கான முடிவை அவர்களே
எடுக்கட்டும்.
.
————————————————————————————————————-
இது தமிழகத்துக்கான தேர்தல். இதில் பாஜகவுக்கு இடமில்லை. மத்திய அரசின் கொள்கைகளுக்கான எதிர்ப்புக்கான தேர்தல் இல்லை, தமிழகத்துக்கு யாருடைய ஆட்சி நல்லது என்று பார்க்கவேண்டிய தேர்தல். இதையும் தவிர, இவர்களை வரவிட்டால் என்ன என்ன பாதிப்புகளை தமிழகம் சந்திக்கும் என்பதற்கான தேர்தல். அதிமுக, எடப்பாடி அவர்களின் தலைமையில் என்ன செய்திருக்கிறது, என்ன குறைகள், இவர்களை வீட்டுக்கு அனுப்பினால் யாரைக் கொண்டுவரப் போகிறோம் என்பதற்கான தேர்தல் இது.
1. அதிமுக என்ன பெரிய குற்றம் செய்திருக்கிறது என்று பார்த்தால் என்னால் சட் என்று சொல்ல முடியவில்லை. எனக்குத் தோன்றும் குறை, வாக்குகளுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்ய அதிமுக நியாயங்கள் செய்ய மறுத்தது என்பது ஒன்றுதான். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை நான், ஒரு ஸ்ட்ராடஜி என்ற அளவில் மட்டும் பார்க்கிறேன். அவர்களின் நிர்ப்பந்தம் எதையும் அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை. விலைபோன ஊடகங்கள் அனைத்தும், அதிமுக இமேஜைச் சரிக்க, பாஜக அதிமுக கழுத்தைப் பிடித்து அறுபது சீட் கேட்கிறது, கூட்டணி மந்திரிசபை என்று எவ்வளவோ பொய்களை எழுதியது. அதிமுக செய்த முடிவுகளில் பல பாஜக, கனவிலும் செய்ய நினைக்காத்து. அதனால் அதிமுக, எடப்பாடியின் தலைமையில் தன் தனித்துவத்தை வெளிச்சமிட்டுக் காண்பித்தது.
2. இது மேலும் புரிந்துகொள்ள, காங்கிரஸ், அறிவாலயத்தில் சிபிஐ வைத்து தயாளு போன்றவர்களை கீழ்த்தளத்தில் விசாரிக்க, மேல் தளத்தில் பயந்து நடுங்கி 63 சீட்டுகளைத் தாரை வார்த்த கருணாநிதியின் செயலையும், காங்கிரஸ் மந்திரிசபையில் இருந்து லட்சம் கோடிகள் சுருட்டியதனால், ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏசி காற்றில் மனைவி துணைவியோடு இரண்டு மணி நேரம் பொதுவெளியில் ரெஸ்ட் எடுத்ததைத் தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதையும், கனிமொழி (ராசா பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை. ராசா மட்டும் என்றால் அம்போ என விட்டிருப்பார்) திகாரில் தள்ளப்பட்டதும் சக்கர நாற்காலியில் சிறை வாசலில் தவம் செய்த செயலையும் (கூட்டணியில் இருந்தபோது) நாம் நினைவுக்குக் கொண்டுவந்தால் காங்கிரஸ் திமுகவை எப்படி ஆட்டிப் படைத்தது என்று தெரியும்.
அதிமுக ஊழல் என்போர், மத்திய அரசால் ஆட்டிப்படைக்கப்பட்டது என்போர், பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்பட்டது என்போர் இதனை நினைத்துப் பாருங்கள்.
அதிமுக ஏன் அடிமையாக இல்லை என நான் நினைப்பது, திமுக போல கொள்ளையடிக்கவோ, தேசவிரோதச் செயலுல் ஈடுபடவோ அதிமுக முனைந்ததில்லை என்பதுதான்.
பிறகு வருகிறேன்.
இரண்டாவதாக, நம் வாழ்க்கைக்கு எது நல்லது என்ற பார்வை. நமக்கு எந்த அரசாங்கமும் பெரிதாக உதவக்காணோம். இலவசங்கள் அள்ளித் தெளித்ததைத் தவிர, செத்தவனுக்கு காசு கொடுத்ததைத் தவிர, வேறு பெரிதாக நம் வாழ்வின் மாற்றத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சட் என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. பள்ளிப் பிள்ளைகள் இலவச லேப்டாப் உபயோகம், சைக்கிள் உபயோகம் என்று நினைக்கலாம். ஆனால் அரசாங்கம் என்பது, நமக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யக்கூடாது. அதைச் செய்தால் சாதாரண மக்கள் அதனைத் தாங்க முடியாது.
அதிமுகவின் 1991-96 ஆட்சியில் கடைசி இரு வருடங்கள் நன்றாக இல்லை, அடாவடி அரசாக இருந்தது. திமுக அரசாங்கம் அனேகமாக எப்போதுமே அடாவடி அரசு. அடுத்தவன் சொத்தைப் பிடிங்கிக்கொள்வதிலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலும் திமுகவினைப் போல அராஜகமான கட்சியை நான் கண்டதில்லை. வேலிக்கு ஓணான் என்பதுபோல, அவர்களுடைய கூட்டணிக் கட்சியான விசிகவின் அடாவடிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். உதயநிதியே, வயதானவரால் ஒன்றும் செய்ய இயலாது என்று அவரை விரட்டிவிட்டு அவரது பங்களாவைக் கைப்பற்றிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். திமுகவின் குறுநில மன்னர்கள் எப்படிப்பட்ட அடாவடித்தனம் கொண்டவர்கள் என்பதும் அனுபவித்த எல்லோருக்கும் தெரியும்.
