….
….
….
….
இஷ்டத்திற்கு கதை விடும் இவர் –
ஹீரோவா, காமெடியனா இல்லை தேர்ந்த புரட்டுக்காரரா…?
இரண்டு தனித்தனி செய்தித் துண்டுகளை
கீழே தந்திருக்கிறேன்….படித்து விட்டு சொல்லுங்கள் –
———————————————-
மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர்
ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த கமல்
பேசுகையில்,
“நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு
ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்வரை நஷ்டம்தான்.
ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை.
மக்கள் நலத்துக்காகத்தான் நான் அரசியலுக்கு
வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
————
கடந்த 3 ஆண்டுகளில் இவர் நடித்து எத்தனை படம்
வெளிவந்தது …. இவர் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்
வேறு எந்த விதத்தில் சம்பாதிப்பார்….? குறைந்த பட்சம்
தனது வருமான வரி அறிக்கையிலாவது
இந்த விவரங்களைச் சொல்லி இருப்பாரா…?
—————————————————————————–
https://www.dinamalar.com/news_detail.asp?id=2736090
வரி ஏய்ப்பு செய்வது உறுதியான பின்னும்,
தன்னுடைய கட்சியின் பொருளாளர் மீது கமல் எந்த
நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது, கடுமையான
விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகரனுக்குச்
சொந்தமான, திருப்பூர், ‘அனிதா டெக்ஸ்காட்’ நிறுவனத்துக்கு
சொந்தமான, எட்டு இடங்களில், கடந்த 17ம் தேதி,
வருமானவரித்துறையினர் விடிய, விடிய ‘ரெய்டு’ நடத்தினர்.
அதில் ரொக்கமாக, 11.5 கோடி ரூபாய் சிக்கியது;
ரூ.80 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு உறுதியானது.
இவருடைய நிறுவனத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில்,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.451 கோடி
மதிப்பில் அம்மா பேபி கிட், கொரோனா கவச உடைகள்,
முகக் கவசங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளது.
மொத்தமாக, 1,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும்
இந்த நிறுவனம், 80 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே
வரி ஏய்ப்பு செய்திருக்குமா என்ற சந்தேகத்தையும் பலரும்
எழுப்பி வருகின்றனர்.
இதனால், சந்திரசேகரன் இயக்குநராகவுள்ள
மற்ற நிறுவனங்களின் ஆவணங்களையும் சரி பார்க்க
வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தொழிலுக்கு ‘பார்ட்னர்’ –
கடந்த பிப்.,19ல் கமலும், சந்திரசேகரனும் பங்குதாரராக
இணைந்து, ‘ராஜ்கமல் பிரண்டையர்ஸ் பிரைவேட் லிமிடெட்’
என்ற நிறுவனத்தைப் புதிதாக துவக்கியுள்ளனர். கமலின்
வீட்டு முகவரியிலேயே, இந்த நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தி, வேளாண் பொருட்கள், இரும்பு வர்த்தகம்
மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும்
மேற்கொள்ளுமென்றும் கம்பெனிகள் பதிவுத்துறைக்குத்
தரப்பட்டுள்ள ஆவணத்தில் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமலின் கட்சிப் பொருளாளராகவுள்ள சந்திரசேகரன் மீது
வரி ஏய்ப்பு புகார் வந்தும், இதுவரை அவர் மீது எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, இந்த நிறுவனமே
காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏற்கனவே,
ஐந்து மாநில அரசுகளுக்கு பல்வேறு பொருட்களையும்
சந்திரசேகரனின் நிறுவனம் வினியோகம் செய்துவரும்
நிலையில், கமல் பங்குதாரராகச் சேர்ந்த இந்த நிறுவனமும்
அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காகத் துவக்கப்பட்டதா
என்ற சந்தேகமும் கிளம்பியிருக்கிறது.
ஆனால், இந்த நிறுவனம் பற்றி கமலிடம் கேள்வி
எழுப்பியதற்கு அவர் எந்தத் தெளிவான பதிலையும்
தரவில்லை.
‘வரி ஏய்ப்புப் புகார் உறுதியானால் கட்சியின்
பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா’ என்று
கேட்டதற்கும்,
‘ஊடகங்கள் கேள்வி கேட்பதற்காக ஒருவர் மீது நடவடிக்கை
எடுக்க முடியாது’ என்று கூறினார். தொடர்ந்து, ‘கண்டிப்பாக
நடவடிக்கை எடுப்போம்; சட்டம் தன் கடமையைச் செய்யும்’
என, குழப்பமான ‘டயலாக்’ கமல் விட்டார்.
அதற்குப் பின்னும் சந்திரசேகரனை கட்சிப் பொறுப்பிலிருந்து
கமல் நீக்கவில்லை. கமல் கட்சி நடத்துவதற்காக
சந்திரசேகரனும், அவருடன் இணைந்து தொழில் செய்யும்
சிலரும் பெரிய அளவில் நிதியுதவி செய்திருப்பதாகவும்,
அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல்,
கமல் தவிப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
———————————
சட்டமன்றத்திற்குள் இன்னும் நுழையவே இல்லை…
அதற்குள் இவ்வளவா…?
இத்தனைக்கும் பிறகும்,
சற்றும் வெட்கமே இல்லாமல்
“நான் மட்டும் தான் நேர்மையானவனாக்கும்…..”
என்று வலம் வந்து கொண்டிருக்கும்
இவரை என்னவென்று சொல்வது…?
இவர் –
ஹீரோவா…
காமெடியனா…
இல்லை எல்லாரையும் குழப்பும்
– கைதேர்ந்த புரட்டுக்காரரா….?
.
———————————————————————————————————–
ஆண்டுக்கு 300 கோடி நஷ்டம் என்று சொன்னீர்களே… ஒன்று அதை பப்ளிக்காக வாபஸ் வாங்கி வருத்தம் தெரிவியுங்கள், இல்லை என்றால், கடந்த பத்து ஆண்டு வருமானமான 3000 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள் என்று அதிகாரிகள் நோட்டீஸ் விடுவார்களா? இல்லை அப்படி எச்சரித்தால், இரண்டு சைஃபர் அதிகமாகப் போட்டுவிட்டேன் 3 கோடி ரூபாய் வருமானம்தான் என்று பல்டி அடிப்பாரா?