தங்கம்… தங்கம்…பத்தரை மாத்து தங்கம்….!!!

….
….

….

கிராம் கணக்கிலும், சவரன் கணக்கிலும் மட்டுமே
எண்ணிக்கொண்டிருக்கும் நமக்கு கட்டித் தங்கம்
பார்க்க ஒரு வாய்ப்பு…

திரைப்படங்களில் தங்க பிஸ்கெட்-களை
பார்த்திருக்கிறோம்.

தங்கம் – பெருமளவில் உருக்கி
தொழிற்சாலையில், கட்டி, கட்டியாக
உருவாக்கப்படுவதை பார்த்திருக்கிறீர்களா…?

தங்கத் தொழிற்சாலை செயல்படும் விதத்தை
மிக அழகாகக் காட்டுகிறது இந்த காணொலி…

….


….

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தங்கம்… தங்கம்…பத்தரை மாத்து தங்கம்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கட்டித் தங்கம் பார்க்கவில்லை என்றாலும், நான் கண் கொள்ள முடியாத அளவு பெரிய பெரிய நகைகளை, சர்வ சாதாரணமாக கடைகளில் வைத்திருப்பதை துபாயிலும் பஹ்ரைனிலும் பார்த்திருக்கிறேன். அராபியர்கள் திருமண நகைகள் மிக மிகப் பெரியவை. முழுவதுமாக தலையிலிருந்தும், கழுத்துக்குக் கீழேயும், கை விரல்களிலிருந்து முழங்கை வரையும் உள்ள பெரிய பெரிய நகைகள். எங்கேயாவது படங்கள் எடுத்திருக்கேனா என்று என் கலெக்‌ஷனில் பார்க்கணும்.

  93ல், துபாயில் எனக்குத் தெரிந்த மணி எக்சேஞ்சில், அவர் லாக்கரைத் திறந்து காண்பித்தார். அந்த அளவு பணத்தை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை (படங்களில்கூட). (லாக்கர் சைஸ் 7 அடிக்கு 5 அடிக்கு 2 அடி என்று நினைவு)

  இந்தக் காணொளியில் இருக்கும் பெரிய செயின் போல ஒன்று நான் வாங்கிப்போட்டுக்கொள்ளணும் என்று ஆசைப்பட்டேன். கடைகளுக்குச் சென்று செலக்ட் செய்யும்போதுதான் அது உள்ளுக்குள் ஓட்டை உள்ளது (அதாவது சாலிட் தங்கம் இல்லை) என்று புரிந்தது. அப்புறம் அதில் ஆசை வரவில்லை. நான் வாங்க நினைத்தபோது தங்கம் விலை கிராம் 5 திர்ஹாம் ரேஞ்ச். 500 கிராம் வாங்கினாலும் அது பெரிய பணமாகத் தோன்றாக காலம் அப்போது (ஆனால் அப்போல்லாம் நான் வாங்கவில்லை). நான் முதன் முதலில் எனக்கென்று ஒரு நகை வாங்கியபோது 3.75 திர்ஹாம், 1 கிராம் என்று நினைவு. (93)

 2. புதியவன் சொல்கிறார்:

  தங்கம் மேட்டரெல்லாம் சரிதான்.

  தேர்தல் அறிக்கை என்பது, அதிமுக அல்லது திமுக வெளியிடுவதில் நியாயம் இருக்கிறது (எத்தனையோ புளுகுகளை உள்ளடக்கி இருந்தாலும். இதற்கு மக்களைத்தான் குறை சொல்லணும், இந்த இரு அரசியல் கட்சிகளை அல்ல).

  மத்த லெட்டர்பேட் கட்சிகள் (அ னை த் து ம்… இதில் இரண்டு கட்சிகளுக்கு விதிவிலக்கு. பாஜக, காங்கிரஸ்.. அவங்க இருவர் மட்டும், மத்திய அரசாக நாங்கள் இருந்தால் இதை இதை தமிழகத்துக்காகச் செய்வோம் என்று மட்டும் தங்கள் அறிக்கையில் சொல்லலாம். உதாரணம் 7 பேர் விடுதலை, தமிழகத்துக்கு காவேரி நீர், மத்திய அரசு வேலையில் தமிழர்களுக்கான சதவிகிதம், நீட் விலக்கு என்பவை போன்று. மத்த லெட்டர்பேட் கட்சிகளான திருமா,வைகோ, மற்ற அனைத்தும்-இவங்களோடது கட்சியே கிடையாது திமுகவின் வட்டச் செயலாளர்கள் இருவரும்) எதுக்கு தேர்தல் அறிக்கை வெளியிடறாங்க? இதை நிறைவேற்றுவோம் என்று அவங்க கூட்டணித் தலைமையிடம் உறுதி வாங்கியிருக்காங்களா, எழுத்தில்?

  உடனே கம்யூனிஸ்டுகள் தேசியக் கட்சிகள் என்று சொல்லிடாதீங்க. கேரள கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை வேற, மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கொள்கை வேற, தமிழக கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை வேற. அவங்கள்லாம் பல மாநிலக் கட்சிகள், ஒரே பெயரில்.

  தனிக் கட்சிகளாக நிற்பதால், கமலஹாசன் மற்றும் தினகரன் தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் நியாயமான ஆட்சேபணைகள் கிடையாது. அமாவாசை அன்று சந்திரனை வரவைப்பேன், வீட்டிற்கு ஒருவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைப்பேன் என்று கூடச் சொல்லலாம். கேள்வி கேட்க முடியாது. மத்தபடி அவங்களோட லெட்டர் பேட் கட்சி சரத்குமார், பிரேமலதா & கோ..இவங்கள்லாம் வாய் திறந்து எந்த அறிக்கையும் விடக்கூடாது.

  இதையெல்லாம் நீங்க ஏன் எழுதவில்லை? இதில் உங்கள் கருத்து என்ன காமை சார்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிற
   2 பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மட்டும் தான்
   நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
   மற்றவை யெல்லாம் காமெடிக்கு தான்.

   வாய்ப்புள்ள அந்த 2 பெரிய கட்சிகளுமே
   இஷ்டத்திற்கு “கப்ஸா” விடும்போது,
   நாம் யாரைப் பார்த்து சிரிப்பது…?

   இந்தத் தடவை, தமிழ் நாட்டில்
   தொங்கு சட்டமன்றம் வருமோ …?

   நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?
   (அடுத்த இடுகையில்…)

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.