இரண்டாவதாக காவல் நிலையங்களில் திமுகவினர் செய்யும் அராஜகம் என்பது அதிமுக ஆட்சியில் முற்றிலுமாக இருந்ததில்லை. தா.கிருஷ்ணன் கொலை, காவல் அதிகாரியை நெல்லையில் எல்லோர் முன்னாலும் வெட்டியது, ஆலடி அருணா கொலை, ராமானுஜம் கொலை (அண்ணன் நேருவின் அடாவடி, ராமானுஜம் செய்த அடாவடிகள் திருச்சியினருக்குத் தெரியும்), தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு என்று எதிலும் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்க முடிந்ததில்லை.
நம் வாழ்க்கை எப்போதும்போல இருக்கவேண்டும் என்றால், அரசாங்கத்தால், ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் பாதிக்கப்படக்கூடாது என்றால் திமுக குண்டர்களுக்கும் விசிகவுக்கு அரசியல் அதிகாரம் வரக்கூடாது. கட்டைப்பஞ்சாயத்து, பெண்களை அடாவடியாக மணம் செய்து பணம் பறித்தல் போன்ற அராஜகங்களை தமிழகத்தின் மக்கள், குறிப்பாக வன்னிய, கவுண்டர் இன மக்கள் அனுபவித்திருப்பர்.
மதுவினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று போராடி, சும்மா கிடந்தவரை இறக்கும்படிச் செய்த அரசியல் செய்த சிகரெட் வியாபாரி வை.கோபாலசாமி, இலங்கைத் தமிழர்கள் அழிகிறார்களே என்று போலிக் கண்ணீர் விட்டு, தொண்டை நரம்புகள் கிழியக் கத்தி, அரசியல் நாடகங்கள் செய்து, அதைக்கொண்டு இலங்கைத் தமிழர்களிடம் பணம் பெற்று கூட்டங்கள் நடத்தி, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பேன் என்று வீர முழக்கமிட்ட கோவாலசாமி இப்போது ஸ்டாலின் காலின் கீழ் விழுந்து கிடக்கிறார். முள்ளி வாய்க்கால், இலங்கைத் தமிழர், தொப்புள் உறவு என்று வாய்கிழியப் பேசி புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடம் காசு புரட்டி தன்னை வசதியாக்கிக்கொண்டு, ராஜபக்ஷே அசுரன் என்று வெற்றுக்கூச்சல் போட்டு, என் பிணம்தான் காங்கிரசோடு சேரும் என்று வீரம் பேசிவிட்டு, ராஜபக்ஷேவைப் பார்த்துப் பல்லிளித்து பணப்பெட்டி பெற்றுக்கொண்ட திருமா இப்போது திமுக, காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து வாக்குக் கேட்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இப்போதைய பஜனை, ‘சனாதன தர்மம்’. இந்திய மண்ணில் பிறந்து, இந்திய சமயத்திற்கு எதிராக, வெளிநாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு தேசத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்யும் இவர்கள்தான் இப்போது ‘தேச விரோதச் செயலைச் செய்ததற்காக’ ஆட்சியைவிட்டு விரட்டப்பட்ட, கொலை பாதகத்துக்குத் துணை போனதால் (அது எப்படி என்று கேட்டால் விரிவான விளக்கம் தருவேன்) மக்களால் விரட்டியடிக்கப்பட்ட திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்கைக் கேட்டு வருகிறார்கள்.
இந்தக் கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கிறது? எந்தக் கொள்கையில் இவர்கள் பிடிமானம் வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள்? ஸ்டாலின் கட்சி நடத்துவது குடும்ப வியாபாரத்திற்கு. இல்லாவிட்டால் திருட்டு ரயில் ஏறி வந்த கும்பலுக்கு, லட்சம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது? என்ன வியாபாரம் செய்தனர்? சும்மா கிடந்த, கல்வியறிவில்லாத உதயநிதி 28 கோடி சொத்து, கனிமொழி 50 கோடி சொத்து, ஒட்டிக்கொண்ட ராசாத்தி அம்மாள் 50 கோடி சொத்து என்று எப்படி கணக்கு காண்பிக்க முடிகிறது? 2ஜி லஞ்சம் வாங்கி, 60 சதவிகித பங்கு வைத்திருந்த தயாளு எப்படி தப்பிக்க முடிந்தது? இந்த மாதிரி கேள்விகளுக்கு முடிவே இல்லை. இவையெல்லாம் பத்திரிகையில் வந்தவை. அவற்றை லிஸ்ட் போட்டால் பக்கங்கள் போதாது.
நாம், பாஜக அரசு (தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குச் சம்பந்தமில்லை என்றாலும் இந்த பாயிண்டை எடுத்துக்கொள்கிறேன்) கார்ப்பொரேட்டுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்றுதான் எப்போதும் சொல்கிறோம். ரிலையன்ஸ் எப்போதுமே காங்கிரஸுக்குச் சாதகமாக இருந்திருக்கிறது, அவர்களால்தான் வளர்ந்தது. நம் இந்தியாவில், ரிலையன்ஸ், பஜாஜ், டாட்டா, L&T இன்னும் பல கார்ப்பொரேட் கம்பெனிகள் இருக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அம்பானி, அதானிகளுக்கு நிறைய காண்டிராக்டுகள் கிடைக்கின்றன.
நாம் நம்மைக் கேட்டுக்கொள்ளவேண்டியது, கார்ப்பொரேட்டுகள் என்றால் என்ன? மாறன் குழுமம் கார்ப்பொரேட் இல்லையா? இந்தியா சிமெண்ட்ஸ் கார்ப்பொரேட் இல்லையா? சாதாரண கேசட் போட்டுக்கொண்டிருந்த மாறன் குழுமம் விமானக் கம்பெனி வைத்திருக்கிறது 40 தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறது, மருத்துவ மனைகள் இன்னும் பலப்பல தொழிலகளும் போதாக்குறைக்கு கிரிக்கெட் குழுவும் வைத்திருக்கிறது. இதேபோலத்தான் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் அவர்களும். இவர்களெல்லாம் உழைப்பின் திலகங்களா இல்லை அரசு உதவியை நேர்மையில்லாத வழியில் பெற்று வளர்ந்தவர்களா? கருணாநிதியின் ஊழல்தனத்தையும் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் செயலையும் பயன்படுத்தி யாரேனும் வளர்ந்தால் அது நியாயமான வளர்ச்சி. ஆனால் டெண்டர்களில் தங்களது அரசியல் தொடர்புகளை வைத்து மற்றவர்கள் வளர்ந்தால் கார்ப்பொரேட்டுக்குச் சாதகமா? பாஜக என்ன கம்யூனிஸ அரசை நடத்துவோம் (இந்த ஊர்ல உள்ள ‘கோடிகளில் லஞ்சம்’ வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல) என்றா மக்கள் வாக்கைப் பெற்று பதவிக்கு வந்தது?
சரி… நாம் கார்ப்பொரேட்டுகளுக்கு எதிரிகள், தனியார்மயமாக்கலுக்கு எதிரிகள், வடநாட்டான் பிழைப்பதற்கு எதிரி என்றால் நியாயமாக என்ன செய்யணும்?
1. நாம் எல்லோரும் பி.எஸ்.என்.எல் வைத்திருக்கணும். அரசு வங்கிகளை மட்டும் உபயோகிக்கணும். ரிலையன்ஸ், அதானி, அப்போலோ போன்ற பல கார்ப்பொரேட்டுகளின் ஷேர் வாங்கக்கூடாது. மரணமே வந்தாலும் சரி என்று அரசாங்க மருத்துவமனைக்கு மட்டும்தான் போகணும். தனியார் கல்லூரி பள்ளிகளுக்கு நம் குழந்தைகளை அனுப்பக்கூடாது, அரசு போக்குவரத்தை மட்டும்தான் உபயோகிக்கணும், நம் பக்கத்தில் இருக்கும் எளிய மக்களின் கடைகளில் மட்டும்தான் பொருட்கள் வாங்கணும், பிட்சா/பர்கர் போன்ற கார்ப்பொரேட்டுகளின் உணவகங்களைப் புறக்கணிக்கணும், உள்ளூரில் கிடைக்கும் கைத்தறி, நெசவு உடைகளை மட்டும்தான் வாங்கணும், வெளிநாட்டிலிருந்து வரும் தொலைக்காட்சிப் பெட்டிகள், உடை, உணவு எல்லாவற்றையும் புறக்கணிக்கணும், உள்ளூரில் தயார் செய்யும் மார்கோ போன்ற சோப் வகைகள், நம் தமிழகத்தில் தயாராகும் எண்ணெய் போன்றவற்றை மட்டும் உபயோகிக்கணும். வடவர்கள் வேலை செய்யும் எல்லாக் கடைகளையும் புறக்கணிக்கணும்.
நம்மால் இதனைக் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது. சரி நாம் வாக்களிக்க நினைக்கும் அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? நம் கோவிட் வேக்ஸினைப் பற்றி தாறுமாறாக பரப்புரை செய்த திருமா, ஸ்டாலின் போன்றோர், வாய்ப்பு கிடைத்த உடன், தனியார் மருத்துவமனையில் பல்லிளித்துக்கொண்டு வேக்சின் போட்டுக்கொண்டார்கள். எடப்பாடி மட்டும் அரசாங்க மருத்துவ மனையில் போட்டுக்கொண்டார்.
பாஜக அதானிக்கு உதவுகிறது என்பது நம் குற்றச் சாட்டு என்றால், திமுக அரசு, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாராய ஆலைகளிலிருந்து மது கொள்முதல் செய்வதும் அதே அளவு தவறுதானே. மாறன் கார்ப்பொரேட்டுகளுக்கு மட்டும் சலுகைகள் கொடுத்ததும் தவறுதானே. அதைச் செய்ய மாட்டோம் என்று ஏதும் உறுதி கொடுத்திருக்கிறார்களா? இல்லை நாம்தான், அரசு தொலைக்காட்சி தவிர, தனியார் தொலைக்காட்சிகளைப் பார்க்கமாட்டோம் என்று முடிவு செய்திருக்கிறோமா?
நம் கார்ப்பொரேட்டுகளுக்கு எதிரி என்ற பிம்பம் எவ்வளவு போலியானது என்பது புரிகிறதல்லவா?
மதத்தைப் பற்றி நிறைய எழுத முடியும். இந்தத் தளத்தில் அதனைப் பற்றி எழுதுவதை கா.மை. சார் விரும்புவதில்லை. ஆனால் மத விஷயத்தில் பாஜகவின் மீது எனக்கு எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. திமுக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறதோ அதில் 30 சதவிகிதம் கூடா பாஜக ‘மதத்தை’ வைத்துச் செய்வதில்லை என்பதுதான் என் அனுமானம். பாஜக ‘இந்து மதத்தையும்’ பாதுகாக்க நினைக்கிறது. அது மிகச் சரியானது என்பது என் எண்ணம்.
ஆனாலும் இது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் என்பதால், இந்துக்களுக்கு ஆதரவான, அல்லது நேரடியாக எதிராகச் செயல்படாத கட்சி ஆட்சிக்கு வரணும் என்பது என் ஆசை.
எந்த டாபிக்கை எடுத்துக்கொண்டாலும், அதிமுக அரசு, ஆயிரம் மடங்கு திமுகவை விட சிறப்பான, மக்கள் நலம் பேணும் கட்சி. இது ஏதோ நான் மட்டும் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழக மக்களின் தீர்ப்பு இது. திமுக எந்தக் காலத்திலும் இரண்டாவது முறை வெற்றி பெற்றதில்லை. அந்த கௌரவத்தை மக்கள் அதிமுகவிற்கு எம்.ஜி.ஆர் தலைமையிலும் அடுத்தது ஜெ.வின் தலைமையிலும் அளித்திருக்கிறார்கள். ஜெ. உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் மூன்றாவது முறையும் அவரே ஆட்சியில் இருந்திருப்பார். கடவுளின் தீர்ப்பையும் நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகள் பொதுவாழ்வு என்று பீத்திக்கொண்டாலும், தன்னலமாக தன் குடும்பத்துக்காக மட்டும் உழைத்த, தேசத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட கருணாநிதி கடைசி இரண்டு வருடங்கள் பொம்மையாக இருந்தும் இறக்கும்போது பதிவியில்லாமல் இருக்க வைத்ததும் அந்த இயற்கைதான். முடிவு காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த இயற்கை, ஜெ வை முதலமைச்சராக இருக்கவைத்தது.
மக்களின் நன்மையை முன்னிட்டு, திமுகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்துக் கட்சிகளும் தோற்கடிக்கப்படவேண்டியவை. அவைகள் ஒன்றிர்க்கும் கொள்கையோ தேச நலனோ இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. நாளைக்கே தங்கள் பிஸினெஸ், தங்களுக்கு வருவாய் என்றால் திமுக, இப்போது கடுமையாக எதிர்க்கும் பாஜகவுடன் கூட்டுச் சேரத் தயங்காது, திமுகவுடன் இப்போது கூட்டுச் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு கட்சியும் சந்தர்ப்பம் கிடைத்தால் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு கொள்ளையை முன்னிறுத்தும் என்பதிலும் எனக்குச் சந்தேகமே இல்லை.
Unfortunately இந்தத் தேர்தலில் நான் நினைப்பது நடக்கப்போவதில்லை. திமுக 150+, அதிமுக 40- என்ற என் கருத்திலும் மாற்றமில்லை.
நண்பர் புதியவனுக்கு
இன்று நல்ல வேட்டை.
ஆனால் கண்ணுக்கு எட்டிய வரை
எதிரே யாரையுமே காணோமே….!!!
யாராவது வந்தால் இன்னும்
சுவாரஸ்யம் கூடும்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அருமையாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் புதியவன் அவர்கள்…
வைதீக பெண்களை வழிகெடுத்து தரித்திர வாழ்க்கையில் தள்ள, விசிக திமுக கட்சிகளிடம் ஒரு தனிப்பிரிவே இருக்கிறது. அவர்களின் தேர்தல் வாக்குறுதியை அவ்வாறு தரித்திர தாம்பூலம் செய்பவருக்கு அரசு பணம் வழங்கும் என்பதுதான்.
இதை வைதீக குடும்பங்கள் தெளிவாக உணர்ந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள்! சொரணை கெட்ட மற்ற இந்துக்கள் என்றைக்கு திருந்துவார்களா?? அதனால்தான் புதியவன் சொல்லும் தேர்தல் முடிவுகள் உண்மையாகிவிடுமோ என்ற நிலையும் உள்ளது
அருமையாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் புதியவன் அவர்கள் வைதீக பெண்களை வழிகெடுத்து தரித்திர வாழ்க்கையில் தள்ள விசிக திமுக கட்சிகளிடம் ஒரு தனிப்பிரிவே இருக்கிறது அவர்களின் தேர்தல் வாக்குறுதியை அவ்வாறு தரித்திர தாம்பூலம் செய்பவருக்கு அரசு பணம் வழங்கும் என்பதுதான் இதை வைதீக குடும்பங்கள் தெளிவாக உணர்ந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள் சொரணை கெட்ட மற்ற இந்துக்கள் என்றைக்கு திருந்துவார்களா அதனால்தான் புதியவன் சொல்லும் தேர்தல் முடிவுகள் உண்மையாகிவிடுமோ என்ற நிலையும் உள்ளது
அட கஷ்டமே!! கலப்பு திருமணங்கள் ஒரு முன்னேறிய சமூகத்திற்கு அடிப்படையப்பா!!!
நீங்கள் தமிழ்நாட்டை உத்திரபிரதேச ரேஞ்சுக்கு கொண்டுபோக விரும்புவீர்கள் போல… எங்களை உடுங்க பாஸ்.
நாங்க சொரணை கெட்ட இந்துவாகவே இருந்துட்டு போறோம்
மன்னிக்கவும் கலப்பு திருமணம் செய்ததம்பதியினர் அவர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் என்ன சாதின்னு சொல்லி வளர்க்கிறார்கள் என தங்களுக்கு தெரியுமா…..
இதற்கு யாரும் காரணம் கிடையாது. நம் சமூகத்தில் அப்பாவின் மதம், சாதி, குழந்தைகளுக்கு அப்படியே வரும்.
இதில் நான் கவனித்த ஒரே ஒரு மாற்றம், முஸ்லீம் அல்லது கிறித்துவ பெண் அல்லது ஆணைத் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு அதே மதம்தான் தொடருகிறது. முஸ்லீம்களின் கொள்கை அப்படி. கிறித்துவர்களுக்கு, பெண்கள், தங்கள் பெற்றோரையும் சர்ச்சிலிருந்தும் ஊர் கூட்டத்திலிருந்தும் விலக்கிவிடுவர் என்பதால் தங்கள் குழந்தைகள் கிறிஸ்துவத்தைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள் (ஏதோ ஊகத்தின் அடிப்படையில் எழுதவில்லை. களத்தில் என்ன நடக்கிறது, என்ன சாதிகள் என்ன செய்கின்றன என்று ஆய்வு செய்திருக்கிறேன். கிறிஸ்துவத்தில் இப்படி நடப்பது தென் மாவட்டங்களில்தான்) மனைவி இந்துவாகத் தொடர்ந்தாலும் தானும் கோவிலுக்குப் போவதையோ சர்ச்சுக்குப் போவதையோ வித்தியாசமாக நினைக்காதவர்களும், தங்கள் குழந்தையை கிறிஸ்துவர்களாக வளர்க்கிறார்கள். இதற்குக் காரணமாக, தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதையும், பின்பு வெளிநாட்டுக்குச் செல்லுதல் சுலபமாக இருக்கும் என்பதையும் காரணமாகக் குறிப்பிட்டனர்.
பிற கட்சிகளை தூண்டில் போட்டுப் பிடித்து அடிமையாக்கும் கலையில் பாஜக மிகவும் திறமை வாய்ந்த ஒரு கட்சி. அவர்களது அஸ்திரமே கட்சிகள் செய்யும் ஊழல்கள் மட்டுமே. ஊழல்களில் திமுக டாக்டரேட் வாங்கிய கட்சி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அரிப்பெடுத்த கை ஒருபோதும் சும்மா இராது. ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளத்தான் செய்வார்கள். ஏற்கனவே பல ஊழல் வழக்குகள் அவர்கள் மீது உண்டு. இவையெல்லாம் பாஜகவுக்கு ஸ்வீட் சாப்பிட்டதுபோல் ஆகும். அவர்கள் தூண்டில் வேலைக்கு களம் நன்றாய் அமையும். எனவே திமுகவை நிராகரிப்பதே பாஜகவுக்கு நாம் ஆற்றும் சரியான எதிர்வினை. மாறாக சீமான் போன்ற போராளிகள் பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். அவர்களுக்கு ஒத்துப்போனால் அவர்களுக்கு அரசியலில் ஒரு தனித்துவமோ அல்லது எதிர்காலமோ இருக்காது. எனவே அவர்கள் பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் இருக்கவே முனைவார்கள். இது தமிழர் நலனுக்கு ஒரு முக்கியமான தேவை. எனவே பாஜகவின் சதியிலிருந்து நாம் தப்பிக்கவேண்டும் என்றால் நாம் தமிழர் என்கின்ற ஒற்றைப்புள்ளியில் அனைவரும் இணைந்து பிஜேபியை எதிர்ப்பது ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். மாறாக திமுக போன்ற அயோக்கியர்களையோ அல்லது கமல் போன்ற கோமாளிகளையோ ஆதரித்து தமிழர் நலனில் கோட்டை விட்டுவிட வேண்டாம். அமமுகவும் அடிமை அதிமுகவும் ஒரே கட்சியின் வெவ்வேறு பரிமாணங்கள் தானே.
ஆளும் கட்சிக்கு எதிரான பலமான கருத்துக்கள் நிலவினால் மட்டுமே, மக்கள் ஒன்று திரண்டு மாற்று அரசாங்கத்தை தேர்தெடுப்பர்கள்.இதுதான் எனக்கு புரிந்த நிலை.
உதாரணமாக ஜெயலலிதா அவர்கள் முதன்முதலில் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது நடந்த கொடூர, வன்முறை அரசியலை பார்த்து அணைத்து தமிழ்நாட்டு மக்களும் கொதித்தெழுந்து , திமுகவிற்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுத்தார்கள்.அதேபோல் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய பயங்கர ஊழல் குற்ற சாட்டுகளால் கொதித்தெழுந்த மக்கள் ஒருங்கிணைந்து பிஜேபியை தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் இது போன்ற கடுமையான ஆளும் கட்சிக்கெதிரான அதிருப்தி மனநிலை இல்லாத நிலையில் ஆளும் கட்சியே வெற்றி வாகையை சூடியிருக்கின்றது.
ஆனாலும் மக்கள் சிறுது குழம்பிய மனநிலையில் உள்ள நிலையில் ஆளும் கட்சியினர் , சரியான வகையில் தங்களை விளம்பரம் செய்து கொள்வதில்லை .இது ஒரு குறைபாடாகவே நான் பார்க்கிறேன்.
தற்பொழுது உள்ள அமைச்சர்களின் மீது சொல்லி கொள்ளும் வகையில் குற்றச்சாட்டுகள் , கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, போலீசார் அராஜகம் , கவுன்சிலர் அராஜகம் போன்றவை இல்லை என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள இயலும்.இதுவே மக்களுக்கு போதுமான நிம்மதியான எதிர்பார்ப்பாக வைத்து கொள்ளலாம்..சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுகள்,திருட்டு தவிர்த்து இவர்கள் மக்களுக்கும் , மக்களின் உணர்வுகளுக்கும் எந்த வகையிலும்நேரடியாக தீங்கு இழைக்காத நல்ல ஆட்சி என்பதை நிச்சயம் எல்லோரும் ஒத்து கொள்ள இயலும்.(ஜல்லி கட்டு ,நீட் போன்றவை நீங்கலாக – ஏனெனில் இதில் திமுகவின் பங்கை மறந்து விட கூடாது.)
ஆனாலும் இந்த ஆட்சி மாற்றம் கண்டால், மீண்டும் கட்ட பஞ்சாயத்து,கவுன்சிலர் அட்டகாசங்கள், நில அபகரிப்பு பஞ்சாயத்துகள் , பெரும்பான்மை மதத்தினரின் மன உணர்வுகளுக்கு சாவுமணி,
நினைக்கவே தலை சுற்றுகிறது.
இதை புரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா, அல்லது பிஜேபியின் மீது உள்ள வெறுப்புணர்வினால் , அதை தண்டிப்பதாக நினைத்து கொண்டு கொள்ளிக்கட்டையை தேர்ந்தெடுத்து நம் முதுகை நாமே பதம் பார்த்து கொள்ள போகிறோமா.
ஆனாலும் இன்னும் விதி நம் கையில் தான் உள்ளது, கையை மீறி பொய் விட வில்லை..புரிந்து கொண்டால் தப்பித்து கொள்ளலாம்.
சென்னையில் இன்னமும் வாடகைக் குடியிருப்புதான். என்றபோதும் நான் வாடகைவீடு தேடி அதிகம் அலைந்ததில்லை…காரணம் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடியிருந்துவிட்டோம்.சில வசதிக்குறைவுகள் இருந்த போதும் வீட்டின் உரிமையாளர் மற்றும் சுற்றத்து மனிதர்களின் அன்பு எங்களை இடம் பெயர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் இட நெருக்கடிக்காக, இன்னும் சற்று பெரிய வீடாக பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் கடந்த ஒரு மாதகாலமாக வாடகை வீடு தேடி அலைகிறோம்.
இன்று எம் எம்டிஏ காலனியில் ஒரு வீட்டிற்குப் போயிருந்தோம். வாசலில் டூ லெட் போர்ட் மாட்டப்பட்டிருந்தது. நல்ல மரங்கள் அடர்ந்த இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. வெளித்தோற்றமே நன்றாக இருந்ததால்,.. மனைவியை இறங்கி விசாரிக்கச் சொன்னேன்..
மாடி பால்கனியில் வீட்டின் உரிமையாளப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். என் மனைவி ”வீடு வாடகைக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டதும்.. சிரித்தபடியே ”முஸ்லீம்ஸுக்கெல்லாம் வாடகைக்கு விடறதில்லைங்க” என்றார்.. என் மனைவி பதிலுக்கு ”தேங்க்ஸ்” என்றபடி வந்துவிட, அந்தப் பெண்மணி போனில் யாரிடமோ சிரித்துப் பேசியபடி தன்னியல்பில் பால்கனியில் நடந்து கொண்டிருந்தார்..
அவரது முகத்தில், ஒரு பர்தா அணிந்து வந்த பெண்ணுக்கு….,தான் இதைவிட நல்ல பதிலை சொல்லிவிட முடியாது என்பது போல, ஒரு பாவனை இருந்தது.நெடுங்காலமாக.. இப்படி ஒரு பதிலை தொடர்ச்சியாக சொல்லி வந்தவர் போல மிக நிதானமாகவும், கண்ணியமாகவும்,, புன்னகையுடனும் அந்த சொல்லை உதிர்த்திருந்தார்..
தூரத்து மரத்தடியில் நின்றபடி அந்த அம்மாவையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. நான் கோபித்துக் கொண்டு சண்டைக்குப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என் மனைவியிடமிருந்தது. ’வாங்க மச்சான் போகலாம்’ என்றாள்.நான் மிகக்கனிவான பார்வையோடு, அந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். .அந்த அம்மா நிச்சயமாக அசைவ உணவாளிக்கு வீடில்லை என்று சொல்பவர் இல்லையெனத் தோன்றியது..
நடுவகிடெடுத்து உச்சியில் குங்குமம் வைத்திருந்த விதத்தில்… அவர் என்னுள்ளிருந்த எத்தனையோ அம்மாக்களின் சாயல்களைக் கொண்டிருந்தார்.. எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் எப்படி இந்த அம்மாவைத் தொலைத்தேன் என்பதுதான்…
கோவில் கொடை வீதிகளில் ’என்ன மருமவனே நல்லா இருக்கியளா? மயினிய கேட்டதாச் சொல்லுங்க’.. என விசாரிச்ச ஏதோ ஒரு மாமியின் சாயல், ’என்ன சின்னய்யா ஒரு வாய் காஃப்பித்தண்ணி குடிச்சிட்டுப் போ’ எனக் சொன்ன ஏதோ ஒரு சித்தியின் சாயல்.. ’என்ன கொளுந்தப்புள்ள வந்தியளா’ எனக் கேட்கும் ஏதோ ஒரு மதினியின் சாயல்.. ’தம்பி மாமன் தெனம் குடிச்சிட்டு வாராவள என்னன்னு கேக்கப்படாதா?’ எனக் கேட்கும் ஏதோ ஒரு அக்காவின் சாயல்,’யோவ் தாத்தா என்ன அமட்டிக்கிட்டு நிக்கீரு’ என மிரட்டிய.., ஏதோ ஒரு பேத்தியின் சாயலைக் கொண்டவளாக இருந்தார்.அந்த அம்மா… இவர்கள் எல்லோரது கைகளையும் என்உள்ளங்கைக்குள் வைத்துத்தான் உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்..எப்போது பிடி நழுவியது…யார் விலக்கி விட்டார்…
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது நான் நண்பன் வி.கே சுந்தர் வீட்டில் தங்கி இருந்தேன்..ஓராண்டுகாலமாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பும் உறவும் இருந்தது.. சுந்தரும்,சந்திராவும்..என்மேல் அத்தனை அன்பாக இருந்தார்கள்..
நாங்கள் ஒரு குடும்பமாக இருந்து கொண்டிருந்த போது.. ஒரு பத்து நாள் பயணமாக என் மனைவி பஷிரியா வந்தாள்.. அப்போது அவள் புர்கா அணிபவளாகக் கூட இல்லை.. தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டி இருந்தாள்..அவளது இஸ்லாமியத் தோற்றத்தைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்டையிட்டு.. ஒன்று அவர்களை வெளியேற்றுங்கள்.. அல்லது வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொன்னார்.. சுந்தர்…..,. உங்களுக்காக நண்பனை விட்டுக் கொடுக்க முடியாது என வீட்டை ஒரு நாளில் மாற்றினான்..
ஓராண்டு நட்பை ஒரு நாளில் முறிக்கும் அளவிற்கு அந்த வீட்டின் உரிமையாளர் மூளைக்குள் ஏதோ திணிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அன்று ஊடகத்தில் பணி செய்து கொண்டிருந்தோம் நாங்கள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே போல ஒரு சம்பவம்..
இந்த சமூகமெனும் மலைப்பாம்பு இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பெனும் இரையைத் தின்றுவிட்டு.. அசைய இயலாமல் படுத்துக் கிடக்கிறது.
அச்சுறுத்தலோ, அறிவின்மையோ நாம் பிணைத்திருந்த கைகளை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு வருகிறோம்.மீண்டும் மீண்டும் நம்மில் யாரோ அதற்கு இரை போட்டபடியே இருக்கிறோம்…
ஏதோ ஒரு வீடு கிடைத்துவிடும்.. எப்படியோ வாழ்க்கை நகர்ந்துவிடும்… ஆயினும் நம்மிடையே நெளிந்து கொண்டிருக்கும் அந்த மலைப்பாம்பின் மீதான அச்சம்.. இருவருக்கும் தீரப் போவதில்லை..!
நிற்க..
வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி.. நாம் அந்த மலைப்பாம்பைத் தாண்டித்தான் நமது வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது…
என் கேள்வி எளிமையானது.. எல்லோருக்குமானது.. உங்கள் வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது..
அந்த மலைப்பாம்பிற்கு வலது புறத்திலா? இடதுபுறத்திலா ?
தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பதிவு
அப்துல் கரீம் – உங்கள் பின்னூட்டத்தை (இந்த கம்யூனிஸ்ட் ஆட்கள் எழுதுவதை நான் மதிப்பதில்லை. அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது. காசுக்கேற்றபடி அவங்க கொள்கை மாறுதலடையும். சமூகத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது எல்லாம் தங்கள் சுயநலத்துக்காகத்தான்) நான் படித்தபிறகு அது உங்கள் எண்ணவோட்டம் என்ற அளவில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். எனக்கும் இந்த விஷயத்தில் நெடிய அனுபவம் இருக்கிறது. ஆனால் யோசித்துத்தான் பதில் எழுதணும் என்று நேரம் எடுத்துக்கொண்டேன்.
கா.மை. Sir can choose to delete this comment.
1. யாரோ சொல்லி இஸ்லாமியர்களை இந்தச் சமூகம் வெறுக்கவில்லை (அப்படி வெறுக்கிறது என்று நீங்கள் எழுதியதால் அந்த அர்த்தத்தை எடுத்துக்கொள்கிறேன்). அது இஸ்லாமிய மக்கள் வரவழைத்துக்கொண்டது. எத்தனையோ விஷயங்களில் இஸ்லாமியர்கள் ‘இந்திய’ தேசத்தின் எண்ணவோட்டத்தை விட்டு விலகி, இஸ்லாமியர் என்பதால் இந்திய தேசத்தைத் தாண்டி வெளியே உள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்தீர்கள், போராட்டம் நடத்தினீர்கள், ஊர்வலம் சென்றீர்கள். ஒசாமா பின்லேடனுக்காக ஊர்வலம் நடத்தும்போது நீங்கள் எந்தப் பக்கம் என்று சமூகம் பார்த்துக்கொண்டிருந்தது. பிரபாகரன் எதிர்ப்பு மனநிலை என்று சொன்னபோது அதன் காரணத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது. இதுபோல எத்தனையோ விஷயங்களில்…….
2. இஸ்லாமை வளர்ப்பதற்கு இந்து எதிர்ப்பு மனநிலை அவசியம் என்று எண்ணி-நீங்கள் எண்ணாவிட்டாலும் நீங்கள் செய்தது அதுதான், இந்துக்களை அவதூறாகப் பேசுபவர்களை உங்கள் கூட்டங்களுக்கு வரவழைத்து, அவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பற்றி இழிவாகப் பேசும்போது மகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். இதற்கு நான் எத்தனையோ உதாரணங்களை எழுதமுடியும். நீங்களும் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
3. உங்கள் சமூக மக்கள், திமுகவையோ அதிமுகவையோ ஆதரிக்கும்போது அதில் உங்கள் மதத்தின் நல்லதை மட்டுமே சிந்தித்தீர்கள். அதே சமயம் பாஜக ‘இந்து மக்கள்’ என்றொரு நிலைப்பாடு எடுக்கும்போது, அது ‘மதவெறி’ கட்சி என்று முத்திரை குத்தினீர்கள். இந்த double standardsஐப் பார்க்கும் யாருக்கும் நீங்கள் சொல்வது, செய்வது ‘இந்து மத எதிர்ப்பு’ என்றுதான் பதியும்.
4. ‘மதம்’ என்பதை முன்வைத்து உங்கள் சமூகம், உங்கள் சமூகத்திலிருந்து வந்த கட்சிகள் செயல்படும்போது, ‘மதம்’ என்பதையும் முன்வைக்கும் பாஜகவைப் பற்றிப் பேசும் அருகதையை எல்லோரும் இழந்துவிடுகின்றனர்.
நான் இங்கு எழுதியிருப்பது கிறிஸ்துவர்களுக்கும் பொருந்தும். ‘கடவுள் இல்லை’ என்று ஒருவன் பேசினால், உங்கள் கூட்டத்தில் பேசும்போது, அவன் ‘இந்துக்களைத்தானே சொல்கிறான்’ என்று எப்போது நீங்கள் அவனை ஆதரித்தீர்களோ அப்போதே நீங்கள் கபட நாடகம் நடத்துவது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘இந்துக் கோவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அந்தச் சொத்து பட்டா போட்டுக்கொடுக்கப் படும்’, ‘வக்ஃப் வாரிய நிலங்களை ஆக்கிரமிப்பவர்களை அகற்றி அந்தச் சொத்துகள் வக்ஃப் வாரியத்துக்கு வழங்கப்படும்’ என்று சொல்லும்போது இஸ்லாமியர்கள் திமுகவை ஆதரித்தால், அது மத ரீதியானது இல்லையா? திருமா, கோவில்களை இடிப்போம் என்று சொல்லும்போது, ‘மதத்தை அரசியலில் கொண்டுவந்தால்’ எங்கள் ஆதரவு திமுக கூட்டணிக்குக் கிடையாது என்று நீங்கள் சொல்லாதபோது, சமூகத்தில் நிகழ்ந்த மாற்றம் பற்றி விசனப்பட்டு என்ன பிரயோசனம்?
எனக்கு எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். ஒரு விதமான வேறுபாடின்றி அவர்கள் என் நண்பர்களாக இருக்க முடிந்தது, இருக்கிறார்கள், 30 ஆண்டுகளாக நடந்த மாற்றத்திற்கு யார் காரணம்? ஒரு கை தட்டி எங்கும் ஓசை வருவதில்லை. இந்தச் சமூகத்தில் எல்லாச் சமூகமும் இணைந்து வாழ்ந்திருக்கிறோம், வாழ முடியும். ஆனால் அது ஒரு வழிப் பாதை அல்ல.
Dear KM Sir,
I am visiting this site after a very long time. Hope you are doing well now….
I wish you very good health to see those who are speaking here in favour of ADMK, turning to BJP in near future.
Thanks
Sanmath AK
Dear A.K.Sanmath,
Thank you.
Glad to see you here after a long time.
You have to see this from the other angle …
I think it is on the reverse –
Good number of them are already
BJP people – just coming to support ADMK….!!!
.
-with all best wishes,
Kavirimainthan
கா.மை. சார்… I have a different view. Many are against DMK’s atrocities, corruption and self family development politics, and their opposing Hindu religion and criticizing the same while they praise Muslims and Christians. DMK and their partners are doing this for the money they get. This is the main reason we, at least myself, hate DMK.
This is the reason why I support ADMK. I don’t like ADMK joining hands with BJP, which is not good for the party. BJP is NEVER a trusted partner. I like BJP for it’s pro Hindu policies and I appreciate that, but not to the tune of voting them for TN. I realize ADMK, has strategically aligned with BJP. ADMK never did this for the sake of looting money in center or get positions for EPS family. If so, ADMK could have well joined hands with BJP in center as well and got a Ministry post and developed their own businesses like what Maran, TR Balu, Kanimozhi, A. Raja and so many did during Cong+DMK rule at center.
So BJP people are not coming to support ADMK. Only pro ADMK minded and anti DMK digests ADMK’s unavoidable strategy and go with ADMK’s strategy. We are not controlled by our religion, unlike minorities that is happening now in TN. On our free will, we support ADMK, which is good for Tamil Nad.
புதியவன்,
நீங்கள் சொல்வதை – யும் நான் ஏற்கிறேன்…!!!
இந்த தடவை எந்தக்கட்சியையும் சேராத,
படித்த மக்கள் பலர் அதிமுக-வுக்கு ஆதரவாக
எழுதுவதை நான் பார்க்கிறேன்.
இந்த தளத்தில் புதிதாக பல நண்பர்கள்
பின்னூட்டம் எழுதுகிறார்கள். தப்பிததவறி,
எதையாவது செய்து –
திமுக வந்து விடப்போகிறதே என்கிற
அச்சத்தையும் அவர்களிடம் பார்க்கிறேன்.
அதே சமயம் இந்த தளத்தில் ஏற்கெனவே
எழுதிக்கொண்டிருக்கும் நானறிந்த
பல பாஜக ஆதரவாளர்களும் இந்த
சமயத்தில் அதிமுக-வுக்கு ஆதரவாக
எழுதுவதையும் பார்க்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்